போட்சுவானா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
போட்ஸ்வானாக் குடியரசு என்று முறைப்படி அழைக்கப்படும் போட்ஸ்வானா நாடு (வார்ப்புரு:Lang-tn), முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை பாட்ஸ்வானர் என்று அழைப்பர் (தனியொருவரை மோட்ஸ்வானா அல்லது மோட்ஸ்வானர் என்பர்). முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதியாகிய பெச்சுவானாலாந்து என்பதாகும். செப்டம்பர் 30, 1966ல் விடுதலை பெற்றபின் போட்ஸ்வானா என்னும் பெயர் பெற்றது. போட்ஸ்வானா இன்று பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் அணியில் உள்ள ஒரு நாடு. இதன் தெற்கிலும், தென்கிழக்கிலும் தென் ஆப்பிரிக்காவும் மேற்கே நமிபியாவும், வடக்கே சாம்பியாவும், வடகிழக்கே சிம்பாப்வேயும் உள்ளது. இந்நாட்டின் பொருளியல் தென் ஆப்பிரிக்கவுடன் நெருங்கிய தொடர்பும் தாக்கமும் கொண்டது. போட்ஸ்வானாவின் பொருளியலில் கனிமங்களைத் எடுத்தலும் (38%), தொழிலின சேவைகளும் (44 %), கட்டுமானங்களும் (7 %), தொழில் உற்பத்தியும் (4 %) மற்றும் வேளான்மையும் (2 %) பங்கு வகிக்கின்றன.
போட்ஸ்வானா குடியரசு Lefatshe la Botswana | |
---|---|
குறிக்கோள்: "Pula" "Rain" | |
நாட்டுப்பண்: Fatshe leno la rona அருள்பெறட்டும் இந்நன்னிலம் | |
தலைநகரம் | காபரோனி |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், இட்ஸ்வானா மொழி (தேசிய) |
மக்கள் | போட்ஸ்வானர், போட்ஸ்வான |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
இயன் காமா | |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• நாள் | செப்டம்பர் 30 1966 |
பரப்பு | |
• மொத்தம் | 581,726 km2 (224,606 sq mi) (41 ஆவது) |
• நீர் (%) | 2.5 |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 1,639,833 (147 ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $18.72 பில்லியன் (114 ஆவது) |
• தலைவிகிதம் | $11,400 (60 ஆவது) |
ஜினி (1993) | 63 அதியுயர் |
மமேசு (2004) | 0.570 Error: Invalid HDI value · 131 ஆவது |
நாணயம் | புலா (BWP) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (நடு அப்பிரிக்கா நேரம் (CAT)) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (ஏதும் கடைபிடிப்பதில்லை) |
அழைப்புக்குறி | 267 |
இணையக் குறி | .bw |