வாருங்கள், Maheswari!

வாருங்கள் Maheswari, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 07:32, 17 பெப்ரவரி 2010 (UTC)

வேண்டுகோள்தொகு

தயவு செய்து நேரடியாக விக்கியில் இருந்து மற்ற பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முன்வாருங்கள். ஏற்கனவே விக்கியில் உள்ள சில கட்டுரைகளை நீங்கள் தமிழாக்குவதால் உங்கள் உழைப்பும் வீணாகக் கூடும். பார்க்க: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம். நன்றி.--ரவி 07:32, 17 பெப்ரவரி 2010 (UTC)

வருக!தொகு

உங்கள் பயனர் பக்கத்தைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இங்கு பங்குகொள்வது கூகுள் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கும் என்னும் நினைப்பில் மிகுந்த ஊக்கம் தருகின்றது. உங்களை விக்கிப்பீடியாவுக்கு வருக என வரவேற்கிறேன். --செல்வா 15:05, 31 மார்ச் 2010 (UTC)

உங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)தொகு

வணக்கம் Maheswari. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவது குறித்து முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பங்களிப்பு குறித்து சில கருத்துகள், வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகிறோம்:

தமிழ் விக்கிப்பீடியா என்பது பள்ளி மாணவர்களும் கூட அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இங்குள்ள கட்டுரைகள் சீரான, நல்ல தமிழ் நடையில் இருப்பதும் பக்கங்கள் பிழையின்றி முழுமையாக இருப்பதும் முக்கியம் ஆகும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால் அனைத்துப் பங்களிப்பாளர்களும் கூடி உரையாடிச் செயல்பட்டால் தான் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த இயலும்.

  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் சில கட்டுரைகளில் ஒரு வகையான வறண்ட, எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு உள்ளதாக உணரப்படுகிறது. ஒருவேளை, இது கருவியின் பிழையாகவோ கருவி உங்களின் செயல்திறனை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், தயவு செய்து உங்கள் கருத்தை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கக் குழுவுக்குத் தெரிவியுங்கள். அல்லது, இக்கருவியை விடுத்து நேரடியாக கைப்பட மொழிபெயர்க்கலாம்.
  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் அளிக்கப்பட்ட கட்டுரைகளில் தேவைப்படும் மேம்பாடுகளைக் காணுங்கள். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளில் இக்குறைகள் இருந்தால், தயவு செய்து திருத்தத் தொடங்குங்கள். இவை பொதுவான குறைகள் என்பதால் இவற்றைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. நீங்கள் விக்கிப்பீடியாவில் புகுபதிந்த பிறகு விக்கிப்பீடியாவின் வல மேற்புறத்தில் "என் பங்களிப்புகள்" என்று ஒரு இணைப்பு இருக்கும். இந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் பழைய கட்டுரைகளை இனங்கண்டு திருத்தத் தொடங்கலாம்.
  • தங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் நிகழும் உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியர்களிடையே கூடிய புரிந்துணர்வு ஏற்படவும், கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியம்.

இது கூகுள் கருவி மூலம் பங்களிக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் விடுக்கப்படும் பொதுவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் உள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனவே கவனத்தில் எடுத்திருக்கலாம். சில விசயங்கள் பொருந்தாமல் இருக்கலாம். எனினும், இப்பொதுவான வேண்டுகோளை ஏற்று, தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வேண்டுகோள் குறித்த அடுத்தடுத்த நினைவூட்டல்கள் மே 3, 2010 அன்றும் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

--ரவி 17:14, 26 ஏப்ரல் 2010 (UTC)


தங்கள் செய்திக்கு நன்றி, ஏற்கனவே நாங்கள் பழைய கட்டுரைகளைத் திருத்தும் பணியைத் தொடங்கி செயல்படித்தி வருகிறோம். கூடியவிரைவில் மாற்றங்களைக் காணலாம்

