கர்னி மாதா
கர்னி மாதா, பகவதி கர்னிஜி மகாராஜ் , பகவதி, மேஹாய், ஜகதம்பா மற்றும் கினியானி போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படும் பெண் தெய்வமாவார். சக்தி மற்றும் வெற்றியைத்தரும் இந்து தெய்வமாகக் கருதப்படுகிறார். மேற்கு ராஜஸ்தானில் கி.பி.14 முதல் 16 வரை வாழ்ந்த ஒரு போராளிப் பெண் என்றும் விவரிக்கப்படுகிறார். கர்னி மாதா வடமேற்கு இந்தியாவின் ராஜபுத்திரர்கள் மற்றும் சரண்களின் தெய்வம் ஆவார். ஹிங்லாஜ் அல்லது துர்காவின் அவதாரமாகவும் வணங்கப்படுகிறார். [1] பிகானேர் மற்றும் ஜோத்பூரின் அரச குடும்பங்களின் முக்கியத் தெய்வம் கர்னி மாதா. இப்பகுதியின் வரலாற்றை வடிவமைப்பதில் கர்னிஜி முக்கிய பங்கு வகித்தார். இப்பகுதியில் ராஜபுத்திர மேலாதிக்கத்தை நிறுவுவதில் அவர் நெருக்கமாக தொடர்புடையவர். அவரது ஆசீர்வாதத்துடன், ராவ் ஜோதா மற்றும் ராவ் பிகா ஆகியோர் ஜோத்பூர் மற்றும் பிகானேரில் புதிய ராஜ்யங்களை நிறுவினர். பிகானேர் மற்றும் ஜோத்பூர் மகாராஜாக்களின் வேண்டுகோளின் பேரில், இப்பகுதியில் உள்ள இரண்டு முக்கியமான கோட்டைகளான பிகானேர் கோட்டை மற்றும் மெஹ்ரன்கர் கோட்டை ஆகியவற்றின் அடியை அவர் அமைத்தார். அவர் ஒரு துறவி வாழ்க்கை வாழ்ந்தார் என்றும் அவரது சொந்த வாழ்நாளில் பரவலாக மதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. மார்வார் பகுதியைச் சேர்ந்த இந்திய இராணுவப் படைகளும் கர்னி மாதாவை தங்கள் புரவலர் தெய்வமாகக் கருதுகின்றனர். [2]
கர்னி மாதா | |
---|---|
அதிபதி | சக்தி மற்றும் வெற்றியின் கடவுள், ஹிகலாஜின் அவதாரம் |
வேறு பெயர்கள் | ரித்தி பைசா |
தேவநாகரி | करणी माता |
வகை | சரணர்கள், ராஜபுத்திரர்கள், ராஜபுரோகித்துகள் |
இடம் | மார்வார் மற்றும் பிகானெர், ராஜஸ்தான் |
ஆயுதம் | திரிசூலம் |
பெற்றோர்கள் | மேகா ஜி கின்யா மற்றும் தேவை பாய் |
கர்னி மாதா கோயில்களில் மிகவும் பிரபலமானது தேஷ்னோக்கின் கர்னி மாதா கோயிலாகும். அங்கு கோயிலும் யாருக்கும் தீங்கு விளைவிக்காத அதைச் சுற்றியுள்ள ஓரான் நிலமும் அனைத்து உயிரினங்களுக்கும் புனிதமான சரணாலயமாகும். [3] ராஜஸ்தானில், கர்னி மாதா புல்வாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதால், அவை புனிதமாகக் கருதப்படுகின்றன. [4]
முக்கியத்துவம்
தொகுகர்னி மாதாவின் ஆன்மீக முக்கியத்துவம்என்பதில் அகிம்சை, பாதுகாப்பு, அமைதியான சகவாழ்வு, ராஜபுத்திரர்களுக்கு அதிகாரம் மற்றும் சட்டப்பூர்வத்தை வழங்குவது ஆகியவை அடங்கும். ராஜபுத்திரர்களில் மிகவும் மதிக்கப்படும் தெய்வங்களில் ஒன்றான கர்னி மாதா, பல ராஜபுத்திர குலங்களின் குடும்ப தெய்வமாக வழிபடப்படுகிறார். மேலும்இக்கட்டான காலங்களில் தங்கள் சமூகத்தின் இருப்பு அல்லது உயிர்வாழ்வை இக்கடவுளுடன் அவர்கள் இணைக்கின்றனர். [5] [6] [7] [8] பிகானேர் மட்டுமின்றி ஜோத்பூரின் ரத்தோர் ஆட்சியாளர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதற்கும் கர்னி மாதா காரணம் என்று கூறப்படுகிறது. இரு மாநிலங்களின் வரலாறு முழுவதும், போரின் போது அல்லது கூட்டணியை கட்டியெழுப்பும் விஷயங்களில் ஒரு ஆட்சியாளரின் சார்பாக தெய்வம் பரிந்து பேசுவதாக எண்ணற்ற கணக்குகள் உள்ளன. பிகானரின் கடைசிப் பட்டத்து மகாராஜா கர்னி சிங் குறிப்பிட்டது போல்:
