உலக மீன்பிடி ஒழிப்பு நாள்
உலக மீன்பிடி ஒழிப்பு நாள் (ஆங்கில மொழி: World Day for the End of Fishing [WoDEF]) என்பது மீன்பிடி நடைமுறைகளை முற்றிலுமாக நிறுத்தக் கோரி விலங்குரிமை ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச பிரச்சாரமாகும். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.[1]
உலக மீன்பிடி ஒழிப்பு நாள் | |
---|---|
2019-ல் உலக மீன்பிடி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கனடாவின் மான்ட்ரியல் நகரில் Le Collectif Antispéciste pour la Solidarité Animale (CASA) அமைப்பின் விலங்குரிமை ஆர்வலர்கள் நடத்திய விழிப்புணர்வு செயற்பாடு. | |
நிகழ்நிலை | நடைமுறையில் உள்ளது |
வகை | விழிப்புணர்வு தினம் |
தொடக்கம் | 2016 |
காலப்பகுதி | ஆண்டுதோறும் |
அமைவிடம்(கள்) | உலகளாவிய |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 7 |
துவக்கம் | மார்ச்சு 24, 2017 |
முதன்முதலில் 2016-ல் சுவிட்சர்லாந்திலும் பிரான்ஸிலும் தொடங்கிய இந்தப் பிரச்சாரம், பின்னர் 2017-ல் ஒரு பன்னாட்டு விழிப்புணர்வு நாளாக மாறியது. இது முதன்முதலில் போ லா ஈகாலிடே அனிமேல் (Pour L'Égalité Animale [PEA]) என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.[1]
நிகழ்வுகள்
தொகுமீன்களின் வலி, உணர்வு, நுண்ணறிவு ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்காக பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உலக மீன்பிடி ஒழிப்பு நாளுக்காக பல செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தன. இவற்றில் தெருப் போராட்டங்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள், திரையிடல்கள், மாநாடுகள், மீன் எண்ணிக்கைச் செயல்முறைகள், செயற்பாட்டு முகாம்கள், கண்காட்சிகள் உள்ளிட்டவை அடங்கும்.
2017-ம் ஆண்டில் தனது முதல் நிகழ்வில், உலக மீன்பிடி ஒழிப்பு நாள் அனுசரிப்பு உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் நடந்தேறியது. அவற்றில் கீழ்கண்ட நகரங்கள் குறிப்பிடத்தக்கவை:
- பிரான்ஸ்: லோரியண்ட்,[2] பாரிஸ், வேலன்ஸ், லியோன், லீல், மாண்ட்பெல்லியர், செயிண்ட் மாலோ, ரேன்
- சுவிட்சர்லாந்து: ஜெனீவா,[3] லோசான்
- பெல்ஜியம்: பிரஸ்ஸல்ஸ், நமூர், சார்லராய்
- கனடா: மாண்ட்ரீல், டொராண்டோ[4]
- ஜெர்மனி: ஸ்டூட்கார்ட், வோகெல்ஸ்பெர்க், சீகன், ஹனோவர், கோட்டிங்கன், ஹாம்பர்க், பெர்லின்
- போர்ச்சுக்கல்: லிஸ்பன்
- இஸ்ரேல்: டெல் அவீவ், ஹைஃபா
- ஆத்திரேலியா: மெல்போர்ன்
- ஐக்கிய அமெரிக்கா: சான் டியேகோ, மான்டேரி பே[5]
2018-ல் இந்நிகழ்வு அதன் இரண்டாவது பதிப்பாக மீண்டும் சர்வதேச அளவில் கனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, பெரு, ஸ்வீடன், ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில், பிரான்ஸ், டென்மார்க், மெக்சிகோ, ஐக்கிய இராஜ்ஜியம், பனாமா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டது.[6] அதே ஆண்டு ஸ்டீவன் ஹார்னார்ட், பீட்டர் சிங்கர், வலேரி ஜிரோ, சூ டொனால்ட்சன், வில் கிம்லிக்கா, எலிஸ் டெசால்னியர்ஸ் உள்ளிட்ட ஏராளமான மெய்யியலாளர்களாலும் அறிவியல் அறிஞர்களாலும் கையெழுத்திடப்பட்ட ஒரு திறந்த மடல் லி நூவோ (Le Nouveau) இதழில் இந்நாளை முன்னிலைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டது.[7]
2019-ம் ஆண்டில், அதன் மூன்றாவது பதிப்பிற்காக, 269 லைஃப் பிரான்ஸ் அமைப்பின் ஆர்வலர்கள் இந்நாளுக்கான தெரு ஆர்ப்பாட்டமொன்றில் மீன்பிடிக் கொக்கிகளால் தங்கள் கன்னங்களைத் துளைத்துக் கொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.[8]
கோரிக்கைகள்
தொகுஉலக மீன்பிடி ஒழிப்பு நாளின் அமைப்பாளர்கள் ஓட்டுமீன்கள் மற்றும் செபலோபாட்கள் உட்பட அனைத்து வகையான மீன்களையும் உள்ளிட்டு நடத்தப்படும் அனைத்து வகையான மீன்பிடி நடைமுறைகளையும் ஒழிக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதன் நீட்சியாக மீன்வளர்ப்பு, தொழில்துறை மீன்பிடிப்பு, பொழுதுபோக்கு மீன்பிடிப்பு, கடல்வாழ் விலங்குயிர்களை வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்காகவும் அறிவியல் பரிசோதனைகளுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் வளர்த்துப் பயன்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான விலங்கினவாதக் கண்ணோட்டப் பயன்பாடுகளையும் நிரந்தரமாக ஒழிக்கக் கோரப்படுகின்றது.[9]
மீன்கள் வலியை உணரக்கூடியவை என்பதையும் அவற்றை உட்கொள்வது என்பது மனித சமூகத்திற்குத் தேவையற்றது என்பதையும் விலங்குரிமை ஆர்வலர்கள் இந்நாளின் அனுசரிப்பின் போது வலியுறுத்தி வருகின்றனர்.[10]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The World Day and the 'Another Perspective on Fish' campaign". WoDEF - World Day for the End of Fishing (in ஆங்கிலம்). 2016-12-02. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Vegan. La souffrance des poissons dénoncée". Le Telegramme (in பிரெஞ்சு). 2017-04-03. Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
- ↑ "Une journée pour sensibiliser au carnage mondial des poissons". RJB (in ஸ்விஸ் பிரஞ்சு). 2017-03-25. Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
- ↑ "Aquatic animals don't belong in a 'bathtub' say Ripley's Aquarium protestors | CBC News". Archived from the original on 2018-10-17. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
- ↑ "Succès pour la première Journée mondiale dédiée aux poissons - Association PEA - Pour l'Égalité Animale". www.asso-pea.ch. Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
- ↑ Ruel-Manseau, Audrey (2018-03-24). "Des militants réclament la fin de la pêche" (in fr) இம் மூலத்தில் இருந்து 2020-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200328205357/https://www.lapresse.ca/environnement/201803/24/01-5158596-des-militants-reclament-la-fin-de-la-peche.php.
- ↑ "Halte au carnage des poissons". www.nouveau-magazine-litteraire.com (in பிரெஞ்சு). Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
- ↑ "Activists in France pierce cheeks to mark world day to end fishing". RFI (in ஆங்கிலம்). 2019-03-30. Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
- ↑ "Why should we stop fishing? - World day for the end of fishing". www.end-of-fishing.org. Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
- ↑ "Aquatic animals don't belong in a 'bathtub' say Ripley's Aquarium protestors". CBC. 2017-03-25. Archived from the original on 2018-10-17. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.