பியாட் எஸ்.பி.ஏ ஃபாப்ரிக்ஸ் இத்தாலியானா ஆட்டோமொபிலி டோரினோ[2] (ஆங்கில மொழி: Italian Automobile Factory of Turin (Fabbrica Italiana Automobili Torino) என்பதன் பற்சொல் ஓரேழுத்து. இது பைமோண்ட் (Piedmont) மண்டலத்தின் டுரின் (Turin) பகுதியில் மூலதளம் கொண்டுள்ள ஒரு இத்தாலி நாட்டில் ஊர்தி உற்பத்தி, பொறி இயந்திர உற்பத்தி மற்றும் நிதிசார், தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு குழுமம் ஆகும். 1899ஆம் வருடம் கியோவான்னி அக்னெல்லியை (Giovanni Agnelli) உள்ளிட்ட முதலீட்டாளர்களின் குழு ஒன்று ஃபியட்டினை நிறுவியது. இருப்புப் பாதை ஊர்திகள், கவச ஊர்திகள், வானூர்திகள் ஆகியவற்றையும் ஃபியட் தயாரித்துள்ளது. 2009ஆம் ஆண்டு வரையிலான கணிப்பின்படி, உலகின் ஆறாவது பெரும் மகிழுந்து தயாரிப்பாளராகவும், இத்தாலியின் மிகப் பெரும் மகிழுந்து தயாரிப்பாளராகவும் ஃபியட் திகழ்கிறது.[3]

Fiat S.p.A.
வகைSocietà per azioni (BIT: F)
நிறுவுகைஜூலை 11, 1899 அன்று, இத்தாலியிலுள்ள டுரின் நகரில்
நிறுவனர்(கள்)கியோவான்னி அக்னெல்லி (Giovanni Agnelli)
தலைமையகம்டுரின், இத்தாலி
முதன்மை நபர்கள்செர்ஜியோ மார்ச்சியோன் (Sergio Marchionne) (CEO),
John Elkann (Chairman)
தொழில்துறைAutomotive, media, financial services, metallurgy
உற்பத்திகள்Autos, சுமையுந்துs, auto parts, construction and agricultural machinery, financing, newspaper publishing, ad sales
வருமானம்50.10 billion (2009)[1]
இயக்க வருமானம்€359 million (2009)[1]
இலாபம் (€838 million) (2009)[1]
மொத்தச் சொத்துகள்€67.24 billion (2009)[1]
மொத்த பங்குத்தொகை€10.30 billion (2009)[1]
பணியாளர்190,000 (end 2009)[1]
உள்ளடக்கிய மாவட்டங்கள்
List...
இணையத்தளம்FiatGroup.com

ஃபியட்டின் அடிப்படையிலான மகிழுந்துகள் உலகெங்கும் உருவாகின்றன. இவற்றின் பெரும்பாலானவை இத்தாலிக்கு வெளியே, இவை அதிகமாக விற்பனையாகும் பிரேசில் நாட்டில் உற்பத்தியாகின்றன.[4] . இது அர்ஜண்டைனா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. பிற நாடுகளுக்கும் தனது பொருட்களுக்கான உரிமம் வழங்கும் ஒரு நீண்ட வரலாறு ஃபியட்டிற்கு உண்டு.

இத்தாலி, ஃபிரான்ஸ், துருக்கி, இந்தியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் ஃபியட்டின் கூட்டு முனைவு உற்பத்திச் சாலைகள் காணப்படுகின்றன.

அக்னெல்லியின் பேரனான கியான்னி அக்னெல்லி (Gianni Agnelli), 1966ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை ஃபியட் குழுமத்தின் தலைவராகவும், அதன் பிறகு 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் நாள் மரணமடையும் வரையிலும் அதன் கௌரவத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். இக்கால கட்டத்தில் செசாரே ரோமிட்டி அதன் தலைவராக இருந்தார். அவர்களது நீக்கத்திற்குப் பிறகு பௌலோ ஃப்ரெஸ்கோ (Paolo Fresco) தலைவராகவும் பௌலோ காண்டெரெல்லா முதன்மைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றினர். அம்பர்ட்டோ அக்னெல்லி 2002ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டு வரையிலும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அம்பர்ட்டோ அக்னெல்லி 2004ஆம் ஆண்டு மே திங்கள் 28ஆம் நாள் இயற்கை எய்திய பிறகு லுகா கார்டெரோ டி மாண்டெஜ்மொலோ இதன் தலைவராக நியமனமானார். ஆயினும் அக்னெல்லியின் வாரிசான ஜான் எக்கன் துணைத்தலைவராக தனது 28ஆம் வயதிலேயே பதவி ஏற்றார். குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் செயற்குழுவில் உள்ளனர். இந்தக் கால கட்டத்தில் முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்த கிசிபி மார்ச்சியோ உடனடியாக தன் பதவியை இராஜினாமா செய்தார். அவருடைய இடத்தில் செர்ஜியோ மார்ச்சியோன் (Sergio Marchionne) 2004ஆம் ஆண்டு ஜூன் முதலாம் நாள் நியமனமானார்.

நடவடிக்கைகள்

தொகு
 

2007ஆம் ஆண்டில் பகுதி வாரியாக ஃபியட் குழுமத்தின் வருமானம்]] இந்தக் குழுமத்தின் நடவடிக்கைகள் துவக்கத்தில், தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கான மகிழுந்துகள் மற்றும் தொழிற்சாலை மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கான ஊர்திகள் ஆகியவற்றின் உற்பத்தியையே குவிமையப்படுத்தியிருந்தது. காலப்போக்கில், இது மேலும் பல தளங்களிலும் தனது செயல்பாட்டினை விரிக்கலானது. தற்போது தொழில் மற்றும் நிதிசார் சேவைகளின் பல துறைகளிலும் இக்குழுமம் பரந்து பட்ட வீச்சு கொண்ட செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. இத்தாலியின் மிகப் பெரும் தொழில் நிறுவனம் இதுவேயாகும். உலகெங்கும் குறிப்பிடத்தக்க அளவில் செயற்பாடுகளை இது கொண்டுள்ளது. இது 61 நாடுகளில் 1,063 நிறுவனங்களுடன் கூட்டுறவில் 223,000 பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்களில் 111,000 பேர் இத்தாலிக்கு வெளியே பணி புரிபவர்கள்.

ஊர்தி உற்பத்தி

தொகு

ஃபியட் வர்த்தக்குறி கொண்ட மகிழுந்துகளுக்குக் காண்க ஃபியட் ஊர்திகள்

 

ஃபியட் குழும ஊர்திகளின் உலகளாவிய உற்பத்தி நிலையங்கள் (சொந்த உற்பத்தி நிலையங்கள், கூட்டு முயற்சிகள் மற்றும் உரிமம் பெற்ற உற்பத்திகள் ஆகியவற்றை உள்ளிட்டு)]]

 
 
 
 

{| style="float:right;"

 
ஃபியட் 500
 

லான்சியா டெல்டா]]

 

ஆல்ஃபா ரோமியோ 159]]

 

மசெராட்டி கிராண்டுரிஸ்மோ]]

 

பெராரி 458 இத்தாலியா]] |}

ஃபியட் இத்தாலியின் மிகப் பெரும் மகிழுந்து உற்பத்தி நிறுவனமாகும். இது, சிறிய ஃபியட் நகர் மகிழுந்து துவங்கி பெராரியின் விளையாட்டு மகிழுந்துகள் வரை மற்றும் டக்டோ தொடங்கி இவெக்கோ வரையிலான கூடு உந்து பாரவண்டிகள் ஆகியவற்றை மிகப் பரந்துபட்ட வீச்சில் தயாரிக்கிறது. ஃபியட் க்ரூப் ஆட்டோமொபைல்ஸ் எஸ்.பி.ஏ என்பதைத் தவிரஃபியட் குழுமம் பெராரி எஸ்.பி.ஏ. இவெக்கோ எஸ்.பி.ஏ மற்றும் மசாரெட்டி எஸ்.பி.ஏ. தி ஃபியட் க்ருப் ஆட்டோமொபைல்ஸ் எஸ்.பி.ஏ. போன்ற நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகும். இதன் நிறுவனங்களில் அபர்த் சி.எஸ்.பி.ஏ. ஆல்ஃபா ரோமியோ ஆட்டோமொபைல்ஸ் எஸ்.பி.ஏ., ஃபியட் ஆட்டோமொபைல்ஸ் எஸ்.பி.ஏ., ஃபியட் புரொஃபெஷனல்ஸ்]] மற்றும் [[லாங்கியா ஆட்டோமொபைல்ஸ் எஸ்.பி..ஏ. ஆகியவையும் அடங்கும். பெராரி எஸ்.பி. ஏ.வின் உரிமையில் 85 சதம் ஃபியட் குழுமத்திடம் உள்ளது.

ஐரோப்பாவின் முதன்மை ஊர்தி என்பதற்கான கோப்பை அளிக்கப்பெறும் ஆண்டிற்கான ஐரோப்பிய மகிழுந்து விருதினை கடந்த 40 வருடங்களில் 12 முறைகள் ஃபியட் குழுமம் வென்றுள்ளது. வேறு எந்த ஊர்தித் தயாரிப்பாளரையும் விட இது அதிகமான முறைகளாகும். மிகவும் அண்மையில் ஃபியட் நியூவோ 500 2008ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய மகிழுந்து விருதினை வென்றது.[5]

ஆண்டிற்கான ஐரோப்பிய மகிழுந்து விருது வென்ற ஃபியட் குழும மகிழுந்து மாதிரிகளின் பட்டியல்:

  • 1967: ஃபியட் 124
  • 1970: ஃபியட் 128
  • 1972: ஃபியட் 127
  • 1980: லங்காசியா டெல்டா
  • 1984: ஃபியட் யூனோ
  • 1989: ஃபியட் டிப்போ
  • 1995: ஃபியட் பண்ட்டோ
  • 1996: ஃபியட் பிரோவோ/பிராவா
  • 1998: ஆல்ஃபா ரோமியோ 156
  • 2001: ஆல்ஃபா ரோமியோ 147
  • 2004: ஃபியட் பன்டா
  • 2008: ஃபியட் 500

விவசாய மற்றும் கட்டுமானக் கருவிகள்

தொகு

சிஎன்ஹெச் குளோபல் (இதில் கூடு கட்டமைப்பு, கூடு ஐஹெச், ஃப்ளெக்ஸ் காயில், கோப்லெகோ, நியூ ஹாலந்த், நியூ ஹாலந்த் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் ஸ்டியர் ஆகியவை அடங்கும்) மற்றும் ஃபியட் ஃபியட்-ஹிட்டாச்சி ஆகியவற்றின் உரிமை ஃபியட்டுக்குறியது. டீரே & கம்பெனியை அடுத்து, சிஎன்ஹெச் நிறுவனமே உலகின் இரண்டாவது பெரும் விவசாயக் கருவி உற்பத்தியாளராகும். மேலும் இது, கேட்டர்பில்லர் இங்க் மற்றும் கோமட்சு ஆகியவற்றிற்கு அடுத்ததாக, மிகப் பெரும் கட்டமைப்புக் கருவி உற்பத்தி நிறுவனமும் ஆகும். ஃபியட் குழுமத்தின் வருமானத்தில் சிஎன்ஹெச்சின் பங்கு 20 சதவிகிதமாகும்.[6]

வர்த்தக ஊர்திகள்

தொகு

இதன் வணிக ஊர்திகள் இவெக்கோ மற்றும் செட்டான் அட்கின்சன் ஆகியவை. பேருந்துகள் இவெக்கோ, ஐரிஸ்பஸ் மற்றும் தீயணைக்கும் ஊர்திகள் காமிவா, இவெக்கோ மற்றும் மாகிரஸ் ஆகியவையும் இதன் தயாரிப்புகளாகும். இதன் இராணுவத் தளவாடங்கள் பற்றிய தகவல்களுக்குக் காண்க: ஆரியட்டெ (Ariete).2007ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 17ஆம் நாள் "ஃபியட் வெய்கோலி கமர்ஷியலி" ஊர்தி "ஃபியட் புரொஃபெஷனல்" எனப் பெயர் மாற்றம் பெற்றது.[7] ஃபியட்டின் மெல் வணிக ஊர்திகளில் ஃபியட் டகாட்டோ, ஃபியட் ஸ்கூடோ மற்றும் ஃபியட் டோப்லோ கார்கோ ஆகியவை அடங்கும். ஃபியட் வணிக ஊர்தி தயாரிப்புகளின் மீதான மேலும் விபரங்களுக்குக் காண்க: ஃபியட் புரொஃபஷனல்

விசையுந்துகள் மற்றும் வானூர்தி வடிவமைப்பு

தொகு

1959ஆம் வருடம் பியாக்கோ அக்னெல்லி குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் விளைவாக, 1964ஆம் வருடம் வானூர்தி மற்றும் விசையுந்துப் பிரிவுகள் பிரிந்து தனி நிறுவனங்களாயின. வானூர்தி உற்பத்திக்கான நிறுவனம் ஐஏம் ரினால்டோ பியாக்கோ என்று பெயரிடப்பட்டது. இன்று, வானூர்தி நிறுவனமான பியாக்கோ ஏரோ பியரோ பெராரி குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இன்னமும் அது மகிழுந்து உற்பத்தி நிறுவனமான பெராரி யில் 10 சதவிகித உரிமையைத் தக்க வைத்துள்ளது.

1992ஆம் ஆண்டு வரை கியோவன்னி ஆல்பர்ட்டோ அக்னெல்லி முதன்மைச் செயல் அதிகாரியாகும் வரை வெஸ்பா ஊர்தி தாக்குப் பிடித்து வந்தது. ஆனால், ஏற்கனவே புற்று நோயால் அவதியுற்று வந்த அக்னெல்லி 1997ஆம் ஆண்டு மரணமடைந்தார். 1999ஆம் வருடம் மோர்கன் க்ரென்ப்ஃபெல் பிரைவேட் ஈக்விட்டி என்னும் நிறுவனம் பியாக்கோவை கையகப்படுத்தியது.

