கின்னிகோலி

இந்திய மாநிலம் கருநாடகாவிலுள்ள கிராமம்

கின்னிகோலி (Kinnigoli) என்பது மங்களூரிலுள்ள ஒரு முக்கிய புறநகர்ப் பகுதியாகும். இது மங்களூர் நகரத்திலிருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும், கட்டீலில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் (ஒரு பிரபலமான இந்து புனித யாத்திரை மையம்), முல்கியில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் (முல்கி ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ) மங்களூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து 'யுகபுருஷா' என்ற வழக்கமான கன்னட மாத இதழ் வெளியிடப்படுகிறது. [1]

கின்னிகோலி
நகரம்
கின்னிகோலி is located in கருநாடகம்
கின்னிகோலி
கின்னிகோலி
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 13°03′47″N 74°50′50″E / 13.0631°N 74.8473°E / 13.0631; 74.8473
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தெற்கு கன்னட மாவட்டம்
அரசு
 • வகைகிராமப் பேரூராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,608
மொழிகள்
 • அலுவல்துளு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
574150
தொலைபேசிக் குறியீடு0824
வாகனப் பதிவுகேஏ-19
அருகிலுள்ள நகரம்மங்களூர்
கல்வியறிவு80%
மக்களவைத் தொகுதிமங்களூர்
சட்டமன்றத் தொகுதிமுல்கி-மூதபித்ரி.
காலநிலைவெப்பமண்டலம் (கோப்பென்)
மக்களவை உறுப்பினர்நளின் குமார் கட்டீல்
சட்டமன்ற உறுப்பினர்உமாநாத கோட்டியான்
இணையதளம்www.kinnigoli.com
www.nammakinnigoli.com

வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் இந்திய வெளிநாட்டினரின் வருகையால் (பெரும்பாலும் பாரசீக வளைகுடா நாடுகள்) இந்த ஊர் வளர்ந்துள்ளது. இங்கு கான்கெட்டா மருத்துவமனை என்று ஒரு மருத்துவமனை உள்ளது.

தொழில்

தொகு

இங்கு பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள்னர். நெல் என்பது பரவலாக வளர்க்கப்படும் பயிராகும். இது பெரும்பாலும் விற்பனையை விட நுகர்வுக்காக வளர்க்கப்படுகிறது. பாக்கு, முந்திரி போன்ற பணப்பயிர்கள் விவசாய நிலங்களின் சிறிய பகுதிகளில் அல்லது பயிரிட முடியாத மலைப்பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. பண்ணை நிலங்களில் மா, பலா, புளி மரங்கள் பரவியிருக்கின்றன.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாராந்திர சந்தை இங்கு நடைபெறும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள், உறைந்த உணவுகள், பழச்சாறுகள் போன்றவற்றைக் கொண்ட டெய்லி நீட்ஸ் என்ற சொந்த பல்பொருள் அங்காடியையும் இது கொண்டுள்ளது.

==பிரபலங்கள் ==

பிரபல இந்திய பரோபகாரரும் இருதய அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் தேவி பிரசாத் செட்டி இங்கு பிறந்தார். ஒரு இந்திய மாதிரியும், அழகுப் போட்டியின் பட்டத்தை வென்றவருமான சிறீநிதி ரமேஷ் செட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர்.

கம்பளா

தொகு

இங்கு, குளிர்காலத்தில், வழக்கமாக சனவரியில், கம்பளா எனப்படும் எருமை பந்தயப் போட்டி அறுவடைக்குப் பின் நீரில் நிரப்பப்பட்ட நெல் வயல்களில் நடைபெறுகிறது. இது சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பார்வையாளர்களை ஈர்க்கிறது. இந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு தங்கப் பதக்கங்களும் பணப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

மக்கள்

தொகு

இங்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இங்கு கன்னடம், துளு, கொங்கணி, பியரி போன்ற மொழிகள் பேசப்படுகின்றன . ஒவ்வொரு சமூகமும் மிகச் சிறப்பாக இணைந்து வாழ்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மற்றவர்களின் மத நடவடிக்கைகளில் தீவிரமாக ஊக்குவித்து பங்கேற்கின்றன.

பேருந்து வசதி

தொகு

இப்பகுதியின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகளுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மங்களூர், முல்கி, உடுப்பி, பாஜ்பே, கட்டீல், மூதபித்ரி, பெளமன்னு, கர்கலா,நிட்டே, பெள்தங்கடி, பந்த்வால் போன்ற ஊர்களுக்கு பேருந்துச் சேவைகள் இருக்கின்றன.

விமானம வசதி

தொகு

மங்களூர் சர்வதேச விமான நிலையம் கின்னிகோலிக்கு சுமார் 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெங்களூர், மும்பை, சென்னை, தில்லி, ஐதராபாத் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான அபுதாபி, பகுரைன், தம்மம், தோஹா, துபாய், குவைத், மஸ்கட் போன்ற அனைத்து முக்கிய இந்திய பெருநகரங்களுக்கும் இங்கிருந்து விமானங்கள் கிடைக்கின்றன.

தொடருந்து நிலையம்

தொகு

6 கி.மீ தூரத்தில் உள்ள முல்கி தொடருந்து நிலையமும், 13 கி.மீ தூரத்தில் உள்ள சூரத்கல் தொடருந்து நிலையமும் அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்

வெளி இணைப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்னிகோலி&oldid=3806346" இலிருந்து மீள்விக்கப்பட்டது