துரைமுருகன்

தமிழக அரசியல்வாதி
(துரை முருகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். தமிழகத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது நீர்வளத் துறை அமைச்சராக உள்ளார்.

துரைமுருகன்
நீர்வளத் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டது
பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 செப்டம்பர் 2020
முன்னையவர்க. அன்பழகன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1996
பதவியில்
1989–1991
பதவியில்
1971–1977
தொகுதிகாட்பாடி
பதவியில்
1977–1984
தொகுதிஇராணிப்பேட்டை
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்
பதவியில்
25 மே 2016 – 3 மே 2021
தலைவர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்பண்ருட்டி இராமச்சந்திரன்
பின்னவர்ஓ. பன்னீர்செல்வம்
பொருளாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில்
28 ஆகத்து 2018 – 3 செப்டம்பர் 2020
முன்னையவர்மு. க. ஸ்டாலின்
பின்னவர்த. ரா. பாலு
முதன்மைச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில்
10 சனவரி 2015 – 27 ஆகத்து 2018
பொதுப்பணித்துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
2006–2009
பதவியில்
1996–2001
பதவியில்
1989–1991
சட்டத்துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
2009–2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1938 (1938-07-01) (அகவை 86)[1]
குடியாத்தம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா தற்போது குடியாத்தம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்து. சாந்தக்குமாரி
பிள்ளைகள்கதிர் ஆனந்த்
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
காட்பாடி, வேலூர், தமிழ்நாடு, இந்தியா
கல்விஇளங்கலைமானி சட்டம், முதுகலைமானி
மூலம்: [1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் மாவட்டத்திலுள்ள, காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

துரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016-ஆம் ஆண்டு மீண்டும் வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்தார்.[2] இவர் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக நீர் வளத்துறை (சிறுபாசனம் உள்ளிட்ட பாசன திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்) அமைச்சராக பதவியேற்றார்.[3]

போட்டியிட்ட தேர்தல்கள் மற்றும் முடிவுகள்

தொகு
தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் எதிர்த்து போட்டியிட்டவர் எதிர்த்து போட்டியிட்ட கட்சி எதிர்த்து போட்டியிட்டவரின்வாக்கு சதவீதம்
1971 காட்பாடி திமுக வெற்றி 57.79 தண்டாயுதபாணி நிறுவன காங்கிரசு 32.25[4]
1977 ராணிப்பேட்டை திமுக வெற்றி 43.53 வஹாப் கே.ஏ. சுயேச்சை 22.68[5]
1980 ராணிப்பேட்டை திமுக வெற்றி 53.70 ரேணு. என் அதிமுக 44.91[6]
1984 காட்பாடி திமுக தோல்வி 39.62 ஜி.ரகுபதி அதிமுக 57.08[7]
1989 காட்பாடி திமுக வெற்றி 43.41 மார்கபந்து. ஆர் அதிமுக 23.47[8]
1991 காட்பாடி திமுக தோல்வி 33.02 கலைசெல்வி அதிமுக 56.43[9]
1996 காட்பாடி திமுக வெற்றி 61.20 பாண்டுரங்கண் அதிமுக 27.93[10]
2001 காட்பாடி திமுக வெற்றி 49.47 நடராஜன் பாமக 43.30[11]
2006 காட்பாடி திமுக வெற்றி 49.55 ப.நாராயணன் அதிமுக 47.59[12]
2011 காட்பாடி திமுக வெற்றி 49.55 அப்பு அதிமுக 47.59[13]
2016 காட்பாடி திமுக வெற்றி 50.90 அப்பு அதிமுக 37.44[14]
2021 காட்பாடி திமுக வெற்றி 45.71 வி. ராமு அதிமுக 45.31[15]

மேற்கோள்கள்

தொகு
  1. "Durai Murugan Biography".
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  3. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1971 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  5. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1977 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  6. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1980 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  7. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1984 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  8. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1989 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  9. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  10. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1996 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  11. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2001 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  12. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2006 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  13. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2011 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU".
  14. "Tamil Nadu General Legislative Election 2016, Election Commission of India".
  15. "Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரைமுருகன்&oldid=3974582" இலிருந்து மீள்விக்கப்பட்டது