தமிழர் விளையாட்டுகள் (சங்ககாலம்)

(சங்க காலத் தமிழர் விளையாட்டுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்ககால விளையாட்டுகள் சங்கப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டு அகர-வரிசையிலும், பாகுபாட்டு-வரிசையிலும் இங்குத் தரப்பட்டுத் தனித்தனியே விளக்கப்படுகின்றன.

கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு சொற்களும் விளையாட்டை உணர்த்தும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். [1]

கூடி விளையாடும்போது இரண்டு குழுவாகப் பிரிவதற்காக இருவர் இருவராக இணைந்து புதுப்பெயர்களை வைத்துக்கொள்வர். ஒருவர் கல் என்றும், மற்றொருவர் மண் என்றும் பெயர் சூட்டிக்கொண்டால், ஓர் அணித்தலைவனிடம் சென்று, கல் வேண்டுமா, மண் வேண்டுமா என்று கேட்பர், அவர் மண் வேண்டும் என்று சொன்னால் மண் என்று பெயர் சூட்டிக்கொண்டவர் அந்தத் தலைவர் அணியில் சேர்ந்துகொள்வார். இந்த முறை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்துவந்தது. [2]

தெரு, மறைவிடம், மன்றம், செய்குன்று, இளமரக்கா என்னும் பூங்கா, பந்தல், பளிக்கறை, நீர்நிலை, நெடுமணல்-பரப்பு, காவற்காடு, கனிமலர்ச்சோலை, களம் முதலான பகுதிகளில் சங்ககால மக்கள் விளையாடியதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுக் கொள்கை

தொகு

சிறுமியர் வெளியில் சென்று ஆயத்தாரோடு விளையாடுவது அறம். அஃது அவர்களது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆக்கம் தரும் எனத் தொன்றுதொட்டுக் கூறிவந்துள்ளனர். [3]

அகர வரிசை

தொகு
  1. அக்குளுத்தல் – arm-pit game
  2. அலவன் ஆட்டல் – play with crabs
  3. அன்புப்போர் – lovers'sulks
  4. உடல்வித்தை – gymnastics
  5. உழலை – peg and hole
  6. ஊசல் - swing
  7. ஊதல் (சங்ககாலம்) – blowing
  8. ஊன்றித் தாண்டல் pole vault
  9. எண்ணல் விளையாட்டு – counting game
  10. எழில் விளையாட்டு – gody building
  11. ஏறுகோள் (ஆயர் விளையாட்டு) – bull-fight
  12. ஒளிதல் விளையாட்டு - hide and seek
  13. ஓடியாடல் - touch me
  14. ஓரை – sea or shore touch-game
  15. கட்டு (குறிவிளையாட்டு) – marbles rolling (witch watch game)
  16. கண்புதை விளையாட்டு – eye-binding game
  17. கவண் – sling
  18. கவணை – tree-branch sling
  19. கவறு – odd or even game
  20. கழங்கு (மகளிர் விளையாட்டு) – marbles rolling (maiden game)
  21. கழங்கு (வேலன் விளையாட்டு) - witch watch game
  22. களவுக்காய் – black-marbles
  23. களிநீர் விளையாட்டு – river-bath festive
  24. காய்மறை – nut hiding in sand notch
  25. குத்துச்சண்டை – boxing
  26. குரவை – hand-binding dance
  27. குளிர் – rolling instrument playing
  28. குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
  29. கையெறி விளையாட்டு – love-punch
  30. சேவல்சண்டை – watch the cock-fight
  31. சிற்றில் விளையாட்டு – parent-like play
  32. சிறுபாடு விளையாட்டுகள் – time-pass game
  33. செதுமொழி விளையாட்டு – word purifying
  34. தகர்ச்சண்டை watch the sheep-fight
  35. தட்டை - flopping instrument playing
  36. தழல் – a kind of drum
  37. தழூஉ – waist-binding dance
  38. தழை – leaves weaving
  39. துணங்கை – arm-binding dance
  40. தெள்விளி (மகளிர்) – tongue whistle
  41. தெள்விளி (ஆடவர்) - whistle-music
  42. தெற்றி – marble-scattering
  43. தைந்நீராடல் – bathing-festive in January
  44. தொழிற்பாடல் – toil song
  45. நீச்சல் நடனம் – synchronized swimming
  46. படகு – பின்படகு – rowing
  47. படகு – முன்படகு – canoeing
  48. படகு – வளிப்படகு – wind-surfing
  49. பண்ணை (விளையாட்டு)– woman-diving
  50. பந்து – juggling balls
  51. பறை – drum play
  52. பாய்ச்சல் – man-diving
  53. பாவை – sand or flower toy
  54. பிணையூபம் - pyramid
  55. புதுமொழி – word building
  56. புதைமுகம் – face-mask
  57. புனலாடல் – swimming in falls-pit
  58. பூ – flower gathering
  59. பொய்தல் – game of simulation or pretense
  60. போறல் – imitating-games
  61. மதிமொழி – word recalling
  62. மரம் – ஏறல் – climb on tree and touch
  63. மரம் – வளர்த்தல் – plantation games
  64. மற்போர் – wrestling
  65. மிதவை – boating
  66. முக்கால் சிறுதேர் – toy-cart
  67. முதுமொழி – proverb collection
  68. மூழ்கல் – plunging game
  69. யானைப்போர் – watch the elephant-fight
  70. யானையேற்றம் – elephant-riding
  71. வட்டு – hard balls
  72. வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
  73. வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
  74. வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
  75. வட்டு – கையாடுவட்டு – marble throwing
  76. வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
  77. வட்டு – சூதுவட்டு – marble-gambling
  78. வட்டு – நீர்வட்டு – water-ball
  79. வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
  80. வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
  81. வட்டுநா விளையாட்டு – golf
  82. வண்டல் – round-run with clubbing hands to others
  83. வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle
  84. வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
  85. வல்லு (சூது) – dice-gambling
  86. வில் – வல்வில் வேட்டம் archery
  87. வில் – வலார் வில் – boy’s archery
  88. வீளை - mouth whistle
  89. வேடம் – fancy-dress

