அசாமில் இஸ்லாம்

அசாமில் இஸ்லாம் இரண்டாவது பெரிய மதமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அறிக்கையின்படி இஸ்லாமும் அசாமில் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமின் மக்கள் தொகை சுமார் 31,169,272 ஆகும். இதில் 10,679,345 பேர் முஸ்லிம்கள். மொத்த மக்கள்தொகையில் சதவிகிதத்தில் 34.22% க்கும் அதிகமானவர்கள். அசாமில் கிட்டத்தட்ட பதினொரு மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நான்கு மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிக பெரும்பான்மையாக இருப்பதாக காட்டுகிறது.[1]

பன்பரி மசூதி அசாமில் உள்ள மிகப் பழமையான பள்ளிவாசலாகும்

வரலாறுதொகு

இந்தியாவில் துருக்கி-இந்திய உறவுகள் நீண்ட பழமையான வரலாற்றைக் கொண்டிருந்தாலும், துருக்கியர்கள் இடம்பெயர்ந்து வந்தது பூவியியல் வரலாற்றில் புதிய பக்கங்களை திறந்தது. அசாமிற்கு இஸ்லாம் வருவதற்கு முன்பு, இந்த புவியியலில் சாகா, குசான், அகுன் மற்றும் துருக்கிய சூஃபி ஆகியோ சமயம் இருந்தன. கி.பி 1000-1027 காலத்தில் இஸ்லாத்தின் வருகைக்குப் பிறகு கஜினி முகம்மது தனது படையை 17 முறை இந்தியாவுக்கு அழைத்துச் வந்தார். இது இந்திய மனநிலையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது. [2]

இந்தியாவுக்கான முதல் துருக்கி-இஸ்லாமிய இராணுவ பிரச்சாரம் 1001 இல் தொடங்கியது. [3] வரலாற்றின் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, துருக்கியர்களில் முதல் ஆளாக முஹம்மது பின் பக்தியார் கில்ஜி 1206 ஆம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு மாகாணமான அசாமுக்கு வந்தார். துருக்கியர்கள் திபெத்தையும் முடித்தால் சீனாவையும் கைப்பற்றுவதற்கான பயண நோக்கத்தில் இருந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் 10,000 -12,000 குதிரை வீரர்களுடன் கம்ரூப் (பழைய பெயர்: கம்ரூப், கமரூபா, புதிய பெயர்: அசாம்) என்ற பிகாரின் வடக்கு பகுதி மற்றும் வங்காளத்தின் பகுதிகளின் மலைப்பகுதியைக் கடந்து வந்தனர். [4] கம்ரூப்பில் துருக்கிய படைகள் மிகவும் உறுதியற்றவையாக இருந்தது. அசாமிய மொழி வடகிழக்கு மாகாணத்தின் பல்வேறு தனித்துவமான பழங்குடி இனங்களுக்கிடையேயான மொழியாக இருந்தது. இன்றும் உள்ளது. இந்த மொழி பேசுபவர்களில் பெரும்பாலோர் அசாமில் உள்ள பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர்.

முஹம்மது பின் பக்தியார் கில்ஜியின் அழைப்பின் பேரில் மெக் பழங்குடியினரின் தலைவர் ஒருவர் இஸ்லாமிற்கு மாறினார். மேலும் அவர் தனது பெயரை அலி மெக் ராஜா என்று மாற்றிக்கொண்டார். இவர் கில்ஜியின் பயணத்தின் போது கமரூபா என்று அழைக்கப்படும் பகுதி வழியாக கில்ஜியின் இராணுவத்தை வழிநடத்தினார். [5] [6] 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சூஃபி ஷா ஜலால் மற்றும் அவரது சீடர்களின் வருகையால் இஸ்லாம் அசாமின் பராக் பள்ளத்தாக்கில் பிரபலமடைந்தது. பள்ளத்தாக்கின் பெரும்பகுதி வங்காள சுல்தானகத்தின் கீழ் வந்தது. அப்போதிருந்து அசாமில் முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

