இராசகோபாலாச்சாரி அமைச்சரவை
இராசகோபாலாச்சாரி அமைச்சரவை, பிரித்தானிய இந்தியா மற்றும் விடுதலை இந்தியாவின், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலாவாது சென்னை மாகாண முதலமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமை இராசகோபாலாச்சாரிக்கு உண்டு.
இராசகோபாலாச்சாரியை சுருக்கமாக இராஜாஜி என்று அழைப்பர். இராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராக இரு முறை பதவி வகித்தவர்.
இவர் இரு முறை, சென்னை மாகாண முதலமைச்சராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தவர்.
முதன் முறையாக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1937 முதல் 1939 முடியவும்; பின்னர் இந்திய விடுதலைக்குப் பின் 1952 முதல் 1954 முடியவும் சென்னை மாகாண முதலமைச்சராக பணியாற்றினார்.
முதன் முறை முதலமைச்சராக
தொகுதேர்தல் வெற்றி
தொகு1935ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின்படி, இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறைக்கு காரணமான அமைந்த 1919ம் ஆண்டின் இந்திய அரசின் சட்டம் நீக்கப்பட்டது.
1935ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின்படி, சென்னை மாகாணத்தில் ஈரவை முறைமை நடைமுறைப்படுத்திய பின்னர், முதன் முதலாக நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத்தின் கீழவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தேர்தல்கள் 1937ம் ஆண்டில் நடைபெற்றது.
சென்னை மாகாண சட்டமன்றத்தின் 215 தொகுதிகளில், 159 தொகுதிகளையும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் 56 தொகுதிகளில் 27 தொகுதிகளை இந்திய தேசிய காங்கிரசு கைப்பற்றியது.
சென்னை மாகாணத்தின் ஈரவைகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற போதும், ஆட்சி அமைக்கத் தயங்கியது.
1935 இந்திய அரசின் சட்டத்தின் கீழ் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எதிர்த்தது.
இச்சிறப்புச் சட்டத்தின் படி, மாகாண ஆளுநர்களுக்கு, மாகாணத்தின் நிதி மற்றும் வேறு சில விடயங்களில் மாகாண அமைச்சரவையைக் கட்டுப்படுத்தும் சிறப்பு அதிகாரங்கள் இருந்தன.
பிரித்தானிய இந்தியாவின் ஆறு மாகாணங்களில் வென்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை எதிர்த்து மாகாணங்களில் அமைச்சரவை அமைப்பதில் பின்வாங்கியது.
இந்நிலையில், சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜான் எர்ஸ்கின், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்களைக் கொண்டு இடைக்கால அமைச்சரவையை நிறுவ முயன்றார். இடைக்கால அமைச்சரவைக்கு தலைமையேற்க வி. எஸ். சீறீனிவாச சாத்திரியை, ஆளுநர் அழைத்தார். சாத்திரியார், ஆளுநரின் அழைப்பை மறுத்தார். பின்னர் ஆளுநரின் அழைப்பை ஏற்ற நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, சென்னை மாகாண இடைக்கால அமைச்சரவையின் முதலமைச்சராக 1 ஏப்ரல் 1937ல் பதவியேற்றார்.
சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சரவை அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முடிவு பற்றி பயம் கொண்டனர்.
எனவே மாகாண காங்கிரஸ் தலைவர்கள், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களை அணுகி, மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வலியுறுத்தினர்.
காங்கிரஸ் தேசியத் தலைவர்கள் இந்திய வைஸ்ராயை அணுகி, மாகாண ஆளுநர்கள், 1935 இந்திய அரசின் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்த மாட்டார்கள் என்ற உறுதிமொழியைப் பெற்றனர்.
22 சூன் 1937ல் இந்தியத் தலைமை ஆளுநர் விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு, 1935 ஆம் ஆண்டின் சட்டத்தை அமல்படுத்துவதில் காங்கிரசுடன் சேர்ந்து செயல்பட பிரித்தானிய அரசின் விருப்பத்தை வெளிப்படுத்தும் அறிக்கை வெளியிட்டார்.
1 சூலை 1937ல் இதனை ஏற்ற காங்கிரஸ் செயற்குழு (CWC), தாங்கள் வென்ற ஆறு மாகாணங்களில ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது.
