அசித்த பெர்னாண்டோ

அசித்த மதுசங்க பெர்னாண்டோ (Asitha Madusanka Fernando, பிறப்பு: 31 சூலை 1997) என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட வீரர். இவர் தற்போது இலங்கை அணிக்காக மூன்று வகைத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் முன்னணிப் பந்துவீச்சாளராக விளையாடி வருகிறார்.[1] இவர் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணம் கிங்சு அணியில் விளையாடி வருகிறார்.

அசித்த பெர்னாண்டோ
Asitha Fernando
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அசித்த மதுசங்க பெர்னாண்டோ
பிறப்பு31 சூலை 1997 (1997-07-31) (அகவை 27)
கட்டுனேரியா, இலங்கை
உயரம்5'6
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 153)3 சனவரி 2021 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு24 ஏப்ரல் 2023 எ. அயர்லாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 181)8 சூலை 2017 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப30 நவம்பர் 2022 எ. ஆப்கானித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 97)1 செப்டம்பர் 2022 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப6 செப்டம்பர் 2022 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016–2020சிலாபம் மரியான்சு
2018–2019நொண்டேசுகிரிப்ட்சு
2020காலி கிளேடியேட்டர்சு
2022–இன்றுகொழும்பு
2022–இன்றுயாழ்ப்பாணம் கிங்சு
2023நோட்டிங்காம்சயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப மு.த
ஆட்டங்கள் 13 7 3 48
ஓட்டங்கள் 36 1 10 156
மட்டையாட்ட சராசரி 3.27 1.00 10.00 4.58
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 10 1* 10* 30
வீசிய பந்துகள் 1,971 270 113 5,936
வீழ்த்தல்கள் 41 5 2 151
பந்துவீச்சு சராசரி 26.85 53.80 51.00 22.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0 8
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 1
சிறந்த பந்துவீச்சு 6/51 2/23 1/51 7/139
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 0/– 0/– 9/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 15 பெப்ரவரி 2024

பன்னாட்டுப் போட்டிகள்

தொகு

2016 சூலையில் அசித்த பெர்னாண்டோ ஆத்திரேலியாவுக்கு எதிரான 2016 தொடரில் விளையாட இலங்கையின் தேர்வு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார், ஆனால் அவருக்கு அத்தொடரில் விளையாடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.[2]

அசித்த 2017 இல் சிம்பாப்வேக்கு எதிரான இலங்கையின் ஒரு-நாள் பன்னாட்டுத் தொடரில் விளையாட சேர்த்துக்கொள்ளப்பட்டார், இவர் தனது முதலாவது ஒநாப போட்டியை மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்டத் திடலில் சூலை 2017 இல் சிம்பாப்வேக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடினார், ஆனால் இலக்கு எதனையும் அவர் எடுக்கவில்லை.[3]

2018 பெப்ரவரியில், அசித்த வங்காளதேசத்திற்கு எதிரான இலங்கையின் பன்னாட்டு இருபது20 தொடரில் விளையாட சேர்க்கப்பட்டார், ஆனால் விளையாடவில்லை.[4] 2018 மே மாதத்தில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாட இலங்கையின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[5]

அசித்த தனது முதலாவது தேர்வுப் போட்டியை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் 2021 சனவரி 3 இல் விளையாடினார்.[6][7] 2022 மே மாதத்தில், வங்காளதேசத்திற்கு எதிரான தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், பெர்னாண்டோ தனது முதலாவது தேர்வு ஐவீழ்த்தலைப் (6/51) பெற்றார்.[8] 2022 ஆகத்தில், ஆசியக் கிண்ணம் 2022 இல் விளையாட சேர்க்கப்பட்டார்.[9] தனது முதலாவது இ20ப போட்டியை 2022 செப்டம்பர் 1 இல் வங்காளதேச அணிக்கு எதிராக விளையாடினார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Asitha Fernando". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2016.
  2. "Siriwardana left out of Sri Lanka squad for first Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2016.
  3. "Zimbabwe tour of Sri Lanka, 4th ODI: Sri Lanka v Zimbabwe at Hambantota, Jul 8, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 July 2017.
  4. "Sri Lanka pick Asitha for T20 series, Jeevan Mendis returns". ESPN Cricinfo. 7 February 2018. http://www.espncricinfo.com/ci/content/story/1135802.html. பார்த்த நாள்: 7 February 2018. 
  5. "Udawatte, Rajitha, Vandersay picked for West Indies Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
  6. "2nd Test, Johannesburg, Jan 3 - Jan 7 2021, Sri Lanka tour of South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
  7. "Fernando and Bhanuka – All you need to know about Sri Lanka's latest Test debutants". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
  8. "Asitha, Mathews, Chandimal star in Sri Lanka's series win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 May 2022.
  9. "Sri Lanka squad for Asia Cup 2022". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
  10. "5th Match, Group B (N), Dubai (DSC), September 01, 2022, Asia Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசித்த_பெர்னாண்டோ&oldid=4054899" இலிருந்து மீள்விக்கப்பட்டது