1613 ஆம் ஆண்டில், முகலாய பேரரசர் ஜஹாங்கிர் தெஹ்ரானின் முஹம்மது ஜமான் கரோரியை சில்ஹெட்டின் தலைவராக நியமித்தார். முதலாம் இஸ்லாம் கானின் அசாம் பயணத்தில் ஜமான் பங்கேற்றார் மற்றும் கோச் ஹாஜோவைக் கைப்பற்றுவதற்கு கருவியாக இருந்தார்.[7] முகலாயர்களும் கோல்பாராவை (தங்கள் வங்காள சுபாவின் ஒரு பகுதியாக) ஆட்சி செய்தனர். ஆனால் அசாமின் மற்ற பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை.[8] அசாமிய ராஜ்யங்களால் போர்க் கைதிகளாக எடுத்துச் செல்லபட்ட முகலாய வீரர்கள் பின்னர் உள்ளூர் மக்களால் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கைகளைப் பேணினர். இவர்கள் பெரும்பாலனோர் அப்போது பித்தளை உலோகத் தொழிலாளர்களாக பணியாற்றினர்.

1630 ஆம் ஆண்டில், அஜான் பகீர் என்று பிரபலமாக அறியப்பட்ட ஷா மீரான் என்ற முஸ்லிம் மத போதகர் தற்போதைய ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் இருந்து அசாமின் சிப்சாகர் பகுதிக்கு வந்தார். இவர் உள்ளூர் மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி பிரசங்கித்தார். இதன் விளைவாக பலர் இஸ்லாத்திற்கு மாறினர் மற்றும் சிலர் இவருடைய சீடர்களானார்கள்.[சான்று தேவை] அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சரகுரி சபோரியில் இவரது கல்லறை உள்ளது.

1657 ஆம் ஆண்டில் லுத்ஃபுல்லாஹ் கான் சிராசு, (குவகாத்தியின் பௌஜ்தார்), கோச் ஹஜோவின் மலை உச்சியில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டினார்.

பிரித்தானிய அட்சிதொகு

அசாம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தபோது, ஆங்கிலேயர்களால் ஏராளமான புலம்பெயர்ந்த வங்காள குடியேற்றவாசிகளை அசாமிற்குள் கொண்டு வந்தனர். அதில் பெரும்பாலும் முஸ்லிம்கள். இந்த புலம்பெயர்ந்த வங்காளிகள் முன்பு அசாமில் இருந்த வங்காளர்களை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஊக்குவித்தனர். [9] அசாமின் வளமான நிலம் மற்றும் அதன் பரந்த விரிந்த நிலம் அந்த காலகட்டத்தில் உள்ளூர் பழங்குடி மக்களால் மட்டுமே வசித்து வந்தது (அதாவது பரந்த நிலங்களும் காடுகளும் இருந்தன. ஆனால் அதில் வசித்த மக்கள் குறைந்தளவு) பின்னர் வங்காள மாகாணகத்தில் இருந்து வந்த ஏராளமான நிலமற்ற புலம்பெயர்ந்த விவசாயிகள் அங்கு தங்கினர். இவர்களில் கிட்டத்தட்ட 85% விவசாயிகள் முஸ்லிம்கள். இந்த புலம்பெயர்ந்த வங்காள மொழி பேசும் பங்களாதேஷ் தொடர்ந்து அசாமில் இடம்பெயர்ந்து கொண்டே இருந்தனர். இதனால் அசாமின் பூர்வீக பழங்குடி இனக்குழுக்களை விட இவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது.

அசாமின் தேயிலை தோட்டக்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வந்த மார்வாடி தொழிலதிபர்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்ட காரணத்தினாலும் குடியேறியவர்களை இவர்கள் ஏற்றுக்கொண்டு பயன்ப்படுத்திக் கொண்டனர். [10]

இந்த நவீன-குடியேற்ற குடியேறிய வங்காளிகளின் ஆரம்பகாலத்தில் கோல்பாரா மாவட்டத்தில் அதிகமாக இருந்தனர். பெரும்பாலும் நதி(கரி) ஓரங்களில் மற்றும் ஒதுக்கப்பட்ட காடுகளில் வாழ்ந்தனர். ☃☃ இந்த முஸ்லிம் குடியேறியவர்களில் பெரும்பாலோர் "மியாஸ்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் பலர் ரங்க்பூரின் வடகிழக்கு பகுதியிலிருந்து வந்தவர்களாகவும், இவர்களில் மிகச் சிலரே மைமென்சிங்கிலிருந்து வந்தவர்களாகவும் இருந்ததால் இவர்கள் சில சமயங்களில் "போங்யா" அல்லது போங்காலி என்று அழைக்கபட்டனர். பொங்கலி என்றால் "வெளியாட்கள்" என்று பொருள். [11]

இந்திய அரசு சட்டம் 1935 க்குப் பிறகு, 1937 ஆம் ஆண்டில் அசாமில் ஒரு சட்டமன்றம் நிறுவப்பட்டது. முஹம்மது சாதுலாஹ் தலைமையிலான அகில இந்திய முஸ்லிம் லீக் மாநிலத்தில் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது. அப்போது இவர் வங்காளதேசத்தில் இருந்து பெரிய அளவில் வங்காளிகள் குடியேற அனுமதித்தார்.[10]

சுதந்திரம்தொகு

1947 ஆம் ஆண்டில் சில்ஹெட் வாக்கெடுப்புக்குப் பின்னர் முஸ்லிம் பெரும்பான்மையாக இருந்த சில்ஹெட் பகுதி கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்றது. அதே நேரத்தில் கரீம்கஞ்சு மாவட்டம் போன்ற சில முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் இந்தியாவின் அசாமுக்குச் சென்றது. [12] [13]

அசாமில் கோரியா, மோரியா மற்றும் தேஷி போன்ற சில பழங்குடி முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்த வங்காளதேச மக்களை காட்டியிலும் இவர்கள் குறைவானவர்கள். வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறப்படுகின்றனர். அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை உயர்வதற்கு இவர்களின் பங்களித்திருப்பதாகவும், அசாமின் பூர்வீக மக்களை மெதுவாக ஸ்திரமின்மைக்குள்ளாக்கியுள்ளதாகவும் கவலைகள் எழுந்துள்ளன.

வங்காளதேசத்தில் இருந்து வரும் "மக்கள் படையெடுப்பு" குறித்த அச்சம் அசாம் இயக்கத்தின் (1979-1985) நாட்களிலிருந்து அசாமில் ஒரு அரசியல் பிரச்சினையாக உள்ளது. [14] 2001 ஆம் ஆண்டில், அசாம் மாநிலத்தில் 6 முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டங்கள் இருந்தன. 2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. [15] இருப்பினும், உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டதாக சிலர் கூறியுள்ளனர்.

அசாம் இயக்கம்

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் மற்றும் அஸாம் காண சங்கிரம் பரிஷத் ஆகிய அமைப்பின் தலைமையிலான அசாம் இயக்கம் அல்லது அசாம் கிளர்ச்சி (1979-1985) வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான ஒரு மக்கள் எழுச்சியாகும். பிரதமர் ராஜீவ் காந்தியின் கீழ் இந்த அமைப்பின் தலைவர்கள் மற்றும் இந்திய அரசின் தலைவர்கள் அசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்த இயக்கம் முடிவுக்கு வந்தது. அசாம் இயக்கம் ஆறு ஆண்டுகள் நடைப்பெற்றது. இந்த காலகட்டத்தில் (1979-1985) அசாம் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் சுமார் 855 பேர் (பின்னர் அசாம் மாணவர்கள் சங்கத்தின் அறிக்கைகளின்படி 860 நபர்கள்) தங்கள் உயிர்களை தியாகம் செய்ததாக கூறப்படுகிறது. கூடுதலாக, நெல்லி படுகொலைகளில் 2,191 நபர்களும் மற்றும் கொய்ராபரி படுகொலைகளில் சுமார் 100-500 பேர் இறந்தனர்.

