2019 இந்தியன் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டி

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2019 சீசனின் வெற்றியாளரை தீர்மானித்த 2019 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி ஒரு இருபது20 கிரிக்கெட் போட்டியாகும். [1] [2] இது மே 12, 2019 அன்று ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற்றது . ஐபிஎல் இறுதிப் போட்டியை ஹைதராபாத் நகரம் நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.

2019 இந்தியன் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டி
நிகழ்வு2019 இந்தியன் பிரீமியர் லீக்
மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
149/8 148/7
20 overs 20 overs
மும்பை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி
நாள்12 May 2019
அரங்கம்ராஜிவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
நடுவர்கள்இயன் கூல்ட் (இங்கிலாந்து)
நிதின் மேனன் (இந்தியா)
பார்வையாளர்கள்54,847
இறுதிப்போட்டிக்கான இடம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலிருந்து ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

இறுதிப் போட்டி முதலில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஏப்ரல் 2019 இல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), சென்னை மைதானத்தில் மூன்று மூடிய ஸ்டாண்டுகளின் நீண்டகால பிரச்சினை காரணமாக இறுதிப்போட்டி இடம் குறித்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியது. [3] அதே மாதத்தின் பிற்பகுதியில், ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் இறுதிப் போட்டிக்கான இடமாக உறுதி செய்யப்பட்டது. [4]

நடப்பு சாம்பியன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தது. மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஒரு ரன் வித்தியாசத்தில் திரில்லான முறையில் தோற்கடித்து நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றதுடன். ரோஹித் சர்மா கேப்டனாகவும், அதிக எண்ணிக்கையிலான ஐபிஎல் கோப்பைகளை பெற்ற வீரராகவும் ஆனார். மும்பையைச் சேர்ந்த ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களில் 14 விக்கெட்டுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குழு நிலை

தொகு

லீக் அட்டவணையில் மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தைப் பிடித்தது. முதலில் அவர்கள் டெல்லி கேபிட்டள்ஸிடம் (36 ரன்கள் வித்தியாசத்தில்) தோல்வியுடன் தொடங்கியது. [5] பின்பு கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், [6] அவர்கள் அடுத்த மூன்று போட்டிகளில் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் ஆகியோருக்கு எதிராக வெற்றி பெற்றனர். [7] [8] [9] [10] பதினான்கு போட்டிகளில் ஒன்பது போட்டிகளுடன் மும்பை அணி லீக்கின் இரண்டாம் கட்டத்திற்க்கு வெற்றிகரமாக முன்னேறியது. [11] [12]

ஐபிஎல் 2019 தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா ஐபிஎல் லீக்கில் 5,000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் ஆனார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெண்றது. சென்னை இந்த சீசனின் முதல் பாதியில் ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது, இதில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளும் அடங்கும். [13] [14] எம்.எஸ். தோனி தனது அணியில் முக்கிய பேட்டிங் பாத்திரத்தை வகித்தார், ஷேன் வாட்சன் மற்றும் பந்து வீச்சாளர்களான இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரால் தீவிரமாக அணியின் வெற்றிகளுக்கு ஒத்துழைத்தனர். [15] [16] பதினான்கு போட்டிகளில் இருந்து ஒன்பது வெற்றிகளுடன் குழு நிலையில் சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

குழு நிலை தொடர்

தொகு
3 April
20:00 (ப/இ)
Scorecard
(H) மும்பை
170/5 (20 overs)
சென்னை
133/8 (20 overs)
மும்பை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
வான்கடே மைதானம்
26 April
20:00 (ப/இ)
Scorecard
மும்பை
155/4 (20 overs)
சென்னை (H)
109 (17.4 overs)
மும்பை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
எம்.ஏ.சிதம்பரம் மைதானம்

மும்பை இந்தியன்ஸ் இரண்டு குழு நிலைப்போட்டியிலும் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது, [17] முதல் குழு நிலை தொடர் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார், ஹார்டிக் பாண்ட்யா 8 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார் (இறுதி இரண்டு ஓவர்களில் மும்பை 45 ரன்கள் எடுத்தது). இதனால் மும்பை அணி சென்னைக்கு 171 ரன் இலக்காக நிர்ணயித்தது. சென்னை அணியில் தொடக்க வீரர்கள் சோபிக்கத் தவறினர். கேதார் ஜாதவ் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும் சென்னை அணி தோல்வியடைந்தது.

ப்ளே ஆப் சுற்று

தொகு
10 May
19:30 (ப/இ)
Scorecard
சென்னை
131/4 (20 overs)
மும்பை
132/4 (18.3 overs)
மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
எம்.ஏ.சிதம்பரம் மைதானம்
10 May
19:30 (ப/இ)
Scorecard
டெல்லி
147/9 (20 overs)
சென்னை
151/4 (19 overs)
சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானம், விசாகப்பட்டினம்

போட்டி

தொகு

சுருக்கம்

தொகு

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பின்பு "இது ஒரு பெரிய விளையாட்டு, அதைத்தான் நாங்கள் செய்ய நினைக்கிறோம். முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம், போர்டில் ரன்களை அமைத்தோம்" என்று கூறினார்.