 

ஃபியட் ஜி9ஐடி பயிற்சி வானூர்தி]]

விண்வழிப் போக்குவரத்து

தொகு

ஃபியட் ஏவியாஜியோன் என்னும் முக்கியமான வானூர்தி உற்பத்தியாளராக, ஃபியட் இராணுவ வானூர்திகளிலேயே கவனம் செலுத்தியது. முதலாம் உலகப் போர் முடிவுற்ற பின்னர், பொமிலியோ மற்றும் அன்சால்டோ போன்ற பல சிறு இத்தாலிய விமான ஊர்தி நிறுவனங்களை ஃபியட் கையகப்படுத்தியது ஃபியட் இரட்டை விமானமான 1930ஆம் வருடங்களின் தாக்கு வானூர்தி, ஃபியட் சிஆர்.32 மற்றும் ஃபியட் சிஆர்.42 ஆகியவை மிகவும் பிரபலமாக விளங்கின. குறிப்பிடத்தக்க இதர வடிவமைப்புகள், தாக்கு வானூர்திகளான சிஆர்.20, ஜி.50, ஜி.55 மற்றும் வெடி வானூர்தியான ஃபியட் பிஆர்.20 ஆகியவை. 1950ஆம் ஆண்டுகளில் வலு குறைந்த தரைத்தாக்குதல்களுக்காக ஜி.91 என்னும் வானூர்தியை இந்நிறுவனம் வடிவமைத்தது. 1969ஆம் ஆண்டு, ஃபியட் ஏவியாஜியோன் ஏர்ஃபெர் நிறுவனத்துடன் இணைந்து ஏரிடாலியா நிறுவனம் உருவானது.

ஆக்கக்கூறுகள்

தொகு

ஊர்திக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதில் இத்தாலியில் பெரும் நிறுவனமான மேக்னெட்டி மாரெல்லி ஃபியட்டுக்குச் சொந்தமானது. இது கேரெல்லோ, ஆட்டோமேடிவ் லைட்டிங், சியம், கோஃபாப், ஜேகெர், சொலெக்ஸ், வெக்லியா, போர்லெட்டி, விடாலோனி மற்றும் வெபர் ஆகிய வர்த்தகக் குறியீடுகளுக்கு உரிமம் கொண்டுள்ளது. இதர துணை வர்த்தகக் குறியீடுகளில் இரிவ்-ஸ்கஃப் மற்றும் பிரேசிலிய கோஃபாப் ஆகியவை அடங்கும்.

உலோகவியற் பொருட்கள்

தொகு

டெக்ஸிட் எஸ்.பி.ஏ. ஃபியட்டுக்குச் சொந்தமானது.இது உலகின் மிகப்பெரும் இரும்பு வார்ப்பகக் குழுமமாகும். இதன் வருடாந்திர உற்பத்தித் திறன் ஏறத்தாழ 600,000 டன்கள். 1978ஆம் வருடம் டிசம்பர் மாதம் துவங்கிய இந்த நிறுவனம் உருளைத் தொகுப்புகள், உருளைத் தலைகள், பல்முனை வெளியேற்றி, இயக்க அம்பு, நெம்புருள் தணு மற்றும் ஊர்திகள் மற்றும் வர்த்தக ஊர்திகளுக்குத் தேவையான உதிரி பாகங்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. இரும்பைப் பதப்படுத்துவதிலும், வார்த்தெடுப்பதிலும் பெயர் பெற்ற டேக்சிட் நிறுவனம் ஃபிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, பிரேசில், மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

2007ஆம் ஆண்டிலிருந்து டேக்சிட் எஸ்.பி.ஏஇரும்பு வார்ப்பிலும், ஊர்திகளுக்கான உதிரிபாகங்களை அலுமியக் கலப்பு உலோகங்களிலிருந்து உற்பத்தி செய்வதிலும் பெயர் பெற்ற டேக்சிட் அலுமினியம் எஸ்.ஆர்.எல் என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது.

உற்பத்தி அமைப்புகள்

தொகு

உற்பத்தி அமைப்புகள் பொதுவாக கோமௌ எஸ்.பி.ஏ வழியாக செய்யப்படுகின்றன.(இது தற்பொழுது காமௌ சிஸ்டம்ஸ் எனப்படுகிறது). அமெரிக்க நிறுவனங்களான பிக்கோ, ரினால்ட் ஆட்டோமேஷன் மற்றும் சிசியாகி ஆகியவற்றை வாங்கியுள்ள இந்நிறுவனம் தொழிற்சாலை தானியங்கி அமைப்புகளைத் தயாரிக்கிறது. 1970ஆம் ஆண்டுகள் மற்றும் 1980ஆம் ஆண்டுகளில், உந்து ஊர்தி பாகங்களை இணைப்பதற்கான தொழிற்சாலை தானியங்கித் துறையில் இந்நிறுவனம் ஒரு முன்னோடியாக விளங்கியது. உலக அளவினில், ஃபியட் குழுமத்தின் பாகங்களை இணைப்பதான தொழிற்சாலைகளே மிகவும் முன்னேறியதாகவும், அதிக அளவில் தானியங்கி முறைமையிலும் உள்ளன.

சேவைகள்

தொகு

டோரோ அச்சிக்யூராஜியோனி என்னும் ஒரு காப்பீட்டு நிறுவனம் லாய்ட் இடாலிகா போன்ற சில சிறு காப்பீட்டு நிறுவனங்களை சேர்த்துக் கொண்டு காப்பீட்டுச் சந்தையில் குறிப்பிடும் அளவிலான பகுதியைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இதனுடன் தொடர்புடைய சில வங்கிகளுடன் ஊடாடவும் ஃபியட்டை அனுமதித்தது. டோரோ அச்சிக்யூராஜியோனி நிறுவனம், மிகப் பெரும் காப்பீட்டு நிறுவனமான அச்சிக்யூராஜியோனி ஜெனரலி என்பதனால் வாங்கப்பட்டு, தற்போது அது ஃபியட் குழுமத்துடன் எந்தத் தொடர்பும் அற்று உள்ளது. அகஸ்டா அச்சிக்யூரோஜோனியின் கட்டுப்பாடு இன்னமும் ஃபியட் வசமே உள்ளது.

கட்டமைப்புகள்

தொகு

இஞ்ஜெஸ்ட் ஃபெசிலிட்டி மற்றும் ஃபியட் எஞ்ஜினியரிங் ஆகியவை கட்டமைப்பின் பல்வேறு துறைகளில் உள்ளன. ஐபிஐ என்னும் நிறுவனம் ஒரு இடைமுக நிறுவனமாக, நிலச் சொத்துக்களின் மேலாண்மையில் ஈடுபட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்

தொகு

தகவல் தொழில்நுட்பம் என்னும் ஐடி (IT) துறைகளிலும் ஃபியட் குழுமம் ஈடுபட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பங்களில் எஸ்பின், குளோபல் வேல்யூ, டெலிகிளையண்ட் மற்றும் அட்லானெட் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

ஓய்வாறல்

தொகு

செஸ்ட்ரியரி ஸ்கையிங் ஃபெசிலிட்டீஸ் என்னும் பனிச்சறுக்கு உரிமையை ஃபியட் நிறுவனம் சொந்தமாகக் கொண்டிருந்தது. ஆல்ப்ஸ் மலையில் உள்ள கிராமம் அக்னெல்லி குடும்பத்தின் உருவாக்கமாகும். செஸ்ட்ரியரி ஸ்கையிங் ஃபெசிலிட்டீசினை இந்தக் குழுமம் 2006ஆம் ஆண்டில் விற்று விட்டது.

பிரசுரங்களும் தொடர்பு முறைமைகளும்

தொகு

முன்னணியில் உள்ள சில பிரசுர வர்த்தகங்களையும் ஃபியட் குழுமம் தன்னிடத்தே கொண்டுள்ளது. இவற்றில் (1962ஆம் ஆண்டு பிரபல செய்தித்தாளுக்காக உருவாக்கப்பட்ட) லா ஸ்டம்பா, இடெடி மற்றும் இத்தாலியான எடிஜியோனி ஆகியவை அடங்கும். சில தேசிய மற்றும் உள்ளூர் செய்தித்தாள்களின் உரிமை அல்லது கட்டுப்பாடு பல்வேறு ஃபியட் நிறுவனங்கள் வசம் உள்ளது. பப்ளிகோம்பாஸ் என்னும் விளம்பர ஊடகம் ஒன்றினையும் இது கொண்டுள்ளது. இது கன்சோர்ஜியா ஃபியட் மீடியா செண்டர் என்பதன் ஆதரவில் நடைபெற்று வருகிறது.

இதர நடவடிக்கைகள்

தொகு

ஃபியட் ஜெஸ்கோ, கீஜி கன்சல்டிங், சடி கஸ்டம்ஸ் சர்வீசஸ், ஈசி டிரைவ், ஆர்எம் ரிஸ்க் மானேஜ்மெண்ட் மற்றும் சரிவீஜோ டிட்டோலி ஆகியவை பொதுச் சேவையில் ஈடுபட்டு பொருளாதாரம் மற்றும் நிதிசார் தளங்களில் சேவை அளித்துவரும் சிறு நிறுவனங்களாகும். இதர நடவடிக்கைகளில் தொழிற்சாலை பாதுகாப்பமைப்பு (கன்சார்ஜியோ சிரியோ), கருவூலம் (ஃபியட் ஜெவா) ஃபியட் இன்ஃபர்மேஷன் & கம்யூனிகேஷன் சர்வீசஸ் ஆகியவை அடங்கும்.

சமூக மற்றும் பொருளாதார ஆய்வில் ஈடுபட்டுள்ள ஒரு பிரதானமான அறக்கட்டளையான ஃபௌண்டாஜியோன் கியோவான்னி அக்னெல்லி க்கு ஃபியட் ஆதரவளித்து வருகிற்து. வெனிஸ் நகரத்தில் உள்ள பலஜோ கிராஸி என்னும் பிரபலமான ஒரு பண்டைய கட்டிடம் முன்னர் ஃபியட்டின் ஆதரவைப் பெற்றிருந்தது. தற்பொழுது ஒரு அருங்காட்சியகமாக உள்ள இது ஃபிரெஞ்சு நாட்டு வணிகர் ஃபிராங்கோயிஸ் பினால்ட் என்பவருக்கு 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விற்கப்பட்டது.

பாப்ஸ்லெட் என்னும் விளையாட்டில் ஈடுபட்டுள்ள ஜமாயிக்கான் குழுக்களுக்கு, ஃபியட் அண்மையில் விளம்பரங்களின் மூலம் நிதியுதவி அளிக்கத்துவங்கி உள்ளது. மிகவும் இடர்களுக்கு உள்ளாயினும் வாழ்க்கையை இரசிப்பவர்களாக ஜமாயிக்கான் விளையாட்டு வீரர்களைக் காணும் பலரும் அவர்களை நேசிக்கிறார்கள். கோல்ஃப் விளையாட்டிற்கு வோல்வோ நிதியுதவி அளித்து ஆதரவளிக்கிறது. இதைப் போல, டென்னிஸிற்கு மெர்சிடிஸ் நிறுவனமும், சோக்கர் விளையாட்டிற்கு ஹுண்டாய் நிறுவனமும் உதவி புரிகின்றன. தனித்துவம் வாய்ந்ததும், பெருமனம் கொண்டதுமாகத் திகழ ஃபியட் முயன்று வருகிறது. மேலும், இந்தக் குழுவிற்கான நிதியுதவி ஒப்புமையில் குறைவானதே.[8]

மேற்கத்திய நாடுகள் மட்டும் அல்லாமல், பல்வேறு நாடுகளிலும் இந்தக் குழு தனது இருப்பை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சோவியத் மண்ணில் முதன் முதலாகத் தொழிற்சாலைகளை அமைத்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. விளாடிவோஸ்டோக், கிவ் மற்றும் டோக்லியாட்டி ஆகியவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். பின்னாளின் ஆட்டோவாஜ் (முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் வெளியில் இது லடா எனப்படுகிறது) என்னும் பெயரின் கீழ் ரஷ்ய அரசு கூட்டுறவு முனைவுகளைத் துவக்கியது. இந்தக் கூட்டுறவின் குறிப்பிடத்தக்க ஒரு முனைவு லடா ரிவாவாகும். போலந்து நாட்டிலும் டிச்சி என்னுமிடத்தில் ஃபியட்டிற்கு ஒரு துணை நிறுவனம் உள்ளது. முன்னர் எஃப்எஸ்எம் எனப்பட்ட இதில் ஃபியட்டின் சிறு மகிழுந்துகளான 126, சிங்குவின்செண்டோ, செயிண்டோ, நுவோ 500 மற்றும் ஃபோர்ட் கா மற்றும் சிறிய தீசல் பொறி இயந்திரங்கள் உற்பத்தியாகின்றன. அர்ஜன்டைனா, பிரேசில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் ஃபியட் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. மேலும், சீனா, எகிப்து, ஃபிரான்ஸ், இந்தியா, தென் ஆப்பிரிக்க, துருக்கி மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுடன் கூட்டுறவு முனைவு வழியாகவும் இதன் மகிழுந்துகள் உற்பத்தியாகின்றன.[9] ஃபியட் மகிழுந்தின் பகுதி சார்ந்த வகைகள் மட்டும் அன்றி உலகளாவியதான பாலியோவும் இங்கு உற்பத்தியாகின்றன. 2005ஆம் ஆண்டு வரையில், ஃபிரேசில் நாட்டின் ஊர்திச் சந்தையில் ஃபியட்டின் பங்கு 25 சதத்திற்கு அருகில் இருந்தது.

மூன்றாவது உலகில் உள்ள சந்தைகளுக்கே வணிகத்தை விரிவு படுத்த ஃபியட் விரும்புகிறது. இதன் முன்னாள் தலைவர் பௌலோ ஃப்ரெஸ்கோ கூறினார்: "அந்தச் சந்தைகளில்தான் நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.[9] சிறு மகிழுந்துகளில் ஃபியட் கொண்டுள்ள விசேஷ நுட்பம் இதர மகிழுந்து உற்பத்தியாளர்களை விடவும் முன்னணியான இடத்தில் அதனை வைத்துள்ளது. இதரப் பகுதிகளை விட மூன்றாவது உலகில் ஃபியட் விற்கும் மகிழுந்துகள் மிகவும் எளிமையானதாக உள்ளன. (உதாரணமாக, இவற்றில் பலவற்றில் குளிரூட்டு வசதி கிடையாது). ஆகவே இவற்றை உருவாக்க குறைந்த அளவிலேயே நிதி தேவைப்படுகிறது.