நல்லது மகேஸ்வரி, சிறப்பான, பயனுள்ள கட்டுரைகளாகத் தந்து தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் உயரப் பங்களியுங்கள். நன்றி. மயூரநாதன் 20:09, 26 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி --Maheswari 19:01, 26 ஏப்ரல் 2010 (UTC)

நீங்கள் கட்டுரைகளைத் திருத்த எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. நானும் என்னால் இயன்ற அளவு திருத்தம் செய்து உதவி செய்கின்றேன். கூகுள் முயற்சி மிக அருமையான ஒரு முயற்சி. அது எல்லா வகையிலும் சிறப்பாக அமைய வேண்டும், தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேலும் மேம்படுத்துமாறு அமைய வேண்டும் என்பதே விருப்பம். மொழி பெயர்ப்பு தரமானதாக இருக்கவேண்டும் என்பது கூகுளின் விருப்பமாகவும் இருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு. உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. ஏதும் உதவிகள் வேண்டின் கேளுங்கள். --செல்வா 20:20, 26 ஏப்ரல் 2010 (UTC)

உதவ முன்வருவதற்கு நன்றி செல்வா. கண்டிப்பாக உங்கள் உதவி எங்களுக்கு அவசியம் தேவை.
நன்றி --Maheswari 05:07, 27 ஏப்ரல் 2010 (UTC)


ஒவ்வொரு வாரமும் மாற்றங்கள் செய்யப்பட்ட கட்டுரைகளின் பட்டியல் அனுப்பிவைக்கப்படும். நான் எனது பேச்சுப் பக்கத்திலேயே அதை எழுதலாம் என நினைக்கிறேன். இந்த செயல் விக்கியில் தமிழ் கட்டுரைகளின் தரத்தை உயர்த்த கூகுள் மற்றும் பிற மொழிபெயர்ப்பாளர்கள் விக்கி பயனராக இருந்து எடுக்கும் எல்லா முயற்சிகளையும் வெளிப்படுத்த உதவும். நீங்களும் கட்டுரைகள் பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவிக்க வசதியாக இருக்கும். இது பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.
நன்றி --Maheswari 05:10, 27 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் மகேசுவரி. அனைத்து கூகுள் மொழிபெயர்ப்பாளர்களும் நேரடியாகவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்கு கொண்டு மாற்றங்களைச் செய்வதும் உரையாடல்களில் கலந்து கொள்வதும் விரும்பத்தக்கதாக இருக்கும். இதனால் மாற்றங்களை அன்றாடம் கவனிக்க இயல்வதுடன் பயனர்களிடையேயான புரிந்துணர்வைக் கூட்டவும் உதவும். நன்றி. --ரவி 06:08, 27 ஏப்ரல் 2010 (UTC)

வார்ப்புரு உருவாக்கங்கள்தொகு

மகேசுவரி, இன்றைய உங்கள் தொகுப்புகளில் பல புதிய வார்ப்புருக்கள் உருவாக்கத்தைக் கண்டேன். இவை நீங்கள் கைப்பட உருவாக்குபவையா அல்லது தானியக்கமாகச் செய்யப்படுகிறதா? பொதுவாக, கட்டுரையின் கீழ் உலாவலுக்காக இடப்படும் வார்ப்புருகள் தொடர்புடைய கட்டுரைகள் பெரும்பாலானவை உள்ள நிலையிலேயே உதவும். அல்லது, ஆர்வமுடைய ஒருவர் அக்கட்டுரைகளை விரைவில் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கும் நிலையில் உதவும். இல்லாவிட்டால், இவையும் பயனில்லா சிகப்பு இணைப்புகள் போலவே அமைய வாய்ப்புண்டு. தானியக்கமாகச் செய்யப்படும் நிலை இது பற்றி விளக்கி முறையான ஒப்புதல் பெறுவது நன்று--ரவி 16:44, 7 ஜூலை 2010 (UTC)