அசாம் ஒப்பந்தம்(1985)

1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15, அன்று புதுதில்லியில் இந்திய அரசின் பிரதிநிதிகளுக்கும், பழங்குடி இனத்தவர்களுக்கான அசாம் இயக்கத்தின் தலைவர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.


அசாம் உடன்படிக்கையின் அடிப்படை அம்சங்கள்:

 • 1971 மார்ச் 25 அன்று அல்லது அதற்குப் பிறகு அசாமிற்கு வந்த வெளிநாட்டவர்கள் தொடர்ந்து கண்டறியப்படுவாவார்கள். அத்தகைய வெளிநாட்டினரை வெளியேற்ற உரிய நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 • அசாமின் பூர்வகுடி மக்கள் (பூர்வகுடியினர் என்பது 1826 ஆம் ஆண்டில் குடியேற்றம் நடைபெறுவதற்கு முன் காலத்திலிருந்தே வாழ்ந்து வருபவர்களுக்கு பூர்வீக மக்கள் என்பது ஐ.நா. வரையறையின்படி). மேலதிக விவரங்கள் பொது களத்தில் கிடைக்கின்றன. அவை விரிவான தகவல்களுக்கு குறிப்பிடப்படலாம்.

1985 க்குப் பிறகு, அசாம் அரசாங்கம் பல மாற்றங்களைக் கண்டது. இந்திய தேசிய காங்கிரசில்ல் இருந்து அஸ்ஸாம் கண பரிஷத் வரை, இறுதியாக 2016 ஆம் ஆண்டில் பாஜகவின் முதல் ஆட்சி வரை. அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவல் அசாமின் அனைத்து மாணவர்கள் சங்கம் முன்னாள் உறுப்பினரும், அசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மொழி மற்றும் இனம்தொகு

அசாம் முஸ்லிம்களிடையே பேசப்படும் மொழிகள்தொகு

 • வங்காள முஸ்லிம்கள் : அசாமில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் மியா என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் புலம்பெயர்ந்த கிழக்கு வங்காள வம்சாவளி மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர்[சான்று தேவை], மற்றும் கிழக்கு வவங்கம் மற்றும் நவீனவங்களாதேசத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் மத்திய மற்றும் கீழ் அசாம் மாவட்டங்களான துப்ரி, மரிகாவன், கோல்பாரா, ஹோஜாய், காமரூப், தர்ரங், நகாமோ, போங்கைகாவொன், பார்பேட்டா மற்றும் போடோலாந்து பிராந்திய பகுதி ஆகியவற்றில் வாழ்ந்து வருகின்றனர். அசாமில் சரியான மக்கள் தொகை கணக்கிடப்பட்டால் இவர்களின் மக்கள் தொகை சுமார் 6.55 மில்லியனாக இருக்கும். பராக் பள்ளத்தாக்கு மற்றும் ஹோஜாய் மாவட்ட முஸ்லிம்கள் சில்ஹெட்டி மொழியில் பேசுகிறார்கள்.
 • பழங்குடி அசாமிய முஸ்லிம்கள்: கோரியாக்கள், மரியாக்கள், தேஷி மற்றும் சையத் ஆகியோர் அசாமி மொழியை தங்கள் சொந்த தாய்மொழியாகப் பேசும் முஸ்லிம்களின் குழுவாகும். மேலும் இவர்கள் தங்களை அசாமிய முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள். இவர்களில் அஹோம்-முகலாயப் போரில் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட முகலாய வீரர்களின் சந்ததியினரும் உள்ளனர். காலப்போக்கில் இவர்களில் சிலர் பூர்வீக அசாமி பெண்களை மணந்து அசாமி மொழி மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 4 மில்லியன் ஆகும். இது மாநில மக்கள் தொகையில் 12% ஆகும்.
 • இந்துஸ்தானி- பேசும் பிகாரி மற்றும் உ.பி. முஸ்லிம்கள்: இந்த புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் பொதுவாக உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வந்தவர்கள். இவர்கள் உருது அல்லது இந்தியில் பேசுகிறார்கள். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்படி ஒட்டுமொத்த மாநில மக்கள்தொகையில் இவர்கள் 2% இருக்கிறார்கள். அதாவது இவர்களின் மக்கள் தொகை சுமார் 6 லட்சம் ஆகும். இவர்கள் அதிகளவில் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர்.[சான்று தேவை]