போர் ஊர்தித் துறையிலும் ஃபியட் இருப்பைக் கொண்டுள்ளது. இவெக்கா மற்றும் ஓடிஓ மெலாரா ஆகியவற்றின் இணைப்பின் வழியான எல்ஏவி பி1 செண்டௌரா இதன் குறிப்பிடத்தக்க உற்பத்திப் பொருளாகும்.

பரிணாமம்

தொகு
 

ஃபியட் 3 ½ சிவி (1899)]]

1899ஆம் வருடம் பல முதலீட்டார்களுடன் ஃபியட் நிறுவனத்தைத் துவங்கிய கியோவென்னி அக்னெல்லி, 1945ஆம் ஆண்டு தாம் இறக்கும் வரையிலும் அதற்குத் தலைமை ஏற்றிருந்தார். விட்டோரியா வால்லெட்டா (Vittorio Valletta) இதன் தினசரி நடவடிக்கைகளை நிர்வகித்து வந்தார். 3 ½ CV என்னும் இதன் முதல் மகிழுந்தின் எட்டு பிரதிகளே உருவாயின. இவை அனைத்தும் டுரினின்[10] அலெசியாவால் உடற்பகுதி அமைக்கப்பட்டு, அப்போதைய பென்ஸ்[11] மகிழுந்தை ஒத்திருந்தன. 697 cc (42.5 cu in) இரட்டை பாக்ஸர் பொறி இயந்திரங்களையும்[11] இவை கொண்டிருந்தன. 1903ஆம் ஆண்டு ஃபியட் தனது முதல் பாரவண்டியைத் தயாரித்தது.[12] 1908ஆம் வருடம் முதல் ஃபியட் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியானது.[12] 1908ஆம் ஆண்டிலேயே முதல் ஃபியட் வானூர்திப் பொறி இயந்திரம் உற்பத்தியானது. ஏறத்தாழ இதே கால கட்டத்தில் ஃபியட் வாடகை ஊர்திகளும் ஐரோப்பாவில் பிரபலம் ஆயின.[13] 1910ஆம் வருட வாக்கில், இத்தாலியின் மிகப் பெரும் ஊர்தி உற்பத்தியாளராக ஃபியட் விளங்கலாயிற்று. இன்று வரை அந்த இடத்தை அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1910ஆம் ஆண்டிலேயே நியூயார்க்கில் பௌகீப்பிஸ் என்னுமிடத்தில் ஊர்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கான உரிமத்தினை ஃபியட் பெற்றது. இது, 1913ஆம் ஆண்டு ஃபோர்ட் ஊர்தி பாக இணைப்புத் தொழிற்சாலை உருவாவதற்கு முந்தைய காலமாகும். அந்தக் கால கட்டத்தில் ஃபியட் மகிழுந்தினை வைத்திருப்பது ஒரு கௌரவச் சின்னமாக விளங்கியது.

1917ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் துவங்கியபின் அமெரிக்கா போரில் நுழையவே, அமெரிக்க விதிமுறைகள் மிகவும் கடுமையாக மாறியதால் இத்தொழிற்சாலை மூடப்பட்டது. அதே நேரத்தில், ஃபியட் தனது அனைத்துத் தொழிற்சாலைகளிலும் நேச நாடுகள் தேவைக்காக அவற்றிற்கு வானூர்தி, பொறி இயந்திரங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், பாரவண்டிகள், அவசர மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டது. போர் முடிந்த பிறகு, 702 என்னும் தனது முதல் இழுவை இயந்திரத்தை ஃபியட் அறிமுகப்படுத்தியது.[14] 1920ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் இத்தாலி நாட்டுச் சந்தையில் 80 சதப்பங்கை ஃபியட் பெற்றிருந்தது.[15]

 

கோர்ஸோ டான்டே தொழிற்சாலை]]

 

லிங்கோட்டோ தொழிற்சாலை (1928)]]

 

மிராஃபியோரி தொழிற்சாலை]]

 

லிங்கோட்டோ தொழிற்சாலை (இன்று)]]

1921ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் ஃபியட்டின் தொழிற்சாலைகளைக் கைப்பற்றி அங்கு பொதுவுடமைக் கட்சியின் செங்கொடியைப் பறக்க விட்டனர். நிறுவனத்தை விட்டு விலகுவதன் மூலம் அக்னெல்லி இதற்குப் பதிலிறுத்தார். இருப்பினும், இத்தாலிய சமவுடமைக் கட்சி மற்றும் அதன் நேச நிறுவமனமான தொழிலாளர் மாநாட்டுக் கட்சி ஆகியவை நடுநிலைக் கட்சிகளுடன் ஒரு சமரச முயற்சியாக முற்றுகையை முடித்துக் கொள்ள உத்திரவிட்டன. 1922ஆம் ஆண்டு, ஃபியட் புகழ்வாய்ந்த லிங்கோட்டா மகிழுந்து தொழிற்சாலையைக் கட்டமைக்கத் துவங்கியது. அக்கால கட்டத்தில் ஐரோப்பாவிலேயே மிகப் பெரும் தொழிற்சாலையாக விளங்கிய இது 1923ஆம் ஆண்டு செயல்படத் துவங்கியது. பாக இணைப்புத் தடங்களைப் பயன்படுத்திய முதல் ஃபியட் தொழிற்சாலை இதுவேயாகும். 1925ஆம் வருட வாக்கில், இத்தாலிய மகிழுந்துச் சந்தையில் 87 சதவிகிதம் ஃபியட்டின் வசமானது.[16] 1928ஆம் ஆண்டு 509 என்னும் மகிழுந்தின் அறிமுகத்துடன், விற்பனை விலையில் காப்பீட்டையும் ஃபியட் சேர்க்கலானது.[17]

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் ஃபியட் இராணுவத் தளவாடங்கள் மற்றும் ஊர்திகளை இராணுவம் மற்றும் ரெஜியா எரோனாடிக்கா விற்காகவும் பிறகு ஜெர்மானையார்களுக்காகவும் தயாரிக்கலானது. இரட்டை விமானமான சி.ஆர்.42 போன்ற சிறப்பான தாக்குதல் வானூர்திகளை சேவியோ-மார்ச்செட்டிகள் மற்றும் மெல்-பீரங்கிகள் மற்றும் கவச ஊர்திகள் ஆகியவற்றுடன் ஃபியட் வடிவமைக்கலானது. இது மிகவும் வழமையான இத்தாலிய வானூர்தியாகும். இதன் ஜெர்மானிய மற்று சோவியத் தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் காலம் கடந்த நுட்பமாகும். ஃபியட்டின் மிகச் சிறந்த வானூர்தி அதன் ஜி.55 தாக்குதல் விமானமே. இது மிகவும் தாமதமாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலுமே வெளியானது. முசோலினி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட 1945ஆம் வருடம் தேசிய விடுதலைக்கான இத்தாலியக் கழகம் ஃபியட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளிலிருந்து அக்னெல்லி குடுமப்த்தினரை நீக்கியது. அவர்களுக்கு முசோலினியுடன் இருந்த தொடர்புகளே இதன் காரணம். கியோவென்னின் பேரன் கியான்னி 1963ஆம் ஆண்டு பொது மேலாளராவும் பின்னர் 1966ஆம் வருடம் தலைவராகவும் பதவி ஏற்கும் வரையிலும், அவர்கள் திரும்பவில்லை

கியான்னி அக்னெல்லி

தொகு

ஃபியட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தன் கீழ் கொண்டு வந்ததும் இளைய அக்னெல்லியின் முதல் நடவடிக்கைகள் முன்னர் முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரப் பங்கீடு ஏதுமின்றி ஒரு புறமே குவிந்திருந்த நிறுவன மேலாண்மையை பெருமளவு மறு சீரமைத்ததேயாகும். கடந்த காலத்தில் அத்தகைய ஒரு முறைமை சிறப்பாக வேலை செய்திருந்தது. ஆயினும், ஃபியட்டின் சீரான விரிவாக்கம் மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் துவங்கிய சர்வதேச அளவிலான அதன் விரிவாக்கம் ஆகியவற்றிற்குத் தேவையான பதிலிறுப்பு முறைமையும் நெகிழ்வுத் தன்மையையும் அது கொண்டிருக்கவில்லை. பயணிகள் மகிழுந்திற்காக ஒன்றும் பார வண்டிகள் மற்றும் இழுவை இயந்திரங்களுக்காக மற்றொன்றும் என தனது தயாரிப்புப் பொருள் சார்ந்து மறு சீரமைப்பினை ஃபியட் மேற்கொண்டது. இதற்கும் கூடுதலாக ஓரளவிற்கு சுயேச்சைத் தன்மை உடையதாகப் பல துறைகளும், துணை நிறுவனங்களும் உருவாயின. உச்ச அதிகாரக் குழுவானது நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளுக்கான பொறுப்பிலிருந்து விடுபட்டமையால், நீண்ட கால நோக்கங்களுக்காக நேரம் செலவிட அதனால் இயன்றது. 1967ஆம் ஆண்டு, ஆட்டோபியான்ச்சியை வாங்கியபோது, பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தும் ஃபியட் முயற்சியின் துவக்கமாக அது அமைந்தது. விற்பனை வருமானம் $1.7 பில்லியன் என்பதாக உயரவும் அது தனது ஐரோப்பியப் போட்டியாளராக வோக்ஸ்வேகனை விஞ்சியது. 1968ஆம் ஆண்டு ஃபியட் ஏறத்தாழ 1,750,000 ஊர்திகளை உற்பத்தி செய்யவும், அதன் விற்பனை வருமானம் $2.1 பில்லியனாக உயர்ந்தது. நியூஸ்வீக் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: 1968ஆம் வருடம் ஃபியட், "ஐரோப்பாவின் மிகச் சுறுசுறுப்பான ஊர்தித் தயாரிப்பாளராக விளங்குகிறது... [மேலும்] டெட்ராய்ட் கொண்டுள்ள உலகளாவிய முதன்மை நிலைக்கு சவால் விடுவதற்கு மிக அருகில் அது வரக் கூடும்." 1969ஆம் ஆண்டு அது பெராரி மற்றும் லான்சியா ஆகியவற்றின் கட்டுப்பாட்டு உரிமைகளை வாங்கியது. அந்நேரம், ஃபியட் ஒரு பல நிறுவனக் குழுமமாகத் தன்னிடத்தே அலிடாலியா, வழிச்சுங்கப் பாதைகள், தட்டச்சு இயந்திரம் மற்றும் அலுவலகக் கருவிகள், மின்னணு மற்றும் மின்சாரக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், சாயம் உற்பத்தி செய்யும் நிறுவனம், கட்டமைப்புப் பொறியியல் நிறுவனம் மற்றும் சர்வதேச அளவிலான ஒரு கட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 1966ஆம் ஆண்டு சோவியத் அதிகாரிகளுடன் வாலெட்டா மேற்கொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, அக்னெல்லி ஓல்கா நதிக்கரையில் டோகிலியாட்டிரகிராட் (Togliattigrad) என்னும் புதிய நகரில் ஆவ்டோவாஜ் தொழிற்சாலையை நிர்மாணித்தார். இது 1970ஆம் வருடம் இயங்கத் துவங்கி ஃபியட் 124 என்பதன் உள்ளூர்ப் பதிப்புகளை லடா என்னும் பெயரில் உற்பத்தி செய்யலானது. அவரது முயற்சியின் பேரில், ஃபியட் ஊர்தி மற்றும் பார வண்டித் தொழிற்சாலைகளும் யூகோஸ்லேவியா, போலந்து, பல்கேரியா மற்றும் ரொமானியா ஆகிய நாடுகளில் எழுப்பப்பட்டன.

இவ்வாறு ஒப்புமையில் போட்டித் திறன் மிக்க வீச்சில் மகிழுந்துகளை அளிப்பினும், 1973ஆம் ஆண்டு ஊர்தித் தொழிலைப் பெருமளவு தாக்கிய எரி எண்ணெய் விலையுயர்வு அதிர்ச்சியிலிருந்து ஃபியட் நிறுவனமும் தப்பிக்க இயலவில்லை. 1976ஆம் ஆண்டின் இறுதியில், லிபியா நாட்டு அரசு இந்நிறுவனத்தில் 9.6 சதம் பங்கினை எடுத்துக் கொள்வதாகவும் அதற்கு ஈடாக £250 மில்லியன் மதிப்புள்ள மூலதனத்தை இடும் எனவும் அறிவிக்கப்பட்டது.[18] இத்தாலிய அரசு அச்சமயம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த ஐஎம்எஃப் நிதியுதவியான £310 மில்லியன் என்னும் கடனுதவியுடன் ஒப்பிடுகையில், லிபியாவின் முதலீட்டின் அளவு தெரியவரும்.[18] லிபிய அரசுடனான ஒப்பந்தம் திரிபோலி என்னுமிடத்தில் ஒரு பாரவண்டி மற்றும் பேருந்து ஆகியவற்றிற்கான ஒரு தொழிற்சாலை அமைப்பதையும் உட்கொண்டிருந்தது.[18] தலைவர் அக்னெல்லி இந்த ஒப்பந்தத்தை கீழ்வருமாறு சிறப்பாக வருணித்தார்: "இது பெட்ரோலியப் பணம் மறு சுழற்சிக்கு உள்ளாவதன் ஒரு சிறப்பான உதாரணம் ஆகும். இது இத்தாலிய நிதியிருப்பு நிலையை பலப்படுத்தி, ஃபியட்டுக்குப் புதிய மூலதனம் அளித்து அக்குழுமம் தனது முதலீட்டு நிரல்களை நிம்மதியாக மேற்கொள்ள வழி வகுக்கும்."[18] அச்சமயம் இருந்த முதலீட்டாளர்களின் பங்கமைப்பை லிபியாவின் முதலீடு கணிசமான அளவில் தளர்த்திவிடினும், நிறுவனத்தின் மிகப்பெரும் முதலீட்டாளரான அக்னெல்லி குடும்பம் மறு முதலீட்டமைப்பில் 30 சதவிகிதத்தைத் தக்க வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[18]

1979ஆம் ஆண்டு, ஃபியட் ஆட்டோவினை உள்ளிட்ட பல சுயச்சார்பு நிறுவனங்களை அமைத்த பிறகு ஃபியட் ஒரு தாங்கு நிறுவனமாக அமைந்தது. 1979ஆம் வருடத்திலேயே, ஈரானிய எண்ணெய் நெருக்கடி நிலைமைக்கு இணையானதாக விற்பனையும் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்தது. இருப்பினும், வாயுவின் விலை 1981ஆம் ஆண்டு சரிந்தபொழுது, அமெரிக்கர்கள் விளையாட்டுப் பயன் ஊர்திகளையும், சிறு உந்திகளையும், சிறு பாரவண்டிகளையும் பெருமளவில் வாங்கத் துவங்கினர். (முன்னர் பெரிய மகிழுந்துகளை வாங்குவதாக இருந்த அவர்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டதாக இது அமைந்திருந்தது.) மேலும், மகிழுந்துச் சந்தையில் ஜப்பானிய ஊர்தித் தயாரிப்பாளர்களின் பங்கானது வருடத்திற்கு அரைச் சதவிகிதம் என்னும் அளவிற்கும் மேலாக உயர்ந்து அவர்தம் பங்காற்றல் எப்பொழுதையும் விட அதிக அளவிலானது. இதன் விளைவாக 1984ஆம் வருடம் ஃபியட் மற்றும் லான்சியா ஆகியவை அமெரிக்க ஐக்கிய நாடுகள் சந்தையிலிருந்து விலகின. 1989ஆம் வருடம் ஆஸ்திரேலியாவிலும் ஃபியட் இவ்வாறே செய்தது. ஆயினும், நியூசிலாந்தில் அது தங்கிவிட்டது.