சென்னை கேப்டன் எம்.எஸ். தோனி, "நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம், இதன் விளைவு உங்களுக்கு சாதகமாக இருந்தால், அது நன்றாக இருக்கிறது, இல்லையென்றால் அணியினர் சோர்வாக இருப்பதாக அவர்கள் கூறுவார்கள்" என்றார்.

மதிப்பெண் அட்டை

தொகு
  • களத்திலுள்ள நடுவர்கள் : இயன் கூல்ட் மற்றும் நிதின் மேனன்
  • மூன்றாவது நடுவர் : நைகல் லாங்
  • ரிசர்வ் நடுவர் : சி.கே.நந்தன்
  • போட்டி நடுவர் : ஜவகல் ஸ்ரீநாத்
  • டாஸ் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு.
  • முடிவு : மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2019 இந்தியன் பிரீமியர் லீக்கை வென்றது.
மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்
பேட்ஸ்மேன் விக்கெட் எடுக்கப்பட்ட முரை ரன்கள் பந்துகள் ஸ்டிரைக் ரேட்
குயின்டன் டி கோக்   c தோனி   b தாக்கூர் 29 17 170.58
ரோஹித் சர்மா * c தோனி   b தீபக் 15 14 107.14
சூர்யகுமார் யாதவ் b தாஹிர் 15 17 88.23
இஷான் கிஷன் c ரெய்னா பி தாஹிர் 23 26 88.46
கிருனல் பாண்ட்யா c மற்றும் b தாக்கூர் 7 7 100.00
கீரோன் பொல்லார்ட் ஆட்டம் இழக்கவில்லை 41 25 164.00
ஹார்டிக் பாண்ட்யா lbw b தீபக் 16 10 160.00
ராகுல் சாஹர் c டு பிளெசிஸ் b தீபக் 0 2 0.00
மிட்செல் மெக்லெனகன் ரன் அவுட் ( டு பிளெசிஸ் / பிராவோ ) 0 2 0.00
ஜஸ்பிரீத் பும்ரா ஆட்டம் இழக்கவில்லை 0 0 0.00
லசித் மலிங்கா பேட் செய்யவில்லை
கூடுதல் (3 அகலங்கள் ) 3
கூட்டுத்தொகை (20 ஓவர்கள், ஒரு ஓவருக்கு 7.45 ரன்கள்) 149

விக்கெட் வீழ்ச்சி: 1-45 (டி கோக், 4.5 ஓவர்), 2-45 (ரோஹித், 5.2 ஓவர்), 3-82 (சூர்யகுமார், 11.2 ஓவர்), 4-89 (கிருனல், 12.3 ஓவர்கள்), 5-101 (கிஷன், 14.4 ஓவர்கள்), 6-140 (ஹார்டிக், 18.2 ஓவர்கள்), 7-140 (ராகுல், 18.4 ஓவர்கள்), 8-141 (மெக்லெனகன், 19.4 ஓவர்கள்)

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு
பந்து வீச்சாளர் ஓவர்கள் மெய்டன் ரன்கள் விக்கெட்டுகள் எகானமி
தீபக் சாஹர் 4 0 26 3 6.50
சர்துல் தாக்கூர் 4 0 37 2 9.25
ஹர்பஜன் சிங் 4 0 27 0 6.75
டுவைன் பிராவோ 3 0 24 0 8.00
இம்ரான் தாஹிர் 3 0 23 2 7.66
ரவீந்திர ஜடேஜா 2 0 12 0 6.00
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்
பேட்ஸ்மேன் விக்கெட் எடுக்கப்பட்ட முறை ரன்கள் பந்துகள் வேலைநிறுத்த வீதம்
ஃபாஃப் டு பிளெசிஸ் st டி கோக்   b கே.பாண்ட்யா 26 13 200.00
ஷேன் வாட்சன் ரன் அவுட் (பாண்ட்யா /   டி கோக்) 80 59 135,59
சுரேஷ் ரெய்னா lbw b சாஹர் 8 14 57,14
அம்பதி ராயுடு c டி கோக்   b பும்ரா 1 4 25.00
எம்.எஸ்.தோனி   ரன்அவுட் ( கிஷன் ) 2 8 25.00
டுவைன் பிராவோ c டி கோக்   b பும்ரா 15 15 100.00
ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்கவில்லை 5 5 100.00
சர்துல் தாக்கூர் lbw b மலிங்கா 2 2 100.00
தீபக் சாஹர் பேட் செய்யவில்லை
ஹர்பஜன் சிங் பேட் செய்யவில்லை
இம்ரான் தாஹிர் பேட் செய்யவில்லை
கூடுதல் (5 பை, 4 அகலங்கள் ) 9
கூட்டுத்தொகை (20 ஓவர்கள், ஒரு ஓவருக்கு 7.40 ரன்கள்) 148