14 சூலை 1937ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் சி. இராசகோபாலாச்சாரி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்[1][2][3][4]
அமைச்சரவை
தொகுஇராசகோபாலாச்சாரி தலமையிலான அமைச்சரவைக் குழு 15 சூலை 1937 முதல் 29 அக்டோபர் 1939 முடிய இயங்கியது:[5][6]
அமைச்சர் | துறைகள் |
---|---|
சி. இராசகோபாலாச்சாரி | முதலமைச்சர், பொதுத்துறை மற்றும் நிதித்துறை |
த. பிரகாசம் | வருவாய்த்துறை |
பி. சுப்பராயன் | சட்டம் மற்றும் கல்வித் துறை |
வி. வி. கிரி | தொழிலாளர் மற்றும் தொழில்கள் |
பெஜவாடா கோபால ரெட்டி | உள்ளாட்சி நிர்வாகம் |
தி. சே. சௌ. ராஜன் | பொதுச் சுகாதாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை |
மௌலான யாகூப் ஹசன் சையத் | பொதுப்பணித் துறை |
வி. ஐ. முனுசாமி பிள்ளை | வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை |
எஸ். இராமநாதன் பிள்ளை | பொதுத் தகவல் மற்றும் நிர்வாக அறிக்கைகள் |
கொங்கட்டில் ராமன் மேனன் | நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை |
சுன்கத் ஜோசப் வர்க்கி | கல்வித் துறை |
- அமைச்சரவை மாற்றங்கள்
- 7 சனவரி 1939ல் ராமன் மேனன் இறந்தார். எனவே சுன்கத் ஜோசப் வர்க்கியை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பி. சுப்பராயன் இடமிருந்த கல்வித் துறையை, சுன்கத் ஜோசப் வர்க்கிக்கு மாற்றப்பட்டது. சுப்பராயனிடம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை இருந்தது.
மதுவிலக்கு
தொகுஇராஜாஜி செப்டம்பர், 1937ல் இந்தியாவில் முதன்முறையாக சென்னை மாகாணத்தில் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதனால் கள் மற்றும் சாராயக் கடைகள் மூடப்பட்டது. மதுவிலக்கினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் தொழிலாளர்களும், பெண்களும், குழந்தைகளும் மதுவிலக்கால் மகிழ்ச்சியடைந்தனர்.[7][8]
கோயில் நுழைவு சட்டம்
தொகு1936ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் நடைமுறைப்படுத்திய கோவில் நுழைவு ஆணையை முன்னுதாரனமாகக் கொண்டு, எம். சி. இராஜா, 1938ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் கோயில்களில் நுழைய அனுமதிக்கும் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தினார்.[8] இராஜாஜி அரசு ஒடுக்கப்பட்டோர்கள் கோயில்களில் வழிபாடு செய்வதற்கு வசதியாக, 1939ல் கோயில் நுழைவு அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார்.[9]
இரண்டாம் முறை முதலமைச்சராக
தொகுதேர்தல் வெற்றி
தொகுஇந்திய விடுதலைக்குப் பின் முதன் முதலாக நடைபெற்ற 1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், எக்கட்சியும் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி பெறவில்லை. எனவே இந்திய தேசிய காங்கிரசு அதிக தொகுதிகளில் வென்ற பெரிய கட்சி என்பதால், சென்னை மாகாண ஆளுநராக இருந்த பிரகாசம், இராஜாஜியை அமைச்சரவை அமைக்க அழைத்தார். 10 ஏப்ரல் 1952ல் மேலவை உறுப்பினராக இருந்த இராஜாஜி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.[10][11]
சூலை 1952ல் இராஜாஜி அமைச்சரவைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக 200 உறுப்பினர்களும், ஆதரவாக 151 உறுப்பினரகளும் வாக்களித்தனர். எனவே இராஜாஜி அரசு தப்பியது.[12][13]
அமைச்சரவை
தொகுஅமைச்சர்கள் | ஒதுக்கப்பட்டத் துறைகள் |
---|---|
இராஜாஜி | முதலமைச்சர், பொது மற்றும் காவல்துறை[14] |
ஏ. பி. செட்டி | மருத்துவம் |
சி. சுப்பிரமணியம் | நிதி, உணவு மற்றும் தேர்தல் துறை |
கே. வெங்கடசாமி நாயுடு | அறநிலையதுறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை |
என். ரெங்கா ரெட்டி | பொதுப்பணித் துறை |
எம். வி. கிருஷ்ணாராவ் | கல்வி, தகவல் தொடர்பு, தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் துறை |
வி. சி. பழனிச்சாமி கவுண்டர் | மதுவிலக்குத் துறை |
யு. கிருஷ்ண ராவ் | தொழில்கள், தொழிலாளர் நலன், போக்குவரத்துத் துறை |
ஆர். நாகனா கௌட் | வேளாண்மை, காடுகள், கால்நடைகள், கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு மற்றும் கொய்னாத் துறை (Cinchona) |
என். சங்கர ரெட்டி | உள்ளாட்சித் துறை |
எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் | நில நிர்வாகத் துறை |
கே. பி. குட்டிகிருஷ்ணன் நாயர் | நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் சட்டத் துறை |
சண்முக ராஜேஸ்வர சேதுபதி | குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாட்டுத் துறை |
எஸ். பி. பி. பட்டாபிராம ராவ் | ஊரக வளர்ச்சி மற்றும் வணிக வரித் துறை |
டி. சஞ்சீவய்யா | கூட்டுறவு மற்றும் வீட்டுவசதித் துறை |
- அமைச்சரவை மாற்றங்கள்
- வேளாண்மை, காடுகள், மீன் வளம், சின்கோனா, ஊரக வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மற்றும் தேசிய விரிவாக்கத் திட்டத் துறைகள், 9 அக்டோபர் 1953ல் எம். பக்தவத்சலமிடம் ஒப்படைக்கப்பட்டது.
