ஹர்மன்பிரீத் கவுர்
ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur, பிறப்பு: மார்ச்சு 8 1989), இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார்.[1] இவர் துடுப்பாட்ட சகலத்துறையர் ஆவார்.[2][3][4] 2017 ஆம் ஆண்டில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் இவருக்கு அருச்சுனா விருது வழங்கியது.[5]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஹர்மன்பிரீத் கவுர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 6) | மார்ச்சு 7 2009 எ. பாக்கித்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | மார்ச்சு 1 2010 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, சூலை 23 2011 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஹர்மன்பிரீத் கவுர் மார்ச் 8, 1989 இல் மோகா, பஞ்சாப் இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை ஹர்மன்துர் சிங் புல்லார் , கைப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்டம் விளையாட்டு வீரர், இவரின் தாய் சத்விந்தர் கவுர் ஆவர்.[6] இவரின் பெற்றோர்கள் சீக்கியம் சமயத்தைச் சேர்ந்தவர்கள். இவருக்கு ஹெம்ஜீத் எனும் இளைய சகோதரி உள்ளார். ஆங்கிலம் பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்று மோகாவில் உள்ள குருநானக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[7] இவர் தனது வீட்டிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜியன் ஜோதி அகாதமிப் பள்ளியில் சேர்ந்து துடுப்பாட்டப் பயிற்சி எடுத்தார்.[8] அங்கு கமல்தேஷ் சிங் ஜோதி என்பவரிடம் பயிற்சி பெற்றார்.[9] துவக்ககாலங்களில் இவர் ஆண் துடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.[10] 2014 ஆம் ஆண்டில் இந்திய இரயில்வேயில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததனால் இவர் மும்பை சென்றார்.[8][11] இவர் வீரேந்தர் சேவாக்கினால் அகத்தூண்டல் பெற்றார்.
துடுப்பாட்ட வாழ்க்கை
தொகு2009 ஆம் ஆண்டில் போவ்ரால், பிராட்மன் ஓவல் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற பெண்கள் துடுப்பாட்ட உலக்கக் கிண்ணக் கோப்பைக்கான தொடரில் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்ட்டியில் 4 ஓவர்கள் வீசி 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.[12]
2009 ஆம் ஆண்டில் டான்டன், கவுண்டி மாகாண துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற 2009 ஐசிசி உலக இருபது20 பெண்கள் துடுப்பாட்ட உலக்கக் கிண்ணக் கோப்பைக்கான தொடரில் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தப்போட்டியில் 7 பந்துகளில் 8 ஓட்டங்களை எடுத்தார்.[13][14]
2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 33 ஓட்டங்கள் எடுத்தார்.[15]
2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய பெண்கள் பன்னாட்டு இருபது20 தொடரில் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். மிதாலி ராஜ் மற்றும் உதவி அணித் தலைவர் ஜுலான் கோஸ்வாமி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டதனால் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 82 ஓட்டங்களை சேஸ் செய்து ஆசிய கோப்பையை வென்றனர்.[16]
2013 ஆம் ஆண்டில் வங்காளதேசப் பெண்கள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியுடன் விளையாடிய தொடரின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு இவர் தலைவராக நியமனம் ஆனார். இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் நூறு ஓட்டங்களை அடித்தார்.இந்தத் தொடரில் மொத்தமாக 195 ஓட்டங்களையும் 2 இலக்குகளையும் கைப்பற்றினார். இந்தத் தொடரின் இவரின் மட்டையாளர் சராசரி 97.50 ஆகும்.[17]
சான்றுகள்
தொகு- ↑ "'Aggression is in my genes' by Annesha Ghosh".
- ↑ "Player Profile: Harmanpreet Kaur". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 6 March 2010.
- ↑ "India Women Squad". espncricinfo.com. 28 March 2013. பார்க்கப்பட்ட நாள் 1 April 2013.
- ↑ "Putting Moga on the cricketing map". பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
- ↑ "National Sports Awards: Centre unveils list, cricket sensation Harmanpreet Kaur to receive Arjuna Award". Financial Express. 22 August 2017. பார்க்கப்பட்ட நாள் 22 August 2017.
- ↑ "ICC Women's World Cup 2017: Back home, Moga star Harmanpreet Kaur gets mega welcome".
- ↑ "Won't pressurize Harmanpreet Kaur for marriage: Parents".
- ↑ 8.0 8.1 Balachandran, Kanishkaa (20 July 2017). "The lowdown on Harmanpreet Kaur". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 21 July 2017.
- ↑ Sharma, Nitin (21 July 2017). "Harman makes herstory". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 21 July 2017.
- ↑ "Playing with men helped me develop six-hitting skill: Harmanpreet Kaur".
- ↑ "How Sachin Tendulkar's letter got Harmanpreet Kaur a job".
- ↑ "Wyatt helps England to nervy consolation win". பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
- ↑ "Taylor, Dottin help West Indies to series win". பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
- ↑ "India level series with 10-run victory". பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
- ↑ "Spinners help India level the series". பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
- ↑ "India Women defend low score to take title". பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
- ↑ "Bangladesh women to tour India". பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.