துபையா
துபையா | |
---|---|
குள்ள மர மூஞ்சூறு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | மர மூஞ்சூறு
|
குடும்பம்: | |
பேரினம்: | துபையா இரபீள்சு, 1821
|
மாதிரி இனம் | |
துபையா பெர்குனியா[1] இரபீள்சு, 1821 | |
சிற்றினம் | |
See text. | |
வேறு பெயர்கள் | |
|
துபையா (Tupaia) என்பது துபையிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரமூஞ்சூறு பேரினமாகும். இது முதன்முதலில் 1821-இல் தாமசு இசுடாம்போர்ட் ராபிள்சு என்பவரால் விவரிக்கப்பட்டது.[1][2] இந்தப் பேரினத்தின் பெயர் மலாய் வார்த்தையான துபாய் என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் அணில் அல்லது அணிலை ஒத்த சிறிய விலங்கு என்பதாகும்.[3]
சிறப்பியல்புகள்
தொகுஇராபிள்சு இந்தப் பேரினத்தை ஒரு நீளமான மூக்கு, எட்டு முதல் 10 கோரைப்பற்கள், நன்கு வளர்ந்த கரங்கள், ஐந்து கால் விரல்களுடன் கூடிய உரோமங்களற்ற கால்கள், பட்டைகள் மற்றும் கூர்மையான நகங்கள், அணில்களுக்கே உரித்தான வால்களுடன் கூடியன என விவரித்துள்ளார்.[2]
மார்கடு வார்டு லியோன் 1913ஆம் ஆண்டில் இந்தப் பேரினத்தின் திருத்தத்தை வெளியிட்டார். மேலும் துபையா பேரினத்தின் அணில் போன்ற தோற்றத்தையும் குறிப்பிட்டார். இவை நீண்ட கருப்பு மீசையுடன் சிறிய காதுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் முகத்தில் எந்த அடையாளங்களையும் கொண்டிருக்கவில்லை. மூக்கின் உரோமங்களற்றப் பகுதி வலுவாக உள்ளது. தோளில் ஒரு சாய்வான கோடும் நன்கு வேறுபட்டுக் காணக்கூடியதாக உள்ளது. வாலில் உரோமங்கள் காணப்பட்டாலும் குஞ்சமாக இல்லை. மூளை அகலமாகவும், பல் வரிசை நீளமாக இருக்கும். பல் சூத்திரம் ஆகும். முதல் இணை மேல் வெட்டுப்பல் இரண்டாவது இணையை விட நீளமானது. அதே நேரத்தில் இரண்டாவது இணை வெட்டுப்பல் முதல் மற்றும் மூன்றாவது இணைகளை விடச் சற்று பெரியவை. கீழ் கோரைப்பல் மேல் கோரைப்பல்லைவிட நன்கு வளர்ந்துள்ளது. அருகிலுள்ள முன் கடவாய் பற்களை விட உயரமாகக் காணப்படுகின்றன. தலை, உடல் மற்றும் வால் ஆகியவற்றின் அளவு சிற்றினங்களுக்கிடையே வேறுபடுகிறது.[4]
துபையா பேரினத்தின் ஒரு சிறந்த பண்பு இவற்றின் வண்ணப் பார்வை ஆகும். இவை மனிதர்கள் மற்றும் பிற விலங்கினங்களைப் போலவே குச்சு மற்றும் கூம்பு காட்சி ஏற்பிகளைக் கொண்டுள்ளன.[5]
வகைப்பாட்டியல்
தொகு1820ஆம் ஆண்டில் தையார்ட் மற்றும் துவௌசெல் ஆகியோர் பொதுவான மர மூஞ்சூறு, துபையா கிளிசு சிற்றினத்தின் முதல் மாதிரியை விவரித்தபோது, இவர்கள் இதை சோரெக்சு பேரினத்தின் ஓர் இனமாகக் கருதினர்.[6] டி. எவரெட்டி 2011 மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் அடிப்படையில் யூரோகேல் பேரினத்திலிருந்து மாற்றினார்.[7]
பின்வரும் சிற்றினங்கள் துபையா பேரினத்தில் உள்ளன.
- வடக்கு மர மூஞ்சூறு து. பெலாங்கேரி-(வாக்னர், 1841)[8]
- தங்க வயிற்று மரமூஞ்சூறு, து. கிரைசோகேசுடர்-கெ. சு. மில்லர், 1903[9]
- பாங்கா தீவு மரமூஞ்சூறு, து. டைகோலர்-லியோன், 190[10]
- வரியுடைய மரமூஞ்சூறு து. டார்சலிசு-செலெகல், 1857[11]
- மிண்டனாவோ மரமூஞ்சூறு து. எவரெட்டி-தாமஸ், 1892[12]
- சுமாத்திரா மர மூஞ்சூறு து. பெருகினியா-இராபிள்சு 1821[13]
- பொதுவான மர மூஞ்சூறு து. கிளிசு-டையார்ட் & துவௌசெல், 1820[6]
- மெல்லிய மர மூஞ்சூறு து. கிராசிலிசு-தாமஸ், 1893[14]
- சாவகம் மர மூஞ்சூறு து. கைபோக்ரிசா-தாமஸ், 1895[15]
- கோர்சுபீல்டு மர மூஞ்சூறு து. சாவனிகா-கோர்சூபீல்ட், 1821[4][16]
- நீண்ட கால் மர மூஞ்சூறு து. லாங்கிபசு-தாமசு, 1893[17]
- குள்ள மர மூஞ்சூறு து. மைனர்-குந்தர், 1876[18]
- மலை மர மூஞ்சூறு து. மோன்டானா-தாமசு, 1892[12]
- நிக்கோபார் மர மூஞ்சூறு து. நிக்கோபாரிகா- (ஜெலெபோர், 1868)[19]
- பலவன் மர மூஞ்சூறு து. பலவனென்சிசு-தாமசு, 1894 [20]
- வண்ண மர மூஞ்சூறு து. பிக்டா-தாமசு, 1892[12]
- கலிமந்தன் மரமூஞ்சூறு து. சலாதனா-லியோன், 1895[21]
- செந்நிற மர மூஞ்சூறு து. இசுப்ளெண்டிடுலா-ஜா. எ. கிரே, 1865[22]
- பெரிய மர மூஞ்சூறு து. தானா- இராபிள்சு, 1821[2]
- † துபையா மியோசெனிகா-மெயின் & ஜின்சுபர்க், 1997[23]
கடந்த காலத்தில், பல்வேறு ஆய்வாளர்கள் மர மூஞ்சுறுகளை பூச்சியுன்னி தரவரிசையில் வைக்க முன்மொழிந்தனர். இவற்றை முதனிகளின் நெருங்கிய உறவினர்களாகக் கருதினர். 1972 முதல், மர மூஞ்சூறு குடும்பங்களாக துபாயிடே மற்றும் பிடிலோசெர்சிடே ஆகியவை இசுகேண்டென்சியா வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன.[24][25][26]
பரவலும் வாழிடமும்
தொகுவடகிழக்கு இந்தியா, மியான்மர், நிக்கோபார் தீவுகள் முதல் கிழக்கே பிலிப்பீன்சு தீவுகள், மத்திய சீனா, சாவகம், போர்னியோ மற்றும் சுமாத்திரா வரை தென்மேற்குக் கடற்கரையில் உள்ள தீவுகள் உட்படப் பல பகுதிகளில் துபையா சிற்றினங்கள் உள்ளன. இவை பாலித் தீவுகள் தவிர, செலிபீசிலோ அல்லது சாவகத்தின் கிழக்கே உள்ள தீவுகளிலோ காணப்படவில்லை.[4]
இவை வெப்பமண்டலக் காடுகளின் அடர்ந்த நிலப்பரப்பில் வாழ்கின்றன. து. மைனரைத் தவிர, இவை முதன்மையாக நிலப்பரப்பு மற்றும் வனத் தரையில் இரை தேடுகின்றன. பரந்த சாலைகளைக் கடப்பது அரிதாகவே காணப்படுவதால், மரம் வெட்டுதல் நடவடிக்கைகளால் ஏற்படும் காடுகளின் துண்டாக்கத்தால் இதன் எண்ணிக்கை எதிர்மறையாகப் பாதிக்கப்படுகின்றது.[27]
சூழலியலும் நடத்தையும்
தொகுஆரம்பக்கால இயற்கை ஆர்வலர்கள் வனப்பகுதிகளில் பிடிபட்ட துபையா மாதிரிகளை அமைதியற்றவை, பதற்றமானவை மற்றும் ஒலிகள் மற்றும் இயக்கங்களுக்கு விரைவாக எதிர்வினையாற்றும் தன்மையுடையன என்று விவரித்தனர்.[4] இவற்றின் செவிப்புலனின் பரந்த அதிர்வெண் வரம்பு மீயொலி வெகு தொலைவில் இருப்பதால் இவற்றின் செவி உணர்திறன் நன்கு மேம்பட்டுள்ளது.[28]
துபையா இனங்களின் கன்னப் பற்களின் வடிவம் இவை முதன்மையான பூச்சிக்கொல்லிகள் என்பதைக் குறிக்கிறது. கொல்லைப்படுத்தப்பட்ட மாதிரிகள் எறும்பு, ஈக்கள், சிள்வண்டு, வெட்டுக்கிளி, கரப்பான் மற்றும் சிறிய வண்டுகளை வேட்டையாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவை தங்கள் உணவினை உட்கார்ந்திருக்கும்போது தங்கள் முன்னங்கால்களுக்கு இடையில் வைத்துக்கொள்கின்றன. உணவுண்ட பின்னர், தங்கள் தலைகளையும் முகங்களையும் இரண்டு முன்கைகளாலும் மென்மையாக்கி, உதடுகளையும் உள்ளங்கைகளையும் நக்கிக் கொள்கின்றன. இவை குடிக்கவும் குளிக்கவும் தண்ணீரை விரும்புகின்றன.[4] பெரும்பாலும் பறவைகளால் பரவும் மென்மையான பழங்களை உண்ணுகின்றன. இப்பழங்களின் கூழ்ப் பகுதியினை விழுங்குகின்றன. ஆனால் நார்ச்சத்து கூறுகளை நிராகரிக்கின்றன. இவற்றின் நீண்ட மற்றும் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பைகளால் இவற்றைச் செரிக்க முடியாது.[29]
மர மூஞ்சூறு நன்கு வாசனையினை உணரக்கூடியன. வனப்பரப்பில் தரையில் உள்ள இலைக் குப்பைகளில் உணவைத் தேடுகின்றன.[30][31]
துபையா சிற்றினங்கள் இவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் உள்ள அவதானிப்புகள் இவை பொதுவாக ஓரிணை வாழ்க்கையினை மேற்கொள்கின்றன என்பதைக் குறிக்கின்றன. சமூக நடத்தை இனங்களுக்கும் அவற்றின் பிராந்தியங்களில் கிடைக்கும் உணவு வளங்களுக்கும் இடையில் வேறுபடுகிறது. உணவு போதுமானதாக இருக்கும் இடத்தில், பிராந்திய மோதல்களில் ஈடுபடாமல் இவை ஒத்துப் போகின்றன.[27] புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் காணப்பட்ட பொதுவான மரமூஞ்சூறுக்கள் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பிற மூஞ்சூறுகளைத் துரத்திச் செல்வதன் மூலம் குறைந்து வரும் உணவு வளங்களைப் பாதுகாக்கின்றன.[31]
பறக்கும் பறவைகள், பாம்புகள் மற்றும் சிறிய மாமிச விலங்குகளை மர மூஞ்சூறு வேட்டையாடுவதாக அறியப்படுகிறது. மனிதர்கள் உணவுக்காக இவற்றைக் கொல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை; ஏனெனில் இவற்றின் விரும்பத்தகாத சுவை. மேலும் இவை அரிதாகவே தீங்குயிரியாக காணப்படுகின்றன.[32]
இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி
தொகுமர மூஞ்சூறுக்கள் இவற்றின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தவரை முதனுயிரி விலங்கினங்களைக் காட்டிலும் கொறித்துண்ணிகள் மற்றும் அணில்களுடன் அதிக ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கின்றன. நீண்ட கர்ப்ப காலங்களுடன் குட்டியினை உருவாக்கும் உயர் விலங்கினங்களுக்கு மாறாக, மர மூஞ்சூறு பொதுவாக இரண்டு அல்லது மூன்று இளம் குட்டிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை கருப்பையில் சுமார் 45 நாட்கள் மட்டுமே இருக்கும். பெண் மரமூஞ்சூறுக்கள் உலர்ந்த இலைகளால் செய்யப்பட்ட கூடுகளில் குட்டிகளை ஈணுகின்றன. மேலும் அவ்வப்போது திரும்பி வந்து குட்டிகளுக்குப் பால் கொடுக்கும். துபையாவில் பெற்றோர் பராமரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது .[33]
குட்டிகள் சராசரியாக 33 நாட்கள் கூட்டிலிருக்கும். இவை கூட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு படிப்படியாக வளரும். துபையா பேரினச் சிற்றினங்களில் பத்து அடையாளம் காணப்பட்ட கரு வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன.[34] இவற்றின் பாலியல் முதிர்ச்சி 90 நாட்களில் நடைபெறுகிறது.[25]
மருத்துவ ஆராய்ச்சி
தொகுவிலங்கினங்களுடனான இவற்றின் நெருங்கிய உறவு மனித மருத்துவ ஆராய்ச்சியில் மரமூஞ்சூறுக்கள் முக்கியமான மாதிரி உயிரினங்களாக பயன்படுகிறது. மரமூஞ்சூறுக்களைப் பயன்படுத்தி போர்னா நோய் தீநுண்மியின் விளைவுகளை ஆராயும் ஓர் ஆய்வு நரம்பியல் நோய் குறித்த புதிய நுண்ணறிவை வழங்கியுள்ளது.[35]
துபையா பேரினத்தின் சிற்றினங்கள் விலங்கினங்களுடன் பல ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்வதால், இவை மிகுதியாக பயன்படுத்தப்பட்டன. இவை மற்றவற்றை விட அதிகமான சந்ததிகளைக் கொண்டுள்ளன. இதனால் மனித மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்துவதற்கான மாற்று மாதிரியாக இவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. வெற்றிகரமான உளவியல் சமூக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மனச்சோர்வடைந்த மனித நோயாளிகளைப் போலவே துபையாவின் துணை ஆண்களில் வியத்தகு நடத்தை, நரம்பியல் மற்றும் உடலியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. திநுண்மிகளால் இவை எளிதில் பாதிக்கப்படக்கூடிய தன்மையினைக் கொண்டுள்ளன. ஈரல் அழற்சி பி போன்ற நோய்த்தொற்றுகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியைப் பற்றி ஆய்வு செய்ய இவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.[36] மனித உயிரியல் மற்றும் நோய் வழிமுறைகள் பற்றிய ஆய்வில் கொறித்துண்ணிகள் மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கான வரம்புகளை சமாளிக்கவும், புதிய மருந்துகள் மற்றும் நோயறிதல் கருவிகளின் வளர்ச்சிக்கும் துபையா இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகள் தொற்று, வளர்சிதை மாற்ற, நரம்பியல் மற்றும் மனநல நோய்கள் மற்றும் புற்றுநோய்களைப் பற்றி ஆய்வு செய்ய மரமூஞ்சூறுகளைப் பயன்படுத்தியுள்ளன.[37]
2013ஆம் ஆண்டில், வைராலஜி ஆய்விதழில் ஒரு கட்டுரையை வெளியிடப்பட்டடது. இது எச்1 என்1 இன்ப்ளூயன்சா தீநுண்மி மாதிரிகளாக வடக்கு மர மூஞ்சூறு (து. பெலாங்கேரி) பயன்பாட்டை ஆவணப்படுத்துகிறது. இது சாதகமாக இருந்தது, ஏனெனில் கினி எலி, எலிகள், சுண்டெலி உள்ளிட்டப் பிற கொறித்துண்ணிகளும் சாத்தியமான விலங்குகளாக இருந்தபோதிலும் தகவல்களில் மருத்துவ அறிகுறிகள் மற்றும் பரவுதல் குறித்து இடைவெளிகளை விட்டுச் செல்கின்றன. இருப்பினும், துபையா மிதமான அமைப்பு மற்றும் சுவாச அறிகுறிகளையும், சுவாசக் குழாயில் நோயியல் மாற்றங்களையும் வெளிப்படுத்துகிறது. இது எச்1என்1 ஆராய்ச்சியில் ஒரு நன்மையான மாதிரியாக இதன் பயன்பாட்டை ஆதரிக்கிறது.[38]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Helgen, Kristofer M. (November 16, 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. {{{pages}}}. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ 2.0 2.1 2.2 Raffles, T. S. (1821). "Descriptive Catalogue of a Zoological Collection made on account of the Honourable East India Company, in the Island of Sumatra and its Vicinity, under the Direction of Sir Thomas Stamford Raffles, Lieutenant-Governor of Fort Marlborough; with additional Notices illustrative of the Natural History of those Countries.". The Transactions of the Linnean Society of London (Linnean Society of London) XIII: 239–340. https://archive.org/stream/transactionsofli13lond#page/256/mode/2up.
- ↑ Wilkinson, R. J. (1901). A Malay-English dictionary Kelly & Walsh Limited, Hongkong, Shanghai and Yokohama.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Lyon, M. W., Jr. (1913). Tree shrews: An account of the mammalian family Tupaiidae. Proceedings of the United States National Museum, 45:1–188.
- ↑ Shriver, J .G., Noback, C. R. (1967). Color Vision in the Tree Shrew (Tupaia glis). Folia Primatologia 6: 161−169.
- ↑ 6.0 6.1 Diard, P.M., Duvaucel, A. (1820). "Sur une nouvelle espèce de Sorex — Sorex Glis". Asiatick researches, or, Transactions of the society instituted in Bengal, for inquiring into the history and antiquities, the arts, sciences, and literature of Asia, Volume 14: 470–475.
- ↑ Roberts, T.E.; Lanier, H.C.; Sargis, E.J.; Olson, L.E. (2011). "Molecular phylogeny of treeshrews (Mammalia: Scandentia) and the timescale of diversification in Southeast Asia". Molecular Phylogenetics and Evolution 60 (3): 358–372. doi:10.1016/j.ympev.2011.04.021. பப்மெட்:21565274.
- ↑ Wagner, J. A. (1841). Das peguanische Spitzhörnchen. In: Die Säugethiere in Abbildungen nach der Natur mit Beschreibungen. Supplementband 2. Erlangen: Expedition des Schreber'schen Säugethier- und des Esper'schen Schmetterlingswerkes. Pp. 42–43.
- ↑ Miller, G. S. Jr. (1903). Seventy New Malayan Mammals. Smithsonian Miscellaneous Collections 45: 1–73.
- ↑ Lyon Jr, M. W. (1906). "Mammals of Banka, Mendanau, and Billiton Islands, between Sumatra and Borneo". Proceedings of the United States National Museum 1906.
- ↑ Schlegel, H. (1857). Tana dorsalis. In: Handleiding Tot de Beoefening der Dierkunde, Ie Deel. Boekdrukkerij van Nys, Breda. Page 59.
- ↑ 12.0 12.1 12.2 Thomas, Oldfield (1892). "On some new mammalia from the East-Indian Archipelago". Annals and Magazine of Natural History 6 (9): 250–254. doi:10.1080/00222939208677313. பன்னாட்டுத் தர தொடர் எண்:0374-5481. https://archive.org/stream/s6annalsmagazine09londuoft#page/250/mode/2up.
- ↑ Raffles, T. S. (1821). "XVII. Descriptive Catalogue of a Zoological Collection, Made on Account of the Honourable East India Company, in the Island of Sumatra and Its Vicinity, under the Direction of Sir Thomas Stamford Raffles, Lieutenant-Governor of Fort Marlborough; with Additional Notices Illustrative of the Natural History of Those Countries". Transactions of the Linnean Society of London 1: 239–274.
- ↑ Thomas, O. (1893). Description of a new Bornean Tupaia. The Annals and Magazine of Natural History 6 (12): 53–54.
- ↑ Thomas, O. (1895). "On some mammals collected by Dr. E. Modigliani in Sipora, Mentawei Islands". Annali del Museo Civico di Storia Naturale Genova. Series 2 14: 661–672.
- ↑ Horsfield, T. (1824). Zoological researches in Java, and the neighbouring islands. London: Kingsbury, Parbury, & Allen.
- ↑ Thomas, O. (1893). On some new Bornean Mammalia. The Annals and Magazine of Natural History, 6 (11): 341–347.
- ↑ Günther, A. G. (1876). Remarks on some Indian and, more especially, Bornean Mammals. Proceedings of the general meetings for scientific business of the Zoological Society of London: 424–428.
