சைலேந்திர பாபு
முனைவர் சைலேந்திர பாபு (பிறப்பு: ஜூன் 5, 1962) ஓர் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இவர் 1987இல் தமிழ்நாடு பணிநிலைப் பிரிவின் இந்தியக் காவல் பணி அதிகாரியாகப் பணியைத் துவங்கினார். இவர் 2012ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் (ADGP) பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியலில் முனைவர் பட்டம் மட்டுமல்லாது பெருவேட்கையுடைய வாசகர்.[1]
முனைவர் சைலேந்திர பாபு IPS | |
---|---|
காவல்துறையின் தலைமை இயக்குநர் தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூலை 01, 2021 | |
காவல் துறை தலைவர் (IG ), வடக்கு மண்டலம், தமிழ்நாடு | |
பதவியில் சூன் 8, 2011 – ஏப்ரல் 23, 2012 | |
காவல்துறை ஆணையாளர், கோயம்புத்தூர் தமிழ்நாடு | |
பதவியில் பிப்ரவரி 21, 2010 – சூன் 8, 2011 | |
காவல்துறை தலைவர் (IG ), தமிழ்நாடு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை தலைவர் | |
பதவியில் செப்டம்பர் 11, 2008 – பிப்ரவரி 21, 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 5, 1962 குழித்துறை, கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா |
முன்னாள் கல்லூரி | சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் அகாடமி, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
விருதுகள் | கடமையுணர்வுக்கான இந்தியக் குடியரசுத்தலைவரின் விருது, உயிர் காத்த செயலுக்கு இந்தியப் பிரதமரின் விருது, வீரதீர செயலுக்கான தமிழக முதல்வரின் விருது , கடமை உணர்வுக்கான தமிழக முதல்வரின் விருது, சிறப்பு அதிரடிப்படையில் வீரதீர செயலுக்கான தமிழக அரசின் விருது, சிறப்பு பணிக்கான இந்தியக் குடியரசு தலைவரின் விருது. |
Military service | |
தரம் | காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) |
கல்வி
தொகுகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்து, மதுரையில் அமைந்துள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் அவருடைய "காணாமல் போன குழந்தைகள் (Missing Children)" குறித்த ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 2013ஆம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[2]
விளையாட்டு
தொகுஉடற்பயிற்சியைத் தீவிரமாகக் கடைபிடித்து உடலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் 'உடல்நலத் தகுதி' எனும் தமிழ் நூலை எழுதி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்போருக்கு விருந்தாக இந்த நூலைத் தந்துள்ளார். வீர தீர விளையாட்டுச் செயல்கலான நீச்சல், தடகளம், துப்பாகிச்சுடுதல், சைக்கிளிங் போன்றவற்றில் அதி தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் "RD சிங்" கோப்பையை பெற்றுள்ளார். திசம்பர் 2004 இல் பாங்காக்கில் நடைபெற்ற Asian Masters Athletic Championshipsலும், சென்னை மராத்தான், மற்றும் கோவை மராத்தான் போட்டியிலும் தொடர்ந்துள்ளது.[சான்று தேவை]
பிப்ரவரி 2008ஆம் ஆண்டில் இந்தியன் கடற்கரையோரப் பாதுகாப்பு படை மற்றும் கடலோரப் பாதுகாப்பு உறுப்பினர்களுடன் இணைந்து கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 890 கி.மீ. மிதிவண்டிய பேரணியை ஏற்பாடு செய்து பேரணியிலும் கலந்து கொண்டார். 10 நாட்களாக நடந்த அந்த பேரணியில் கடலோரக் காவலர்களின் செயல்பாடு மற்றும் கடலோர மக்களின் மத்தியில் காவற்படையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயலாற்றினார். துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்ட சைலேந்திர பாபு காவல்துறை மற்றும் பொதுத்துறை சார்ந்த துப்பாக்கிச்சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
இளைஞர்களைப் பற்றிய கருத்துகள்
தொகுஇளைஞர்கள், சமுதாயமும் குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். தன் பண்புகளை இளைஞர்கள் ஆராய்ந்து, அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்புக் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள்.