“பிகானரின் வீட்டிற்கு கர்னிஜி எப்போதும் முக்கியமானவள். என் தந்தையார் அவருக்கு முன்பு இருந்தவர்களைப் போலவே தேவியின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இந்த பரம்பரையின் ஒவ்வொரு உறுப்பினரையும் அவள் பாதுகாத்தாள். நானும் என் மனைவியும் அவளை ஒவ்வொரு நாளும் அவளுடைய கோவிலில் வணங்குகிறோம், அவள் நம் அனைவரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறாள்... ஜங்லி தேசத்தில் காலடி எடுதுவைப்பவர்களின் முதல் கடமை அவதார தெய்வமான கர்னி மாதாவை வணங்குவதே. . .'" [9]
தற்காலத்தில், தேஷ்னோக்கில் உள்ள கர்னி மாதா கோவில் பல சரண் குலத்தவர்கள் கூடும் முக்கிய இடமாக மாறியுள்ளது. 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஹிங்லாஜை அடைவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்குப் பிறகு, தேஷ்னோக்கில் அமைந்துள்ள கர்னி மாதா கோயில் சமூகத்தின் மிக முக்கியமான இடமாக மாறியுள்ளது என்று மக்களால் பரவலாகக் குறிப்பிடுகின்றது.
சாரண சகட்
தொகு8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டில் ஹிங்லாஜின் முந்தைய அவதாரமான அவத் மாதாவை கர்னி மாதா வழிபட்டார் என்று கூறப்படுகிறது. [5] சரண்கள், அவதாரமான தெய்வங்களின் வம்சாவளியை பட்டியலிடும்போது, வழக்கமாக ஹிங்லஜ் மாதாவில் தொடங்கி, அவத் மாதா மற்றும் கர்னி மாதாவின் பெயர்களுடன் பட்டியலைத் தொடர்வார்கள். ஒவ்வொரு அடுத்தடுத்த அவதார தெய்வமும் முந்தைய சகாத்தின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், அனைத்து அவதார தெய்வங்களும் இந்த வம்சாவளியைப் பின்பற்றுவதில்லை என்பதையும், அவை அனைத்தும் முன்னர் அறியப்பட்ட சாகாத்தின் வடிவங்களாகவோ அல்லது அவர்களுடன் இணைக்கப்படுவதோ இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். [10]
கர்னி மாதா கோவில்கள்
தொகுஸ்ரீ கர்னி மாதா கோவில் (தேஷ்நோக்)
தொகுதேஷ்னோக் கோயில் கர்னி மாதாவின் பக்தர்களின் மிக முக்கியமான யாத்திரைத் தலமாகும். சுமார் 25,000 கறுப்பு எலிகள் மற்றும் சில வெள்ளை எலிகள் (பார்க்க அரிதானவை) கோவிலில் வாழ்கின்றன. இவை அங்கே வணங்கப்படுகின்றன. இந்த புனித எலிகள், மனிதர்களிடையே பிறந்து, ஒவ்வொரு பிறவியிலும் எலிகளாகவும் மனிதர்களாகவும் மறுபிறவி எடுக்கும் புன்னிய சாரண பக்தர்களாகக் கருதப்படுகின்றன. பலர் வெகுதூரம் யாத்திரை சென்று வழிபாடு செய்கிறார்கள். வழிபாட்டிற்காக நாடு முழுவதிலுமிருந்து பார்வையாளர்களையும், உலகம் முழுவதிலுமிருந்து ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளையும் இந்த ஆலயம் ஈர்க்கிறது. [11]
சதி மன்குமாரிஜி கோவில்
தொகுகர்னிஜியின் பேத்தியான மன்குமாரிஜி மற்றும் அவரது தோழி சகி ஆகியோரின் உருவம் கொண்ட சமாதியாக இந்தக் கோயில் உள்ளது. மன்குமாரிஜி தனது கணவர் இறந்த செய்தியைப் பெற்றவுடன் தன்னை ஒரு சதி என்று அறிவித்தார். மேலும் அவரது தோழி சகியும் அவருடன் இணைந்தார். [12]
கர்னி மாதா கோயில் (மதுரா)
