தில்லியின் மாவட்டங்கள்
தில்லி பதினோரு வருமான மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட நடுவர் தலைமையேற்கிறார். ஒவ்வொரு மாவட்டமும் மூன்று துணைக் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துணைக்கோட்டத்திற்கும் துணைக்கோட்ட நடுவர் தலைமையேற்கிறார். துணை ஆணையர்கள் கோட்ட ஆணையருக்கு கீழ் இயங்குகின்றனர். இந்த மாவட்டங்கள் வருமானத்தை சேகரிக்கவும் நிர்வாகத்திற்கும் உருவானவை.
சனவரி 1997இல் ஒன்பது மாவட்டங்கள் உருவாயின; அதற்கு முன்னதாக தில்லி முழுமையும் ஒரே மாவட்டமாக இருந்தது. தீசு-அசாரி அதன் தலைமையிடமாக இருந்தது. செப்டம்பர் 2012இல் இரண்டு புதிய மாவட்டங்கள், தென் கிழக்கு, சாகதரா மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன.[1]
தில்லி அரசின் அனைத்து செயலாக்கங்களும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றுகின்றது. தவிரவும் நடுவண் அரசின் கொள்கைகளையும் மேற்பார்க்கின்றது. தில்லியின் மாவட்டங்களும் துணைக்கோட்டங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மாவட்டங்கள்[2]
தொகுதில்லியின் பழைய ஒன்பது மாவட்டங்கள்
தொகுவ.எண். | மாவட்டம் | தலைமையகம் | பரப்பு (கிமீ2) |
மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பு[4] |
மக்கள்தொகை 2001 கணக்கெடுப்பு |
மக்கள்தொகை 1991 கணக்கெடுப்பு |
---|---|---|---|---|---|---|
1 | மத்திய தில்லி | தரியாகஞ்ச் | 23.36 | 578,671 | 646,385 | 656,533 |
2 | வடக்கு தில்லி மாவட்டம் | சதர் பசார் | 58.92 | 883,418 | 781,525 | 686,654 |
3 | தெற்கு தில்லி மாவட்டம் | சாகேத் | 249.44 | 2,733,752 | 2,267,023 | 1,501,881 |
4 | கிழக்கு தில்லி மாவட்டம் | பிரீத் விகார் | 48.90 | 1,707,725 | 1,463,583 | 1,023,078 |
5 | வடகிழக்கு தில்லி மாவட்டம் | சதாரா மாவட்டம் | 56.32 | 2,240,749 | 1,768,061 | 1,085,250 |
6 | தென்மேற்கு தில்லி மாவட்டம் | பாலம், தில்லி | 420.80 | 2,292,363 | 1,755,041 | 1,087,573 |
7 | புது தில்லி | கன்னாட்டு பிளேசு | 34.95 | 133,713 | 179,112 | 168,669 |
8 | வடமேற்கு தில்லி மாவட்டம் | காஞ்சவாலா | 442.84 | 3,651,261 | 2,860,869 | 1,777,968 |
9 | மேற்கு தில்லி மாவட்டம் | ரசௌரி கார்டன் | 130.56 | 2,531,583 | 2,128,908 | 1,433,038 |
மொத்தம் | 1483.0 | 16,753,235 | 13,850,507 | 9,420,644 |
மாநகராட்சிகள்
தொகுஇந்த மாவட்டங்களைத் தவிர, தேசிய தலைநகரப் பகுதியில் பாசறைப் பகுதி வாரியம் உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகள் செயல்படுகின்றன:
- வடக்கு தில்லி மாநகராட்சி - பழைய மாவட்டங்களான வடக்கு தில்லி மாவட்டம் மற்றும் வடமேற்கு தில்லி மாவட்டம் அடக்கியது.
- தெற்கு தில்லி மாநகராட்சி - பழைய மாவட்டங்களான தெற்கு தில்லி மாவட்டம், மேற்கு தில்லி மாவட்டம், மத்திய தில்லி (தில்லி பாசறைப்பகுதி நீங்கலாக).
- கிழக்கு தில்லி மாநகராட்சி - பழைய மாவட்டங்களான கிழக்கு தில்லி மாவட்டம், வடகிழக்கு தில்லி மாவட்டம்.
- புது தில்லி மாநகராட்சி மன்றம் - பழைய புது தில்லி மாவட்டம்.
- தில்லி பாசறைப் பகுதி - பழைய தென்மேற்கு தில்லி மாவட்டத்தின் சில பகுதிகள்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Two new districts added to Delhi in 2012
- ↑ "districts of delhi".
- ↑ "North West District: Organisation Setup". தில்லி அரசு வலைத்தளம்.
- ↑ "Census of Delhi 2011" (PDF). இந்திய அரசு வலைத்தளம்.