இனக் குறிச்சொல்தொகு

தேஷி
இவர்கள் கோச்-ராஜ்போன்ஷி, மெக், ரபா, போடோ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இந்திய-ஆரிய மக்களின் வம்சாவளியினர். இவர்கள் முக்கியமாக கோல்பாரியா பேச்சுவழக்கில் பேசுகிறார்கள். இவர்கள் முக்கியமாக துபுரி, கோல்பாரா, தெற்கு சல்மாரா மற்றும் கோக்ராஜர் மாவட்டங்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
மரியா
இவர்கள் கில்ஜி(1206), தர்பக்(1532) படைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட முஸ்லிம் இராணுவ வீரர்களின் வம்சாவளிகள். இவர்கள் இரும்பு பட்டறை தொழில் ஈடுபட்டதால் இவர்களுக்கு இந்த பெயர் வந்தது. மரியா என்ற சொல்லுக்கு உலோகங்களைத் தாக்கும் நபர் என்று பொருள். இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையினர். இவர்கள் சிவ்சாகர், ஜோர்ஹாட், டின்சுகியா, கோலாகாட், கம்ரூப் போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் அசாமி மொழியை தங்கள் தாய்மொழியாகப் கொண்டுள்ளனர். [சான்று தேவை]
ஜூலா
இவர்கள் அசாமின் பழங்குடி முஸ்லிம்களில் ஒருவர் ஆவார். இவர்கள் அதிகபடியாக கீழ் அசாமில் காணப்படுகின்றன.[சான்று தேவை]
சில்ஹெடிஸ்
இந்த வங்காள முஸ்லிம்கள் வடகிழக்கு வங்காளத்தின் (தெற்கு அசாம்) சில்ஹெட் பிராந்தியத்தின் பராக் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர்.

அசாமிய முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக கோரியா மற்றும் மரியா ஆகியோர் அசாம் மொழியை தங்களுடைய தாய்மொழியாகப் பயன்படுத்துகிறார்கள்.

மனித உரிமைகள் பிரச்சினைகள்தொகு

அசாமில் உள்ள வங்காள முஸ்லிம்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக குற்றம்சாட்டபட்டு பலமுறை தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர். 1983 ஆம் ஆண்டில் நடந்த நெல்லி படுகொலையில் சுமார் 3000 வங்காள முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். [16]

2012 அசாம் வன்முறையின் போது வங்களதேச வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் பழங்குடி போடோ மக்களுக்கு இடையே இனவாத கலவரம் ஏற்பட்டது. [17] அசாமில் சட்டவிரோத குடியேற்றத்தை வெளிப்படையாக ஊக்குவிப்பதன் மூலம் வங்காளதேசம் தனது பிராந்தியத்தை விரிவுபடுத்த முயற்சிப்பதாக இந்திய தேசியவாத அரசியல்வாதிகள் குற்றம் சாட்டினர். ஆனால் இந்திய அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகள் 1971 மற்றும் 2011 க்கு இடையில் பங்களாதேஷில் இருந்து குடியேற்றம் குறைந்து வருவதைக் குறிப்பிடுகின்றன.

