தென்னிசீன்

உனுன்செப்டியம் (Ununseptium) என்பது செயற்கையாய் ஆய்வகத்தில் உருவாக்கிய அணுவெண் 117 ஐக் கொண்ட வேதியியல் தனிமம்.[3][4] இதன் தற்காலிக வேதியியல் அடையாளக் குறியெழுத்து Uus. இத் தனிமத்தின் ஆறு அணுக்கள் கொண்ட மிக நுண்ணிய ஒரு துகளை உருசிய-அமெரிக்க கூட்டுழைப்புக் குழு உருசியாவில் டுப்னா (Dubna) என்னும் இடத்தில் உள்ள அணுக்கரு ஆய்வகத்தில் கண்டுபிடித்தது [5]. இவ்வகை அணுக்கள் மிகுவெடை (superheavy) தனிமங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. உனுன்செப்டியம் என்னும் அணுவெண் 117 கொண்ட தனிமத்தை உருவாக்க, 20 நேர்மின்னிகளும், 28 நொதுமிகளும் கொண்ட கால்சியம்-48 என்னும் ஓரிடத்தான்களையும், 97 நேர்மின்னிகளும் 152 நொதுமிகளும் கொண்ட பெர்க்கிலியம்-249 என்னும் தனிமத்தையும் மோதவிட்டனர். இதன் பயனாய் 3 அல்லது 4 நொதுமிகள் பிரிந்து அணுவெண் 117 கொண்ட வெவ்வேறு ஓரிடத்தான்கள் உருவாகின. இத் தனிமம் ஆலசன் குழுவில் உள்ள ஒன்றாக அறிந்தாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை.

உனுன்செப்டியம்
117Uus
At

Uus

(Usu)
லிவர்மோரியம்உனுன்செப்டியம்அனனாக்டியம்
தோற்றம்
அறியப்படவில்லை
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் உனுன்செப்டியம், Uus, 117
உச்சரிப்பு /n.nˈsɛptiəm/ (கேட்க)
oon-oon-SEP-tee-əm
தனிம வகை [[]]உலோகப்போலியாக இருக்கலாம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 177, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[294]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d10 7s2 7p5
(predicted)[1]
2, 8, 18, 32, 32, 18, 7
(predicted)
Electron shells of ununseptium (2, 8, 18, 32, 32, 18, 7 (predicted))
Electron shells of ununseptium (2, 8, 18, 32, 32, 18, 7
(predicted))
வரலாறு
கண்டுபிடிப்பு Joint Institute for Nuclear Research and Lawrence Livermore National Laboratory (2010)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (கணிக்கப்பட்டது)[1][2]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 7.1–7.3 (extrapolated)[2] g·cm−3
உருகுநிலை 573–773 K, 300–500 °C, 572–932 (கணிக்கப்பட்டது)[1] °F
கொதிநிலை 823 K, 550 °C, 1022 (கணிக்கப்பட்டது)[1] °F
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் −1, +1, +3, +5 (predicted)[1]
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 742.9 (கணிக்கப்பட்டது)[1] kJ·mol−1
2வது: 1785.0–1920.1 (extrapolated)[2] kJ·mol−1
அணு ஆரம் 138 (கணிக்கப்பட்டது)[2] பிமீ
பங்கீட்டு ஆரை 156–157 (extrapolated)[2] pm
பிற பண்புகள்
CAS எண் 54101-14-3
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: உனுன்செப்டியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
294Uus செயற்கை 78+370
−36
ms
α 10.81 290Uup
293Uus செயற்கை 14+11
−4
ms
α 11.11, 11.00, 10.91 289Uup
·சா

வரலாறு

தொகு

கண்டுபிடிப்பு

தொகு

சனவரி மாதம் 2010 இல், முதன்முதல் அணு இயைபியலுக்கான ஃவிலெரோவ் ஆய்வகத்தில் (Flerov Laboratory of Nuclear Reactions) அறிவியலாளர்கள் அணுவெண் 117 ஐக் கொண்ட புதிய தனிமத்தை அணுச்சிதைவு விளைவுகளில் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.:[4]

 
 

வெறும் ஆறு அணுக்கள் மட்டுமே செயறையாக உருவாக்கப்பட்டன[6].