நீங்கள் உருவாக்கி வரும் வார்ப்புருக்கள் ஏற்கெனவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உதா. வார்ப்புரு:நாட்டுத் தகவல் Malaysia வார்ப்புரு:நாட்டுத் தகவல் மலேசியா. மாஹிர் 14:03, 8 ஜூலை 2010 (UTC)

மகிழ்ச்சிதொகு

நீங்கள் கூகுள் கட்டுரைகளில் தனிப்பட்ட ஈடுபாட்டோடு செய்து வரும் மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. நன்றி--ரவி 18:46, 11 ஜூலை 2010 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாவில் பல மில்லியன் கணக்கில் வார்ப்புருக்கள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு தருவிக்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா?--Kanags \உரையாடுக 12:14, 12 ஜூலை 2010 (UTC)

சிறீதரன், கூகுள் கட்டுரைகளில் விடுபட்டுள்ள வார்ப்புருக்களை மட்டும் இங்கு உருவாக்குவதாக மகேசுவரி தெரிவித்துள்ளார். அவற்றிலும், கட்டுரைகளின் அடியில் உள்ள வழிசெலுத்தல் வார்ப்புருக்கள் தேவையில்லை என்பதைச் சுட்டி உள்ளேன். --ரவி 12:19, 12 ஜூலை 2010 (UTC)

இவற்றைச் சிறிய மாற்றங்களாகக் குறித்துவிட்டால், அண்மைய மாற்றங்களில் இவற்றை விலக்கிப் பார்க்க முடியும். தானியங்கிக் கணக்கின் வழியாகக் கூட இந்தத் தொகுப்புகளை மேற்கொள்ளலாமெனக் கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:37, 13 ஜூலை 2010 (UTC)
ரவி, உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சிவப்பு இணைப்புகள் வார்ப்புரு இல்லாத பிழையை எடுத்துக்காட்டுவதாலும் சில இடங்களில் முழுமையற்றத் தகவலை வழங்குவதாலும் அதைத் திருத்த முயற்சிக்கிறோம். இது மற்ற பயனருக்கு வார்ப்புருவை தமிழில் மாற்றியமைக்க உதவும் என்பது எனது கருத்து. --Maheswari 10:52, 13 ஜூலை 2010 (UTC)
நீங்கள் செய்வது அநாவசியமான வேலை. இரட்டிப்பு வேலை. நாட்டுத் தகவல் combodia என்று வார்ப்புரு அதனை வழிமாற்றி நாட்டுத் தகவல் கம்போடியா?. நீங்கள் செய்யும் வேலையை, ஆங்கில விக்கியிலிருந்து xml கோப்புகளாக தரவிறக்கம் செய்து தமிழ் விக்கி நிர்வாகியால் ஓரு சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கில் பதிவேற்றம் செய்திட முடியும். தவியின் தரத்தை குறைக்கும் செயல்களில் கூகிள் பங்களிப்பு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பது கவலைக்குறியது. மாஹிர் 13:56, 13 ஜூலை 2010 (UTC)
மாஹிர் இதனால் பிரச்சனை என்றால் நான் வார்ப்புரு உருவாக்கத்தை நிறுத்திவிடுவதில் பிரச்சனையில்லை. இதனால் விக்கிப்பீடியாவின் தரம் குறைகிறது என்பது எனக்கு புரியவில்லை. உருவாக்கியதை நீக்குவதனால் இந்தப் பிரச்சனைத் தீருமா? அல்லது வேறு முறையில் எவ்வாறு இதை நிவர்த்தி செய்வது என்பதைக் கூறினால் உதவியாக இருக்கும். இதை என் சொந்த ஈடுபாட்டினால் தொடங்கியது கூகிள் வார்ப்புருவை நிவர்த்திசெய்வதாக இதுவரை கூறியதில்லை. --Maheswari 07:59, 16 ஜூலை 2010 (UTC)
மகேசுவரி, பகுப்பு:நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள் ஒரு முறை பாருங்கள், எத்தனை வார்ப்புருக்கள் இரட்டிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது புரியும். வார்ப்புருக்கள் உருவாக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இல்லாத வார்ப்புருக்களை உருவாக்கலாம். புதிதாக உருவாக்கும் போது ஆங்கில விக்கியில் புதிய த. விக்கியின் தொடுப்பை அங்கு கொடுங்கள் (interwiki links). இது வேறு ஒரு பயனர் மறுபடியும் உருவாக்குவதை தவிர்க்கும். -- மாஹிர் 05:20, 23 ஜூலை 2010 (UTC)