மக்கள் தொகைதொகு

அசாமின் முஸ்லீம் மக்கள் தொகை (இன்றைய எல்லைகள்) [11]
ஆண்டு முஸ்லீம் மக்கள் தொகை அதிகரி % அதிகரி மொத்த மக்கள் தொகையில்%
1901 303,170 9.21%
1911 634,101 330,931 50.9% 16.21%
1921 880,426 246,325 38.25% 18.74%
1931 1,279,388 398,962 45.31% 22.78%
1941 1,696,978 417,590 32.64% 25.13%
1951 1,995,936 298,958 17.62% 24.68%
1961 2,765,509 769,573 38.56% 25.30%
1971 3,594,006 828,497 29.96% 24.56%
1991 * 6,373,204 2,779,198 77.33% 28.43%
2001 [18] 8,240,611 1,867,407 29.30% 30.92%
2011 [1] 10,679,345 2,438,734 29.59% 34.22%

மாவட்ட வாரியாக மக்கள் தொகைதொகு

# District Total population Muslim population Percentage
1 Baksa 950,075 135,750 14.29%
2 Barpeta 1,693,622 1,198,036 70.74%
3 Bongaigaon 738,804 371,033 50.22%
4 Cachar 1,736,617 654,816 37.71%
5 Chirang 482,162 109,248 22.66%
6 Darrang 928,500 597,392 64.34%
7 Dhemaji 686,133 13,475 1.96%
8 Dhubri 1,949,258 1,553,023 79.67%
9 Dibrugarh 1,326,335 64,526 4.86%
10 Dima Hasao 214,102 4,358 2.04%
11 Goalpara 1,008,183 579,929 57.52%
12 Golaghat 1,066,888 90,312 8.46%
13 Hailakandi 659,296 397,653 60.31%
14 Jorhat 1,092,256 54,684 5.01%
15 Kamrup 1,517,542 601,784 39.66%
16 Kamrup Metropolitan 1,253,938 151,071 12.05%
17 Karbi Anglong 956,313 20,290 2.12%
18 Karimganj 1,228,686 692,489 57.36%
19 Kokrajhar 887,142 252,271 28.44%
20 Lakhimpur 1,042,137 193,476 19.57%
21 Morigaon 957,423 503,257 52.56%
22 Nagaon 2,823,768 1,563,203 55.36%
23 Nalbari 771,639 277,488 34.96%
24 Sivasagar 1,151,050 95,553 9.30%
25 Sonitpur 1,924,110 350,536 17.22%
26 Tinsukia 1,327,929 48,373 3.64%
27 Udalguri 831,668 105,319 12.66%
Assam (Total) 31,205,576 10,679,345 34.22%

குறிப்பிடத்தக்க அசாம் முஸ்லிம்கள்தொகு

 • இந்தியாவின் ஒரே அசாமி ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது
 • பாக் ஹசாரிகா
 • மாஃபிசுதீன் அகமது ஹசாரிகா, எழுத்தாளர்
 • ஆதில் உசேன், நடிகர்
 • வாஸ்பீர் உசேன், பத்திரிகையாளர்
 • பஹருல் இஸ்லாம், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
 • சையத் அப்துல் மாலிக், எழுத்தாளர்
 • அலி மெக், முதலில் அசாமின் முஸ்லிமாக மாறியவர்.
 • முதல் அசாமி முஸ்லிம் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபு நிக்கீம்
 • இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்தின் வரைவுக் குழுவின் ஒரே அசாமி முஸ்லீம் உறுப்பினர் முஹம்மது சாதுலா
 • இம்ரான் ஷா, எழுத்தாளர்
 • பர்வீன் சுல்தானா, பத்ம பூஷண் பாடகர்
 • அசாமின் ஒரே பெண் முதல்வர் அன்வாரா தைமூர்
 • செரிஃபா வாஹித், நடிகர்
 • அப்துல் மத்லிப் மஜும்தார், இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் பிரிக்கப்படாத அசாம் மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தலைவர் . பாக்கிஸ்தானின் ஒரு தனி முஸ்லிம் அரசைக் கோருஇதில், குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் அவர் மிக முக்கியமான முஸ்லிம் எதிர்ப்பாளராக இருந்தார்.
 • துப்ரி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பத்ருதீன் அஜ்மல் [19] ; அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AUDF) நிறுவனர். இப்போது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF); [20] அசாம் மாநிலத்தின் தலைவர் ஜாமியத் உலமா-இ-ஹிந்த்; தொழிலதிபர் மற்றும் ஒரு சமூக சேவகர்.

