ஒன்பதாவது மக்களவை
இந்திய நாடாளுமன்றத்தின் ஒன்பதாவது மக்களவை 1989 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:[1]
ஒன்பதாவது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1989 |
விஸ்வநாத் பிரதாப் சிங் திசம்பர் 02, 1989 முதல் நவம்பர் 10, 1990 வரை பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் உதவியுடன் பிரதமரானார்.[2] 1984 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு முந்தைய 8வது மக்களவையுடன் ஒப்பிடும்போது இந்திய தேசிய காங்கிரசு 207 இடங்களை இழந்தது.
பின்னர் ராஜீவ் காந்தியின் இந்திய தேசிய காங்கிரசின் வெளிப்புற ஆதரவுடன் சந்திரசேகர் 10 நவம்பர் 1990 முதல் 21 ஜூன் 1991 வரை பிரதமரானார்.[3]
அடுத்த 10வது மக்களவை 1991 இந்திய பொதுத் தேர்தலுக்குப் பிறகு 20 ஜூன் 1991 அன்று உருவாக்கப்பட்டது.[4]
எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
---|---|---|---|
1. | ரபி ராய் | மக்களவைத் தலைவர் | 12-19-89 -07-09-91 |
2. | சிவ்ராஜ் பாட்டீல் | மக்களவைத் துணைத்தலைவர் | 03-19-90 - 03-13-91 |
3. | சுபாஷ் சி காஷ்யப் | பொதுச்செயலாளர் | 12-31-83 -08-20-90 |
4. | கே. சி. இரசுதோகி | பொதுச்செயலாளர் | 09-10-90 -12-31-91 |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
தொகுஒன்பதாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சி வாரியாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வரிசை எண் | கட்சி | உறுப்பினர்கள் எண்ணிக்கை |
---|---|---|
1 | இந்திய தேசிய காங்கிரசு | 195 |
2 | ஜனதா தளம் | 142 |
3 | பாரதிய ஜனதா கட்சி | 89 |
4 | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 34 |
5 | இந்திய பொதுவுடைமைக் கட்சி | 12 |
6 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 11 |
7 | சுயேச்சை | 8 |
8 | சிரோமணி அகாலி தளம் | 7 |
9 | பகுஜன் சமாஜ் கட்சி | 4 |
10 | புரட்சிகர சோசலிசக் கட்சி | 4 |
11 | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | 3 |
12 | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 3 |
13 | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 3 |
14 | சிவ சேனா | 3 |
15 | நியமன உறுப்பினர்கள் | 3 |
16 | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 2 |
17 | தெலுங்கு தேசம் கட்சி | 2 |
18 | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | 1 |
19 | இந்து மகாசபை | 1 |
20 | காங்கிரசு (எஸ்) | 1 |
21 | கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி | 1 |
22 | இந்திய மக்கள் முன்னணி | 1 |
23 | கேரள காங்கிரசு (எம்) | 1 |
24 | மகாராட்டிரவாதி கோமந்த கட்சி | 1 |
25 | மார்க்சிஸ்ட் கூட்டமைப்பு | 1 |
26 | சிக்கிம் சங்ராம் பரிசத்து | 1 |
- ↑ "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
- ↑ "V.P. Singh". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ "Chandra Shekhar". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.