பயனர் பேச்சு:Neechalkaran/மகாராஜபுரம் ஊராட்சி

அடிப்படை வசதிகள் தொகு

இப்பகுதியை பெட்டிக்குள் அடக்கிவிடுவது நல்லது. பத்தியாக எழுதுவது அநாவசியமானது. மேலும் நாட்டுத் தகவல் வார்ப்புருவில் இடும் தகவல்களை மீண்டும் பத்திக்குள் கொண்டு வரவேண்டாம். குறிப்பாக ஊராட்சித் தலைவர் போன்றவைகளை. ஊராட்சித் தலைவர் போன்ற மாறும் தகவல்களை ஒரு வார்ப்புருக்குள் அடக்கிவிட்டால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தானியக்கமாக ஒரே பக்கத்தில் மாற்றிவிடலாம். உதாரணமாக வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள் போன்று. --Mdmahir (பேச்சு) 14:46, 30 செப்டம்பர் 2015 (UTC)

கட்டுரையின் பைட் அளவு த.விக்கிக்கும், வரிகள் த.இ.க.விற்கும் முக்கிய காரணியாக இருப்பதால் ஊராட்சித் தலைவர் தகவலைக் கட்டுரையில் இணைத்துள்ளேன். அடுத்த இதனைக் கவனத்தில் கொள்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 02:34, 3 அக்டோபர் 2015 (UTC)Reply
தரவு எக்காலத்துக்கு உரியது என்று சேர்த்தல் நன்று. அப்படிச் செய்தால், நாம் இற்றை செய்ய தாமதமாமலும், தகவலைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். --Natkeeran (பேச்சு) 14:31, 8 அக்டோபர் 2015 (UTC)Reply

மேற்கோள்கள் தொகு

மேற்கோள்கள் கட்டுரைகளில் முறைப்படி இணைக்கப்பட வேண்டும். மக்கள் வகைப்பாடு, அடிப்படை வசதிகள், குடியிருப்புகள் உட்பட அனைத்துக்கும் மேற்கோள்களை சேர்க்க வேண்டும். தற்போது முன்னுரையில் மட்டுமே மேற்கோள் இணைக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 02:25, 3 அக்டோபர் 2015 (UTC)Reply

இதனைக் கவனத்தில் கொள்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 02:34, 3 அக்டோபர் 2015 (UTC)Reply

தகவல் பெட்டி தொகு

@Neechalkaran: @Ravidreams:, தகவல் பெட்டியில் கீழ்க்கண்டவற்றை தமிழில் மாற்ற முடியுமா? தற்பொழுது ஆங்கிலத்தில் உள்ளது.

  • கி.மீ2
  • ச. மைல்கள்

இங்கு, முற்றுப் புள்ளிகளுக்குப் பிறகு இடைவெளி விட வேண்டும்.

  • மாவட்ட ஆட்சியர் திரு சஜ்ஜன்சிங் ஆர்.சவான் இ.ஆ.ப
  • ஊராட்சித் தலைவர் திருமதி.சு. ஆனந்தபாய்

நன்றி --நந்தகுமார் (பேச்சு) 17:29, 17 அக்டோபர் 2015 (UTC)Reply

நந்தகுமார், பெயர்களுக்கு முன் திரு, திருமதி போன்ற அடைமொழிகள் தேவையில்லை. @Kanags, AntanO, and Rsmn: - * கி.மீ2, ச. மைல்கள் என்பது போன்று அலகுகளைத் தமிழில் மாற்ற உதவி தேவை. கூடவே, கட்டுரையில் உள்ள தகவல் பெட்டியில் உள்ள பல்வேறு தரவுகள், மற்ற ஊர்கள் கட்டுரைகளில் காட்டுவது போல, சரியாக காட்டுமாறு சீராக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். தானியங்கியில் இதற்கு என்னென்ன தரவு உள்ளிடப்பட வேண்டும் என்பதையும் விளக்க வேண்டுகிறேன். நன்றி. கவனிக்க: @Neechalkaran:--இரவி (பேச்சு) 08:51, 8 நவம்பர் 2015 (UTC)Reply

