கர்ண் சர்மா

கர்ண் விநோத் சர்மா (Karn Vinod Sharma (பிறப்பு: அக்டோபர் 23, 1987) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இடது கை மட்டையாளரான இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். நவம்பர் 13, 2014இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] டிசம்பர் 9, 2014 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அரிமுகமானார்.

கர்ண் சர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கர்ண் விநோத் சர்மா
பிறப்பு23 அக்டோபர் 1987 (1987-10-23) (அகவை 37)
மீரட், உத்தரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலது கை சுழற் பந்துவீச்சாளர்
பங்குசகலத் துறையர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 283)9 டிசம்பர் 2014 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 204)13 நவம்பர் 2014 எ. இலங்கை
கடைசி ஒநாப16 நவம்பர் 2014 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்33
ஒரே இ20ப (தொப்பி 49)7 செப்டம்பர் 2014 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–2017இரயில்வே துடுப்பாட்ட அணி
2009பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
2013–2016சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 33 (முன் 35))
2017மும்பை இந்தியன்ஸ் (squad no. 12)
2018–தற்போது வரைசென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 36)
2017விதர்பா
2018–தற்போது வரைஆந்திரா துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது தே து ப இ20 முதது
ஆட்டங்கள் 2 1 1 34
ஓட்டங்கள் - 8 - 1087
மட்டையாட்ட சராசரி - 8.00 - 25.88
100கள்/50கள் - 0/0 - 1/7
அதியுயர் ஓட்டம் - 4* - 120
வீசிய பந்துகள் 114 294 24 3943
வீழ்த்தல்கள் 0 4 1 66
பந்துவீச்சு சராசரி - 59.50 28.00 28.87
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0 n/a 0
சிறந்த பந்துவீச்சு 0/61 2/95 1/28 8/97
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 0/- 0/- 12/-
மூலம்: கிரிக் இன்ஃபோ, 12 டிசம்பர் 2013

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

2007-08 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இரயில்வே அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். அந்தத் தொடரில் சம்மு காசுமீர் அணிக்கு எதிரான போட்டியில் 232 பந்தில் 120 ஓட்டங்களை எடுத்தார். 2018-19 ஆம் ஆண்டிற்கான துலீப்கோப்பைக்கான அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[2] 2018-19 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே கோப்பைக்கான தொடரில் 8 போட்டிகளில் 12 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளை வீழ்த்திய ஆந்திரப் பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்தார்.[3]


சான்றுகள்

தொகு
  1. "Sri Lanka tour of India, 4th ODI: India v Sri Lanka at Kolkata, Nov 13, 2014". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2014.
  2. "Samson picked for India A after passing Yo-Yo test". ESPN Cricinfo. 23 July 2018. http://www.espncricinfo.com/story/_/id/24173214/sanju-samson-picked-india-passing-yo-yo-test. பார்த்த நாள்: 23 July 2018. 
  3. "Vijay Hazare Trophy, 2018/19 - Andhra: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ண்_சர்மா&oldid=3719207" இலிருந்து மீள்விக்கப்பட்டது