அனல் மின் நிலையம்

(அனல் மின்நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனல் மின் நிலையம் (Thermal Power Plant) என்பது மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களில் ஒன்றாகும். இவ்வகை மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழற்றப்படும்போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.பொதுவாக வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்து, அதனால் நீராவிச்சுழலியை இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.[1][2][3]

பல்கேரியாவின் சோபியா என்னும் இடத்திலுள்ள ஓர் அனல் மின் நிலையம்

இந்த முறையிலான மின்னுற்பத்திக்கு நீர், நிலக்கரி ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி பயன்படுத்தும் அனல் மின் நிலையம்

தொகு
 
நிலக்கரி பயன்படுத்தும் அனல் மின் நிலையத்தின் அமைப்பு
1. குளிர்கூண்டு/குளிர்த்தும் கோபுரம் 10. நீராவி கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் 19. மீ வெப்பமைவு
2. குளிரூட்டல் நீரேற்றி 11. அதிக அழுத்த நீராவிச்சுழலி 20. காற்று உள் அனுப்பும் காற்றாடி
3. மின்திறன் கடத்தும் கம்பிகள் 12. வளிநீக்கி 21. மீள் சூடாக்கி
4. படிகூட்டு மின்மாற்றி 13. ஊட்டுநீர் வெப்பமூட்டி 22. எரிதலுக்கு காற்றை இழுக்கும் அமைப்பு
5. மின்னியற்றி 14. நிலக்கரி ஏற்றிச் செல்லி அமைப்பு 23. சிக்கனப்படுத்தி
6. குறை அழுத்த நீராவிச்சுழலி 15. நிலக்கரி பெய்குடுவை 24. காற்று முன்சூடாக்கி
7. செறிபொருள் ஏற்றி 16. நிலக்கரி பொடியாக்கி 25. வீழ்படிவாக்கி
8. மேற்பரப்புக் குளிர்விப்பான் 17. நீராவி உருளை 26. காற்று வெளி இழுக்கும் காற்றாடி
9. நடு அழுத்த நீராவிச்சுழலி 18. அடிச்சாம்பல் பெய்கலன் 27. புகைப்போக்கி

வெளியேறும் வாயுக்கள்

தொகு

அனல் மின் நிலையங்களில் நிலக்கரியை எரித்தல் மூலமாக வெளியாகும் முதன்மையான வளிமங்கள், கரியமில வாயு (CO2), நைட்ரசன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) மற்றும் உலைச் சாம்பல், புகைக்கரி உள்ளிட்ட காற்றில் பரவும் கனிமப் பொருள்கள். இவற்றுள் CO2, CFC ஆகியவை பைங்குடில் வளிமங்கள்; இவற்றால் புவியில் காலநிலை மாற்றம் நிகழும் வாய்ப்புகள் உள்ளன[4].

இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள்

தொகு
  1. காந்திநகர் அனல் மின் நிலையம் - குஜராத்
  2. ராஜீவ் காந்தி அனல் மின் நிலையம் - ஹரியானா
  3. சஞ்சய் காந்தி அனல் மின் நிலையம் - மத்தியப் பிரதேசம்
  4. துர்காபூர் அனல் மின் நிலையம் - மேற்கு வங்காளம்
  5. பானிபட் அனல் மின் நிலையம் 1 - ஹரியானா
  6. ராஜ்காட் மின் நிலையம் - தில்லி
  7. தூத்துக்குடி அனல் மின் நிலையம் - தமிழ்நாடு

இலங்கையில் உள்ள அனல் மின் நிலையங்கள்

தொகு
  1. நுரைச்சோலை அனல்மின் நிலையம் - வடமேல் மாகாணம், இலங்கை
  2. சம்பூர் அனல்மின் நிலையம் - திருக்கோணமலை

மேற்கோள்கள்

தொகு
  1. the early days of the power station industry (in ஆங்கிலம்). CUP Archive. 1940.
  2. Maury Klein, The Power Makers: Steam, Electricity, and the Men Who Invented Modern America Bloomsbury Publishing USA, 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59691-677-X
  3. "DOE – Fossil Energy: How Turbine Power Plants Work". Fossil.energy.gov. Archived from the original on May 27, 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-09-25.
  4. "Status and Environmental Impact of Emissions from Thermal Power Plants in India". tandfonline. பார்க்கப்பட்ட நாள் 21 Jan 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனல்_மின்_நிலையம்&oldid=3768589" இலிருந்து மீள்விக்கப்பட்டது