என்.எஃப்.எல்.
என்.எஃப்.எல். (NFL) என்னும் நேஷனல் ஃபுட்பால் லீக் (National Football League), தமிழில் தேசிய காற்பந்தாட்டச் சங்கம் ஐக்கிய அமெரிக்காவின் நான்கு மிகப்பெரிய விளையாட்டுச் சங்கங்களில் ஒன்றாகும். உலகின் அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை ஒருங்கிணைக்கிற சங்கங்களில் மிகப் பெரியதும், பரவலமானது செல்வாக்கு பெற்றதும் இச்சங்கம்.[1] 1920இல் பதினொன்று அணிகள் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சங்கத்தில் இன்று 32 அணிகள் உள்ளன. இந்த 32 அணிகள் தேசிய காற்பந்தாட்டக் கூட்டம் (National Football Conference, NFC) மற்றும் அமெரிக்கக் காற்பந்தாட்டக் கூட்டமாக (American Football Conference, AFC) பிரிந்துகொண்டன. இரண்டு கூட்டங்களும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பகுதிகளாக பிரிந்து கொண்டன.
17 வாரங்களில் பொது பருவம் (regular season) விளையாடப்படும். இப்பருவத்தில் ஒரு "பை வீக்" (bye week) என்ற வாரத்தை விட்டு ஒவ்வொரு அணியும் வாரத்துக்கு ஒரு போட்டி விளையாடி மொத்தத்தில் 16 போட்டிகளை விளையாடும். பொதுவாக செப்டம்பர் மாதத்தில் முதலாம் வாரம் பொது பருவம் தொடங்கி டிசம்பர் இறுதியில் முடியும். இதற்கு பிறகு ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஆறு அணிகள் கொண்ட பின்பருவம் (postseason; playoffs) நடைபெறும். கடைசியில் ஒவ்வொரு கூட்டத்தில் நின்றிருக்கும் அணிகளும் சூப்பர் போல் (Super Bowl) என்றழைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் விளையாடி இப்போட்டி வென்ற அணி என்.எஃப்.எல். சாம்பியனாக வெற்றி பெறும்.
உலகில் பல உள்நாட்டு விளையாட்டுச் சங்கங்களில் என்.எஃப்.எல். போட்டிகளுக்கு வருகிற மக்கள் மிக அதிகமானது. பொது பருவத்தில் ஒரு போட்டிக்கு சராசரியாக 67,591 மக்கள் நுழைவுச்சீட்டை வாங்குகின்றனர்.[2]
அணிகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Jozsa, Frank P. (2004). Sports Capitalism: The Foreign Business of American Professional Leagues. Ashgate Publishing. பக். 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-4185-8. "Since 1922, [the NFL] has been the top professional sports league in the world with respect to American football"
- ↑ France-Presse, Agence (January 6, 2013). "NFL is world's best attended pro sports league". ABS-CBN News. http://www.abs-cbnnews.com/sports/01/06/13/nfl-worlds-best-attended-pro-sports-league. பார்த்த நாள்: January 30, 2013.