செம்பூர்ணா மக்களவைத் தொகுதி

மலேசிய மக்களவைத் தொகுதி

செம்பூர்ணா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Semporna; ஆங்கிலம்: Semporna Federal Constituency; சீனம்: 仙本那联邦选区) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; செம்பூர்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P189) ஆகும்.[5]

செம்பூர்ணா (P189)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Semporna (P189)
Federal Constituency in Sabah
செம்பூர்ணா மக்களவைத் தொகுதி
(P189 Semporna)
மாவட்டம்செம்பூர்ணா மாவட்டம்
வட்டாரம்தாவாவ் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை72,169 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிலகாட் டத்து மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்செம்பூர்ணா; தாவாவ்
பரப்பளவு1,126 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      சபா பாரம்பரிய கட்சி
மக்களவை உறுப்பினர்சாபி அப்டால்
(Mohd Shafie Apdal)
மக்கள் தொகை166,587 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

செம்பூர்ணா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து செம்பூர்ணா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

செம்பூர்ணா மாவட்டம்

தொகு

செம்பூர்ணா மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் செம்பூர்ணா நகரம். கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 531 கி.மீ. (330 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி செம்பூர்ணா மாவட்டத்தில் 166,587 மக்கள் வசிக்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டில் பிலிப்பீன்சு நாட்டை ஆட்சி செய்த எசுப்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் செம்பூர்ணா மாவட்டம் இருந்ததால், இங்கு இன்னும் சபகானோ எனும் எசுப்பானிய மொழி பேசப்படுகிறது.

இந்த மாவட்டம் 1887 மே 10-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக நிறுவப் பட்டது. இந்த இடத்தின் பெயர் முதலில் தோங் ராலுன் (Tong Talun) என்று இருந்தது. பின்னரே செம்பூர்ணா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. செம்பூர்ணா என்றால் பஜாவு மொழியில் ஓய்வுக்கான இடம் என்று பொருள்.[7]

செம்பூர்ணா மக்களவைத் தொகுதி

தொகு




 

செம்பூர்ணா தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  மலாயர் (32.3%)
  சீனர் (1.6%)
  இதர இனத்தவர் (2.6%)





 

செம்பூர்ணா தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.77%)
  பெண் (50.23%)
 

செம்பூர்ணா தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (9.1%)
  21-29 (26.01%)
  30-39 (22.58%)
  40-49 (16.69%)
  50-59 (12.24%)
  60-69 (7.9%)
  70-79 (2.59%)
  80-89 (1.58%)
  + 90 (1.32%)
செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
லகாட் டத்து தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P153 1986–1990 சக்காரான் டன்டாய்
(Sakaran Dandai)
பாரிசான் நேசனல்
(அசுனோ)
8-ஆவது மக்களவை 1990–1995 பாரிசான் நேசனல்
(அம்னோ)
9-ஆவது மக்களவை P164 1995–1999 சாபி அப்டால்
(Shafie Apdal)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P189 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013-2016
2016–2018 வாரிசான்
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சாபி அப்டால்
(Mohd Shafie Apdal)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)28,70273.776.43
நிக்சன் அப்துல் அபி
(Nixon Abdul Habi)
சபா மக்கள் கூட்டணி (GRS)7,89220.2820.28  
ரசுதாம் பாண்டரோக்
(Arastam Pandorog)
பாக்காத்தான் (PH)1,8484.754.75  
ராஜிக் அமீத்
(Rajik Hamid)
தாயக இயக்கம் (GTA)4671.201.20  
மொத்தம்38,909100.00
செல்லுபடியான வாக்குகள்38,90997.33
செல்லாத/வெற்று வாக்குகள்1,0692.67
மொத்த வாக்குகள்39,978100.00
பதிவான வாக்குகள்72,16953.9117.83
Majority20,81053.498.36
      சபா பாரம்பரிய கட்சி கைப்பற்றியது (தொகுதியின் முதல் தேர்தல்)
மூலம்: [9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "Semporna may be a small town by the coast but sleepy it is not, with its reputation as an international diving scene". SabahTravel.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு