பதவி படுத்தும் பாடு

சி.ராமலிங்கம் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பதவி படுத்தும் பாடு 2005 ஆம் ஆண்டு ரஞ்சித் மற்றும் அனாமிகா நடிப்பில், சி. ராமலிங்கம் இயக்கத்தில், ஜி. மூர்த்தி தயாரிப்பில், காந்திதாசன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2].

பதவி படுத்தும் பாடு
இயக்கம்சி. இராமலிங்கம்
தயாரிப்புஜி. மூர்த்தி
கதைதுக்ளக் சத்யா (வசனம்)
திரைக்கதைசி. ராமலிங்கம்
இசைகாந்திதாசன்
நடிப்பு
ஒளிப்பதிவுபி.எஸ். செல்வம்
படத்தொகுப்புமோகன்
சுப்பு
கலையகம்ஜி.எம். மூவிஸ்
வெளியீடுசூன் 3, 2005 (2005-06-03)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

காட்டில் வசிக்கும் மலையப்பன் (ரஞ்சித்) முன்னாள் முதலமைச்சர் தமிழரசனைக் (ரவிச்சந்திரன்) கடத்துகிறான். அவரை விடுவிக்க அரசிடம் அதிக பணம் கேட்கிறான். தற்போதைய முதலமைச்சரான வீரபத்ரன் (பிரமிட் நடராஜன்) தன் அரசியல் எதிரியும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவருமான தமிழரசன் கடத்தப்பட்டதற்கு உள்ளூர மகிழ்கிறார். எனவே தமிழரசனை மீட்க பணம் மலையப்பனுக்குப் பணம் தர முடியாது என்று அறிவிக்கிறார். தான் தவறான ஆளைக் கடத்தியிருப்பதைப் புரிந்துகொள்கிறான் மலையப்பன்.

மலையப்பனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளும் தமிழரசன் தன் அரசியல் எதிரியான வீரபத்ரனை பழிவாங்குவற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார். மலையப்பனிடம் வீரபத்ரனின் மகளைக் கடத்தினால் வீரபத்ரனிடமிருந்து அதிக பணம் பெறலாம் என்ற யோசனையைச் சொல்கிறார். அதன்படி மலையப்பனும் வீரபத்ரனின் மகளைக் கடத்துகிறான். தன் மகளைக் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகும் வீரபத்ரன், பத்திரிகை நிருபர் முத்துவேலை (வாசு விக்ரம்) மலையப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்த காட்டுக்குள் அனுப்புகிறார். முத்துவேலுடன் வீரபத்ரன் மகளை விடுவிக்கும் மலையப்பன், தமிழரசனைக் கொன்றதைக் காணொளியாகப் பதிவுசெய்து கொடுத்தனுப்புகிறான்.

முன்னாள் முதல்வர் தமிழரசன் கொல்லப்பட்டதாலும், வீரபத்ரனின் பாரபட்சமான நடவடிக்கையாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகக் கருதும் ஆளுநர் ஆட்சியைக் கலைத்து உத்தரவிடுகிறார். இதனால் வீரபத்ரனின் முதலமைச்சர் பதவி பறிபோகிறது. மலையப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அரசு வீடு வழங்கப்படுகிறது. மலையப்பன் தமிழரசனைக் கொன்றதாக வெளியிட்ட காணொளி போலியானது. தமிழரசன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற உண்மை தெரியவருகிறது. மக்கள் அனைவரும் காட்டில் வாழும் மலையப்பனைப் பற்றி பெருமையாகப் பேசுகின்றனர்.

தன்னைப் பற்றி மக்கள் பெருமையாகப் பேசுவதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மலையப்பன் ஒரு அரசியல் கட்சியைத் துவங்குகிறான். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் மலையப்பனின் கட்சியே வெற்றி பெறும் என்று கூறுவதைக் கண்டு, வீரபத்ரன் மற்றும் தமிழரசனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மலையப்பனின் கட்சியில் இணைகின்றனர். மலையப்பன் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்று நல்லாட்சி புரிகிறார்.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் காந்திதாசன். பாடலாசிரியர்கள் பா. விஜய் மற்றும் கபிலன்.

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 இந்த காடு திப்பு 2:56
2 அந்தரி சுந்தரி மாலதி லட்சுமண், மாணிக்க விநாயகம் 4:17
3 அரசியலே கங்கை அமரன், மோகன் 2:12
4 ரெண்டு பிரசன்னா, சைந்தவி 1:10

மேற்கோள்கள்

தொகு
  1. "பதவி படுத்தும் பாடு". Archived from the original on 2017-12-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  2. "பதவி படுத்தும் பாடு". Archived from the original on 2010-06-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதவி_படுத்தும்_பாடு&oldid=3879095" இலிருந்து மீள்விக்கப்பட்டது