வாருங்கள்!

வாருங்கள், Viruba, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--கோபி 17:51, 21 ஜூன் 2006 (UTC)
வணக்கம் விருபா, உங்கள் வருகை தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் சிறக்க வைக்கும். உங்கள் பங்களிப்புகளை தொடர்ந்து தாருங்கள். குறிப்பாக தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளைத் தாருங்கள்.--Kanags 01:29, 15 ஜூலை 2006 (UTC)
வணக்கம் Kanags, நான் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு புதியவன், சில பயிற்சிகள் இன்னமும் தேவையாகவுள்ளது.சிறிது சிறிதாக எனது பங்களிப்புக்களைத் தொடர்கிறேன்.--விருபா 01:35, 15 ஜூலை 2006 (UTC)
வணக்கம் Kanags, எனக்கு தலையங்கத்தில் "வே.தில்லைநாயகம்" என்பதற்கு "வே.தில்லநாயகம்" என்று தவறாக இட்டுவிட்டேன், தவிர அதை மாற்றவும் தெரியவில்லை. நீங்கள் நல்ல நிலையில் மாற்றி தந்துள்ளீர்கள், நன்றி --விருபா 10:34, 17 ஜூலை 2006 (UTC)

முபக கட்டுரை அறிவிப்பு தொகு




வலைப்பதிவு தொகு

உங்கள் வலைப்பதிவையும் இணையத்தளத்தையும் பார்த்தேன். தமிழில் நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இது தொடர்பான பங்களிப்புகளை விக்கிப்பீடியாவிலும் தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன். நன்றி--ரவி 09:28, 17 செப்டெம்பர் 2006 (UTC)

இணையத்தளம் பார்த்தேன் நல்லமுயற்சி. இது மேலும் வளர்ந்து பயன் தர எனது வாழ்த்துக்கள். Mayooranathan 13:06, 17 செப்டெம்பர் 2006 (UTC)

ரவி, Mayooranathan இருவருக்கும் நன்றி, எனக்கு இன்னமும் விக்கிப்பீடியா முற்றிலுமாக பிடிபடவில்லை, சிறிது சிறிதாக எனது பங்களிப்புக்களைத் தொடர்கிறேன்--விருபா 17:43, 17 செப்டெம்பர் 2006 (UTC)

கோவூர் தொகு

ஆபிரகாம் டி.கோவூர் பற்றிய கட்டுரை ஆபிரகாம் கோவூர்க்கு மாற்றியுள்ளேன். அந்தத் தலைப்பே பொருத்தமாக இருக்கும். ஆட்சேபனை இராது என நினைக்கிறேன்:). பகுத்தறிவாளர் தந்தை பெரியார் நினைவு மாதத்தில் கோவுரும் நினைவு கூறப்படவேண்டியவர். கட்டுரைக்கு நன்றி.--Kanags 12:21, 18 செப்டெம்பர் 2006 (UTC)

தகவல் தேவை தொகு

விருபா, பின்வரும் தகவல்கள் தேவை. உங்களால் முடிந்தளவு எடுத்துத் தாருங்கள்.

நன்றி.--Kanags 02:01, 26 நவம்பர் 2006 (UTC)Reply

--விருபா 07:36, 29 மே 2010 (UTC)Reply

:படிமம்:TNGAWARDS.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:TNGAWARDS.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 07:27, 26 மார்ச் 2008 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:05, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Viruba,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Viruba!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 12:01, 13 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:12, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

விருபா திரட்டி தொகு

வணக்கம், விருபா நூல் திரட்டியில் தேடும் வசதி இல்லாததால் குறிப்பிட்ட நூலையோ அல்லது எழுத்தாளரையோ கண்டுபிடிக்க மிகவும் சிரமமாக உள்ளது. இர.திருச்செல்வம் என்ற கட்டுரையில் உங்கள் தளத்தை மேற்கோளாகத் தந்துள்ளார்கள், ஆனால் அது முறிந்த இணைப்பாக உள்ளது. தேடவும் முடியவில்லை. நூலகம் போன்று தேடும் வசதியுடன் உங்கள் தளத்தை அமைத்தால் நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 22:32, 9 மே 2015 (UTC)Reply

ஹா.....ஹா....ஹா....--விருபா (பேச்சு) 04:26, 17 மே 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Viruba&oldid=1856838" இலிருந்து மீள்விக்கப்பட்டது