பத்து சாப்பி மக்களவைத் தொகுதி
பத்து சாப்பி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu Sapi; ஆங்கிலம்: Batu Sapi Federal Constituency; சீனம்: 三脚石国会议席) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு; சண்டக்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P185) ஆகும்.[5]
பத்து சாப்பி (P185) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Batu Sapi (P185) Federal Constituency in Sabah | |
பத்து சாப்பி மக்களவைத் தொகுதி (P185 Batu Sapi) | |
மாவட்டம் | சண்டக்கான் மாவட்டம் சண்டக்கான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 43,916 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பத்து சாப்பி மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சண்டக்கான்; செக்கோங் காராமுந்திங் |
பரப்பளவு | 454 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | சபா மக்கள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | கைருல் பிர்டவுஸ் அக்பர் (Khairul Firdaus Akbar) |
மக்கள் தொகை | 119,698 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பத்து சாப்பி மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து பத்து சாப்பி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சண்டக்கான் மாவட்டம்
தொகுசண்டக்கான் மாவட்டம் என்பது சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் சண்டக்கான் நகரம். மலேசியா-பிலிப்பீன்சு எல்லை (Malaysia–Philippines Border), இந்த மாவட்டத்தின் கிழக்கே 28 கி.மீ. தொலைவில்; மிக அருகில் உள்ளது.
சபா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையில் சுலு கடல் உள்ளது. அதை எதிர்நோக்கியவாறு அமைந்துள்ள இந்த மாவட்டம், இதர மாவட்டங்களான பெலுரான் மாவட்டம், கினபாத்தாங்கான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.[7]
சண்டக்கான் நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிற்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய நகரமாக விளங்குகிறது. வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோவின் (British North Borneo) தலைநகராகவும் இருந்தது. [8]
பத்து சாப்பி மக்களவைத் தொகுதி
தொகுபத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பத்து சாப்பி தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P185 | 2004-2008 | சோங் கெட் வா (Chong Ket Wah) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய சபா கட்சி) (PBS) |
12-ஆவது மக்களவை | 2008-2010 | |||
2010-2013 | லின்டா சென் (Linda Tsen) | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018-2020 | லியூ உய் கியோங் (Liew Vui Keong) |
வாரிசான் | |
2020-2022 | காலி[N 1] | |||
15-ஆவது மக்களவை | 2022 | கைருல் பிர்டவுஸ் அக்பர் கான் (Khairul Firdaus Akbar Khan) |
சபா மக்கள் கூட்டணி (GRS) (பெர்சத்து) | |
2022–தற்போது வரையில் | சபா மக்கள் கூட்டணி (GRS) (சுயேச்சை) |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
கைருல் பிர்டவுஸ் அக்பர் கான் (Khairul Firdaus Akbar Khan) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 12,152 | 44.95 | 44.95 | |
லியாவ் புய் புய் (Liau Fui Fui) | பாக்காத்தான் (PH) | 7,331 | 27.11 | 27.11 | |
அலியாசு சானி (Alias Sani) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 7,218 | 26.70 | 29.08 ▼ | |
போனி யூசோப் அப்துல்லா (Boni Yusuf Abdullah) | தாயக இயக்கம் (GTA) | 176 | 0.65 | 0.65 | |
ஒசுமான் அகமட் (Othman Ahmad) | சுயேச்சை (Independent) | 160 | 0.59 | 0.59 | |
மொத்தம் | 27,037 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 27,037 | 97.93 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 571 | 2.07 | |||
மொத்த வாக்குகள் | 27,608 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 43,916 | 61.57 | 12.20 ▼ | ||
Majority | 4,821 | 17.84 | 2.02 ▼ | ||
சபா மக்கள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
குறிப்புகள்
தொகு- ↑ பதவியில் இருந்த லியூ உய் கியோங் 2 அக்டோபர் 2020-இல் காலமானார். இதன் தொடர்ச்சியாக மலேசிய அவசரகால அறிவிப்பு 2021 அறிவிக்கப்பட்டது. அதனால் மலேசியப் பொதுத் தேர்தல், 2022 வரை இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகஸ்ட் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Sandakan to Kota Kinabalu Distance". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
- ↑ "Sandakan, city in Malaysia - Sandakan remains Sabah's second most important port, after Kota Kinabalu (KK)". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
- ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.