குலமங்கலம், மதுரை
குலமங்கலம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மதுரை புறநகரத்தில் அமைந்துள்ளது. இது குலமங்கலம் குறு வட்டத்தில் உள்ளது.[1] மதுரை மாநகரத்திற்கு வடக்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் குலமங்கலம் உள்ளது.
குலமங்கலம் | |
---|---|
கிராமம் | |
குலமங்கலம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°00′44″N 78°06′47″E / 10.0122°N 78.1130°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
வருவாய் வட்டம் | மதுரை வடக்கு வட்டம் |
ஏற்றம் | 185.32 m (608.01 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,392 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625018 |
புறநகர்ப் பகுதிகள் | கூடல் நகர், அலங்காநல்லூர் |
மக்களவைத் தொகுதி | மதுரை |
சட்டமன்றத் தொகுதி | மதுரை கிழக்கு |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 185.32 மீ. உயரத்தில், (10°00′44″N 78°06′47″E / 10.0122°N 78.1130°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, குலமங்கலம் பகுதி மதுரையில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், குலமங்கலம் பகுதியின் மக்கள்தொகை 5,392 பேர் ஆகும். இதில் 2,784 பேர் ஆண்கள் மற்றும் 2,608 பேர் பெண்கள் ஆவர்.[2]
சமயம்
தொகுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வரும் அம்மச்சியார் கோயில் என்ற கிராமக் கோயில் ஒன்று குலமங்கலத்தில் அமையப் பெற்றுள்ளது.[3]
அரசியல்
தொகுகுலமங்கலம் பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது. மேலும், இப்பகுதி மதுரை மக்களவைத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ குலமங்கலம் குறுவட்டத்தில் குலமங்கலம் கிராமம்
- ↑ "Kulamangalam Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-27.
- ↑ "Arulmigu Ammachiar Temple, Kulamangalam - 625018, Madurai District [TM032680].,Ammachiar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-27.