தெரிந்தவற்றை மாற்றி விடுகிறேன். இங்கு அலகுகளைத் தமிழில் மாற்ற வேண்டும். கி.மீ போன்ற பயன்பாட்டிலுள்ள குறியீடுகளைத் தவிர்த்து வேறு சிலவும் உள்ளன. எ.கா: mph, Dunam. இவற்றையும் மாற்ற வேண்டும். கட்டுரைகளில் ஏற்கெனவே இச்சிக்கல்கள் உள்ளன. அவற்றுக்கும் தகுந்த தமிழ்ப் பதங்கள் தேவை. --AntanO 15:07, 8 நவம்பர் 2015 (UTC)Reply
சரி, Antan. தகவல் பெட்டியில் முந்தைய மக்களவை உறுப்பினர் பெயர் தான் வருகிறது. இற்றைப்படுத்த வேண்டும். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெயரையும் வர வைக்க வேண்டும். உதவுக - @தமிழ்க்குரிசில், Shanmugamp7, Shrikarsan, and மதனாஹரன்:--இரவி (பேச்சு) 19:58, 8 நவம்பர் 2015 (UTC)Reply

மேற்கோள்கள் format தொகு

மேற்கோள்கள் தொகு

  • citation format
  • தமிழ் மேற்கோள்களுக்கு இணைப்புத் தருதல்
{{Reflist|refs=
<ref name="ஊராட்சி">{{cite web |url=http://www.panchayatportals.gov.in/web/224533_maharajapuram-gram-panchayat/home |title=மகாராஜபுரம் கிராம ஊராட்சி|publisher=[[இந்தியாவின் ஊராட்சி மன்றம்]]|accessdate=2015-10-16}}</ref>  
<ref name="ஆளுனர்">{{cite web |url=http://www.tn.gov.in/ta/government/keycontact/197 |title=கே. ரோசைய்யா - மேதகு ஆளுநர், தமிழ்நாடு|publisher=[[தமிழ்நாடு அரசு]]|accessdate=2015-10-16}}</ref>  
<ref name="முதலமைச்சர்">{{cite web |url=http://www.tn.gov.in/ta/government/keycontact/18358|title=ஜெ ஜெயலலிதா மாண்புமிகு முதலமைச்சர்|publisher=[[தமிழ்நாடு அரசு]]|accessdate=2015-10-16}}</ref>  
}}

--Natkeeran (பேச்சு) 20:14, 17 அக்டோபர் 2015 (UTC)Reply

Natkeeran,  Y ஆயிற்று--இரவி (பேச்சு) 08:46, 8 நவம்பர் 2015 (UTC)Reply
நன்றி. மேற்கோள்களை தனியான Reflist ஆக வைத்திருந்தால் நன்றா என்று பரிசீலிக்கவும். --Natkeeran (பேச்சு) 14:41, 10 நவம்பர் 2015 (UTC)Reply
Natkeeran, தனியான reflist என்றால்? விளக்க வேண்டுகிறேன். தானியங்கி ஓடிக் கொண்டிருப்பதால் மாதிரிக் கட்டுரையில் நேரடியான மாற்றங்களைத் தவிர்க்கலாம்--இரவி (பேச்சு) 11:17, 11 நவம்பர் 2015 (UTC)Reply

கட்டுரையாக்க வேண்டுகோள் தொகு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குறித்த கட்டுரையை விரிவாக உருவாக்கித் தர முடியுமா? 12,000 கட்டுரைகளில் இருந்து உள்ளிணைப்பாகப் பார்க்கப்படக்கூடிய கட்டுரை; அரசு இணையத்தளமே ஆங்கிலத்தில் தான் இருப்பதால், அந்தந்த ஊராட்சி மக்களுக்கு நேரடியாகப் பயன்படக்கூடிய கட்டுரை. http://www.tnrd.gov.in/aboutus.html , http://www.tnrd.gov.in/schemes_states.html , http://www.tnrd.gov.in/schemes_centrally.html , http://www.tnrd.gov.in/schemes_external.html ஆகிய பக்கங்கள் கட்டுரை எழுத உதவும். கூடவே, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 கட்டுரையையும் செம்மைப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி. உதவுக - @Rsmn, Booradleyp1, தமிழ்க்குரிசில், Nan, Semmal50, Srithern, and எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி:--இரவி (பேச்சு) 09:12, 8 நவம்பர் 2015 (UTC)Reply