1986ஆம் வருடம் ஃபியட் இத்தாலிய அரசிடமிருந்து ஆல்ஃபா ரோமியாவை வாங்கியது. மேலும், 1986ஆம் வருடம் ஃபியட் நிறுவன முதலீட்டில் 15 சதம் லிபிய அரசின் வசமே இருந்து வந்தது. இந்த முதலீடு 70ஆம் வருடங்களின் இடைக்காலம் முதல் தொடர்ந்து வருவதானது. அதிபர் ரீகனின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை ஃபியட் நிறுவனத்துடனான ஒரு மண்ணிழுப்பு இயந்திர உற்பத்தி ஒப்பந்தத்தை இரத்து செய்தது. மேலும், லிபிய அரசின் முதலீட்டை பெற்றுத் தருமாறு ஃபியட் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தது. 1992ஆம் ஆண்டு ஃபியட் குழுமத்தின் மேல்மட்ட அதிகாரிகள் இருவர் அரசியல் ரீதியான ஊழலுக்காக கைதாயினர்.[19] இதற்கு ஒரு வருடம் க்ழித்து, மாசெரெட்டியை ஃபியட் கையகப்படுத்தியது. 1995ஆம் ஆண்டு ஆல்ஃபா ரோமியோ அமெரிக்கச் சந்தையிலிருந்து வெளியேறியது. மாசரெட்டி, ஃபியட்டின் கீழாக 2002ஆம் ஆண்டு அமெரிக்கச் சந்தையினுள் நுழைந்தது. அச்சமயம் துவங்கி, மாசரெட்டியின் விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

பௌலோ ஃப்ரெஸ்கோ

தொகு

1998ஆம் ஆண்டு பௌலோ ஃப்ரெஸ்கோ, ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதுபெரும் தலைவரான இவர் ஃபியட் நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் மதிப்பை அதிகரிப்பார் என்னும் பெரும் நம்பிக்கைகளின் ஊடே, ஃபியட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். அவர் அதிகாரப் பொறுப்பினை ஏற்ற வேளையில், 1984ம் ஆண்டு இத்தாலியில் ஃபியட்டின் சந்தைப் பங்கு 62 சதம்[சான்று தேவை] என்றிருந்த நிலை மாறி, 41 சதமாகக்[சான்று தேவை] குறைந்து விட்டிருந்தது. இருப்பினும் இத்தாலியர்கள் பயன்படுத்தி வந்ததற்கு மாறாக (எடுத்துக்காட்டாக அவ்வப்போதைய பணி என்பதற்கு மாற்றாக வாழ்நாள் பணியாக) ஒரு ஜாக் வெல்ச் போன்ற தலைமைப் பண்பு மிகுந்த அளவினில் இரும்புக் கரத்தினைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மாறாக, சிறந்த பணிக்கு ஊக்கத் தொகைகள் அளிப்பதிலும் மற்றும் இடைநிலை மற்றும் மேல்மட்ட அதிகார நிலைகளுக்கு பங்குத் தேர்வுகளைப் பயன்படுத்தி இழப்பீடுகள் அளிப்பதிலுமே ஃப்ரெஸ்கோ கவனம் செலுத்தலானார்.

இருப்பினும், தொழிலாளர் சங்கத்தின் ஆட்சேபங்களினால் அவரது முயற்சிகள் தடைபட்டன. பணிச்சிறப்பின் அடிப்படையில் அல்லாது பணிக் கால அளவீட்டின் அடிப்படையிலேயே ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தின. அவர் இயல்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது மேலும் ஒரு சச்சரவு விளையக் காரணமானது. (நிறுவனரான கியோவென்னி அக்னெல்லி ஏறத்தாழ ஒரு ராணுவ அதிகாரியைப் போல நடந்து கொண்டிருந்தார்). நிறுவன மரபுகளின்படி பிறரை அவர்கள் வகிக்கும் பதவியுடன் ("தலைவர் ஃப்ரெஸ்கோ" என்பதைப் போல) அழைக்க வேண்டும் எனினும், ஃப்ரெஸ்கோ பல நேரங்களில் பிற அதிகாரிகளை அவர்களின் பெயர் சொல்லி அழைக்க முற்பட்டார். நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை முதன்மைச் செயல் அதிகாரியான பௌலோ சாண்டரெல்லா கவனித்துக் கொள்கையில், ஃப்ரெஸ்கோ நிறுவனத்தின் திட்டங்களை வகுத்துக் குறிப்பாக நிறுவனத்தின் சார்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தலானார். உண்மையில், ஃபியட் ஆட்டோவை விற்பதற்காகவே அவர் நியமிக்கப்பட்டதாக (ஃப்ரெஸ்கோ இதைக் கடுமையாக மறுப்பினும்) பலரும் எண்ணினர்.[சான்று தேவை] 1999ஆம் வருடம் நியூ ஹாலண்ட் என்வி மற்றும் கேஸ் கார்ப்பொரேஷன் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் சிஎன்ஹெச் என்னும் நிறுவனத்தை ஃபியட் உருவாக்கியது.

அண்மைய நிகழ்வுகள்

தொகு

ஜிஎம் உடனான கூட்டுறவு

தொகு

உலகளவில் ஊர்தி உற்பத்தி நிறுவனங்கள் பலவும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் போட்டியாளர்களை இணைத்துக் கொண்டு அவற்றின் தாங்கு நிறுவனங்கள் ஆகிவிட்டன. உதாரணமாக, ஜெனரல் மோட்டார்ஸ் சாப் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திலும், வெகு அண்மைக்காலம் வரையிலும் இசுஜூவிலும் கட்டுப்பாட்டு உரிமைகளைக் கொண்டிருந்தது. 2000ஆம் வருடம் ஒரு கூட்டு முனைவு ஒப்பந்தத்தில் ஃப்ரெஸ்கோ கையெழுத்திட்டதன் மூலம் ஜிஎம் நிறுவனம் ஃபியட் ஆட்டோவில் பங்கேற்றது. டொயோட்டா போன்ற பிற நிறுவனங்களின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளாது அவற்றுடன் கூட்டு முனைவுகளை ஜிஎம் மேற்கொண்டாலும், அடுத்தது ஃபியட்தான் என்ற ஒரு தோற்றத்தினை இது உருவாக்கியது இருப்பினும், ஜிஎம்மின் இந்த கூட்டுறவை ஒரு அச்சுறுத்தலாக ஃபியட் கருதவில்லை. மாறாக, ஊர்தித் தொழிலில் தனது தேவைக்கதிகமான சுமையை வெளியேற்ற ஒரு வாய்ப்பாகவே இதனைக் கருதியது. ஜிஎம்முடனான ஒப்பந்தத்தில் இடுகைத் தேர்வு ஒன்றும் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம், நான்கு வருடங்களுக்குப் பிறகு, நியாயச் சந்தை விலையில் ஃபியட் தனது ஊர்திப் பிரிவை ஜிஎம்முக்கு விற்கும் உரிமை பெற்றிருந்தது. ஜிஎம் பின்வாங்கும் பட்சத்தில், $2 பில்லியன் அபராதம் கட்டுவ வேண்டிய கட்டாயத்திற்கு அது உட்படும். இந்த நிறுவனத்தை ஃபியட் ஜிஎம்முக்கு விற்க முனைந்தபோது, ஜிஎம் அபராதம் கட்டுவதையே தேர்ந்தெடுத்தது. 2005ஆம் ஆண்டு மே 13ஆம் நாள் ஃபியட் அதிகாரபூர்வமாக தங்களது ஒப்பந்தத்தை அமல் நீக்கம் செய்தது.

தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி இதைப் போன்ற கூட்டிணைப்புகள், ஃபியட்டின் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் எனக் கருதுகிறார். 2005ஆம் ஆண்டு ஃபியட் நிறுவனம் ஃபோர்டுடன் பேச்சு வார்த்தை துவங்கியது.[20] மேலும், கிரிஸ்லர் நிறுவனத்தில் 20 சதம் (இது மேலும் உயரும் சாத்தியமுண்டு) பங்கேற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஃபியட், ஜிஎம் யூரோப்பினைக் (ஒப்பெல் மற்றும் வாக்ஸ்ஹால்) கையகப்படுத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அண்மைய விரிவாக்கங்களின் ஒரு பகுதியாக, 2003ஆம் ஆண்டு ஃபியட், டோரோ அச்சிக்யூரோஜினி மூலமாக இயக்கி வந்த தனது காப்பீட்டுத் துறையை உதறி அதனை டியகோஸ்டினி குழுமத்திற்கு விற்றது. 2003ஆம் ஆண்டிலேயே, தந்து வானூர்தித் தொழிலகமான ஃபியட்ஏவியோவினையும் அது ஏவியோ ஹோல்டிங்கிடம் விற்றது. 2004ஆம் வருடம் ஃபிப்ரவரி மாதம், இது ஃபியட் எஞ்சினியரிங் மற்றும் எடிசன் ஆகியவற்றில் இருந்த தனது பங்குகளை விற்றது.

ஃபியட்டுக்கான அச்சுறுத்தல்கள் பன்முகம் கொண்டுள்ளன. இவற்றில் (2008ஆம் ஆண்டு முதல் 16-30%)[21] என அதிகரித்து வரும் எஃகின் விலை, ஐரோப்பாவில் ஜப்பானிய மற்றும் தென் கொரிய உற்பத்தியாளர்களின் அதிகரித்த போட்டி ஆகியவை அடங்கும். ஜப்பானிய மற்றும் தென் கொரிய ஊர்தி உற்பத்தியாளர்கள் மெல்-ஊர்திச் சந்தையில் கொண்டுள்ள பங்கு அவர்கள் அமெரிக்கச் சந்தையில் கொண்டுள்ள பங்கை விடக் குறைவாகவே, அதாவது அமெரிக்காவில் அவர்களுக்கு உள்ள 30% மற்றும் 3.9% என்பதற்கு மாறாக, முறையே 12.5% மற்றும் 3.9% என்ற அளவில் இருப்பினும், அது வருடத்திற்கு அரைச் சதவிகிதம் அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.[சான்று தேவை]


இத்தாலியில் வெளியிட்ட ஒரு விளம்பரத்திற்காக ஃபியட் நியூசிலாந்தில் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தை நியூசிலாந்தின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான தொடர்பாளர் "கலாசார ரீதியாக மென்னுணர்வற்றும், உகப்பின்றியும் உள்ளது" என விமர்சித்துள்ளார். புதிய ஃபியட் மகிழுந்தின் அருகில் பெண்கள் ஹாக்கா நடனமாடுவது போலவும், பின்னணியில் கும்பல் கூக்குரல் இடுவது போலவும் அமைந்திருப்பது ஆல் பிளாக்ஸ் மற்றும் ரக்பி யூனியன் ஆகியவற்றின் இடையிலான ஒரு போட்டிப் பந்தயச் சூழ்நிலையை ஒற்றியது போல அமைந்துள்ளது. ஹாக்கா முடிவடைந்ததும், ஒரு பெண் ஃபியட் மகிழுந்தினை ஓட்டிச் செல்கையில், பின்னிருக்கையில் உள்ள ஒரு இளைஞன், ஹாக்காவின் இறுதியை அறிவிப்பதான முறையில், தன் நாவினை நீட்டிக் காட்டுகிறான்.

