பிலிபித் மக்களவைத் தொகுதி

இந்தக் கட்டுரை உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பிலிபித் மக்க

பிலிபித் மக்களவைத் தொகுதி (Pilibhit Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

பிலிபித்
UP-26
மக்களவைத் தொகுதி
Map
பிலிபித் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952-முதல்
மொத்த வாக்காளர்கள்18,31,699 [1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி பாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

பிலிபித் மக்களவைத் தொகுதி ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை[2]

வ. எண் பெயர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
118 பகோரி பரேலி அதௌர் ரகுமான் சமாஜ்வாதி கட்சி
127 பிலிபித் பிலிபித் சஞ்சய் சிங் கங்வார் பாரதிய ஜனதா கட்சி
128 பர்க்கேரா சுவாமி பிரவகதானந்த் பாரதிய ஜனதா கட்சி
129 புரன்பூர் (ப.இ.) பாபுராம் பாசுவான் பாரதிய ஜனதா கட்சி
130 பிஸல்பூர் விவேக் குமார் வர்மா பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

முதல் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியும் இதனைத் தொடர்ந்து பிரஜா சோசலிச கட்சி இந்த இடத்தை மூன்று முறை வென்றது. பின்னர், அடுத்த தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசும் கூட்டணிக் கட்சிகளும் இந்த இடத்தை நான்கு முறை வென்றுள்ளன. 1989 முதல், நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மேனகா காந்தி இந்த இடத்தை தனது செல்வாக்கின் கீழ் வைத்திருந்தார். பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டதன் மூலமோ அல்லது சுயேச்சையாகவோ போட்டியிடு இவர் இந்த இடத்தை வென்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சி 1991 நாடாளுமன்றத் தேர்தலில் பிலிபித் நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதா தளத்தின் மேனகா காந்தியினைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. அயோத்தி அலை 2004க்குள் மேனகா காந்தி பாஜகவில் சேர்ந்தார். இந்த ஆண்டு பாஜகவின் வேட்பாளராக இவர் இந்த இடத்தில் போட்டியிட்டு வென்றார். இவர் 2009-இல் ஆன்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2014-இல் பிலிபித் திரும்பினார். பிலிபித் நாடாளுமன்றத் தொகுதி, இந்திய நாடாளுமன்றத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பெண் வேட்பாளரை அனுப்பிய ஒரு சில தொகுதிகளில் ஒன்றாகும்.[3]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 முகந்த் லால் அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு
1957 மோகன் சுவரூப் பிரஜா சோசலிச கட்சி
1962
1967
1971 இந்திய தேசிய காங்கிரசு
1977 முகமது சம்சுல் அசன் கான் ஜனதா கட்சி
1980 அரிஷ் குமார் கங்காவர் இந்திய தேசிய காங்கிரசு
1984 பானு பிரதாப் சிங்
1989 மேனகா காந்தி ஜனதா தளம்
1991 பரசுராம் கங்வார் பாரதிய ஜனதா கட்சி
1996 மேனகா காந்தி ஜனதா தளம்
1998 சுயேச்சை
1999
2004 பாரதிய ஜனதா கட்சி
2009 வருண் காந்தி
2014 மேனகா காந்தி
2019 வருண் காந்தி
2024 ஜிதின் பிரசாதா

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 இந்தியப் பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பிலிபித்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜிதின் பிரசாதா 607,158 52.30 7.08
சமாஜ்வாதி கட்சி பகவத் சரண் கங்வார் 442,223 38.09   0.26
பசக அனிசு அகமது கான் 89,697 7.73   7.73
நோட்டா நோட்டா (இந்தியா) 6,741 0.58 0.26
வாக்கு வித்தியாசம் 1,64,935 14.21 7.34
பதிவான வாக்குகள் 1,160,947 63.11 4.30
பதிவு செய்த வாக்காளர்கள் 1,839,561   4.25
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் 7.08

(ஆதாரம் இந்திய தேர்தல் ஆணையம்) [4]

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Uttar Pradesh Delimitation Old & New, 2008". Chief Electoral Officer, Uttar Pradesh இம் மூலத்தில் இருந்து 13 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111113181505/http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf. 
  3. "Election Commission India". Archived from the original on 18 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  4. "Constituency wise detailed result, 2024". 2024-06-04.

வெளி இணைப்புகள்

தொகு