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - Y ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 15:30, 10 நவம்பர் 2015 (UTC)Reply
Booradleyp1, மிகச் சிறப்பாக விரிவாக்கியுள்ளீர்கள். முதற்பக்கக் கட்டுரையாகவும் பரிந்துரைக்க வேண்டும். மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 11:15, 11 நவம்பர் 2015 (UTC)Reply

நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகோள் தொகு

உருவாக்கப்பட இருக்கும் 12,000+ கட்டுரைகளில் இருந்து நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதிக்கான கட்டுரைகள் இணைக்க இருக்கிறோம்; பயனர்களுக்கும் இத்தொகுதிகள் குறித்த தகவலை அறிவதில் ஆர்வம் இருக்கலாம். எனவே, இக்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறேன். முதலில், நாடாளுமன்றத் தொகுதிகளையும் பிறகு சட்டமன்றத் தொகுதிகளையும் கவனிக்கலாம். ஆங்கிலக் கட்டுரையை ஒப்பிட்டு முதலில் தகவல் பெட்டியும் கட்டுரைகளுக்கு சீரான வடிவமும் கொண்டு வர வேண்டும். ஒப்பீட்டுக்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, Kanyakumari (Lok Sabha constituency) பார்க்கலாம். உதவுக - @தமிழ்க்குரிசில், Rsmn, Booradleyp1, Selvasivagurunathan m, Mdmahir, and Kurumban:. நன்றி.--இரவி (பேச்சு) 20:04, 8 நவம்பர் 2015 (UTC)Reply

இப்போது தானே பீகார் தேர்தல் முடிந்திருக்கிறது! முடிந்ததும் தொடரலாம் என்றே இருந்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் தொடர்ந்திடுவேன் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:51, 9 நவம்பர் 2015 (UTC)Reply
சரி, தமிழ்க்குரிசில். எதிர்வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அனைத்து சட்டமன்றத் தொகுதிகள் குறித்த கட்டுரைகளுக்கும் பயனர் வரவு கூடும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, இதற்கும் முன்னுரிமை கொடுத்து ஒரு திட்டமாகவே செயற்படுத்தலாம். --இரவி (பேச்சு) 11:31, 9 நவம்பர் 2015 (UTC)Reply
@ இரவி, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக எனது வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன். காண்க:
பணியை விரைவுபடுத்த உரிய நேரத்தைக் கண்டறிய வேண்டும்!.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:37, 9 நவம்பர் 2015 (UTC)Reply

இரவி, ஆவியிலுள்ள 'Infobox Lok Sabha Constituency' -தகவற்பெட்டியைத் த.வியில் பயன்படுத்த இயலவில்லை. அதனை உருவாக்கித் தந்தால் மக்களவைத் தொகுதிக் கட்டுரைகளில் இணைக்க உதவியாய் இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 04:39, 10 நவம்பர் 2015 (UTC)Reply

@Booradleyp1: அப்பெட்டியைத் தமிழில் மாற்றியுள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:14, 10 நவம்பர் 2015 (UTC)Reply

நன்றி நீச்சல்காரன், Infobox census தகவற்பெட்டியையும் மாற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:14, 10 நவம்பர் 2015 (UTC)  Y ஆயிற்று-நீச்சல்காரன் (பேச்சு) 13:17, 10 நவம்பர் 2015 (UTC)Reply

இப்பகுப்பினை நீக்கிவிடலாம் தானே? தொகு

பயனர் பேச்சு:Neechalkaran/மகாராஜபுரம் ஊராட்சி என்பதில் மட்டும், பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிகள்--உழவன் (உரை) 00:11, 5 சூலை 2017 (UTC)Reply

Return to the user page of "Neechalkaran/மகாராஜபுரம் ஊராட்சி".