- சி. சுப்பிரமணியத்திற்கு கல்வி, தகவல் மற்றும் விளம்பரத் துறைகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
- வி. சி. பழனிச்சாமி கவுண்டருக்கு, கூடுதல் பொறுப்பாக கால்நடை வளர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் துறைகள் வழங்கப்பட்டது.
தொடக்கக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள்
தொகுஇந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசிய அளவிலான கொள்கையின் படி, 1953ல் இராசகோபாலாச்சாரி, தொடக்கக் கல்வி படிப்பின் போது, மாணவர்களிடையே மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
குலக்கல்வி திட்டத்தின் படி, துவக்கப் பள்ளியில் இரண்டு வேளை படிப்புத் திட்டத்தில், முதல் வேளையில் பள்ளிக் கல்வியும், இராண்டாவது வேளை படிப்பாக, மாணவர்கள், கிராமங்களில் தங்கள் தாய்-தந்தையர் செய்யும் வேளாண்மை, கைத்தொழிலை கற்க வேண்டும்.[15][16]
இராசாசியின் குலக்கல்வி திட்டத்திற்கு பொதுமக்களும், திராவிட முன்னேற்ற கழகம் போன்ற அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.[17] குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் உட்கட்சியில், இராஜாஜிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. எனவே இராஜாஜி தனது முதலமைச்சர் பதவியை துறக்க வேண்டி வந்தது.
இராஜாஜிக்குப் பின் 1954ல் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற காமராசர், குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramanathan, K. V. (2008). The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian, Volume 1. Pearson Education India. pp. 301–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1488-1.
- ↑ Menon, Visalakshi (2003). From movement to government: the Congress in the United Provinces, 1937–42. Sage. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-9620-0.
- ↑ Nagarajan, Krishnaswami (1989). Dr. Rajah Sir Muthiah Chettiar: a biography. Annamalai University. pp. 63–70.
- ↑ The State Legislature – Origin and Evolution:Brief History Before independence பரணிடப்பட்டது 13 ஏப்பிரல் 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ilakkumi Nārāyaṇan, Ka; Gangadharan, T; Chandrasekar, N (1999). Salem city: an ethnohistory (1792–1992). Vysya College. p. 80.
- ↑ Justice Party golden jubilee souvenir, 1968. Justice Party. 1968. p. 58. ISBN.
- ↑ Verinder Grover, Ranjana Arora (1993). Great Women of Modern India: Aruna Asaf Ali. South Asia books. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7100-462-8.
- ↑ 8.0 8.1 Saroja Sundararajan (1989). March to freedom in Madras Presidency, 1916–1947. Madras : Lalitha Publications. pp. 519–531.
- ↑ Bardwell L. Smith (1976). Religion and social conflict in South Asia. pp. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04510-4.
- ↑ T. V. R. Shenoy (22 August 2001). "From Rajaji to Jayalalithaa". Rediff. http://www.rediff.com/news/2001/aug/22flip.htm.
- ↑ I. N. Tewary (1999). Political system: a micro perspective. New Delhi: Anmol Publications PVT. LTD. p. 13.
- ↑ Eastern Economist, Annual Number. Eastern Economist. 1965. p. 1172.
- ↑ Subramaniam, Chidambaram (1993). Hand of destiny: memoirs, Volume 1. Bharatiya Vidya Bhavan. p. 166.
- ↑ "Council of Ministers and their Portfolios (1952–1954)" (PDF). A Review of the Madras Legislative Assembly (1952–1957). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 17 அக்டோபர் 2013.
- ↑ Appendix Q : Modified Scheme of Elementary Education, Madras பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Appendix T : Modified Scheme of Elementary Education, Madras பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Vasantha Kandaswamy p.262-6
- ↑ "The Hindu report on 19 May 1954 : Scheme dropped". Archived from the original on 28 ஜூன் 2004. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)