திருவாதவூர்
திருவாதவூர் (Thiruvadhavoor) என்ற ஊர் மதுரையை அடுத்த இருந்தையூரின் ஒரு பகுதியாகும். இது மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 20 கி.மீ. தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இந்த ஊரில் திருமறைநாதர் கோயில் அமைந்துள்ளது. இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.
கருவிநூல்தொகு
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், பதிப்பு 2005