விக்கெட் வீழ்ச்சி: 1-33 (டு பிளெசிஸ், 4 ஓவர்கள்), 2-70 (ரெய்னா, 9.2 ஓவர்கள்), 3-73 (ராயுடு, 10.3 ஓவர்கள்), 4-82 (தோனி, 12.4 ஓவர்கள்), 5-133 (பிராவோ, 18.2 ஓவர்கள்), 6-146 (வாட்சன், 19.4 ஓவர்கள்), 7-148 (தாக்கூர், 20 ஓவர்கள்),

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு
பந்து வீச்சாளர் ஓவர்கள் மெய்டன் ரன்கள் விக்கெட்டுகள் எகானமி
மிட்செல் மெக்லெனகன் 4 0 24 0 6.00
கிருனல் பாண்ட்யா 3 0 39 1 13.00
லசித் மலிங்கா 4 0 49 1 12.25
ஜஸ்பிரீத் பும்ரா 4 0 14 2 3.50
ராகுல் சாஹர் 4 0 14 1 3.50
ஹார்டிக் பாண்ட்யா 1 0 3 0 3.00

முக்கிய விவரங்கள்

போட்டிக்கு பின்

தொகு

மும்பை அணி சாம்பியன் பட்டம் வெண்றதால் ₹ 20 கோடி பரிசும், கோப்பையும் பெற்றது. [18]

லீக்கில் அதிக விக்கெட்டுகளைப் அள்ளிய சென்னையின் இம்ரான் தாஹிருக்கு ஊதா தொப்பி வழங்கப்பட்டது. அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹர்பஜன் சிங் (மும்பை இந்தியன்ஸ், 2013) மற்றும் சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2012) இருவரும் செய்த முந்தைய சாதனையை முறியடித்தார். [19] [20]

குறிப்புகள்

தொகு
  1. "IPL 2019 to be played entirely in India, will begin on March 23". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  2. "IPL 2019 will be held in India". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  3. "Hyderabad on stand-by for IPL 2019 final if Super Kings can't resolve stands issue". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 April 2019.
  4. "Chennai loses out on hosting IPL 2019 final". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  5. "Sensational Rishabh Pant fires Delhi Capitals to emphatic win". http://www.espncricinfo.com/series/8048/game/1175358. 
  6. "Kings XI top-order aces chase after M Ashwin's 2 for 25". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
  7. "Mumbai hold on after Bumrah magic, no-ball controversy". http://www.espncricinfo.com/series/8048/game/1175362. 
  8. "Hardik's all-round effort ends Super Kings' unbeaten run". http://www.espncricinfo.com/series/8048/game/1175370. 
  9. "Alzarri Joseph's record-breaking 6 for 12 routs Sunrisers Hyderabad". http://www.espncricinfo.com/series/8048/game/1178394. 
  10. "Smart Stats - Kieron Pollard easily outshines KL Rahul". http://www.espncricinfo.com/story/_/id/26493675/an-innings-dre-russ-said-was-fun-watch. 
  11. "Lasith Malinga and Hardik Pandya hand RCB their seventh defeat". http://www.espncricinfo.com/series/8048/game/1178406. 
  12. "Mumbai survive Pandey-Nabi scare to seal playoff qualification". http://www.espncricinfo.com/series/8048/game/1178426. 
  13. "Royal Challengers Bangalore look to break five-year duck against Chennai Super Kings". ESPN. http://www.espncricinfo.com/series/8048/game/1175356. பார்த்த நாள்: 23 March 2019. 
  14. "Vintage MS Dhoni turns the tables as Rajasthan Royals fall to third defeat". ESPN. http://www.espncricinfo.com/series/8048/game/1175367. பார்த்த நாள்: 31 March 2019. 
  15. "IPL 2019, Delhi Capitals vs Chennai Super Kings at Feroz Shah Kotla". news18. https://www.news18.com/cricketnext/news/ipl-2019-delhi-capitals-vs-chennai-super-kings-at-feroz-shah-kotla-highlights-as-it-happened-2078419.html. பார்த்த நாள்: 26 March 2019. 
  16. "CSK claim victory despite Sarfaraz Khan, KL Rahul fifties". ESPN. http://www.espncricinfo.com/series/8048/game/1178393. பார்த்த நாள்: 6 April 2019. 
  17. . 
  18. . 
  19. "IPL 2019 Final: Purple Cap winner Imran Tahir breaks records for fun despite CSK loss". India Today. https://www.indiatoday.in/sports/story/ipl-2019-final-mi-vs-csk-purple-cap-imran-tahir-record-chennai-super-kings-1523483-2019-05-13. பார்த்த நாள்: 12 May 2019. 
  20. "CSK’s Imran Tahir Finishes With Purple Cap". News18. https://www.news18.com/cricketnext/news/ipl-2019-csks-imran-tahir-finishes-with-purple-cap-2138315.html. பார்த்த நாள்: 12 May 2019.