தேசிய நெடுஞ்சாலை 81 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 81, (National Highway 81 (India)) பொதுவாக தே. நெ. 81 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தென்னிந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் நகரத்தைக் கடலூர் மாவட்டம் சிதம்பரத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை முன்னர் தேசிய நெடுஞ்சாலைகள் 67 மற்றும் 227-ன் (பழைய எண்கள்) ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் [2] மார்ச் 2010 அன்று அரசு அறிவிப்பின் மூலம் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண்களை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை 81ஆக மாற்றப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலை 321.4 km (199.7 mi) நீளமானது. இந்த தேசிய நெடுஞ்சாலை முழுக்க முழுக்க இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் காங்கேயம்,கரூர் வழியாக செல்கிறது.[3]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 81
81

தேசிய நெடுஞ்சாலை 81
Map
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:321.4 km (199.7 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கோயம்புத்தூர் காங்கேயம்
 திருச்சிராப்பள்ளி
கிழக்கு முடிவு:சிதம்பரம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 321.4 km (199.7 mi)
முதன்மை
இலக்குகள்:
காங்கேயம்,கரூர், திருச்சிராப்பள்ளி, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 544 தே.நெ. 32

வழித்தடம் தொகு

நெடுஞ்சாலை எண் ஆரம்பம் இலக்கு வழியாக நீளம் (கிமீ)
81 கோயம்புத்தூர் சிதம்பரம் பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில், கரூர், குளித்தலை, திருச்சிராப்பள்ளி, லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, கீழப்பழூர், ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், காட்டுமன்னார்கோயில் 321.4

சந்திப்புகள் தொகு

  தே.நெ. 544 கோயம்புத்தூர் அருகில் முனையம்[1]
  தே.நெ. 381 அவிநாசிபாளையம் அருகில்
  தே.நெ. 381A வெள்ளக்கோயில் அருகில்
  தே.நெ. 44 கரூர் அருகில்
  தே.நெ. 67 குளித்தலை அருகில்
  தே.நெ. 38 திருச்சிராப்பள்ளி அருகில்
  தே.நெ. 136 கீழப்பழூர் அருகில்
  தே.நெ. 36 கங்கைகொண்டசோழபுரம் அருகில்
  தே.நெ. 32 சிதம்பரம் அருகில் முனையம்[1]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு