ஆழியூர்
ஆழியூர் (Azhiyur) இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரா வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். மாகே இரயில் நிலையம் ஆழியூர் அருகே அமைந்துள்ளது.
ஆழியூர் Azhiyoor | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°41′0″N 75°32′0″E / 11.68333°N 75.53333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.77 km2 (3.77 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 28,731 |
• அடர்த்தி | 2,900/km2 (7,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 673309 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL-11 |
வாகனப் பதிவு | கே.எல்-18 |
அருகாமை நகரம் | கோழிக்கோடு |
இணையதளம் | lsgkerala |
மக்கள்தொகை
தொகு2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆழியூர் 13351 ஆண்களையும் 15380 பெண்களையும் உள்ளடக்கிய 28731 பேர் என்ற மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.[1] இது மய்யாழிக்கு (மாகி) அருகில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
தொகுஆழியூர் கிராமம் மேற்கில் வாதகரா நகரம் மற்றும் கிழக்கில் குட்டியாடி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை 66 வாதகரா நகரம் வழியாகச் செல்கிறது மற்றும் வடக்கத்திய பகுதி மங்களூர், கோவா மற்றும் மும்பை ஆகிய நகரங்களை இணைக்கிறது. தெற்கு பகுதி கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது. குட்டியாடி வழியாக செல்லும் கிழக்கு நெடுஞ்சாலை மானந்தவாடி, மைசூர் மற்றும் பெங்களூரை இணைக்கிறது. அருகிலுள்ள விமான நிலையங்கள் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகியவையாகும். அருகிலுள்ள இரயில் நிலையம் மாகியில் உள்ளது.
முன்மொழியப்பட்ட புதிய மாகே நகராட்சி
தொகுமுன்மொழியப்பட்ட புதிய மாகே நகராட்சி பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
- ஆழியூர் பஞ்சாயத்து, வாதகரா தாலுகா, கோழிக்கோடு மாவட்டம், கேரளா
- புதிய மாகே பஞ்சாயத்து, தலசேரி தாலுகா, கண்ணூர் மாவட்டம், கேரளா
- சோக்லி பஞ்சாயத்து, தலசேரி தாலுகா, கண்ணூர் மாவட்டம், கேரளா
- பன்னியனூர் ஊராட்சி, தலசேரி தாலுகா, கண்ணூர் மாவட்டம், கேரளா
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.