பத்தும் நிசங்க
பத்தும் நிசங்க (Pathum Nissanka, சிங்களம்: පැතුම් නිස්සංක , பிறப்பு: 18 மே 1998) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் 2021 மார்ச் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பத்தும் நிசங்க சில்வா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 18 மே 1998 காலி, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 155) | 21 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 194) | 10 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 86) | 3 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 7 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017–2018 | பதுரெலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019–இன்று | நொண்டசுகிரிப்ட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 24 மார்ச் 2021 |
உள்நாட்டுப் போட்டிகள்
தொகுபத்தும் தனது முதலாவது பட்டியல் அ போட்டியில் அம்பாந்தோட்டை மாவட்ட அணியில் 2017 மார்ச் 17 இல் விளையாடினார்.[2] முதலாவது இருபது20 போட்டியை பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்காக 2018 இல் விளையாடினார்.[3]
2018 இல், இவர் 2017-18 சூப்பர் 4 மாகாணச் சுற்றிலும்,[4][5] 2018 மாகாண ஒருநாள் தொடரிலும் கண்டி அணியில் விளையாடினார்.[6] தொடர்ந்து, 2019 மாகாண ஒரு-நாள் சுற்றிலும் கண்டி அணிக்காக விளையாடினார்.[7]
பன்னாட்டுப் போட்டிகள்
தொகு2019 சனவரியில், பத்தும் இலங்கை-ஏ அணியில் முதல்-தரப் போட்டிகளில் அயர்லாந்து-ஏ அணியுடன் விளையாட சேர்க்கப்பட்டார். இரண்டு ஆட்டங்களில் இவர் 258 ஓட்டங்களை இலங்கை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.[8] 2019 பெப்ரவரியில் இவர் தனது 1,000-வது ம்,உதல்-தர ஓட்டங்களைப் பெற்றார்.[9][10] 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2019 நவம்பரில் விளையாடினார்.[11][12]
2021 பெப்ரவரியில், இலங்கையின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் அணியில் சேர்க்கப்பட்டார்.[13] தனது முதலாவது பன்னாட்டு இருபது20 (ப20இ) போட்டியில் 2021 மார்ச் 3 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.[14] பின்னர், இலங்கையின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.[15] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை 2021 மார்ச் 10 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.[16] தனது முதலாவது தேர்வுப் போட்டியை 2021 மார்ச் 21 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி,[17] ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 103 ஓட்டங்களை எடுத்து, முதலாவது தேர்வுப் போட்டியில் சதம் எடுத்த நான்காவது இலங்கை வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pathum Nissanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
- ↑ "Districts One Day Tournament, Southern Group: Matara District v Hambantota District at Colombo (Bloomfield), Mar 17, 2017". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
- ↑ "Group D, SLC Twenty-20 Tournament at Katunayake, Feb 24 2018". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1137445.html.
- ↑ "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament.
- ↑ "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/.
- ↑ "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". The Papare. http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/.
- ↑ "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament". The Papare. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
- ↑ "Ireland A tour of Sri Lanka : Most runs in first-class matches". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pathum Nissanka reaches magical 1000 run mark". The Papare. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
- ↑ "Premier League Tournament Tier A, 2018/19 - Nondescripts Cricket Club: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
- ↑ "SLC Men's and Women's squads for SAG 2019 announced". The Papare. பார்க்கப்பட்ட நாள் 30 November 2019.
- ↑ "South Asian Games: Bangladesh secure gold in men's cricket". BD News24. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
- ↑ "Shanaka named as Sri Lankan T20I captain for West Indies tour". BD Crictime. பார்க்கப்பட்ட நாள் 21 February 2021.
- ↑ "1st T20I (N), Coolidge, Mar 3 2021, Sri Lanka tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
- ↑ "Nissanka earns maiden Test call-up, fit Karunaratne back to lead Sri Lanka for West Indies Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
- ↑ "1st ODI, North Sound, Mar 10 2021, Sri Lanka tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
- ↑ "1st Test, North Sound, Mar 21 - 25 2021, Sri Lanka tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.
- ↑ "Pathum Nissanka slams a Test Century on Debut". Knews. Archived from the original on 21 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 24 March 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)