- ↑ Zelebor, J. (1868). Cladobates Nicobaricus. In: Reise der österreichischen Fregatte Novara um die Erde. Zoologischer Theil, Band 1 Säugethiere. Wien: Kaiserliche Akademie der Wissenschaften. Pp. 17–19.
- ↑ Thomas, O. (1894). On the Palawan Representative of Tupaia ferruginea. The Annals and Magazine of Natural History 6 (13): 367.
- ↑ Lyon, M. W. (1913). Treeshrews: an account of the mammalian family Tupaiidae. Vol. 45. US Government Printing Office.
- ↑ Gray, J. E. (1865). Notice of a Species of Tupaia from Borneo, in the Collection of the British Museum. Proceedings of the general meetings for scientific business of the Zoological Society of London: 322.
- ↑ Mein, P. and Ginsburg, L. (1997). Les mammifères du gisement miocène inférieur de Li Mae Long, Thaïlande : systématique, biostratigraphie et paléoenvironnement Geodiversitas 19(4): 783–844|date=4 March 2024
- ↑ Butler, P. M. (1972). The problem of insectivore classification. In: K. A. Joysey and T. S. Kemp (eds.) Studies in vertebrate evolution. Oliver and Boyd, Edinburgh. Pp. 253−265.
- ↑ 25.0 25.1 Martin, R. D. (1968). Reproduction and Ontogeny in tree-shrews (Tupaia belangeri), with reference to their general behaviour and taxonomic relationships. Zeitschrift für Tierpsychologie 25(4): 409–495.
- ↑ McKenna, M. C., Bell, S. K. (1997). Classification of mammals above the species level. Columbia University Press, New York.
- ↑ 27.0 27.1 Emmons, L. (2000). Tupai: A field study of Bornean treeshrews. Berkeley and Los Angeles: University of California Press.
- ↑ Peterson, E. A., Wruble, S. D., Ponzoli, V. I. (1968). Auditory responses in tree shrews and primates. Journal of Auditory Research 8(3): 345–355.
- ↑ Emmons, L. H. (1991). Frugivory in Treeshrews (Tupaia). The American Naturalist. 138(3): 642–649.
- ↑ Gould, E. (1978). The behavior of the moonrat, Echinosorex gymnurus (Erinaceidae) and the pentail shrew, Ptilocercus lowi (Tupaiidae) with comments on the behavior of other insectivora. Zeitschrift für Tierpsychologie 48(1): 1–27.
- ↑ 31.0 31.1 Kawamichi, T. and Kawamichi, M. (1979). Spatial Organization and Territory of Tree Shrews (Tupaia glis). Animal Behavior 27(2): 381–393.
- ↑ Cisneros, L. (2005). "Tupaia glis" (On-line), Animal Diversity Web.
- ↑ Collins, P. M. and Tsang, W. N. (1987). Growth and reproductive development in the male treeshrew (Tupaia belangeri) from birth to sexual maturity. Biology of reproduction 37(2): 261–267.
- ↑ Kuhn, H, and Schwaier, A. (1973). Implantation, early placentation, and the chronology of embryogenesis in Tupaia belangeri. Zeitschrift für Anatomie und Entwicklungsgeschichte 142(3): 315–340.
- ↑ Sprankel, H., Richarz, K., Ludwig, H. and Rott, R. (1978). Behavior Alterations in Tree Shrews Induced by Borna Disease Virus. Medical Microbiology and Immunology 165(1): 1–18.
- ↑ Cao, J., Yang, E. B., Su, J. J., Li, Y., Chow, P. (2003). The Tree Shrew: Adjuncts and Alternatives to Primates as Models for Biomedical Research. Journal of Medical Primatology. 32(3): 123–130.
- ↑ Xu, L., Zhang, Y., Liang, B., Lü, L. B., Chen, C. S., Chen, Y. B., Yao, Y. G. (2013). Tree shrews under the spot light: emerging model of human diseases. Dongwuxue Yanjiu 34(2): 59–69. (in Chinese)
- ↑ Yang, Z. F., Zhao, J., Zhu, Y. T., Wang, Y. T., Liu, R., Zhao, S. S., Li, R. F., Yang, C., Li, J., Zhong, N. S. (2013). The tree shrew provides a useful alternative model for the study of influenza H1N1 virus. Virology Journal 10 (1): 111.