கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(கலசபாக்கம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 65. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் 2,41,981 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரணி, போளூர், அணைக்கட்டு, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளது.

கலசப்பாக்கம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,34.532[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
பெ.சு.தி.சரவணன்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

கலசப்பாக்கம் தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 50 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் உள்ளனர்.

இத்தொகுதியில் கலசப்பாக்கம் வட்டம், போளூர் வட்டம், செங்கம் வட்டம் மற்றும் , ஜமுனாமரத்தூர் வட்டத்தின் 112 ஊராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சி இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

கலசப்பாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்த தொகுதியாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பூச்செடிகள் போன்ற பயிர் வகைகளை நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக செய்யாறு மற்றும் மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை, படவேடு செண்பகதோப்பு அணை உள்ளன. மேலும் சுற்றுலாத்தலமாக ஜவ்வாதுமலை, அமிர்தி மற்றும் பருவதமலை ஆகியவை உள்ளன.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

கல்பட்டு, இரும்பிலி, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு, செண்பகத்தோப்பு,அனந்தபுரம்,

அமிர்தி, நீப்பளாம்பட்டு, காணமலை, நம்மியம்பட்டு, சீங்காடு,மண்டபாறை, வீரப்பனூர், புதுப்பட்டு, எரியூர், கீழ்கணவாயூர், புளியங்குப்பம், குட்டக்கரை, ஓடமங்கலம், கோவிலூர், பட்டார்வைக்காடு, தும்பக்காடு,

கிடாம்பாளையம், கெங்கவரம், மேல்சிப்பிலி, எருமையனூர், கீழ்தட்டியாப்பட்டு, மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், சீனந்தல், தேவராயன்பாளையம், காந்தபாளையம், ஆதமங்கலம், கேட்ட்வரம்பாளையம், சேங்கபுத்தேரி, மேலாரணி, ஆனைவாடி, காப்பலூர், வன்னியனூர், கட்சிரிமங்கலம், மேல்வில்வராயநல்லூர், எர்ணமங்கலம், சிறுவள்ளூர், அருணகிரிமங்கலம், கெங்கலாமகாதேவி, நல்லான்பிள்ளைபெற்றாள், வீரளூர், மட்டவெட்டு, மேல்பாலூர், கீழ்பாலூர், கடலாடி, தென்மாதிமங்கலம்,பட்டியந்தல், பாணாம்பட்டு, பூண்டி, பில்லூர், கலசபாக்கம், தென்பள்ளிப்பட்டு, விண்ணுவம்பட்டு, காலூர், பத்தியவாடி, காம்பட்டு, அணியாலை, லாடவரம், கெங்கநல்லூர், அலங்காரமங்கலம், பாடகம், சீட்டம்பட்டு மற்றும் படியம்புத்தூர் கிராமங்கள்.

வீரானந்தல், முன்னுரமங்கலம், புதூஉர்செங்கம், உண்ணாமலைபாளையம், காரப்பட்டு, புதுப்பட்டு, கொரட்டாம்பட்டு, காஞ்சி, அரிதாரிமங்கலம், தாமரைப்பாக்கம், நயம்பாடி, மஷார், கல்லரப்பாடி, ஏந்தல், நம்மியந்தல், ஆலத்தூர், ஓரவந்தவாடி, நந்திமங்கலம், பனைஓலைப்பாடி, பெரியேரி, கொட்டகுளம், முத்தனூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர், படிஅக்ரஹாரம், அல்லியேந்தல், ஜப்திகாரியேந்தல், கெங்கம்பட்டு, கீழ்படூர், வாய்விடந்தாங்கல், மேல்படுர், குலால்பாடி, நத்தவாடி, வடமாத்தூர், மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம், அன்னந்தல், மேல்ப்புஞ்சை, வாசுதேவம்பட்டு, எறையூர் மற்றும் மேல்மடியனூர் கிராமங்கள்,

புதுப்பாளையம் (பேரூராட்சி)[3].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 நடராச முதலியார் சுயேச்சை 16184 54.09 பெரியசாமி கவுண்டர் காங்கிரசு 12460 41.64
1967 சு. முருகையன் காங்கிரசு 32697 51.37 எம். சுந்தரேசன் திமுக 20554 32.30
1971 சு. முருகையன் திமுக 42893 58.88 எம். சுந்தரசாமி ஸ்தாபன காங்கிரசு 29960 41.12
1977 பெ. சு. திருவேங்கடம் திமுக 26841 35.39 எசு. சுந்தரேச உடையார் அதிமுக 25298 33.35
1980 பெ. சு. திருவேங்கடம் திமுக 44923 54.49 சி. என். விசுவநாதன் அதிமுக 32972 39.99
1984 எம். பாண்டுரங்கன் அதிமுக 54969 58.78 பி. எசு. திருவேங்கடம் திமுக 35303 37.75
1989 பெ. சு. திருவேங்கடம் திமுக 47535 48.24 எசு. கிருசுணமூர்த்தி அதிமுக (ஜெ) 25840 26.22
1991 எம். சுந்தரசாமி காங்கிரசு 65096 57.35 பி. எசு. திருவேங்கடம் திமுக 32152 28.33
1996 பெ. சு. திருவேங்கடம் திமுக 72177 59.12 எம். சுந்தரசாமி காங்கிரசு 37647 30.83
2001 எஸ். எம். இராமச்சந்திரன் அதிமுக 75880 58.05 பி. எசு. திருவேங்கடம் திமுக 46990 35.95
2006 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக 68586 48 ஆர். காளிதாசு பாமக 60920 43
2011 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக 91833 58.95 சி.எஸ்.விஜயகுமார் காங்கிரசு 53599 34.40
2016 வி. பன்னீர்செல்வம் அதிமுக 84394 45.78 செங்கம் ஜி. குமார் காங்கிரசு 57980 31.45
2021 பெ. சு. தி. சரவணன் திமுக[4] 94,134 47.92 வி. பன்னீர்செல்வம் அதிமுக 84,912 43.23
  • 1967ல் சுயேச்சை கே. ஆர். கே. கவுண்டர் 10393 (16.33%) வாக்குகள் பெற்றா
  • 1977ல் காங்கிரசின் எ. மனக்கட்டி கண்டர் 16893 (22.27%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் கே. பி. கே. தங்கமணி 15257 (15.48%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் ஆர். கலைச்செல்வன் 12762 (11.24%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எல். சங்கர் 5069 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

10.01.2018 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)யில் ஆண் வாக்காளர்கள் 112506 பேரும், பெண் வாக்காளர்கள் 114971 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் 8 பேரும் மொத்தம் 227485 பேர் உள்ளனர்.[1]

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. கலசப்பாக்கம் தொகுதி கண்ணோட்டம் – 2021
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  4. கலசபாக்கம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு