புனர்வசு
புனர்வசு (Punarvasu) அல்லது புனர்பூசம் என்பது இந்து சோதிடத்தில் ஒரு நட்சத்திரம் ஆகும். இது இரட்டை விண்மீன்குழுவில் உள்ள காஸ்டர் மற்றும் பொல்லக்ஸ் என்ற இரண்டு பிரகாசமான விண்மீன்களைக் குறிக்கிறது: .
சோதிடம்
தொகுபுனர்வசு மிதுனத்தின் 20 பாகை 00 நிமிடங்களிலிருந்து கடகத்தின் 03 பாகை 20 நிமிடம் வரை நீடிக்கிறது.
இராமாயணம்
தொகுபுனர்பூசம் என்பது இராமர் பிறந்த நட்சத்திரம்.
“ | “ சடங்கு முடிந்ததும், ஆறு பருவங்கள் கடந்து, பின்னர் பன்னிரண்டாம் மாதத்தில், சித்திரை மாதத்தின் ஒன்பதாம் நாளில் [ஏப்ரல்-மே,] அன்றைய நட்சத்திரமான புனர்பூசம் (இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்) உச்சத்தில் இருந்தது. மேலும் சூரியன், செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன் ஆகிய ஒன்பது கிரகங்களில் ஐந்து கிரகங்கள் உச்ச நிலையில் இருக்கும்போது, பின்னர் அரசி கோசலை தாமரை போன்ற சிவப்பு கண்கள், நீண்ட கைகள், ரோஜா உதடுகள், மேளம் போன்ற குரல் போன்ற அனைத்து தெய்வீக பண்புகளுடன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். மேலும் அனைத்து உலகங்களாலும் போற்றப்படும் சூரிய குலத்தை மகிழ்விக்க விஷ்ணுவின் அம்சமாக இராமர் பிறந்தார்” . - நூல் I : பால காண்டம், வால்மீகி இராமாயணம் அத்தியாயம் (சர்கம்) 18, பாடல் 8, 9, 10 மற்றும் 11[1] |
” |
புனர்வசு என்ற சொல் புன + வசு என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது திரும்புதல், புதுப்பித்தல், மறுசீரமைப்பு அல்லது மீண்டும் மீண்டும் செய்தல். சப்த ரிஷிகளுள் ஒருவரான காசியபர் மூலம் தேவர்களின் தாய் அதிதிக்கு 12 ஆதித்தர்கள் பிறந்தனர். ஆதித்தர்களின் எண்ணிக்கை என்றும் ஒரேயளவாகவே இருந்ததாகத் தெரியவில்லை. வேதங்களில் இவர்களை பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்துக்களின் மிகப் பழைய வேதமான ரிக் வேதம் ஆறு ஆதித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. பிராமணங்கள் எட்டு வரையான ஆதித்தர்களைப் பற்றிக் கூறுகின்றன. இதற்குப் பின்வந்த நூல்களில் கூடிய அளவாகப் பன்னிரண்டு தேவர்கள் ஆதித்தர் குழுவில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்தியர்கள் உள்ளனர். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் பின்வருமாறு:
ஆகியோர் அடங்குவர்
கடவுள்களாஇப் பெற்றெடுத்த அன்னை அதிதி, உண்மையானவளாகவும், பெருந்தன்மை, தூய்மை, பிரபுத்துவம், அழகு மற்றும் புகழ் எல்லாவற்றின் களஞ்சியமாக இருக்கிறாள். இந்த நட்சத்திரமே இந்த நற்பண்புகளுக்குக் காரணம். ஒருமுறை பிரிந்த பிறகு புதிதாகத் தொடங்க, புதிய வாழ்க்கையைத் தொடங்க, தொலைதூர தேசத்திலிருந்து திரும்பி வர புனர்வசு குறிக்கிறது. இது கட்டுப்பாடு மற்றும் வரம்பு மற்றும் எல்லையற்ற இடத்திலிருந்து விடுதலையைக் குறிக்கிறது.
பெயரிடும் மரபு
தொகுபாரம்பரிய இந்துக் கொள்கையின்படி குழந்தைகளுக்கு அவர்களின் லக்ன நட்ச்த்திரத்தின்படி பெயரிடப்படுவது வழக்கம். முதல் பெயர்கள் பின்வரும் சமசுகிருத எழுத்துக்களில் தொடங்கப்பட வேண்டும்: அதாவது புனர்வசு அல்லது புனர்பூசம்
- கே (" கேசரி" என உச்சரிக்கப்படுகிறது)
- கோ (" கோப்பெருஞ்சோழன் " என உச்சரிக்கப்படுகிறது)
- ஹா (ஹ-ரா என உச்சரிக்கப்படுகிறது) உதாரணமாக ஹரிகா, ஹரிணி, ஹர்ஷிதா, ஹரிஷ், ஹரிதா, முதலியன.
- ஹாய் (" ஹிரண்யகசிபு" என உச்சரிக்கப்படுகிறது)