பாகுபாட்டு வரிசை

தொகு

சிறுவர் விளையாட்டு

தொகு
உடல்வித்தை – gymnastics
உழலை – peg and hole
எழில் – body building
கவண் – sling
கவணை – tree-branch sling
சிறுபாடு – time-pass game
தெள்விளி - whistle-music
மரம் – ஏறல் – climb on tree and touch
முக்கால் சிறுதேர் – toy-cart
வட்டு – hard balls
வட்டு – ஈங்கைவட்டு – give and take marbles
வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
வட்டு – கையாடுவட்டு – marble throwing
வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
வில் – வலார் வில் – boy’s archery

சிறுமியர் விளையாட்டு

தொகு
எண்ணல் – counting game
ஓரை – sea or shore touch-game
கண்புதை – eye-binding game
கழங்கு – marbles rolling (maiden game)
களவு – black-marbles
காய்மறை – nut hiding in sand notch
சிற்றில் – parent-like play
தெற்றி – marble-scattering
தைந்நீராடல் – bathing-festive in January
பந்து – juggling balls
பாவை – sand or flower toy
பூ – flower gathering
பொய்தல் – hide and seek
மரம் – வளர்த்தல் – plantation games
வட்டு – மழைத்துளி-வட்டு

மகளிர் விளையாட்டு

தொகு
வண்டல் – round-run with clubbing hands to others
வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle

காளையர் விளையாட்டு

தொகு
ஏறுகோள் – bull-fight
குத்துச்சண்டை – boxing
மற்போர் – wrestling
வட்டுநா – golf
வில் – வல்வில் வேட்டம் archery

முதியோர் விளையாட்டு

தொகு
கட்டு – marbles rolling (witch game)
கவறு – odd or even game
கன்னம் தூக்கல் – rope-swing
சூது – marble-gambling
வட்டு – சூதுவட்டு – gambling dies
வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
வல்லு (சூது) – dice-gambling

காதலர் விளையாட்டு

தொகு
அக்குளுத்தல் – arm-pit game
அன்புப்போர் – love punch
கையெறி – love-punch
தழை – leaves weaving

நீர் விளையாட்டு

தொகு
களிநீர் விளையாட்டு – river-bath festive
தைந்நீராடல் – bathing-festive in January
நீச்சல் நடனம் – synchronized swimming
நீச்சல் பந்து – water-polo
படகு – பின்படகு – rowing
படகு – முன்படகு – canoeing
படகு – வளிப்படகு – wind-surfing
பண்ணை – woman-diving
பாய்ச்சல் – man-diving
புனலாடல் – swimming in falls-pit
மிதவை – boating
மூழ்கல் – plunging game

மொழி விளையாட்டு

தொகு
செதுமொழி – word purifying
புதுமொழி – word building
மதிமொழி – word recalling
முதுமொழி – proverb collection

கூத்து

தொகு
குரவை – hand-binding dance
தழூஉ – waist-binding dance
துணங்கை – arm-binding dance
புதைமுகம் – face-mask
போறல் – imitating-games
வேடம் – fancy-dress

திளைப்பு விளையாட்டு

தொகு
ஊசல் - swing
ஊதல் – whistling
ஓட்டம் – running race
குளிர் – rolling instrument playing
தட்டை - flopping instrument playing
தழல் – fire roll
தெள்விளி – tongue whistle
தொழிற்பாடல் – toil song
பறை – drum play
யானையேற்றம் – elephant-riding
வட்டு – நீர்வட்டு – water-ball

காட்சி விளையாட்டு

தொகு
அலவன் ஆட்டல் – play with crabs
குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
சேவல் சண்டை – watch the cock-fight
தகர்ச்சண்டை watch the sheep-fight
யானைப்போர் – watch the elephant-fight

அடிக்குறிப்புகள்

தொகு
  1. உரியியல்
  2. கூடியல் மருங்கின் ஆடியற் பெயர் - தொல்காப்பியம் பெயரியல் 11
  3. விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது, இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல், அறனும் அன்றே, ஆக்கமும் தேய்ம் – நற்றிணை 68