சிரத்தா சிறீநாத்

சிரத்தா சிறீநாத் (Shraddha Srinath) என்பவர் இந்தியத் திரைப்படநடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகக் கன்னடம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார்.[2][3] 2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.[4] 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

சிரத்தா சிறீநாத்
Shraddha Srinath.png
2017இல் சிரத்தா
பிறப்பு29 செப்டம்பர் 1990 (1990-09-29) (அகவை 32)[1]
உதம்பூர், சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
பணி
 • நடிகர்
 • மாதிரி
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்பொழுது

ஆரம்பகால வாழ்க்கைதொகு

சிரத்தா சிறீநாத் உதம்பூர் மாவட்டம், சம்மு காசுமீரில் உள்ள படைத்துறை மருத்துவமனையில் செப்டம்பர் 29, 1990 இல் பிறந்தார். இவர் கன்னடர் பிராமணர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார்.[5] இவரின் தந்தை இந்தியத் தரைப்படையின் குமாவுன் படையணி அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவரின் தாய் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார். இவர் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் வாழ்ந்துள்ளார். குறிப்பாக இராசத்தான் மாநிலத்திலுள்ள சூரத்கார், மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால், உத்தராகண்டத்திலுள்ள தர்சுலா, கருநாடகத்திலுள்ள பெல்காம், அசாமிலுள்ள சில்சர், மற்றும் தெலுங்கானாவிலுள்ள சிக்கந்தராபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்துள்ளார். சிக்கந்தராபாத் ஆர். கே புரம் இராணுவப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். அதன் பின் பெங்களூர் சென்று சட்டம் பயின்றார்.

தொழில் வாழ்க்கைதொகு

பெங்களூருவில் சட்டம் பயின்ற பிறகு பெங்களூரருவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அசையாப் பொருள்கையாளுகை நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு ஒரு பிரான்சு விற்பனை நிறுவனத்தின் அசையாப் பொருள்கையாளுகை சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். தனது முழுநேரப் பணிகளுக்கு இடையிலும் சில நாடகத் திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் நடித்தார். 2015 ஆம் ஆண்டில் ஒரு கன்னடத் திரைப்படத்திற்கான நாயகி வேடத்திற்கான கலைக்காணல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புத் துவங்கப்படவில்லை. பின் இவரின் விளம்பரங்களைப் பார்த்த பிறகு மலையாளத் திரைப்படமான கோஹினூர் எனும் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடத்திற்கு இவரைத் தேர்வு செய்தனர். இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் வினய் கோவிந்த். இது செப்டம்பர் 2015 இல் வெளியானது. இது தான் இவரின் முதல் திரைப்படமாகும்.[6] பின் மே 2016 இல் கன்னடத்தில் யு டர்ன் திரைப்படத்தில் நடித்தார். இதனை பவன் குமார் இயக்கினார். இந்தத் திரைப்படம் நியூயார்க் திரைப்படத் திருவிழாவில் சிறப்புக் காட்சியாகக் காண்பிக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலும் வெளியாகி விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.[7] யு டர்ன் திரைப்படத்தில் சிரத்தா சிறீநாத்தின் நடிப்பைப் பற்றி பரத்வாஜ் ரங்கன் என்பவர், வாசனைத் திரவியம் போல திரைப்படம் முழுவதும் இவரின் தீவிரமான நடிப்பானது படம் முழுவதும் பரவி உள்ளது எனக் கூறினார்.[8] மேலும் பிரதீப் வர்மா இயக்கத்தில் உர்வி மற்றும் சிம்பிள் சுனி இயக்கத்தில் ஆபரேஷன் அலமேலம்மா எனும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[9] கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் ரிச்சி எனும் திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்தார்.[10] இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.[11] ஆர். கண்ணன் இயக்கத்தில் இவன் தந்திரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். 2017 இல் புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார். இதில் மாதவனுடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படம் வியாபார ரீதியாகவும் , விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது.[12]

சான்றுகள்தொகு

 1. "As Shraddha Srinath celebrates her birthday, read all about the actor's life". Republic World. 29 September 2020. 14 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "All you want to know about #ShraddhaSrinath".
 3. "Shraddha Srinath (Actress) – Profile". 2017-05-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Shraddha Srinath- Best Actor in Leading Role Female". Filmfare.com.
 5. ShraddhaSrinath (4 November 2015). "@Kiranb1t thank you! And yes, i am" (Tweet). 20 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
 6. "U Turn Movie Actress Shraddha Srinath Biography, Images And HD Wallpapers". hitmoviedialogues.in.
 7. Nathan, Archana (24 May 2016). ""It is a nightmare to watch myself on screen"" – The Hindu வழியாக.
 8. https://baradwajrangan.wordpress.com/2016/05/28/u-turn-%E2%80%8Bno-lucia-but-still-a-smart-engaging-mystery/
 9. http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Shraddha-Srinath-in-Sunis-next/articleshow/52566106.cms
 10. "U-Turn fame Shraddha Srinath teams up with Nivin Pauly". indianexpress.com. 25 May 2016.
 11. "Apna sapna, Mani, Mani: Shraddha bags cameo in Mani Ratnam's next". deccanchronicle.com. 20 July 2016.
 12. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Shraddha-Srinath-bags-Kannan-Gautham-film/articleshow/53844218.cms

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரத்தா_சிறீநாத்&oldid=3554156" இருந்து மீள்விக்கப்பட்டது