மங்கலம் ஊராட்சி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி

மங்கலம் ஊராட்சி (ஆங்கிலம் Mangalam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும். இது பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளான 7 பேர் ஊராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கின்றனர். இந்த வட்டாரத்திற்கான காவல் நிலையம் மங்கலத்தில் செயல்படுகிறது.

மங்கலம்
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

கணபதி ப. ராஜ்குமார்

சட்டமன்றத் தொகுதி பல்லடம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். எஸ். எம். ஆனந்தன் (அதிமுக)

மக்கள் தொகை 7,892
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


போக்குவரத்து

தொகு

இந்த மங்கலம் நகரமானது நான்கு ரோடு சந்திப்பு மையமாக உள்ளது. மிகவும் போக்குவரத்து நிறைந்த சாலையாக காணமுடிகிறது. மங்கலத்திலிருந்து அவிநாசி முதல் காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்லும் ஒரு சாலையும் மேற்கில் காமநாயக்கன் பாளையம் முதல் அன்னூர் செல்லும் சாலையில் உள்ள சாமளாபுரம் முதல் திருப்பூர் வரையிலான சாலையும் மங்கலத்தை கடந்து செல்கிறது. இங்கிருந்து சாமளாபுரம், திருப்பூர், காரணம் பேட்டை , சூலூர், கோயம்புத்தூர், அவிநாசி, திருப்பூர், பல்லடம், புளியம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. இருந்தாலும் பொள்ளாச்சி செல்ல பேருந்துகள் இல்லாததால் அவிநாசி முதல் மங்கலம் வழியாக பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

மக்கள் தொகை

தொகு

இந்த ஊராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு படி 7892 பேர் வசிக்கின்றனர். இவற்றில் 51% பேர் பெண்களும் 49% பேர் ஆண்களும் வசிக்கின்றனர்.

அடிப்படை வசதிகள்

தொகு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[4]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 1850
சிறு மின்விசைக் குழாய்கள் 7
கைக்குழாய்கள் 8
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3
உள்ளாட்சிக் கட்டடங்கள் 4
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7
ஊரணிகள் அல்லது குளங்கள் 2
விளையாட்டு மையங்கள்
சந்தைகள் 2
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 20
ஊராட்சிச் சாலைகள் 10
பேருந்து நிலையங்கள் மங்கலத்தில் பாளையத்தில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2

அருகாமையில் உள்ள நகரங்கள்

தொகு

பல்லடம், திருப்பூர், சூலூர், காரணம் பேட்டை, அவிநாசி, சாமளாபுரம், கருமத்தம்பட்டி ஆகியவை மங்கலத்திற்கு அருகில் உள்ள நகரங்கள் ஆகும்

காவல் நிலையம்

தொகு

இந்த மங்கலத்தை தலைமையிடமாக கொண்டு மங்கலம் காவல் நிலையம் செயல்படுகிறது. இதில் சாமளாபுரம் பேரூராட்சி உட்பட திருப்பூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு ஊராட்சிகள் இவற்றின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மங்கலம் காவல் நிலையம் அலைபேசி எண் :- 0421-2345300 ஆகும். காவல் நிலையம் மட்டுமின்றி இங்கு சங்கீதா திரையரங்கம் அமைந்துள்ளது. ஒரு பேரூராட்சிக்கு தகுதியான அனைத்து விதமான தகுதிகளையும் மங்கலம் கொண்டுள்ளது. மேலும் இந்த சங்கீதா திரையரங்கில் ஆன்லைன் புக்கிங் செய்ய www.justtickets.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்யலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; panchayat என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கலம்_ஊராட்சி&oldid=3687828" இலிருந்து மீள்விக்கப்பட்டது