இந்தியக் காவல் பணி
தொகுஇந்தியக் காவல் பணி அதிகாரி ஆக (IPS) பணியில் சேர்ந்த சைலேந்திர பாபு ஐதராபாத்து தேசிய காவல் அகாதமியில் பயிற்சிப் பெற்றார். காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (ASP) கோபிச்செட்டிபாளையம், சேலம் மற்றும் திண்டுக்கல்லில் பணியாற்றி, காவல்துறை கண்காணிப்பாளராக செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பணியாற்றினார், பின்னர் காவல்துறை துணை ஆணையாளராக அடையாற்றிலும் பின் காவல்துறை துணைத் தலைவர் (DIG) ஆக விழுப்புரம் சரகத்திலும் இணை ஆணையாளராக சென்னையிலும் பணியாற்றினார், கரூர் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு காவல்துறை துணைத் தலைவர் ஆக திருச்சியிலும் பின் சென்னை வடக்கு மண்டலத்தின் காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றுவதற்கு முன் முன்பு காவல் ஆணையராக (COP) கோயம்புத்தூரிலும் பணியாற்றினார்.
ஏப்ரல் 2014ல் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனராக (Additional Director General of Police) பதவி உயர்வுப் பெற்ற சையிலேந்திர பாபு தமிழ்நாடு கடலோர காவல் படை மற்றும் ரயில்வே காவல் துறை தலைமை இயக்குனராக பணியில் இருந்தார். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் திரிபாதி 30 ஜூன் 2021 அன்று ஓய்வு பெறற்றதை அடுத்த, சைலேந்திர பாபுவினை புதிய தலைமை இயக்குநராக அரசு நியமித்துள்ளது.[3]
பதவி உயர்வுகள்
தொகுஇலச்சினை | தரம் | நாள் |
---|---|---|
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர்-ஏ டி ஜி பி | ஏப்ரல் 23 ,2012[4] | |
காவல்துறை தலைவர்- ஐ ஜி | டிசம்பர் 20, 2006[5] | |
கூடுதல் காவல்துறை தலைவர்- டி ஐ ஜி | மார்ச்,2001 | |
காவல்துறை கண்காணிப்பாளர் | சனவரி,1992 | |
காவல்துறை துணை கண்காணைப்பாளர் | அக்டோபர்,1989 |
நூல்கள்
தொகுஎழுதிய நூல்களில் சில:
- நீங்களும் இந்தியக் காவலர் பணியாளர் ஆகலாம்.(2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172542818)[6]
- Boys & Girls - Be Ambitious (2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184494082)[7]
- Principles of success in interview (2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8174789846) [8]
- உடலினை உறுதி செய்[9]
- அமெரிக்காவில் 24 நாட்கள்[10]
- நீங்களும் ஐ பி எஸ் அதிகாரி ஆகலாம்[11]
- சாதிக்க ஆசைப்படு
மேற்கோள்கள்
தொகு- ↑ http://shankarmadan.blogspot.com/2010/12/blog-post_13.html
- ↑ "சைலேந்திர பாபு".
- ↑ "Sylendra Babu is new Tamil Nadu DGP". The News Minute (in ஆங்கிலம்). 2021-06-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
- ↑ "Sylendra Babu promoted ADGP-Coastal Security Group". The Hindu. April 23, 2012. http://www.thehindu.com/news/cities/chennai/sylendra-babu-promoted-adgpcoastal-security-group/article3342493.ece.
- ↑ "Six IPS officers promoted". The Hindu. 20 December 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/six-ips-officers-promoted/article3036194.ece.
- ↑ "Book for IPS Exam guidance by IPS Officer - Tamil Books & Entrance Exam including Bank Exams,Railway Exams, TNPSC Exam, MBA & MCA Entrance Exam". Archived from the original on 2010-11-15. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
- ↑ "Sylendra Babu motivates students". The Hindu. 10 July 2011. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article2214947.ece?css=print. பார்த்த நாள்: 9 November 2012.
- ↑ "Principles of Success in Interview - Tamil Books & Entrance Exam including Bank Exams,Railway Exams, TNPSC Exam, MBA & MCA Entrance Exam". Archived from the original on 2010-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
- ↑ S. Thyagarajan (8 July 2008). "Physical fitne". The Hindu இம் மூலத்தில் இருந்து 29 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130829031317/http://www.hindu.com/br/2008/07/08/stories/2008070850051401.htm. பார்த்த நாள்: 9 November 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-29. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-29. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.