ஜோஸ் பட்லர்
ஜோசப் சார்லஸ் பட்லர் (Joseph Charles Buttler, பிறப்பு: 8 செப்டம்பர் 1990) என்பவர் ஆங்கிலேயப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவராக செயல்படுகிறார்.[1] வலது-கை மட்டையாளரான இவர் களத்தடுப்பில் இலக்குக் கவனிப்பாளராக விளையாடி வருகிறார். இவர் உலகின் மிகச் சிறந்த இழப்புக் கவனிப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2] இவர் உள்ளூரில் லங்காசயர் கவுண்டித் துடுப்பாட்ட அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் இங்கிலாந்தின் மிக விரைவான பன்னாட்டு ஒருநாள் நூறை (46 பந்துகளில்) எடுத்த வீரர் என்ற சாதனையாகக் கொண்டுள்ளார்.[3]
2010 இல் பட்லர் | ||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | யோசப் சார்லசு பட்லர் | |||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 8 செப்டம்பர் 1990 டோண்டன், சமர்செட், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | |||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) | |||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 665) | 27 சூலை 2014 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 5 சனவரி 2022 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 226) | 21 பெப்பிரவரி 2012 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 நவம்பர் 2023 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 63 | |||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 54) | 31 ஆகத்து 2011 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 22 திசம்பர் 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 63 | |||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||
2009–2013 | சமர்செட் | |||||||||||||||||||||||||||||||||||
2013/14 | மெல்போர்ன் ரெனிகேட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
2014–இன்று | இலங்காசயர் | |||||||||||||||||||||||||||||||||||
2016–2017 | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
2017 | கொமில்லா விக்டோரியன்சு | |||||||||||||||||||||||||||||||||||
2017/18–2018/19 | சிட்னி தண்டர் | |||||||||||||||||||||||||||||||||||
2018–present | ராஜஸ்தான் ராயல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
2021–இன்று | மான்செசுட்டர் ஒரிசினல்சு | |||||||||||||||||||||||||||||||||||
2023–இன்று | பார்க் ரோயல்சு | |||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 14 மார்ச் 2024 |
பன்னாட்டுப் போட்டிகள்
2013-14
2013 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜானதன் டிராட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. [4] பின்பு கிரெய்க் கீஸ்வெட்டருக்குப் பதிலாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[5] பின்பு நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் இவர் தனது முதலாவது இருபது20 அரைநூறைப் பதிவு செய்தார். பின்பு இங்கிலாந்தின் முதனமை இழப்புக் கவனிப்பாளரானார்.[6][7] 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி வாகையாளர் கோப்பைத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இவர் விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதன் விளைவாக கிரிகின்ஃபோவின் இருபது20 அணியில் இவர் தேர்வானார்.[8][9][10]
பின்பு 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி வாகையாளர் இருபது20 போட்டித் தொடரிலும் பல ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார். லார்ட்ஸ் மைதானத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் தனது முதலாவது ஒருநாள் நூறைப் பதிவு செய்தார்.[11] அதில் 61 பந்துகளில் இவர் 121 ஓட்ட்டங்களை எடுத்தார். அதில் ஒன்பது நான்குகளும் நான்கு ஆறுகளும் அடங்கும். இதன்மூலம் அதிவிரைவாக நூறு ஓட்டங்களை எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார். [12]
தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்மைக் இழப்புக் கவனிப்பாளராக இருந்த மட் பிரையர் காயம் காரணமாக 22 சூலை, 2014இல் வெளியேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் முதல் ஆட்டப் பகுதியில் 83 பந்துகளில் 85 ஓட்டங்கள் எடுத்தார். அந்தத் தொடரின் அடுத்த மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
2015-2017
ஆத்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடிய பிறகு நியூசிலாந்து மற்றும் ஆத்திரேலியாவில் நடைபெற்ற 2015 துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கபட்டது. அந்தத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 39 ஓட்டங்களும்[13] வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 69 ஓட்டங்களும் எடுத்தார். [14] ஆனால் அந்த இரு போட்டிகளிலும் அந்த அணி தோல்வி அடைந்தது. .