ஜிஎம்யூரோப்பினை கையகப்படுத்தும் சாத்தியம்
தொகு

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிஎம் மோட்டார்ஸ் இந்த இரு நிறுவனங்களுக்கிடையே விவாதிக்கப்பட்டது. ஜிஎம்யூரோப் ஒப்பெல், வாக்ஸ்ஹால் மற்றும் சாப் ஆகியவற்றிற்கு உரிமை கொண்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் கனடா நாட்டு ஆஸ்டிரோ கார் பாகங்களின் உற்பத்தியாளரான மேக்னா இண்டர்நேஷனல் என்னும் நிறுவனத்தினை ஒப்பெல் கையகப்படுத்துவதற்காக அறிவித்தனர். ஜிஎம்யூரோப்பின் தொழிசார் நடவடிக்கைகளில் மிகப் பெரிதானது ஒப்பெல்/ வாக்ஸ்ஹால் கூட்டுறவேயாகும்.[22]

செர்ஜியோ மார்ச்சியோன்

தொகு
 

ஃபியட் 500]] 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதன்மைச் செயல் அதிகாரியாகத் தாம் பொறுப்பேற்றது முதல் செர்ஜியோ மார்ச்சியோன் முதலீட்டாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.[23] 2002ஆம் ஆண்டு துவங்கி நட்டங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. மேலும், 17 காலாண்டுகளுக்குப் பின்னர், 2005 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ஃபியட் நிறுவனம் இலாபம் அடைந்தது மற்றும் 2006 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் €196 மில்லியன் இலாபம் ஈட்டியது.[24] திரு மார்ச்சியோன் ஃபியட் நிறுவனத்தின் மேலாளர்களுக்கான செலவீனத்தைக் குறைத்து, சந்தை மற்றும் இலாபத்தினை நோக்கி கவனம் செலுத்துகிறார். அதன் தலைவர் லுகா டி மாண்டெஜெமோலோ (Luca di Montezemolo) அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடனான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கையில், மார்ச்சியோன் மகிழுந்துத் தொழிலை மறுகட்டமைத்துள்ளார். கிராண்ட் புன்ட்டோ மாதிரியின் வெற்றியானது ஃபியட்டின் இலாபக் கணக்கு கூடுவதற்கு மிகவும் பிரதானமான காரணம். இருப்பினும், (ஸ்டைலோவைன் வாரிசான) பிரேவாவும், விருதினைப் பெற்ற 500 இரக மகிழுந்துமே இதற்கு அடித்தளமிட்டன. இந்தியாவின் டாட்டா மோட்டார்ஸ் மற்றும் சீனாவின் செர்ரி மோட்டார்ஸ் ஆகியவற்றுடனும் ஃபியட் ஒரு கூட்டுறவு ஒப்பந்தம் இட்டுள்ளது. மார்ச்சியோனின் தலைமையின் கீழ், சில வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மெக்சிகோ மற்றும் ஆஸ்திரேலிய சந்தைகளிலும் இது மறுபதிகை செய்துள்ளது. புதிய 500 இரக மகிழுந்துடன் 2010ஆம் ஆண்டு ஃபியட் அமெரிக்கச் சந்தைக்கும் திரும்புவதாக மார்ச்சியோன் அண்மையில் உறுதி செய்துள்ளார்.[25]

கிரிஸ்லர் உடனான கூட்டுறவு

தொகு


2009ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் ஃபியட் எஸ்.பி.ஏ மற்றும் கிரிஸ்லர் எல்எல்சி ஆகியவை இரண்டும் தாங்கள் உலகளாவிய ஒரு கூட்டை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தன. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, ஃபியட் கிரிஸ்லர் நிறுவனத்தில் 35 சதம் பங்குகளை எடுத்துக் கொண்டு அதன் வட அமெரிக்க விற்பனையாளர் வலைப்பின்னலுக்கு அணுகலைக் கொள்ளும். இதற்கு பதிலாக, கிரிஸ்லருக்கு சிறியதும், அதிக எரிபொருள் திறனும் கொண்ட ஊர்திகளை அமெரிக்காவில் உற்பத்தி செய்வதற்கும் ஃபியட்டின் உலகளாவிய விற்பனை வலைப்பின்னலுக்கான அணுகலை அடைவதற்கும் ஃபியட் ஆதரவளிக்கும்.[26][27]

புதிய பங்கு உரிமையாளர் தமது பங்கினை 55 சதம் வரை உயர்த்திக் கொள்வதற்கான விருப்பத்தேர்வினைக் கொண்டிருப்பார். இந்த இரண்டு நிறுவனங்களிலும் வலியதான ஃபியட், கிரிஸ்லரில் உடனடியாக நிதியை முதலீடு செய்யாது. அதற்கு மாறாக, அமெரிக்காவில் விற்பதற்கான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஃபியட் மாதிரிகளை உருவாக்குவதற்காக கிரிஸ்லரின் தொழிற்சாலைக்குக் கருவிகளை அளிப்பதன் செலவினை அது ஏற்றுக்கொள்ளும். மேலும், புதிய, எரிபொருள் திறன்மிக்க சிறிய மகிழுந்துகளை கிர்ஸ்லர் தயாரிப்பதற்குத் தேவையான பொறி இயந்திரம் மற்றும் கடத்துத் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் ஃபியட் அளிக்கும்.

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


இந்த ஒப்பந்தம் 2004ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து ஃபியட் நிறுவனத்தை அது சிதைவதிலிருந்து காத்து வந்துள்ள அதன் தலைவரான செர்ஜியோ மார்ச்சியோன் வெகு அண்மையில் கையாண்டுள்ள உத்தியாகும். டொயோட்டோ, வோக்ஸ்வாகன் மற்றும் ரெனால்ட் எஸ்.ஏ மற்றும் நிஸ்ஸான் கூட்டிணைப்பு ஆகிய உலகளாவிய போட்டியாளர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள அவை போராடிவரும் இந்த வேளையில், இந்தக் கூட்டுறவால் இரண்டு நிறுவனங்களுமே, அதி உற்பத்திப் பொருளாதாரத்தின் வலிமை, பயனரை அடைவதற்கான புவிசார் விரை நிலைப்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.[26] 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று கிரிஸ்லருடனான கூட்டிணைவை[28] ஃபியட் அறிவித்தது. முதலில் ஃபியட் 20 சதப் பங்கினை எடுத்துக் கொள்ளும். பின்னர் அரசுக் கடன்கள் தீர்வையான பிறகு, அது பெரும்பான்மையான உரிமையாளராகி விடும்.[29]

இந்த 20 சதப் பங்கிற்காக கிரிஸ்லருக்கு ஃபியட் ஏதும் அளிக்கத் தேவையில்லை.

2009ஆம் வருடம் ஜூன் மாதம் ஏழாம் நாள், இண்டியானா மாநில காவல் துறை ஒய்வு நிதி, இண்டியானா ஆசிரியர்கள் ஓய்வு நிதி மற்றும் மாநிலத்தின் மேஜர் மூவ்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகியவை கிரிஸ்லர் நிறுவனம் ஃபியட்டுக்கு விற்கப்படுவதைத் தாங்கள் எதிர்ப்பதால் அதைத் தாமதப்படுத்துமாறு அமெரிக்க உச்ச நீதி மன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தன. இந்த விற்பனையானது அமெரிக்க திவாலா நிலைச் சட்டத்திற்கு எதிரானது என்றும், காப்புறுதியற்ற பற்றாளர்களுக்கு காப்புறுதி கொண்ட பற்றாளர்களுக்கு மேலாக தீர்வை அளிக்கிறது என்றும் இந்த நிதியமைப்புகள் வாதிட்டன.[30] 2009ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி, உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடையை நீக்கி, கிரிஸ்லரை ஃபியட் கையகப்படுத்தும் வழியில் இருந்த தடையை நீக்கியது.[31] மேலும் தகவல்களுக்குப் பார்க்க: இண்டியானா மாநில ஓய்வு நிதி அறக்கட்டளை அதற்கெதிராக கிரிஸ்லர் (Indiana State Police Pension Trust v. Chrysler) ஜூன் மாதம் பத்தாம் நாள் புதன் கிழமையன்று, கிரிஸ்லர் க்ரூப் எல்எல்சி என்றும் அழைக்கப்படும் புதிய கிர்ஸ்லர் நிறுவனத்தின் உரிமையாளராக ஃபியட்டினை உச்ச நீதி மன்றம் அறிவித்தது. "புதிய" கிரிஸ்லர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக செர்ஜியோ மார்ச்சியோன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் கிரிஸ்லருடன் இருந்து வரும் ஜிம் பிரஸ் (Jim Press), மார்ச்சியோன் இத்தாலியில் இருக்கும் வேளையில், இந்த நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கவனித்து வரும் துணை முதன்மைச் செயலாளராக நியமனம் பெறலாம்.

இத்தாலிக்கு வெளியே தொழில் முனைவுகள்

தொகு

காண்க: ஃபியட் குழும பாக இணைப்பு தொழிலங்களின் பட்டியல்

1950ஆம் ஆண்டுகள் துவங்கி, கிழக்கு ஐரோப்பா, ஸ்பெயின், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் துருக்கி ஆகிய பல நாடுகளிலும் ஊர்தித் தொழிலை உருவாக்குவதில் ஃபியட் பெரும்பங்கு வகித்து வந்துள்ளது. ரஷ்யாவின் டொல்யாட்டியில் (டோகிலியாட்டி) உள்ள ஆட்டோவாஜ் அரசுத் துறையாக லடா பொருட்களை உற்பத்தி செய்யும் ஃபியட் அடிப்படையிலானது. இதைப் போன்றே ஸ்பெயின் நாட்டின் சியாட் பொருட்களுமாகும். தற்சமயம் லடா ரெனால்ட்டின் வசமும் சியாட் வோக்ஸ்வாகன் வசமும் உள்ளன. பல்கேரியாவில் சிறிய எண்ணிக்கையிலான ஃபியட்டுகளும் கட்டமைக்கப்பட்டன. ஃபியட்டின் வெளிநாட்டு பாக இணைப்புத் தளங்களில் முதன் முதலானது நியூயார்க்கில் 1910ஆம் ஆண்டு துவங்கி 1913ஆம் ஆண்டு வரையில் அமைக்கப்பட்ட பௌகீப்சிஸ் ஆகும். இக்கட்டிடம் தற்போது மாரிஸ் கல்லூரி வளாகத்தின் பகுதியாக உள்ளது.

பிரேசில் நாட்டில் ஃபியட் ஆட்டோமோவெஸ்

தொகு
 
தூய ஹைட்ரஸ் ஈத்தனால் எரிபொருள் (ஈ100) பயன்படுத்தி ஓடிய முதல் நவீன மகிழுந்து 1979ஆம் ஆண்டின் பிரேசிலிய ஃபியட் 147.

ஃபியட் ஆட்டோமோவிஸ் எஸ்.பி.ஏ ஃபியட் எஸ்.பி.ஏவின் துணை நிறுவனம்.[32] இது 1976ஆம் ஆண்டு, முதன் முதலில் இத்தாலிய ஃபியட் 127 என்பதன் பிரேசிலியப் பதிப்பான ஃபியட் 147 உருவாக்கத்துடன், பிரேசில் நாட்டில் ஊர்திகளை உருவாக்கத் துவங்கியது. 1986ஆம் ஆண்டு வரை இதுவே நீடித்து வந்தது. பெட்டிம் நகரில் உள்ள ஃபியட் ஆட்டோமோவிஸ் தொழிற்சாலையில் மொத்தமாக 1,269,312 அலகைகளும் அர்ஜன்டைனாவின் கோர்டோபா தொழிற்சாலையில் 232,807 அலகைகளும் உற்பத்தியாயின.[சான்று தேவை] கொலம்பியாவின் பொகோட்டோவின் சிசிஏ தொழிற்சாலையிலும் இந்த மகிழுந்து உற்பத்தியானது.

1979ஆம் ஆண்டு துவங்கிய 147 மகிழுந்தே பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட, பெட்ரோல் என்பதற்குப் பதிலாக ஈத்தனால் எரிபொருளைக் கொண்டு ஓடிய முதல் மகிழுந்து.[33][34][35] இதன் செயல் திறன் சற்றே அதிகரித்தது. எரிபொருள் உள்ளீடு 30 சதம் அதிகரிப்பினும், ஈத்தனாலின் விலை காசோலைனின் விலையில் நான்கில் ஒரு பங்கே. மேலும், அந்நேரத்தில் 1979 எரி எண்ணெய் நெருக்கடி என்பதன் விளைவாக, பெட்ரோலின் விலை மிக உயர்ந்திருந்தது. இந்தப் பதிப்பு சச்சாசின்ஹா (சிறிய சச்சாசா) எனப் பெயரிடப்பட்டது. காரணம், இப்பெயெர் கொண்ட பிரேசிலிய பானத்தின் மணத்தை இது கொண்டிருந்ததேயாகும்.

 
முதல் சியன்னா டெட்ராஃப்யூயல் 1.4 ஒரு பல் எரிபொருள் மகிழுந்து. இது தூய காஸோலைன் அல்லது ஈ-20-ஈ255 காஷோல் அல்லது தூய ஈத்தனால் (ஈ100) அல்லது சிஎன்ஜியுடன் கூடிய உயிரிய எரிபொருள் பயன்படுத்தி இயங்குகிறது.