Target Projectile CN Attempt result
208Pb 81Br 289117 வார்ப்புரு:Unk
232Th 59Co 291117 வார்ப்புரு:Unk
238U 55Mn 293117 வார்ப்புரு:Unk
237Np 54Cr 291117 வார்ப்புரு:Unk
244Pu 51V 295117 வார்ப்புரு:Unk
243Am 50Ti 293117 வார்ப்புரு:Unk
248Cm 45Sc 293117 வார்ப்புரு:Unk
249Bk 48Ca 297117 Successful reaction
249Cf 41K 290117 வார்ப்புரு:Unk

ஓரிடத்தான் கண்டுபிடிப்பின் வரலாற்று வரிசை

தொகு
Isotope Year discovered Discovery reaction
294Uus 2009 249Bk(48Ca,3n)
293Uus 2009 249Bk(48Ca,4n)

கருத்தியக் கொள்கைப்படியான கணிப்பீடுகள்

தொகு

நொதுமி பிரிகைக்கான குறுக்குவெட்டு வீழ்வுகள்

தொகு

கீழுள்ள அட்டவணை வெவ்வேறு எறிபொருள் (projectile) கூட்டங்களும் அதன் குறுக்குவெட்டு வீழ்வுகளும் (residue) பற்றிய தகவல்களைத் தருகின்றது. DNS = Di-nuclear system; σ = cross section

Target Projectile CN Channel (product) σmax Model Ref
209Bi 82Se 291117 1n (290117) 15 fb DNS [7]
209Bi 79Se 288117 1n (287117) 0.2 pb DNS [7]
232Th 59Co 291117 2n (289117) 0.1 pb DNS [7]
238U 55Mn 293117 2-3n (291,290117) 70 fb DNS [7]
244Pu 51V 295117 3n (292117) 0.6 pb DNS [7]
248Cm 45Sc 293117 4n (289117) 2.9 pb DNS [7]
246Cm 45Sc 291117 4n (287117) 1 pb DNS [7]
249Bk 48Ca 297117 3n (294117) 2.1 pb ; 3 pb DNS [7][8]
247Bk 48Ca 295117 3n (292117) 0.8, 0.9 pb DNS [7][8]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. pp. 1724, 1728. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.{{cite book}}: CS1 maint: ref duplicates default (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Bonchev, Danail; Kamenska, Verginia (1981). "Predicting the Properties of the 113–120 Transactinide Elements". J. Phys. Chem. 85: 1177–1186. 
  3. J. Chatt (1979). "Recommendations for the Naming of Elements of Atomic Numbers Greater than 100". Pure Appl. Chem. 51: 381–384. doi:10.1351/pac197951020381. 
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-04-14. பார்க்கப்பட்ட நாள் 2010-04-07.
  5. யூரி ஒகனேசியன் (Yuri Oganessian) தலைமையில் நிகழ்ந்த இக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆய்வுச்சுருக்கத்தை பிசிக்கல் ரிவ்யூ லெட்டர்சு (Physical Review Letters) என்னும் ஆய்விதல் வெளியிடவுள்ளது (ஏப்ரல் 6, 2009)[1] பரணிடப்பட்டது 2010-04-09 at the வந்தவழி இயந்திரம்
  6. Glanz, James (April 6, 2010). "Scientists Discover Heavy New Element". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2010/04/07/science/07element.html?ref=science. பார்த்த நாள்: 2010-04-07. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 7.8 Zhao-Qing, Feng (2007). "Possible Way to Synthesize Superheavy Element Z = 117". Chinese Physics Letters 24: 2551. doi:10.1088/0256-307X/24/9/024. http://arxiv.org/pdf/0708.0159. 
  8. 8.0 8.1 Feng, Z (2009). "Production of heavy and superheavy nuclei in massive fusion reactions". Nuclear Physics A 816: 33. doi:10.1016/j.nuclphysa.2008.11.003. http://arxiv.org/pdf/0803.1117. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னிசீன்&oldid=3955560" இலிருந்து மீள்விக்கப்பட்டது