தொகு16 ஆம் நூற்றாண்டில் மதுராவில் லகாஜி பர்ஹாத் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில், இது தாக்கூர் அக்ஷய் சிங் ரத்னுவால் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. [13]
மன்ஷபூர்ணா கர்னி மாதா கோவில் (உதைபூர்)
தொகுகர்னி மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோவில் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பூங்காவிற்கு அருகில் மச்லா மலைகளில் அமைந்துள்ள கர்னி மாதா அல்லது ஸ்ரீ மன்ஷபூர்ணா கர்னி மாதா கோயில்என்பதாகும். 1620 மற்றும் 1628 க்கு இடையில், மஹாராணா கரண் சிங் உதய்பூரின் பாதுகாப்பிற்காக மச்லா மக்ராவில் ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கினார். உதய்பூரின் எல்லை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும் அடையாளமாக மகாராணா கரண் சிங்கால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. நீண்ட காலமாக இந்த ஆலயம் வெறிச்சோடி காணப்பட்டாலும், 1997 ஆம் ஆண்டு ஸ்ரீ மான்ஷபூர்ணா கர்னி மாதா மேம்பாட்டுக் குழு அதை மீடு புனரமைத்தது. [14]
ஸ்ரீ மத் குராத் தாம் (நாகூர்)
தொகுஇது கர்னி மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் ஆகும். இது ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் உள்ள கச்சிபுராவில் இருந்து வடகிழக்கில் 12 கி.மீ. அமைந்துள்ள குராத்தில் உள்ளது. குர்த் கிராமத்தைச் சேர்ந்த சாரணர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது .20 ஆம் நூற்றாண்டின்அவதாரமான இந்தர் பைசா, கர்ணி தெய்வத்தின் அவதாரமாக அவரைப் பின்பற்றுபவர்களால் பார்க்கப்பட்டது. பிகானேர் ஆட்சியாளர் மகாராஜா கங்கா சிங்கும் அவரது பக்தர்களில் ஒருவராக இருந்தார். மேலும் அவரது ஆலோசனையின் பேரில் ரூ. 11,157, செப்டம்பர் 8, 1930 அன்று கர்னி தேவியின் கோவிலின் அசல் பணிகள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்காக அவரது தனிப்பட்ட பணப்பையில் இருந்து வழங்கப்பட்டது. கங்கா சிங் தனது நம்பிக்கைக்குரிய இராணுவ அமைச்சர் ஹரி சிங்கிடம் இந்த வேலையை ஒப்படைத்தார். இக்கோவில் கோட்டை வடிவில் கட்டப்பட்டது. பளிங்கு நகரமான மக்ரானாவிற்கு மிக அருகில் இருப்பதால், இது வெள்ளை பளிங்கினால் கட்டப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- கர்னி மாதா கோயில் பற்றிய விவரங்களைப் படிக்கவும்
- தேசிய புவியியல் செய்திகள்: இந்திய கோவிலில் எலிகள் ஆட்சி செய்கின்றன
- தேஷ்னோக் கோயில் ராஜஸ்தானின் தேஷ்நோக்கில் உள்ள "பகவதி கர்னிஜி" கோவிலான கர்னி மாதா பற்றிய மூன்று நிமிட வீடியோ செய்தி அறிக்கை. அணுகப்பட்டது 10 ஆகஸ்ட் 2007.
- ↑ "Amazing Shri Manshapurna Karni Mata Temple – HariBhakt | History, Facts, Awareness of Hindu Dharma" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-01-20. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
Shri Karni Mata is the incarnation of Devi Hinglaj or Devi Durga(The Goddess of Power and Victory. Goddess Durga is synonymous with Shakti, the cosmic power that wages an eternal war against the evil and also the energy of life for everyone).