மாகிர், மகேசுவரி தனது சொந்த ஈடுபாட்டின் காரணமாக விக்கிக்கு உதவும் எண்ணத்துடனே இவற்றைச் செய்து வருகிறார். எனவே, இதில் தவறு இருந்தாலோ இதை இன்னும் சிறப்பாகவோ இலகுவாகவோ செய்யலாமோ என்றால் தயவுசெய்து கனிவுடன் சுட்டிக் காட்டுங்கள். xml மூலமாக செய்யலாம் என்பது எனக்குச் செய்தி. மகேசுவரி, இந்த விசயத்தில் ஒரு ஒத்த கருத்து வரும் வரை இப்பணியை நீங்கள் நிறுத்தி வைத்தால் உதவும். அதே வேளை, மற்ற வகைகளில் உங்கள் பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறேன். நன்றி--ரவி 07:37, 22 ஜூலை 2010 (UTC)

ரவி, சிறப்பு:Export, சிறப்பு:Import பக்கங்களைப் பாருங்கள். இப்படித்தான் நான் சில தமிழ்நாடு மாவட்ட வார்ப்புருக்களை தரவிறக்கம் செய்து எனது கணினியில் சேமித்து மொழிமாற்றம் செய்து தவியில் உருவாக்கினேன். இதுபோன்று கூகுள் ஏற்பாடு செய்யலாம். வார்ப்புருக்களை மொழிமாற்றம் செய்வது இது தான் சிறந்த வழி. find & replace மூலம் வேலை குறைவு. -- மாஹிர் 05:17, 23 ஜூலை 2010 (UTC)
நன்றி, மாஹிர். என்னால் இந்தப் பக்கத்தைப் பார்க்க இயலவில்லை பின்வரும் செய்தியைப் பெறுகிறேன்.

அனுமதி தவறு கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. நீங்கள் கோரிய செயற்பாடு நிர்வாகிகள், Importers, Transwiki importers குழுக்களுள் ஒன்றின் பயனர்களுக்கு மட்டுமே. முதற் பக்கம் பக்கத்துக்குத் திரும்பு.

இதற்கு அனுமதி பெறுவது எவ்வாறு என்று தெரிவித்தால் உதவிகரமாக இருக்கும்.--Maheswari 11:24, 23 ஜூலை 2010 (UTC)

மகேசுவரி, நீங்கள் ஏற்றுமதி பக்கத்தை மட்டுமே உபயோகிக்க முடியும். import பக்கத்தை நிர்வாகி அல்லாதவர் செய்ய இயலாது. ஏற்றுமதி செய்யப்பட்டு கிடைக்கப்பெறும் கோப்பில் ஏற்கெனவே தவியில் இருக்கும் வார்ப்புருக்கள் இல்லாது பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் அவை replace ஆகிவிடும். அதனால் நூற்றுக்கணக்கான பக்கங்களில் பயன்படுத்தப்படும், ஏற்கெனவே மொழியாக்கம் செய்யப்பட்ட வார்ப்புருக்களும் மாறிவிடலாம்.

அதனால், என்னுடைய அறிவுரை, நீங்கள் Export பொத்தானை சொடுக்குவதற்கு முன் பெட்டியில் உள்ள வார்ப்புருக்கள் தவியில் இருக்கின்றதா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள். பின்னர் கிடைக்கப்பெறும் கோப்பை மொழிமாற்றம் செய்து, உங்கள் கணினியில் நிறுவப்பெற்ற விக்கியில் import செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொன்றாக தவியில் உருவாக்கலாம்.