மேலும் காண்கதொகு

 • மேற்கு வங்கத்தில் இஸ்லாம்
 • அசாமில் கிறிஸ்தவம்

குறிப்புகள்தொகு

 1. 1.0 1.1 2011 Census Data: Assam.
 2. MALKOÇ, Eminalp (2017). Journal of Eurasian Studies / Avrasya İncelemeleri Dergisi. Istanbul University. பக். 110. doi:10.26650/jes. 
 3. Bokuleva, Bota; Avakova, Rauşangül; Abeldayev, Jenisbek (2012-05-01). "Türk Kültürünün Hindistan Uygarlığına Etkisi". Türk Dünyası İncelemeleri Dergisi 12 (1): 442. பன்னாட்டுத் தர தொடர் எண்:1301-2045. https://dergipark.org.tr/en/pub/egetdid/380589. 
 4. Bayur, Yusuf Hikmet.. Hindistan tarihı ... : Y. Hikmet Bayur .... Türk tarih kurumu basımevi. பக். 273. 
 5. Muhammad Mojlum Khan (2013). The Muslim Heritage of Bengal. Kube. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781847740625. https://books.google.com/books?id=-2s9BAAAQBAJ&lpg=PA18&pg=PA18. 
 6. D. Nath (1989). History of the Koch Kingdom, c. 1515 – 1615. Mittal. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170991090. https://books.google.com/books?id=ECxUOSudNGYC&lpg=PA9&pg=PA9. 
 7. Syed Mohammad Ali. "A chronology of Muslim faujdars of Sylhet". The Proceedings Of The All Pakistan History Conference. 1. Karachi: Pakistan Historical Society. பக். 275–284. 
 8. Sanjib Baruah (1999). India Against Itself: Assam and the Politics of Nationality. University of Pennsylvania Press. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780812234916. https://books.google.com/books?id=8k-irMMTnywC&lpg=PA24&pg=PA24. 
 9. Jayashree Roy (2003). Decentralisation Of Primary Education in the Autonomous District Council of Karbi Anglong - Assam. National Institute of Educational Planning and Administration. பக். 10. http://www.nuepa.org/libdoc/e-library/res_studies/2003jrjalali.pdf. 
 10. 10.0 10.1 N. S. Saksena (1985). Terrorism History and Facets: In the World and in India. Abhinav Publications. பக். 165. https://books.google.com/books?id=mdamAi5UpQQC&pg=PA165. 
 11. 11.0 11.1 "Assam: Religion and Caste". Government of Assam. மூல முகவரியிலிருந்து 31 August 2012 அன்று பரணிடப்பட்டது.
 12. Chowdhury, Dewan Nurul Anwar Husain. "Sylhet Referendum, 1947". Banglapedia.
 13. "Recovering Sylhet - Himal Southasian". Himal Southasian (22 November 2012).
 14. "Census 2011 data rekindles 'demographic invasion' fear in Assam". hindustantimes.com.
 15. "Muslim majority districts in Assam up - Times of India". timesofindia.indiatimes.com.
 16. "Memory and forgetting in Nellie - Livemint". livemint.com.
 17. "Assam Timeline - Year 2014".
 18. Population by religious communities, 2001 Census of India
 19. "15th Lok sabha members, Assam, India". மூல முகவரியிலிருந்து 25 September 2015 அன்று பரணிடப்பட்டது.
 20. http://www.aiudf.org AIUDF Official Website
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமில்_இஸ்லாம்&oldid=3041613" இருந்து மீள்விக்கப்பட்டது