- ↑ name=":52">Paul, Kim (1993-01-01). "Negotiating sacred space: The Mandirand the Oran as contested sites". South Asia: Journal of South Asian Studies 16 (sup001): 49–60. doi:10.1080/00856409308723191. பன்னாட்டுத் தர தொடர் எண்:0085-6401. https://doi.org/10.1080/00856409308723191.
- ↑ Ujwal, Kailash Dan S. (1985). Bhagwati Shri Karniji Maharaj: A Biography (in ஆங்கிலம்). [s.n.]].
- ↑ Geer, Alexandra van der (2008-10-16). Animals in Stone: Indian Mammals Sculptured Through Time (in ஆங்கிலம்). Brill.Geer, Alexandra van der (16 October 2008). Animals in Stone: Indian Mammals Sculptured Through Time. Brill. ISBN 978-90-474-4356-8.
- ↑ 5.0 5.1 Schaflechner, Jürgen (2018). Hinglaj Devi: Identity, Change, and Solidification at a Hindu Temple in Pakistan (in ஆங்கிலம்). Oxford University Press. pp. 65, 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-085052-4.Schaflechner, Jürgen (2018). Hinglaj Devi: Identity, Change, and Solidification at a Hindu Temple in Pakistan. Oxford University Press. pp. 65, 66. ISBN 978-0-19-085052-4.
- ↑ Kothiyal, Tanuja (2016-03-14). Nomadic Narratives: A History of Mobility and Identity in the Great Indian Desert (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-08031-7.
- ↑ General, India Office of the Registrar (1966). Census of India, 1961 (in ஆங்கிலம்). Manager of Publications.
- ↑ Prabhākara, Manohara (1976). A Critical Study of Rajasthani Literature, with Exclusive Reference to the Contribution of Cāraṇas (in ஆங்கிலம்). Panchsheel Prakashan.
- ↑ name=":52">Paul, Kim (1993-01-01). "Negotiating sacred space: The Mandirand the Oran as contested sites". South Asia: Journal of South Asian Studies 16 (sup001): 49–60. doi:10.1080/00856409308723191. பன்னாட்டுத் தர தொடர் எண்:0085-6401. https://doi.org/10.1080/00856409308723191.Paul, Kim (1 January 1993). "Negotiating sacred space: The Mandirand the Oran as contested sites". South Asia: Journal of South Asian Studies. 16 (sup001): 49–60. doi:10.1080/00856409308723191. ISSN 0085-6401.
- ↑ Paul, Kim (1993-01-01). "Negotiating sacred space: The Mandirand the Oran as contested sites". South Asia: Journal of South Asian Studies 16 (sup001): 49–60. doi:10.1080/00856409308723191. பன்னாட்டுத் தர தொடர் எண்:0085-6401. https://doi.org/10.1080/00856409308723191.Paul, Kim (1 January 1993). "Negotiating sacred space: The Mandirand the Oran as contested sites". South Asia: Journal of South Asian Studies. 16 (sup001): 49–60. doi:10.1080/00856409308723191. ISSN 0085-6401.
- ↑ Rats. Dir. Morgan Spurlock. Perf. Dr. Michael Blum, Ed Sheehan, Bobby Corrigan . Discovery Channel, 2016. Netflix. Chapter: Temple of the Rats
- ↑ Weinberger-Thomas, Catherine (1999). Ashes of Immortality: Widow-Burning in India (in ஆங்கிலம்). University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-88568-1.
In the Deshnok temple of Karniji (the deified Charan woman who is the tutelary goddess of the Rajahs of Bikaner), there is a cenotaph containing the image of two women: these are Mankumari, Karni's granddaughter, and her friend Sakhi, a woman of the Carpenter (Khati) caste who burned herself along with Mankumari when the latter, upon receiving news of her husband's death, declared herself a sati.
- ↑ Jagti Jot Year-24 Vol-4 (PDF) (in Rajasthani). Bikaner: Rajasthani Bhasha Sahitya & Sanskriti Academy. 1995.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Khan, Aakib. Complete Rajasthan GK (English) (in ஆங்கிலம்). SI Publication.
The temple is believed to have been built during the reign of Maharana Karan Singh, 1621–1628. However, it remained in ruins for years, until 1994 when it was restored by Shree Karni Mata Trust. Owing to its location on a hill, the views are simply stunning from the top, especially during sunset. You can reach the temple by ropeway.