1984ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆட்டோமோவிஸ் ஃபியட் யூனோவை 1985ஆம் வருடத்திய மாதிரியாக அறிமுகம் செய்தது. தற்போது, இந்த மகிழுந்து ஃபியட் மில்லி என்னும் பெயரில், சிக்கன ஆரம்ப-கட்ட மாதிரியாக விற்பனையாகி 2004ஆம் வருடத்திய சிறந்த மாதிரி மகிழுந்தாகத் திகழ்கிறது. 1984ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை 2,000,000 ஃபியட் யூனோ ஊர்திகள் பிரேசிலில் உற்பத்தியாகி உள்ளன. உலகளாவிய மகிழுந்தான ஃபியட் பாலியோவின் உற்பத்தி 1996ஆம் வருடம் துவங்கியது.[சான்று தேவை]

எரிபொருள் நெகிழ்வுத் தன்மை உடைய ஊர்தி 2003ஆம் ஆண்டு வெற்றி கரமாக பிரேசிலியச் சந்தையில்[36] அறிமுகமானதும், ஃபியட் ஆட்டோமோவிஸ் தனது முதல் நெகிழ்வு மாதிரி மகிழுந்தை 2004ஆம் வருடம் மார்ச் மாதம் ஃபியட் பாலியோ என்னும் பெயரிலும், அதைத் தொடர்ந்து சியன்னா மற்றும் பாலியோ வீக்எண்ட் என்பனவாகவும் தயாரிக்கலானது.[37] 2008ஆம் வருடம் பிரேசிலில் ஃபியட் 665,514 ஊர்திகளை விற்றது.[38] இதனால், இந்த மகிழுந்து உற்பத்தி நிறுவனம் தொடர்ந்து ஒரே வரிசையில் ஏழு வருடங்களுக்கு சந்தையில் முன்னணியில் இருந்து வரலானது.[39] 2008ஆம் வருடம் விற்பனையான மகிழுந்துகளில் எரிபொருள் நெகிழ்வு ஊர்திகளே ஏறத்தாழ 100 சதமாக இருந்தன. மற்றும் மெல்-வரி பாரவண்டிகளில் இவை 92 சதமாக இருந்தன.[40]

2006ஆம் ஆண்டு, ஃபியட் சியன்னா டெட்ரா ஃப்யூயல் என்னும் ஒரு நான்கு எரிபொருள் வகைகளைப் பயன்படுத்தக் கூடிய மகிழுந்து ஒன்றினை பிரேசில் ஃபியட்டின் மாக்னெட் மாரெல்லியின் கீழ் ஃபியட் அறிமுகம் செய்தது.[41][42] இந்த ஊர்தியானது எரிபொருள் நெகிழ்வு கொண்டு 100 சதம் ஈத்தனால் கொண்டும் (ஈ100) அல்லது பிரேசிலினின் வழமையான காசாலைன் கலப்பு விகிதமான ஈ20-ஈ25 கலப்பிலும், தூய காசோலைனிலும் (அருகிலுள்ள நாடுகளில் கிடைப்பினும், இது 1993ஆம் ஆண்டு முதல்[43][44] பிரேசிலில் கிட்டுவதில்லை) மற்றும் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) கொண்டும் ஓடக் கூடியது. காசோலைன்-ஈத்தனால் கலப்பிலிருந்து சிஎன்ஜி வரை எந்த ஒரு எரிபொருள் கலப்பிலும், சாலைக்குத் தேவைப்படும் சக்தி அளவினைப் பொறுத்து, ஓடக் கூடியதாக சியன்னா டெட்ராஃப்யூயல் வடிவமைக்கப்பட்டது.[45]

ஃபியட் அர்ஜண்டைனா

தொகு

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே அர்ஜண்டைனா நாட்டில் ஃபியட் இருந்து வருகிறது. 1954ஆம் ஆண்டில் இழுவை இயந்திர உற்பத்திக்காக இரண்டு உள்ளூர் நிறுவனங்களுடன் ஃபியட் ஒப்பந்தம் மேற்கொண்டது துவங்கியே, கோர்படோவில் ஃபியட் உற்பத்தித் தொழிற்சாலை இருந்து வந்துள்ளது. 1959ஆம் ஆண்டு, காசெரோஸ் என்னுமிடத்தில் மகிழுந்து உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பெற்றது. அர்ஜண்டைனாவில் கட்டமைக்கப்பட்ட முதல் ஃபியட் பயணி மகிழுந்தான ஃபியட் 600 என்பதன் உற்பத்தியை 1960ஆம் ஆண்டு கண்ணுற்றது. 1978ஆம் ஆண்டு வாக்கில் கோர்படோவில் மகிழுந்து உற்பத்தி தொழிற்சாலை நன்கு நிலை கொண்டு ஃபியட் 128 மற்றும், இத்தாலியர்களின் கண்ணோட்டத்தில் பழங்காலத்தியதான, 125 மற்றும் 600ஆர் ஆகியவையும் உற்பத்தியாகத் துவங்கின.[46] கோர்படோவில் 1996ஆம் வருடம் டிசம்பர் 20 அன்று புதிய தொழிற்சாலையின் துவக்கத்துடன் தொடங்கியது.[47] 1977ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாக சியன்னா மற்றும் பாலியோ ஆகியவற்றின் உற்பத்தி துவங்கியது.

2000ஆம் வருடங்களின் துவக்கத்தில் அர்ஜண்டைனாவின் பொருளாதாரத் தாழ்நிலையின் காரணமாக உற்பத்தி தாற்காலிகமாக நின்று போனது. இருப்பினும், 2008ஆம் ஆண்டு ஃபியட் மேலும் நிதி அளிக்கவே ஃபியட் சியன்னா சலூன் மகிழுந்தின் உற்பத்தி துவங்கியது. ஃபியட் ஆட்டோ அர்ஜண்டைனா எஸ்.ஏ.பி என்பதானது ஃபியட் எஸ்.பி.ஏ.விற்குச் சொந்தமான நிறுவனம்.[29]

ஜாவஸ்டவா, செர்பியா

தொகு

இதன் முதல் தொழில் முனைவானது 1955ஆம் ஆண்டு யூகோஸ்லோவியா மகிழுந்து உற்பத்தியாளரான ஜாஸ்டாவா உடன் மேற்கு ஐரோப்பாவில் ஃபியட் பாகங்களை இணைக்கும் தொழிற்சாலைக்கான ஒப்பந்தமிட்டதுடன் துவங்கியது. ஜாஸ்டாவா முதலில் உற்பத்தி செய்த மகிழுந்துகள் ஃபியட் 1300 மற்றும் ஃபியட் 1400 ஆகியவற்றின் பதிப்புக்களேயாகும். 1970ஆம் ஆண்டுகள் வாக்கில் புதிய ஃபியட் 124 மற்றும் ஃபியட் 125 ஆகிய மகிழுந்துகள் போலந்தில் உற்பத்தியாயினும், ஆகியவற்றிற்கான பாகங்களை ஜாஸ்டாவா உற்பத்தி செய்யலானது. 1962ஆம் ஆண்டு துவங்கிய ஜாஸ்டாவா 750 ஒரு முத்திரைச் சின்னமாகவே விளங்கிய ஃபியட் 600 சிறு மகிழுந்தின் ஜாஸ்டாவா பதிப்பாகும். இது எந்த மகிழுந்தின் அடிப்படையில் உருவானதோ, அதையும் மீறிய உற்பத்திக் கால அளவினை மேற்கொண்டு, 1981ஆம் ஆண்டு வரை முடிக்கப் பெறவில்லை.

ஜாஸ்டாவாக்கள் 1973ஆம் ஆண்டு துவங்கியே அமெரிக்காவிற்கு யூகோ வர்த்தகக் குறியீட்டின் கீழ் ஏற்றுமதியானபோதும், 1980ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக கிழக்கு ஐரோப்பாவில் அவை பிரபலமாக இல்லை.

 

ஐக்கிய இராச்சியத்தில் வலதுபுற இயக்கமாக, ஜாவஸ்டா 101- அடிப்படையிலான ஹாஸ்பேக் மகிழுந்து.]]

ஜாஸ்டவா அறிமுகப்படுத்திய மிகவும் புகழ் வாய்ந்த தயாரிப்பு ஜாஸ்டவா 101 ஆகும். இந்த முன்-சக்கர செலுத்து வண்டியான ஃபியட் 128 என்பதன் அடிப்படையிலானது. ஹாச்பேக் பதிப்பாகவும் கிடைக்கப்பெறும் இது இத்தாலியில் ஒருபோதும் விற்பனை செய்யப்படவே இல்லை. இதன் தரமற்ற கட்டமைப்பு மற்றும் சார்புறவியலாமை பற்றி அநேக விமர்சனங்கள் எழுந்தபோதும் இது யூகோஸ்லாவியாவில் சிறப்பாகவே விற்பனையானது. இதற்குக் காரணம் மிகவும் மலிவான இதன் விலை மற்றும் பராமரிப்புச் செலவு மற்றும் எளிய பொறியியல் வடிவமைப்புமே.

1981ஆம் வருடம் ஜாஸ்டோவா 750 மறைந்தபிறகு, ஜாஸ்டோவா நிலையிலான சிறு மகிழுந்துச் சந்தையில் விழுந்த இடைவெளியினை ஜாஸ்டாவா கோரல் நிரப்பியது. இது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் யுகோ டெம்போ என நன்கு அறியப்பட்டுள்ளது. இது 1971ஆம் ஆண்டின் ஃபியட் 127 என்பதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு 1983ஆம் ஆண்டு ஃபியட் யூனோவினால் மாற்றப்படவிருந்தது. இந்த இரண்டு நாடுகளிலும் மிகவும் மலிவான மகிழுந்து என்பது இதுவேயாகும். இது பிரிட்டனில் நன்கு வரவேற்கப்பட்டாலும், போட்டி மிகுந்த அமெரிக்கச் சந்தையில் அவ்வளவான வரவேற்பினைப் பெறவில்லை. ஆயினும் 1992ஆம் வருட உள்நாட்டு அமைதியின்மை காரணமாக யூகோஸ்லோவியாவுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் இறக்குமதியிலும் இது விரைவான ஒரு தாழ் நிலையைக் கண்ணுற்றது.

கிராகுஜெவாக் என்னுமிடத்தில் உள்ள ஜாஸ்டவா தொழிற்சாலை மீது பின்னர் குண்டு வீசப்பட்டது. போர் முடிந்ததும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு கிராகுஜெவாக் பகுதியில் மற்றொரு தொழிற்சாலையில் இது உற்பத்திப் பணியைத் துவக்கியது.

1987ஆம் ஆண்டு ஜாஸ்டவா புதிய மகிழுந்து ஒன்றின் வடிவமைப்பினைக் கொணர்ந்தது. சந்தைகளில் யூகோ சானா என அறியப்படும் ஜாஸ்டவா ஃப்ளோரிடா ஜியார்ஜெட்டோ கியுகியாரோவினால் இடால்டிசைன் கலைக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டும் திறன் கூட்டப்பட்ட பியூகாட் பொறி இயந்திரங்களையும், விரைவில் வரவிருப்பதும் மிக்க புகழ் வாய்ந்ததுமான ஃபியட் டிப்போவின் இயந்திர நுட்பத்தை ஒற்றியதுமாக இருந்தது. இது பிரிட்டனில் 1988 முதல் 1992 வரை விற்பனையானது. ஆனால், பல காரணங்களினால், குறிப்பாக யூகோஸ்லோவாவில் உள்நாட்டுக் கலவரம் மற்றும் பிரிட்டனில் யூகோ பொருட்களின் புகழ் குறைந்துபட்டது ஆகியவற்றால், அதன் விற்பனை நிறுத்தப்பட்டது. தாய்நாட்டில் அதன் விற்பனை தொடர்ந்து, 1990ஆம் ஆண்டுகளின் இறுதி வரையிலும் உச்சத்தினில் இருந்து வந்தது.

அடுத்த 16 வருடங்களுக்கு மற்றொரு புதிய மகிழுந்தை ஜாஸ்டவா அறிமுகம் செய்யவில்லை. 2003ஆம் ஆண்டு ஜாஸ்டாவா 10 மாதிரியானது, மற்றொரு ஃபியட் வடிவமைப்பில் பேரிலானது. இந்த முறை இரண்டாம் தலை முறையைச் சேர்ந்த புன்ட்டோவை மாதிரியாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டது. புன்ட்டோவை ஒத்த அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும், மேலும், வோக்ஸ்வோகன் போலோ போன்ற பிற மகிழுந்துகளின் பல சிறப்பம்சங்களையும் தனது தன்மையில் ஒத்திருப்பதாகவும் இது பறை சாற்றுகிறது. இதன் அடிப்படையான புன்ட்டோவையும் உள்ளிட்ட, இதை ஒத்த அளவுள்ள மகிழுந்துகளின் ஒப்பீட்டு நிலையிலேயே இதன் விலை உள்ளது.

அறிமுகமான நான்கு வருடங்களுக்குப் பிறகும் ஜாஸ்டவா 10 முன்னாள் யூகோஸ்லோவியா]]விற்கு வெளியில் இன்னமும் விற்பனையாகவில்லை.

ஃபியட் தரப்புக் கூற்றுகளின்படி, ஃபியட் மற்றும் செர்ப் பொருளாதார மண்டல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் இடையே ஜாஸ்டவாவின் கிராகுவெக் தொழிற்சாலையை கையகப்படுத்துதல் குறித்த ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், புதிய நிறுவனம் ஒன்று துவங்கவிருப்பதை அறிவிப்பதாக உள்ளது. இதில் இத்தாலியர்கள் 70 சதமும் செர்ப் அரசு 30 சதமும் கொண்டிருப்பர்.[48] இதன் மேம்பாடு முடிவடைந்ததும் பல மாதிரிகள் அறிமுகமாக உள்ளன. இவற்றில் ஃபியட் 500 மற்றும் ரெனால்ட்டின் டாசியா வர்த்தகக் குறியீட்டுக்கு போட்டியாக ஃபியட் அறிமுகப்படுத்தவுள்ள புதிய, விலை மலிவான ஊர்தியும் உள்ளடங்கும்.

போலஸ்கி ஃபியட்/ எஃப்எஸ்ஓ (போலந்து)

தொகு

1920ஆம் ஆண்டு முதலாகவே ஃபியட் ஊர்திகள் போலந்தில் இருந்து வருகின்றன. 1932ஆம் ஆண்டு போலஸி ஜாக்லடி இஞ்சியியரிங்கின் (போலிஷ் எஞ்சினியரிங்க் வொர்க்ஸ், பிலின்ஜ்), ஃபியட் 508 என்னும் மாதிரியை 1939ஆம் ஆண்டு வரை ஒரு இராணுவ ஊர்தியாகவும் உற்பத்தி செய்து வந்தது. 1936ஆம் வருடம் இதற்கான உரிமம் ஃபியட் 518 என்னும் மாதிரியையும் உள்ளடக்கியதானது. 1965ஆம் ஆண்டு போலந்து நாட்டுப் பொதுவுடமை அரசு ஃபியட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, 1951ஆம் ஆண்டு போலந்து நாட்டின் வார்சா நகரில் கட்டமைக்கப்பட்ட எஃப்எஸ்ஓ தொழிற்சாலையில் ஃபியட்டின் குறிப்பிட்ட மாதிரி ஊர்திகளை உற்பத்தி செய்வதாக முடிவானது. போலஸ்கி ஃபியட் 125பி என்னும் புதிய மகிழுந்தின் உற்பத்தி 1967ஆம் ஆண்டு துவங்கியது. இது பார்வைக்கு ஃபியட் 125 மாதிரியை ஒத்திருந்தாலும், 1960ஆம் வருடத்திய பழைய ஃபியட் இயந்திர பாகங்களைப் பயன்படுத்தியிருந்தது. சொந்த நாட்டில் நல்ல முறையில் விற்பனையான இந்த மகிழுந்து விரைவில் மேற்கு ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதியாகலானது. 1978ஆம் ஆண்டு இது ஒரு புதிய ஐந்து -கதவு கொண்ட மாதிரியாக எஃப்எஸ்ஓ போலன்ஜ் என்னும் பெயர் கொண்டு ஃபியட் 125பி மாதிரியின் ஒடும் பற்சக்கரம் என்பதன் பயன்பாட்டினைக் கொண்டிருந்தது. 1982ஆம் வருடத்திற்குப் பிறகு ஃபியட் தனது உரிமத்தைத் திரும்பப் பெற்ற பிறகு எஃப்எஸ்ஓ முத்திரை மீண்டும் இடப்பட்டது.

போலஸ்கி ஃபியட் 125பி வடிவமைப்பு 1991ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது. 25 வருடங்களுக்கு நீண்டிருந்த இந்தக் கால கட்டத்தில் சுமார் 1,500,000 மகிழுந்துகள் உற்பத்தியாயின. இதை ஒத்த ஐரோப்பிய மலிவு விலை மகிழுந்துகளுக்குப் போட்டியாக இது விளங்கியது. இது வழக்கொழிந்த காலத்தில், பல கிழக்கு ஐரோப்பிய மகிழுந்து உற்பத்தியாளர்களும், 1960ஆம் ஆண்டினை விட்டு வெளியேறாது நின்று விட்ட பழங்காலத்திய தோற்றம் கொண்ட வடிவமைப்புகளுக்குப் பதிலாக, நவீன மேற்கத்திய பாணி வடிவமைப்பை மேற்கொள்ளத் துவங்கினர்.

1995ஆம் ஆண்டு தென் கொரியாவின் தாவூ நிறுவனம் எஃப்எஸ்ஓவினைக் கையகப்படுத்தியது. இதற்கிடையில், எஃப்எஸ்ஓ போலன்ஸ், கரோ என்னும் மகிழுந்தினால் மாற்றமடைந்திருந்தது. இது 1960ஆம் ஆண்டுகளின் நுட்பங்களைக் கொண்டிருந்த 1978ஆம் வருட வடிவமைப்பின் ஒப்பனையாகவே இருந்தது. இந்த மகிழுந்து மேற்கு ஐரோப்பாவில் 1990ஆம் ஆண்டு வரை விற்பனையாகி, இறுதியில் 2002ஆம் ஆண்டு முடிவுற்றது.

தாவூ நிறுவனம் திவாலா நிலை அடைந்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அதனைக் கையகப்படுத்தியதும், 2000ஆம் ஆண்டுகளின் இறுதியில் எஃப்எஸ்ஓ மீண்டும் சுயேச்சை நிலையை அடைந்தது. இருப்பினும், தாவூ மேடிஜ் மற்றும் தாவூ லானோஸ் ஆகியவற்றின் பதிப்புகளை எஃப்எஸ்ஓ தொடர்ந்து உற்பத்தி செய்து வரலானது. ஏற்கனவே அறிமுகமாகியுள்ள செவர்லெட் ஏவியோ மகிழுந்து தயாரிப்பில் குவிமையம் கொள்வதே இத் தொழிற்சாலையின் இலக்காக இருந்த போதிலும், இந்த மகிழுந்துகளும் இன்று வரை உற்பத்தியில் உள்ளன.

பைல்ஸ்கோபியாலாவில் உள்ள தி ஃபேப்ரிகா சமோச்சோடௌ மலோலிக்ராஜோவ்சிச் (எஃப்எஸ்எம்) மற்றும் டிக்கி ஆகியவை 1973ஆம் ஆண்டு ஃபியட் 126பி என்னும் மாதிரியையும், 1991ஆம் ஆண்டு சிங்குவின்செண்டோ என்னும் மாதிரியையும் உருவாக்கத் துவங்கின.

1992ஆம் ஆண்டு எஃப்எஸ்எம் (1993ஆம் ஆண்டிலிருந்து ஃபியட் ஆட்டோ போலந்து) நிறுவனத்தின் 90 சத இருப்பை ஃபியட் ஆட்டோ வாங்கியது. அதன் பிறகு ஃபியட் சிங்குவின்செண்டோ, ஃபியட் யூனோ, ஃபியட் செயிண்சிண்டோ, ஃபியட் சியன்னா மற்றும் ஃபியட் பாலியோ வீக்எண்ட் மாதிரிகளை வருடத்திற்கு 200,000 அலகுகள் என்னும் உற்பத்தித் திறனில் தயாரித்து வருகிறது. 2003ஆம் ஆண்டு ஃபியட் பண்டா மற்றும் 2003ஆம் ஆண்டு ஃபியட் 500 ஆகியவற்றைத் தயாரிக்கும் ஒரே உற்பத்தியாளராக எஃப்எஸ்எம் விளங்கியது. இதன் உற்பத்தித் திறன் வருடத்திற்கு 280,000 அலகுகளாக அதிகரித்தது. மேலும் 2006-2007 ஆண்டுகளில் புதிய முதலீடுகளின் காரணமாக இது அரை மில்லியனுக்கும் மேலாக அதிகரிக்கும். ஃபியட் ஆட்டோ போலந்து ஃபோர்ட்-ஃபியட் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பான ஃபோர்ட் கா என்னும் புதிய மாதிரி மகிழுந்தினை தனது உற்பத்தியில் இணைக்கவும் இது உதவும். பண்டா மற்றும் 500 ஆகிய இரண்டுமே முறையே 2004 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் ஆண்டிற்கான ஐரோப்பிய மகிழுந்து விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தகுந்தது.[49]

 

ஃபியட் 500 & 126]]

போலந்தின் இதர ஃபியட் முதலீடான பவர்டிரைன் நிறுவனம் ஃபியட் மற்றும் ஜிம் மாதிரி மகிழுந்துகளின் ஃபியட்-ஜிஎம் கூட்டுத் தயாரிப்பான மல்ட்டிஜெட் பொறி இயந்திர உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. (காண்க: ஜேடிடி பொறி இயந்திரங்கள்)

ஆட்டோவாஜ் லடா (சோவியத் ஒன்றியம் / ரஷ்யா)

தொகு

1966ஆம் ஆண்டு, வோல்கா நதிக்கரையில் ஆட்டோவாஜ் என்னும் ஒரு புதிய மகிழுந்துத் தொழிற்சாலையை நிறுவ சோவியத் ஒன்றியம் ஃபியட்டின் உதவியைப் பெற்றது. டோல்யட்டி என்னும் திட்டமிட்டுக் கட்டமைத்த ஒரு நகரம் (இது முன்னாள் இத்தாலியப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்லியாட்டியின் நினைவாகப் பெயரிடப்பட்டதாகும்) தொழிற்சாலையைச் சுற்றிலுமாக அமைந்தது. இத்தொழிற்சாலை ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் வோக்ஸ்வாகன் பீட்டில் மற்றும் சிட்ரோயன் 2சிவி ஆகியவற்றை ஒத்ததாக "மக்களின் மகிழுந்து" என்னும் மாதிரியை உருவாக்கலானது. லடா என்றழைக்கப்பட்ட இப்புதிய சோவியத் மகிழுந்து அதிக இட வசதி கொண்டிருந்தது. இதில் நாற்கதவு அறை மற்றும் ஐந்து கதவு அறை ஆகிய மாறுபட்ட வடிவமைப்புகள் இருந்தன. பர்மிங்ஹாம் நக்ரின் ஹெர்பெர்ட்-பிஎஸ்ஏ அளித்த இயந்திரக் கருவிகளைக் கொண்டு ஃபியட் லடா மகிழுந்தின் அநேக பாகங்களைக் கட்டமைத்தது.[50] சோவியத் ஒன்றியத்தின் மிக மோசமான வண்டியோட்டும் நிலைகள் மற்றும் உச்ச நிலைக் குளிர்காலங்கள் ஆகியவற்றைத் தாங்கும் திறன் கொண்டதாக 124 என்னும் மாதிரியின் வடிவமைப்பு உயர்நிலை அளிக்கப்பட்டது. இதனை மேற்கு ஐரோப்பா, கனடா மற்றும் சில மூன்றாம் உலக நாடுகளும் இறக்குமதி செய்யலாயின. 1980ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் தமது மலிவான விலை காரணமாக இந்த மகிழுந்துகள் சிறப்பாகவே விற்பனையாகத் துவங்கின. 1980ஆம் ஆண்டு இந்த மகிழ்ந்து, (சில சந்தைகளில் சூடிய வர்த்தகப் பெயராக) லடா ரிவா என்பதாக உயர் நிலை பெற்றது.

1977ஆம் ஆண்டு நாற்சக்கர இயக்கி லடா நிவா அறிமுகமானது. இது ஃபியட் அடிப்படையிலான சில உதிரி பாகங்களைப் பயன்படுத்தியது (எ.கா: பொறி இயந்திரம் மற்றும் பற்சக்கரப் பெட்டி). ஆனால் இதன் உடற்கட்டமைப்பும் நாற்சக்கர இயக்கியும் வாஜ் என்பதன் வடிவமைப்பினை ஒற்றியதாகும். 2008ஆம் ஆண்டு வரை ரிவா மற்றும் நிவா ஆகிய இரண்டுமே உற்பத்தியில் இருந்தன.

2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃபியட் மற்றும் செவெர்ஸ்டாலின் சொல்லர்ஸ் ஜேஎஸ்சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் எண்ணிக்கையில் மிகுந்ததான கூட்டிணைவு ஒப்பந்தங்களை அறிவித்தன. ஃபியட் மகிழுந்துகள் மற்றும் பொறி இயந்திரங்களை ரஷ்யாவில் தயாரித்து விற்கவிருப்பதாக இவை அறிவித்துள்ளன. இவை ஒரு வருடத்திற்கு 90,000 அலகுகள் டீசல் பொறி இயந்திரங்களையும் மற்றும் 50,000 அலகுகள் ஃபியட் லினியா செடான்களையும் தயாரிக்கும். இவற்றின் தயாரிப்பினை 2008ஆம் ஆண்டு துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கேரியா

தொகு

1967-1971 ஆண்டுகளில் பல்கேரியா நாட்டின் லவெக் என்னுமிடத்தில் பிரின் ஃபியட் உருவானது.

டொஃபாஸ், துருக்கி

தொகு

டோஃபாஸ் ஃபியட்டுக்குச் சொந்தமான ஒரு கூட்டு முனைவாகும் (இதன் பங்குகளில், ஃபியட் க்ரூப் ஆட்டோபைல்ஸ் 37.8%, கேஓசி 37.8% மற்றும் பிற நிறுவனங்கள் 24.3% எனவும் கொண்டுள்ளன).[51] ஃபியட் 124 என்பதன உரிமத்தினைப் பெற்று டோஃபாஸ் முரத் என்பதாக டோஃபாஸ் தயாரித்தது. ஃபியட் 131 என்னும் பதிப்பினால் மாற்றியமைக்கப்பட்ட இது டோஃபாஸ் சஹின் எனப்படுகிறது. இன்று, ஃபியட் லினியா மகிழுந்துகள் துருக்கியில் ஃபியட்-டோஃபாஸ் கூட்டு முனைவில் உற்பத்தியானவையே. 2007ஆம் ஆண்டின்படி துருக்கிய மகிழுந்துச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு 12.1 சதவிகிதமாகும்.[52]

சியாட், ஸ்பெயின்

தொகு

ஸ்பெயின் நாட்டில் சியாட் - சோசிடாட் எஸ்பினோலா டி ஆட்டோமொவிலெஸ் டி டுரிஸ்மோ (ஸ்பானியா சுற்றுலா மகிழுந்து நிறுவனம்) என்பது ஃபியட்டின் துணை கொண்டு 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 1981ஆம் ஆண்டு ஃபியட் தனது ஆதரவை விலக்கிக் கொள்ளும்வரையிலும், ஃபியட் மாதிரிகளைத் தனது வர்த்தகப் பெயரின் கீழாகவே உற்பத்தி செய்து வந்தது. 1982ஆம் ஆண்டு, ஜெர்மானிய உற்பத்தியாளரான வோக்ஸ்வாகன் நிறுவனத்துடன் சியாட் ஒரு கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1986ஆம் ஆண்டின் இறுதியில், பெரும்பங்கினை வாங்கிய பிறகு, சியாட் வோக்ஸ்வாகன் குழுமத்தின் ஒரு பகுதியானது. இருப்பினும், ஃபியட் அடிப்படையிலான சில மாதிரிகளின் உற்பத்தி தொடர்ந்தே வந்தது. இறுதியான ஃபியட் அடிப்படையிலான சியாட் ஊர்தி மார்பெல்லா 1996ஆம் ஆண்டு வரை இறுதி நிலையை அடையவில்லை.

தென் ஆப்பிரிக்கா

தொகு

தென் ஆப்பிரிக்காவில், ஃபியட் யூனோவினை நிஸ்ஸான் என்னும் நிறுவனம் உரிமம் பெற்று பாகம் இணைப்புச் செய்து வந்தது. இது குறைவான அளவிலேயே, ஃபியட்டின் வர்த்தக் குறியீட்டைப் பெற்றிருப்பதாக, தனது விற்பனையாளர்கள் மூலம் யூனோ என்னும் பெயரில் விற்று வந்தது.

எத்தியோப்பியா

தொகு

ஃபியட் 131 ஹாலந்து மகிழுந்து டிஓசிசி எனப்படுகிறது.

