சிவப்புப் பன்றிக்களை

சிவப்புப் பன்றிக்களை[சான்று தேவை] (தாவரவியல் பெயர்: Amaranthus cruentus, ஆங்கிலம்: blood amaranth, red amaranth, purple amaranth,[2] prince's feather, Mexican grain amaranth) என்பது பூக்கும் தாவரமாகும். இது “அமராந்தேசியே” என்ற குடும்பத்தின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் மொத்தம் 184 பேரினங்கள் உள்ளன. அதிலுள்ள பேரினமான “பன்றிக்களை” என்பதில் 95 இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக, இதன் பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாவரயினத்தினை கண்டறிந்தவர் ‘கரோலஸ் லின்னேயஸ்[3] ஆவார். இவ்வினத்திற்கு, 46 வேறுபெயர்கள்[4] உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blood amaranth
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. cruentus
இருசொற் பெயரீடு
Amaranthus cruentus
L.
வேறு பெயர்கள் [1]
Synonyms list
    • A. anacardana Hook.f.
    • A. arardhanus Sweet
    • A. carneus Moq.
    • A. esculentus Besser ex Moq.
    • A. farinaceus Roxb. ex Moq.
    • A. guadeloupensis Voss
    • A. guadelupensis Moq.
    • A. incarnatus Moq.
    • A. montevidensis Moq.
    • A. paniculatus L.
    • A. purgans Moq.
    • A. rubescens Moq.
    • A. sanguineus L.
    • A. sanguinolentus Schrad. ex Moq.
    • A. speciosus Sims
    • A. spicatus Wirzén
    • A. strictus Willd.

வாழிடம்

தொகு

இதன் வாழிடங்களை இருவகையாகப் பிரிக்கலாம். 1. பிறப்பிடம், 2. அறிமுக இடம்.

பிறப்பிடங்கள்: இந்த இடங்களின் அகணியத் தாவரமாக இத்தாவரயினம் இருக்கிறது. மெக்சிக்கோ முதல் நிக்கராகுவா வரை வாழ்கிறது. இது வருடம் முழுவதும் வளரும் இயல்புடையது. இருப்பினும், வெப்ப வலயம் பகுதிகளின் வறண்ட காலங்களில் இதன் பெரும்பகுதி காய்ந்து காணப்படுகிறது.

அறிமுக இடங்கள்: ஏறத்தாழ ஐந்து கண்டங்களிலும் இது அறிமுகத் தாவரமாகவும் உள்ளது. ஆப்கானித்தான், அலபாமா, அல்பேனியா, அல்சீரியா, Altay, அமுர் ஆறு, அர்கெந்தீனா, அரிசோனா, அசாம், வங்காளதேசம், பெல்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, ஈரான், யப்பான், கசக்கஸ்தான், லிபியா, நைஜீரியா, பாக்கித்தான், பென்சில்வேனியா, உருவாண்டா, சார்தீனியா, சவூதி அரேபியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தஜிகிஸ்தான், தைவான், தன்சானியா, வியட்நாம், யெமன், யுகோசுலாவியா, சாம்பியா, சாயிர்

வளரியல்பு

தொகு

இது இரண்டு மீட்டர் (6 அடி) உயரம் வரை வளரும் இயல்புடையது. கேரளம்|கேரளாவில் உள்ள வயநாடு, அதைவிட அதிகம் வளர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் பூக்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. காட்டில் வளரும் இச்செடிகளின் விதைகள் கருப்பாக இருக்கும். பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் வெள்ளையாக இருக்கும்.

பயன்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Amaranthus cruentus". World Checklist of Selected Plant Families. ராயல் தாவரவியல் பூங்கா, கியூ – via The Plant List.
  2. BSBI List 2007 (xls). Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-06-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  3. IPNI
  4. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:10631-1#synonyms
  5. St. Clair, Kassia (2016). The Secret Lives of Colour. London: John Murray. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781473630819. இணையக் கணினி நூலக மைய எண் 936144129.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amaranthus cruentus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்புப்_பன்றிக்களை&oldid=3937269" இலிருந்து மீள்விக்கப்பட்டது