நளினிகாந்த்
நளினிகாந்த் (Nalinikanth) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தற்காக அறியப்படுகிறார். 1980 ஆம் ஆண்டு காதல் காதல் காதல் திரைப்படத்தில் அறிமுகமான இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நளினிகாந்த் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தார். இவரது தோற்றம் ரஜினிகாந்தை ஒத்திருக்கிறது. இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி, மங்கம்மா சபதம், ருத்ரா, புதுபட்டி பொன்னுதாயி, எங்க முதலாளி, ராஜா எங்க ராஜா, யாமிருக்க பயமே போன்றவை ஆகும்.[1]
நளினிகாந்த் | |
---|---|
பிறப்பு | சென்னை |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1979-தற்போது வரை |
தொலைக்காட்சி | மர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்) |
வாழ்க்கைத் துணை | சனந்தா |
பிள்ளைகள் | 2 |
திரைப்பட வாழ்க்கை
தொகுஇயக்குனர் தசரி நாராயண ராவால் தெலுங்கு திரைப்பத்தில் நளினிகாந்தை அறிமுகப்படுத்தினார். இவரது முதல் படம் ரங்கூன் ரவுடி 1979 இல் வெளியிடப்பட்டது. அழைத்தால் வருவான், இதயம் பேசுகிறது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் இவர் 35 படங்கள் நடித்துள்ளார். பாக்யராஜ் படங்களில் இவருக்கு சில குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் வழங்கப்பட்டன. சிவாஜியின் சத்யம் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். இது 100 நாட்கள் ஓடியது. என். டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி போன்ற தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் எதிர்மறை பாத்திரங்களில் நடித்துள்ளார்.[2][3]
தொலைக்காட்சிகளில்
தொகுதிரைப்படங்களில் நடிப்பது இவரது வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர உதவாததால், தொலைக் காட்சித் தொடர்களைத் தயாரிப்பதாக தனது பாதையை மாற்றிக்கொண்டார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜெமினி தொலைக்காட்சி, மா தொலைக்காட்சி பல தமிழ் மற்றும் தெலுங்கு தொடர்களைத் தயாரித்தார்.[4]
- காற்றுக்கென்ன வேலி ( விஜய் தொலைக்காட்சி ), வரதராஜனாக (வெண்ணிலாவின் தந்தை)
- மர்மதேசம் (ரகசியம்), அண்ணாமலையாக
திரைப்படவியல்
தொகுஇது ஒரு பகுதி திரைப்படவியலாகும் நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1970 கள்
தொகுஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1979 | ரங்கூன் ரவுடி | தெலுங்கு | நளினிகாந்த் | தெலுங்கில் அறிமுகம் |
1979 | சிருங்கரா ராமுடு | தெலுங்கு | பிரதாப் |
1980 கள்
தொகுஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1980 | காதல் காதல் காதல் | தமிழ் | தமிழில் அறிமுகம் | |
1980 | அழைத்தால் வருவேன் | தமிழ் | ||
1980 | தேவி தரிசனம் | தமிழ் | ||
1981 | சத்ய சுந்தரம் | தமிழ் | ||
1981 | எங்கம்மா மகாராணி | தமிழ் | ||
1982 | இதயம் பேசுகிறது | தமிழ் | ||
1982 | பாலிதானம் | தெலுங்கு | ||
1983 | முந்தானை முடிச்சு | தமிழ் | ||
1984 | நிரபராதி | தமிழ் | ||
1984 | தாண்டவா கிருஷ்ணுடு | தெலுங்கு | வர்மா | |
1984 | வனிதா போலீஸ் | மலையாளம் | ||
1984 | தேன் சிட்டுகள் | தமிழ் | ||
1985 | சிவப்பு நிலா | தமிழ் | ||
1985 | விஸ்வநாதன் வேலை வேணும் | தமிழ் | ||
1985 | தாம்பத்யம் | தெலுங்கு | ||
1985 | மங்கம்மா சபாதம் | தமிழ் | ஜெய்பால் | |
1985 | மனக்கலே தாத்தா | மலையாளம் | ||
1986 | அம்மன் கோவில் கிழக்காலே | தமிழ் | ||
1989 | திராவிடன் | தமிழ் |
1990 கள்
தொகுஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | 13-ம் நம்பர் வீடு | தமிழ் | ||
1990 | ராஜா விக்ரமார்க்கா | தெலுங்கு | ||
1991 | ருத்ரா | தமிழ் | ||
1992 | ராசுக்குட்டி | தமிழ் | பெரியபண்ணையின் தம்பி | |
1992 | அபிராமி | தமிழ் | ||
1992 | நட்சத்திர நாயகன் | தமிழ் | ||
1993 | வால்டர் வெற்றிவேல் | தமிழ் | ||
1993 | எங்க முதலாளி ராஜா | தமிழ் | ||
1994 | புதுப்பட்டி பொன்னுத்தாயி | தமிழ் | ||
1994 | தாமரை | தமிழ் | ||
1994 | புதிய மன்னர்கள் | தமிழ் | சிட்டி பாபு | |
1995 | ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி | தமிழ் | ||
1995 | தமிச்சி | தமிழ் | ||
1995 | ராஜா எங்க ராஜா | தமிழ் | ||
1997 | தம்பிதுரை | தமிழ் | ||
1998 | தேசிய கீதம் | தமிழ் |
2000 கள்
தொகுஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2008 | காதலில் விழுந்தேன் | தமிழ் | டாக்டர் |
2010 கள்
தொகுஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2014 | யாமிருக்க பயமே | தமிழ் | பழைய தமிழ் | |
2014 | கத்தி | தமிழ் | ||
2014 | நம பூதத்மா | கன்னடம் | ||
2017 | அண்ணாதுரை | தமிழ் | ||
2018 | குலேபாகவலி | தமிழ் | சம்பத்தின் தந்தை |
2020 கள்
தொகுஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2020 | சியான்கள் | தமிழ் |
குறிப்புகள்
தொகு- ↑ "Rajnikanth's doppelganger actor Nalini Kanth film works". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
- ↑ "ரஜினிக்கு என்மீது வருத்தமா?". vikatan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
- ↑ Dinamalar (2014-05-27). "மீண்டும் நளினிகாந்த்...! | Nalinikanth backs to tamil cinema". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
- ↑ "Nalinikanth". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2013-08-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.