இந்தியாவில் அருகிய பாலூட்டி இனங்கள்
இந்தியாவில் அருகிய பாலூட்டி இனங்கள் (Endangered mammals of India) என்பது இந்தியாவில் உள்ள பாலூட்டி இனங்களில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (ஐ.யூ.சி.என்) செம்பட்டியலில் அருகிய இனம் பட்டியலிடப்பட்ட விலங்குகளைக் குறிப்பதாகும்
பின்னணி
தொகுஇந்தியாவில், பாலூட்டிகளில் 410 சிற்றினங்கள், 186 பேரினங்களின் கீழும், 45 குடும்பங்களாக 13 வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 89 சிற்றினங்கள் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (ஐ.யூ.சி.என்) செம்ப்பட்டியலில் (ஐ.யூ.சி.என் 2006) அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.[1] இந்தியாவில், உள்நாட்டில் அழிந்து வரும் இரண்டு இனங்களான சிவிங்கிப்புலி, அசினோனிக்சு ஜுபாடசு மற்றும் காண்டாமிருகம், ரைனோசெரோசு சோண்டிகசு உள்ளன.
முதுகு நாணிகளில் பாலூட்டிகள் என்ற வகுப்பு பாற்சுரப்பிகளின் இருப்பு மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. பாற்சுரப்பிகள் மூலம் பெண் விலங்குகள் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காகப் பால் உற்பத்தி ஊட்டுகின்றன. முடி அல்லது மென்மயிர் இருப்பு; சிறப்புப் பற்கள்; மூளையில் ஒரு நியோகார்டெக்ஸ் பகுதி இருப்பது, மற்றும் எண்டோடெர்மிக் அல்லது மூளையினால் ஒழுங்குபடுத்தப்பட"சூடான-இரத்தம் கொண்ட" உடல், நான்கு அறைகள் கொண்ட இதயம் உட்பட எண்டோடெர்மிக் மற்றும் சுற்றோட்ட தொகுதி பாலூட்டிகளின் பொதுப் பண்புகளாகும். பாலூட்டிகளில் சுமார் 5,500 சிற்றினங்கள் (மனிதர்கள் உட்பட), சுமார் 1,200 பேரினங்கள், 152 குடும்பங்கள் மற்றும் 46 வரிசை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அருகிய பாலூட்டிகள்
தொகு- ஆசியப் பொன்னிறப் பூனை (கேப்டோபுமா டெம்மினிக்கி)
- ஆசியச் சிங்கம் (பே. லி. பெர்சிகா)
- இந்திய காட்டுக் கழுதை (ஈக்குஅசு ஹெமினொசு குர்)
- செந்நாய் (கு. அல்பினசு)
- ஆசியக் கறுப்புக் கரடி (Ursus thibetanus)
- வங்காளப் புலி (Panthera tigris tigris)
- பெங்டாங் (Bos javanicus)
- வங்காள நரி (Vulpes bengalensis)
- தாமின் மான் (Panolia eldi eldi)
- இமயமலை பழுப்புக் கரடி (Ursus arctos isabellinus)
- பழுப்பு பனை புனுகுப்பூனை (Paradoxurus jerdoni)
- காட்டு நீர்நாய் (Amblonyx cinereus)
- படைச்சிறுத்தை (Neofelis nebulosa)
- நீர்நாய் (Lutra lutra)
- ஆசிய காட்டுப்பூனை (Felis lybica ornata)
- ஆவுளியா / கடல்பசு (Dugong dugon)
- தென்னாசிய ஆற்று ஓங்கில் (Platanista gangetica)
- இந்தியக் காட்டெருது (Bos gaurus)
- தங்க நிற மந்தி (Trachypithecus geei)
- கோரல் (Nemorhaedus goral)
- இந்திய மூக்குக்கொம்பன் (Rhinoceros unicornis)
- இந்திய ஓநாய் (Canis lupus pallipes)
- Himalayan marten (Martes flavigula)
- இமயமலை கத்தூரி மான் (Moschus chrysogaster)
- இமயமலை மூஞ்சூறு (சோரிகல்சு நைக்ரென்சென்சு)
- ஹிஸ்பிட் முயல் (Caprolagus hispidus)
- ஹுலக் கிப்பான் (Hoolock hoolock)
- இந்திய யானை (Elephas maximus indicus)
- பொன்னிறக் குள்ளநரி (Canis aureus)
- காசுமீர் மான் / Hangul (Cervus affinis hanglu)
- இந்தியச் சிறுத்தை (Panthera pardus fusca)
- சிங்கவால் குரங்கு (Macaca silenus)
- மலபார் புனுகுப் பூனை (Viverra civettina)
- பளிங்குப் பூனை (Pardofelis marmorata)
- நீலகிரி மந்தி (Presbytis johni)
- நீலகிரி மார்டென் (Martes gwatkinsi)
- நீலகிரி வரையாடு (Hemitragus hylocrius)
- குள்ள காட்டுப் பன்றி (Porcula salvania)
- செந்நரி (Vulpes vulpes montana)
- சிவப்பு பாண்டா (Ailurus fulgens)
- துரும்பன் பூனை (Prionailurus rubiginosa)
- மலையாடு (Nemorhaedus sumatraensis)
- தேன் கரடி (Melursus ursinus ursinus)
- ஆற்று நீர்நாய் (Lutrogale perspicillata)
- பனிச்சிறுத்தை (Panthera uncia)
- Stump-tailed macaque (Macaca arctoides)
- சதுப்புநில மான்/ Barasingha (Rusa duvauceli duvauceli)
- டக்கின் (Budorcas taxicolor)
- திபெத்து காட்டு கழுதை (ஈகுவசு கியாங்)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Indian Mammals". archive.is. 2007-07-04. Archived from the original on 2007-07-04. பார்க்கப்பட்ட நாள் October 5, 2006.