தவியில் உள்ள சில வார்ப்புருக்கள் பழைய வெர்சனாக இருக்கக் கூடும், அவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் புதிய வார்ப்புரு சேர்க்கும் போது மொழியாக்கம் செய்யப்பட்ட வார்த்தைகளை கவனத்தில் கொண்டு மொழியாக்கம் செய்து புதிய வார்ப்புருக்களை மாற்றலாம். ஆனால், இந்த வார்ப்புரு உபயோகிக்கப்பட்ட பக்கங்களை சில முறை சோதித்துக்கொள்ளுதல் நலம். இவையெல்லாம் எனது அனுபவமே. -- மாஹிர் 05:15, 24 ஜூலை 2010 (UTC)

தானியங்கி வார்ப்புரு ஏற்றம்தொகு

மகேசுவரி, RLinkBotன் பங்களிப்புகளில் வார்ப்புரு உருவாக்கங்களையும் காண முடிகிறது. ஆனால், சிகப்பு இணைப்புகளை நீக்குவதற்காக மட்டுமே இந்த பயனர் கணக்குக்குத் தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டது. இந்தக் கணக்கைப் பயன்படுத்தி கைப்பட பிற வேலைகள் செய்வது கூட தவறான ஒன்றே. இது பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி--ரவி 16:42, 25 ஜூலை 2010 (UTC)

நான் முன்பு கூறியது போல வேறு இருவர் இந்த வார்ப்புரு உருவாக்கத்தில் பங்குபெற்றனர் அவர்கள் இந்த கணக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சர்ச்சை உருவானவுடனே வார்ப்புரு உருவாக்கம் நிறுத்தப்பட்டது. நன்றி --Maheswari 04:23, 26 ஜூலை 2010 (UTC)

ஐபி பதிப்பு 4தொகு

இணைய நெறிமுறைக் கட்டுரைகளின் கலைச்சொற்கள் கொஞ்சம் மாறுதல் அடையுமாறு வேண்டுகிறேன் . பார்க்க இ.நெறி , இ.நெறி ப6 , இ.நெறி ப6 முகவரி . IPv4 என்ற பக்கத்தை நீக்க வேண்டும் என்றும் , அதற்கு பதிலாக இ.நெறி ப4 என்று இடம்பெற வேண்டும் என்றும் , கட்டுரை உள்ளடக்கத்தில் அடைப்புகளுக்குள் ஐபி முகவரி என்றவாறு இருக்கும்படியும் நான் விரும்புகிறேன் . --இராஜ்குமார் 07:00, 29 ஜூலை 2010 (UTC)

இராஜ்குமார், உங்கள் பரிந்துரைக்கு நன்றி. நான் கட்டுரைகளை மேற்பார்வையிடுகிறேன், உங்கள் கருத்துக்களைக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தந்தால் மொழிபெயர்ப்பாளர்கள் இதனை இனி வரும் கட்டுரைகளில் பயன்படுத்த வசதியாக இருக்கும். நன்றி --Maheswari 08:06, 29 ஜூலை 2010 (UTC)

விக்கி மாரத்தான்தொகு

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:22, 27 அக்டோபர் 2010 (UTC)

கூகுள் திட்டம் பற்றி முதற்பக்க அறிமுகம்தொகு

வணக்கம் மகேசுவரி. தமிழ் விக்கிப்பீடியாவில் கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். இத்திட்டம் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 08:59, 30 திசம்பர் 2010 (UTC) இரவி, போதிய தகவல்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் பக்கத்தில் சேர்த்துள்ளேன்--Maheswari 10:38, 28 சனவரி 2011 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:29, 21 சூலை 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Maheswari,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maheswari&oldid=837738" இருந்து மீள்விக்கப்பட்டது