பின் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இழப்புக் கவனிப்பாளராகத் தேர்வானார்[15]. நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் மிக முக்கியமான போட்டியாகக் கருதப்படும் ஆத்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரிலும் இவர் விளையாடினார். இந்த தொடரில் இவரின் விளையாடும் திறன் ஜாஃப்ரி பாய்காட்டினால் விமர்சனத்திற்கு உள்ளானது. இவரை விட ஏழு வயது சிறுவன் சிறப்பாக விளையாடுவான் என அவர் விமர்சனம் செய்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் தனது அதிகபட்ச ஓட்டமான 129 ஓட்டங்களை (77 பந்துகளில்) எடுத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகித்தான் அணிக்கு எதிரான முதல் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். ஆனால் மூன்றாவது போட்டியில் இவருக்குப் பதிலாக ஜோனி பர்ஸ்டோ தேர்வானார். பின் துபாயில் நடைபெற்ற பாக்கித்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 46 பந்துகளில் நூறு ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக நூறு ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார்.
இவரது சாதனைகள்
சூன் 2019 வரை, பட்லர் ஐந்து முதல்-தரம், 11 பட்டியல் அ நூறுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் ஒன்பது நூறுகள் இங்கிலாந்து தேசிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் எடுத்தவையாகும். இருபது20 போட்டிகளில் இவர் இதுவரை நூறுகள் எதுவும் எடுக்கவில்லை.[16]
பட்லர் தனது முதலாவது முதல்-தர நூறை 2010 மே மாதத்தில் சொமர்செட் அணிக்காக 144 ஓட்டங்களைப் பெற்றார்.[17][18] இவரது அதிகூடிய தேர்வு ஓட்டங்கள் இந்திய அணிக்கெதிராக 2018 ஆகஸ்டில் நொட்டிங்காமில் எடுத்த 106 ஓட்டங்கள் ஆகும்.[19]
மேற்கோள்கள்
- ↑ "England v India: Adil Rashid named as hosts' only spinner for first Test" (in en-GB). 2018-07-31. https://www.bbc.co.uk/sport/cricket/45017582.
- ↑ "England 'freak' Buttler as good as Kohli, De Villiers and Dhoni - Hussain". Metro (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-11. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
- ↑ "Jos Buttler breaks record as England beat Pakistan to win series" (in en-GB). 2015-11-20. https://www.bbc.co.uk/sport/cricket/34879336.
- ↑ Anderson, Trott rested from ODIs, இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 18 December 2012. Retrieved 11 November 2017.
- ↑ Buttler admits mixed emotions after ousting friend, இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 25 January 2013. Retrieved 12 November 2017.
- ↑ Dobell, George (22 January 2013) England ring for Buttler, இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. Retrieved 12 November 2017.
- ↑ Dobell, George (11 February 2013) Would somebody call the Buttler?, இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. Retrieved 12 November 2017.
- ↑ Buttler ready with bat and gloves, இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 5 February 2013. Retrieved 12 November 2017.
- ↑ Hopps, David (12 February 2013) Brendon McCullum blitz draws New Zealand level, இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. Retrieved 12 November 2017.
- ↑ "AB, Ajmal and Co". www.espncricinfo.com.
- ↑ "Records / One-Day Internationals / Batting records / Fastest hundreds". ESPNcricinfo (ESPN Internet Ventures). பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
- ↑ Edgbaston, Andy Wilson at (2014-06-03). "England fury as Sri Lanka run out Jos Buttler Mankad-style in last ODI" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/sport/2014/jun/03/england-fury-sri-lanka-mankad-run-out-jos-buttler.
- ↑ "Full Scorecard of England vs Sri Lanka, World Cup, 22nd Match, Pool A – Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
- ↑ "Full Scorecard of Bangladesh vs England, World Cup, 33rd Match, Pool A – Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
- ↑ "Cricket World Cup 2015: England knocked out by Bangladesh" (in en-GB). 2015-03-09. https://www.bbc.co.uk/sport/cricket/31792930.
- ↑ "Jos Buttler". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
- ↑ "Hampshire draw with Somerset as poor start continues". பிபிசி. 13 May 2010. பார்க்கப்பட்ட நாள் 14 May 2010.
- ↑ Twin hundreds leads Somerset comeback, இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ, 12 May 2010. Retrieved 11 November 2017.
- ↑ "England v India: Jos Buttler hits century but hosts heading for defeat" (in en-GB). 2018-08-21. https://www.bbc.co.uk/sport/cricket/45258626.
வெளி இணைப்புகள்
- Official website பரணிடப்பட்டது 2019-07-16 at the வந்தவழி இயந்திரம்
- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ஜோஸ் பட்லர்