வீரப்பம்பாளையம்

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

வீரப்பம்பாளையம் (ஆங்கில மொழி: Veerappampalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். [1][2]

வீரப்பம்பாளையம்
Veerappampalayam
வீரப்பம்பாளையம்
வீரப்பம்பாளையம் Veerappampalayam is located in தமிழ் நாடு
வீரப்பம்பாளையம் Veerappampalayam
வீரப்பம்பாளையம்
Veerappampalayam
வீரப்பம்பாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°20′05″N 77°41′22″E / 11.334800°N 77.689400°E / 11.334800; 77.689400
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
225 m (738 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 225 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வீரப்பம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°20′05″N 77°41′22″E / 11.334800°N 77.689400°E / 11.334800; 77.689400 ஆகும். ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை வீரப்பம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்ட பகுதிகளில் வீரப்பம்பாளையம் பகுதியும் அடங்கும்.[3][4][5] ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் அரசியல் கட்சிகளால் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகள் நடத்தப்படுகின்றனவா என தேர்தல் நடத்திய அதிகாரிகளால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.[6] துணை இராணுவப் படைகளும் தேர்தல் நடத்திய பறக்கும் படையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனைகள் நடத்திய பகுதிகளில் வீரப்பம்பாளையம் பகுதியும் ஒன்று.[7]

வீரப்பம்பாளையம் பகுதியானது, ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் ஈ. வெ. கி. ச. இளங்கோவன் ஆவார். மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ed. K. R. Gupta (2001). Directory of Libraries in India (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-985-4.
  2. Indian Council of Agricultural Research (1971). I.C.A.R. Technical Bulletin: (agric) (in ஆங்கிலம்). The Council.
  3. "அதிமுக ஆட்சியில் மக்கள் ஏற்றம்; திமுக ஆட்சியில் ஏமாற்றம்: ஈரோட்டில் பழனிசாமி பிரச்சாரம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
  4. "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு..!". www.dinakaran.com. Archived from the original on 2023-03-07. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
  5. "அப்பனை மிஞ்சும் ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-02-14. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
  6. "ஈரோடு அனுமதி இன்றி தேர்தல் பணிமனைகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கள ஆய்வு". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
  7. Maalaimalar (2023-02-12). "பறக்கும் படையினருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரப்பம்பாளையம்&oldid=4110311" இலிருந்து மீள்விக்கப்பட்டது