ஹெல்வான், எகிப்து

தொகு

1952ஆம் ஆண்டின் எகிப்தியப் புரட்சியைத் தொடர்ந்து, அதிபர் கமால் அப்தெல் நாசர் ஒரு அரசு சார் ஊர்தி நிறுவனம் அமைக்குமாறு ஈஜிஐடி என்னும் பொது அறிவுசார் முகமைக்கு ஆணையிட்டார். நாஸர் 1960ஆம் ஆண்டு எகிப்தில் ஹெல்வான் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது ஃபியட் அடிப்படையிலான சில மாதிரிகளைத் தயாரிக்கத் துவங்கிப் பின்னர் டோஃபாஸ் அனுமதியின் கீழ் டோஃபாஸ் சஹின் மகிழுந்துகளைத் தயாரிக்கலானது. ஃபியட் 128 என்பதன் இறுதி மாதிரி 2008ஆம் வருடம் அமைக்கப்பட்டது. எகிப்தில் சஹின் மகிழுந்து இன்னமும் உற்பத்தியில் உள்ளது.

பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், இந்தியா

தொகு

பிரிமியர் ஆட்டோமொபைல்ஸ் லிமிடட், 1944ஆம் வருடம் நிறுவப்பட்ட, மும்பையில் மூல தளம் கொண்டுள்ள ஒரு ஊர்தித் தயாரிப்பு நிறுவனமாகும். 1951ஆம் வருடம், இந்தியச் சந்தைக்காக, ஃபியட் 500 என்பதன் பதிப்புக்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யத் துவங்கியது. இதைத் தொடர்ந்து 1954ஆம் வருடம் ஃபியட் 1100 அறிமுகமானது. 1973ஆம் ஆண்டு, முதன் முறையாக பிரிமியர் என்னும் பெயர் இதன் ஊர்திகளுக்குப் பயன்படுத்தப்படலானது. ஃபியட் 1100 என்பதன் அடிப்படையிலான பிரிமியர் பிரசிடெண்ட் பிரிமியர் பத்மினியானது. 1984ஆம் வருடம் ஃபியட் 124 அடிப்படையிலான பிரிமியர் 118என்ஈ மற்றும் 138டி மாதிரிகள் துவக்கப்பட்டன.

ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடட் (எஃப்ஐஏபிஎல்) ஃபியட் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஒரு கூட்டுத் தொழில் முனைவாகும். இது 1997ஆம் வருடம் நிறுவப்பட்டது. ஃபியட் நிறுவனம் இந்தியாவில் பாலியோ ஸ்டைல் மற்றும் பாலியோ ஸ்டைல் மல்டிஜெட் ஆகியவற்றைக் கட்டமைக்கிறது. தனது ஃபியட் 500 ஊர்தியை இத்தாலியிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்து கொள்கிறது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற லீனியா, கிரான்டே புன்ட்டோ மற்றும் பிரேவோ போன்ற தனது பல தயாரிப்புகளையும் இந்தியச் சந்தைக்காக ஃபியட் திட்டமிட்டுள்ளது. இவற்றில் லீனியா 2009ஆம் வருடம் ஜனவரி மாதமும், பண்டோ 2009ஆம் வருடம் ஜூன் மாதமும் வெளியாயின. இந்த இரண்டு மகிழுந்துகளுமே பத்திரிகைத் துறை மற்றும் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. 2009ஆம் ஆண்டின் இடையில் பிரேவோ அறிமுகமாகும். மஹாராஷ்டிராவில் புனே அருகில் இராஞ்சாகாவுன் அருகில் அமைந்துள்ள ஃபியட் தொழிற்சாலை டாட்டா இண்டிகாவையும் உற்பத்தி செய்கிறது.[53]

இலங்கை

தொகு

1964-65ஆம் ஆண்டுகளில் இலங்கை போக்குவரத்துக் கழகம், ஃபியட்டுடன் கூட்டுறவு கொண்டு இலங்கையில் பேருந்து உற்பத்தியினைத் துவக்கத் திட்டமிட்டது. எனினும், 1965ஆம் வருடம் அரசு மாறியதன் பிறகு, பிரித்தானிய லேலேண்ட் உடனான ஒரு ஒப்பந்தத்தையே சிடிபி (CTB) தேர்ந்தெடுத்தது

1973ஆம் ஆண்டு தொழில் முனைவர் உபாலி விஜெவர்த்தனாவின் (Upali Wijewardena) உபாலி மோட்டார் கம்பெனி, 'உபாலி ஃபியட்' என அழைக்கப்படும் மகிழுந்துகளை பாகம் இணைப்புச் செய்து தயாரிக்கலானது. இருப்பினும், 1978ஆம் வருடம் திறந்த சந்தை அறிமுகமாகவே, இதன் உற்பத்தி நின்று விட்டது.

வட கொரியா

தொகு

வட கொரியாவின் ஊர்தி உற்பத்தியாளரும் விற்பனையாளருமான பையோங்குவா மோட்டார்ஸ், 2002ஆம் ஆண்டு துவங்கி, ஃபியட் சியன்னாவின் அடிப்படையில் ஹவிபாரம் (Hwiparam) என்பதனையும், ஃபியட் டொப்லோவின் அடிப்படையில் பெப்போகுக்கி என்பதையும், உரிமம் பெற்று ஃபியட் மாதிரிகளின் பாக இணைப்புகளை அமைத்து உற்பத்தி செய்து வருகிறது.

குறிப்புதவிகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2009" (PDF). Fiat Group. Archived from the original (PDF) on 2012-05-29. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
  2. Szczesny, Joseph R. (2009-05-01). "Here Come the Fiats: Vrooom". TIME இம் மூலத்தில் இருந்து 2009-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090504142148/http://www.time.com/time/business/article/0,8599,1895296,00.html. பார்த்த நாள்: 2009-05-07. 
  3. "Fiat Buys Chrysler, Forms Sixth-Largest Carmaker (Update3)". Bloomberg.com. 2005-05-30. பார்க்கப்பட்ட நாள் 2009-06-10.
  4. Fiat n.1 in Brasile (a maggio) autoblog.it and Ventas Mayo 2007: Brasil பரணிடப்பட்டது 2012-02-27 at the வந்தவழி இயந்திரம் es.autoblog.com Retrieved on 2007-11-23.
  5. "Fiat Cinquecento named European Car of the Year". telegraph.co.uk/motoring (London). 2007-11-24. http://www.telegraph.co.uk/motoring/news/2749678/Fiat-Cinquecento-named-European-Car-of-the-Year.html. பார்த்த நாள்: 2009-10-21. 
  6. "Fiat Quarterly Profit Rises 26% on Car, Tractor Sales". bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2008-03-13.
  7. ""Fiat Professional" is the new brand name for Fiat Light Commercial Vehicles". fiatgroupautomobilespress.com. பார்க்கப்பட்ட நாள் 2008-03-09.
  8. "Bobsled Jamaican athletes playing "biliardino", or table mini soccer". lastampa.it. Archived from the original on 2008-12-25. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
  9. 9.0 9.1 JOHN TAGLIABUE (1999-09-12). "Bringing Good Things to Fiat?". query.nytimes.com. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9d03e0d7123df931a2575ac0a96f958260&st=cse&sq=Fresco+Bring+Good&scp=2. பார்த்த நாள்: 2008-03-11. 
  10. Georgano, G. N. Cars: Early and Vintage, 1886-1930 (London: Grange-Universal, 1990), p.24 cap.
  11. 11.0 11.1 Georgano, p.24 cap
  12. 12.0 12.1 Bob Jennings. "Fiat centenary something to crow over". drive.com.au. Archived from the original on 2008-10-05. பார்க்கப்பட்ட நாள் 2008-03-09.
  13. "Fiat, a joint-stock company that soon become famous". allaboutitaly.com. Archived from the original on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2008-01-25.
  14. "Case New Holland, Family history". themanufacturer.com. Archived from the original on 2009-02-20. பார்க்கப்பட்ட நாள் 2008-03-12.
  15. "Fiat SpA". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2008-03-12.
  16. Georgano, p.151
  17. Georgano, p.8
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 "MotorWeek: Fiat's Arabian connection". Motor: Pages 18. 11 December 1976. 
  19. ALAN COWELL (April 19, 1993). "Corruption at Fiat Is Admitted by Chairman". query.nytimes.com/gst. பார்க்கப்பட்ட நாள் 2008-03-12.
  20. "Sergio Marchionne, Fiat's turnaround man". economist.com. Dec 1st 2005. http://www.economist.com/business/displaystory.cfm?story_id=E1_VNGPQTS. பார்த்த நாள்: 2008-04-13. 
  21. "Ride the steel cycle". moneytoday.digitaltoday.in. 3 April 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-04-13.
  22. "Business | Germany picks Magna to save Opel". BBC News. 2009-05-30. http://news.bbc.co.uk/2/hi/business/8074924.stm. பார்த்த நாள்: 2009-06-03. 
  23. "Sergio Marchionne steps down as Fiat CEO". autoblog.com. பார்க்கப்பட்ட நாள் 2009-01-20.
  24. "20-F SEC Filing, filed by FIAT S P A on 30 June 2006". sec.edgar-online.com. Archived from the original on 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-04-05.
  25. "Fiat to Return to the U.S." businessweek.com. பார்க்கப்பட்ட நாள் 2008-07-14.
  26. 26.0 26.1 "Fiat confirms plan to acquire 35% stake in Chrysler". autonews.com/. பார்க்கப்பட்ட நாள் 2009-01-20.
  27. "20.01.2009 FIAT TO TAKE EQUITY STAKE IN CHRYSLER AS ALLIANCE IS ANNOUNCED". italiaspeed.com/2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-20.
  28. "FIAT GROUP AND CHRYSLER ENTER INTO A GLOBAL STRATEGIC ALLIANCE" (PDF). fiatgroup.com/en-us/mediacentre. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
  29. 29.0 29.1 "Chrysler files for bankruptcy, signs Fiat deal". reuters.com/article. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
  30. Court asked to stop Chrysler sale,, BBC, June 7, 2009
  31. "Supreme Court Won't Block Chrysler-Fiat Deal". online.wsj.com/article. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.
  32. retrieved 2 May 2009
  33. Revista Veja (1979-06-13). "O petróleo da cana" (in Portuguese). Editora Abril. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  34. William Lemos (05 பிப்ரவரி 2007). "The Brazilian ethanol model". ICIS news. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18. {{cite web}}: Check date values in: |date= (help)
  35. Milton Briquet Bastos (2007-06-20). "Brazil's Ethanol Program – An Insider's View". Energy Tribune. Archived from the original on 2011-07-10. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.
  36. Adam Lashinsky and Nelson D. Schwartz (2006-01-24). "How to Beat the High Cost of Gasoline. Forever!". Fortune. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.
  37. Joel Leite (2005-01-04). "Fiat em 2004: 17 lançamentos" (in Portuguese). WebMotors. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  38. "Vendas Atacado Mercado Interno Tipo e Empresa - Nacionais e Importados - 2008 (Tabela 05)" (PDF) (in Portuguese). ANFAVEA - Associação Nacional dos Fabricantes de Veículos Automotores (Brasil). Archived from the original (PDF) on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) Sales include 564,402 automobiles and 101,212 light-duty trucks, including imports.
  39. Christine Lepisto (2009-01-07). "Por 7 anos consecutivos a Fiat é líder de vendas no Brasil!" (in Portuguese). MotorClube. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  40. "Vendas Atacado Mercado Interno por Tipo e Empresa - Combustível Flex Fuel - 2008 (Tabela 08)" (PDF) (in Portuguese). ANFAVEA - Associação Nacional dos Fabricantes de Veículos Automotores (Brasil). Archived from the original (PDF) on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)Sales include 564.108 flex automobiles and 92.999 light-duty trucks, including imports from Argentina.
  41. Christine Lepisto (2006-08-27). "Fiat Siena Tetra Power: Your Choice of Four Fuels". Treehugger. Archived from the original on 2008-09-19. பார்க்கப்பட்ட நாள் 2008-08-24.
  42. "Nouvelle Fiat Siena 2008: sans complexe" (in French). Caradisiac. 2007-11-01. Archived from the original on 2013-07-21. பார்க்கப்பட்ட நாள் 2008-08-31.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  43. "Lei Nº 8.723, de 28 de Outubro de 1993. Dispõe sobre a redução de emissão de poluentes por veículos automotores e dá outras providências" (in Portuguese). Casa Civil da Presidência da República. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)See article 9º and modifications approved by Law Nº 10.696, 2003-07-02
  44. Julieta Andrea Puerto Rico (2008-05-08). "Programa de Biocombustíveis no Brasil e na Colômbia: uma análise da implantação, resultados e perspectivas" (in Portuguese). Universidade de São Paulo. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)Ph.D. Dissertation Thesis, pப. 81-82
  45. Agência AutoInforme (2006-06-19). "Siena Tetrafuel vai custar R$ 41,9 mil" (in Portuguese). WebMotor. பார்க்கப்பட்ட நாள் 2008-08-14.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) ஃபியட் நான்கு எரிபொருட்களில் செலுத்தக் கூடியது எனினும், உண்மையில் அது மூன்று எரிபொருட்களில், அதாவது இயற்கை வாயு, ஈத்தனால் மற்றும் காஸோலைன் என்னும் மூன்று எரிபொருட்கள் கொண்டே செலுத்துவதாக இந்தக் கட்டுரை வாதிடுகிறது. காரணம் பிரேசிலிய காஸோலைன் ஈ20 மற்றும் ஈ25 ஆகியவற்றின் கலப்பாகும்.
  46. "Bunte Mischung: Wo und welche Fiat-Modelle in aller Welt produziert werden.". Auto Motor u. Sport Heft 7 1978: Seite 15. date 29 March 1978. 
  47. "History of Fiat in Argentina". auto-historia.com.ar. Archived from the original on 2004-11-11. பார்க்கப்பட்ட நாள் 2009-05-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  48. "Fiat signs agreement with Serb govt to acquire Zastava's Kragujevac plant". forbes.com/feeds. Archived from the original on 2008-10-19. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21.
  49. Fiat Corporate Newletter.
  50. "Main". Bsamachinetools.com. Archived from the original on 2009-05-08. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
  51. "Fiat and PSA Citroën reveal new van family". fiat.co.nz. Archived from the original on 2008-10-15. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.
  52. "Automotive Group". koc.com.tr. Archived from the original on 2008-07-19. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.
  53. "About Us". fiat-india.com. Archived from the original on 2008-07-02. பார்க்கப்பட்ட நாள் 2008-07-03.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fiat
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பியாட்&oldid=3925391" இலிருந்து மீள்விக்கப்பட்டது