சென்னையின் விளையாட்டுகள்
சென்னையின் விளையாட்டு (Sport in Chennai) துடுப்பாட்டம் சென்னையின் மிகவும் பிரபலமான விளையாட்டாகும். இந்திய துடுப்பாட்ட வரலாற்றில் பல குறிப்பிடத்தக்க மைல்கற்கள் இங்கு நடைபெற்றுள்ளன. இந்தியாவின் பழமையான துடுப்பாட்ட அரங்கங்களில் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் ஒன்றாகும். டென்னிசு, வளைதடிப் பந்தாட்டம், கால்பந்து மற்றும் ஃபார்முலா பந்தயங்கள் மற்றும் சுவர்ப்பந்து ஆகியவை மற்ற பிரபல விளையாட்டுக்களாக உள்ளன. இந்நகரம் ஏடிபி டென்னிஸ் போட்டியில் சென்னை ஓபன் பட்டத்தை வென்றுள்ளது. சென்னை சதுரங்கத்திற்கு ஒரு உயர்ந்த மரபு உள்ளது, மேலும் பல நன்கு அறியப்பட்ட சதுரங்க வீரர்களை உருவாக்கியுள்ளது, அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களான முன்னாள் உலக சதுரங்க வீராரான விஸ்வநாதன் ஆனந்த் என்பராவார்.[1]
துடுப்பாட்டம்
தொகுசென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானம் துடுப்பாட்டத்திற்கு மிகவும் பிரபலமான ஒரு இடமாகும்.[2] (இது முன்னர் சென்னை கிரிக்கெட் கிளப் மைதானம் அல்லது சேப்பாக்கம் விளையாட்டரங்கம் என அறியப்பட்டது) 1916 கட்டப்பட்டு சேப்பாக்கம் எம்.ஏ.சி என பிரபலமாக அழைக்கப்படும் இது இந்தியாவின் பழமையான துடுப்பாட்ட அரங்கங்களில் ஒன்றாகும். இது 50,000 க்கும் அதிகமான இடங்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் உரிமையைக் கொண்டுள்ளது. 1951-52ல் இந்தியா இங்கிலாந்தை துடுப்பாட்டத்தில் தோற்கடித்ததது, 1986 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒரு போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றித் தோல்வி இல்லை, மற்றும் 1999 இல் முதன்முறையாக ஐந்து நாள் போட்டியில் சயீட் அன்வர் 194 ஓட்டங்கள் எடுத்த சாதனை உட்பட பதிவுகள் அதன் பட்டியலில் பிரபலமாக உள்ளது.[3][4] முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எஸ். வெங்கடராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் , லட்சுமண் சிவராமகிருஷ்ணன் , சடகோபன் ரமேஷ் , முரளி கார்த்திக் , லட்சுமிபதி பாலாஜி , முரளி விஜய் , ரவிச்சந்திரன் அஸ்வின் , தினேஷ் கார்த்திக் , விஜய் ஷங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற பலரும் இங்கிருந்து வந்தவர்கள் ஆவர். சென்னை துடுப்பாட்ட அணி நிர்வாகிகளில் முன்னாள் இந்திய துடுப்பாட்டக் கட்டுபாட்டு வாரியத் தலைவரான மு.அ. சிதம்பரம் மற்றும் அ. சி. முத்தையா ஆகியோர் அடங்குவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற துடுப்பாட்ட பந்து வீச்சாளர்களுக்கான எம் ஆர் எஃப் பேஸ் பவுண்டேசன் புகழ்பெற்ற வேக பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராதை இயக்குநராக கொண்டதாகும்.
டென்னிசு
தொகுசென்னையில் மற்றொரு பிரபலமான விளையாட்டு டென்னிசு. 1996ஆம் ஆண்டு முதல் 2017 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள நுங்கம்பாக்கம் டென்னிசு அரங்கத்தில், நாட்டின் ஒரே டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம், தற்போது இயங்காத சென்னை ஓபன் போட்டியை நடத்தியது. இந்த அரங்கம் 6,000 பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, ஐந்து செயற்கை மேற்பரப்பு ஆடுகளங்கள் உள்ளன. டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழாவில் சிறந்த புதிய போட்டிக்கான பட்டம் வழங்கப்பட்டது. இராமநாதன் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் மகேஷ் பூபதி ஆகியோர் சென்னை இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் ஆவர்.[5] லியாண்டர் பயஸ் சென்னையில் தனது பள்ளிப் படிப்பின் போது பயிற்சி மேற்கொண்டார். இந்தியாவின் முதல் டென்னிஸ் பயிற்சி கழகத்தில் ஒன்றான பிரிட்டானியா அமிர்தராஜ் டென்னிசு அகாடமி சென்னையில் அமைந்துள்ளது.
வளைதடிப் பந்தாட்டம்
தொகுவளைதடிப் பந்தாட் போட்டிகளுக்கான மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கம், 4000 பேர் அமரக்கூடிய வகையில் உள்ளது 1996 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் உலகின் முதல் ஆறு அணிகள் இடம்பெற்ற, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கு நடைபெற்றது.[6] 2011 ஆம் ஆண்டு முதல் வளைதடிப் பந்தாட்ட உலகதொடரில் சென்னை சிறுத்தைகள் அணிக்கான அரங்கமாக உள்ளது.[7] வாசுதேவன் பாஸ்கரன் , கிருஷ்ணமூர்த்தி பெருமாள், எம். ஜே. கோபாலன் மற்றும் முகம்மது ரியாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்க சர்வதேச வீரர்களாக உள்ளனர்.
சுவர்ப்பந்து
தொகுஇந்தியாவில் சுவர்ப்பந்து விளையாட்டுச் சங்கத்தின் தலைமையிடமாக சென்னை உள்ளது. 20 க்கும் மேற்பட்ட மாநில சங்கங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அலகுகள் உள்ளன. இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள பெண்கள் சுவர்ப்பந்து விளையாட்டு வீரர் தீபிகா பள்ளிக்கல் .
குறிப்புகள்
தொகு- ↑ "Chennai Sports". lifeinchennai.com. Archived from the original on 2009-08-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-27.
- ↑ "Top 10 Most Popular Sports in India". Sporteology.com. Archived from the original on 2018-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
- ↑ "MA Chidambaram stadium". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2007-09-13.The Chemplast Cricket Ground in the IIT Madras campus and SSN cricket ground are other important cricket venues, which hosts first class matches.
- ↑ "IIT-Chemplast stadium". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2007-09-13.
- ↑ "About the venue". International Management Group. பார்க்கப்பட்ட நாள் 2007-09-13.
- ↑ "Radhakrishnan stadium to have new turf". Chennai, India: The Hindu. 2004-10-20 இம் மூலத்தில் இருந்து 2004-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041030191509/http://www.hindu.com/2004/10/20/stories/2004102004161800.htm. பார்த்த நாள்: 2007-09-13.
- ↑ "Chennai Cheetahs".
வெளி இணைப்புகள்
தொகு- Tamil Nadu Sports Development Authority பரணிடப்பட்டது 2009-04-16 at the Library of Congress Web Archives
- Chennai Sepak Takraw League Official Website
- Chennai Parkour Official Website பரணிடப்பட்டது 2019-03-22 at the வந்தவழி இயந்திரம்