மலேசிய வெளியுறவு அமைச்சர்
மலேசிய வெளியுறவு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Foreign Affairs of Malaysia; மலாய்: Menteri Luar Negeri Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.
மலேசிய வெளியுறவு அமைச்சர் Minister of Foreign Affairs of Malaysia Menteri Luar Negeri Malaysia | |
---|---|
மலேசிய வெளியுறவு அமைச்சு | |
சுருக்கம் | KLN/MOFA / WISMA PUTRA |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | ஆகத்து 31, 1957 |
முதலாமவர் | துங்கு அப்துல் ரகுமான் Tunku Abdul Rahman வெளிவிவகார அமைச்சர் |
இணையதளம் | www |
மலேசியாவின் வெளிநாட்டுக் கொள்கை (Foreign Affairs); மலேசியர்களின் புலம்பெயர்வு (Malaysian Diaspora); மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர் (Foreigners in Malaysia); பண்ணுறவாண்மை (Diplomacy) ஆகிய விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை நிர்வகிக்கும் பதவியில் உள்ளார்.[1]
பொது
தொகுமலேசியாவின் வெளியுறவு அமைச்சின் தலைமை அமைச்சகம், விசுமா புத்ரா (Wisma Putra) என்று அழைக்கப்படுகிறது. ஆயினும், விசுமா புத்ரா என்பது புத்ராஜெயாவில் உள்ள மலேசியாவின் வெளியுறவு அமைச்சின் தலைமையகக் கட்டடத்தின் பெயர் ஆகும்.
மலேசியா, 1960-ஆம் ஆண்டுகளில், இலண்டன், நியூயார்க் மாநகரங்களில் தூதரகங்களைக் கொண்டிருந்தது. மற்றும் வாஷிங்டன், கான்பெரா, புது டெல்லி, ஜகார்த்தா, பாங்காக் ஆகிய மாநகரங்களில் அதற்குத் தூதரக அலுவலகங்கள் இருந்தன.
1963-ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் மலேசியாவிற்கு 14 தூதரகங்கள் இருந்தன. அதே வேளையில் மலேசியாவில் இருபத்தைந்து வெளிநாடுகள் தம் தூதரகங்களைக் கொண்டு இருந்தன. 1965-ஆம் ஆண்டில், மலேசியாவின் தூதர்வழித் தொடர்புகள் பெரிய மறுசீரமைப்பைப் பெற்றன. 1966-இல், மலேசிய வெளி உறவுகள் அமைச்சு (Ministry of External Affairs) என்பது மலேசிய வெளியுறவு அமைச்சு (Ministry of Foreign Affairs) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அமைச்சர்களின் பட்டியல்
தொகுவெளியுறவு அமைச்சர்கள்
தொகுவெளியுறவு அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
தோற்றம் | பெயர் (பிறப்பு - இறப்பு) |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | # | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) (1903–1990) |
கூட்டணி (அம்னோ) |
வெளியுறவு அமைச்சர் | 1 செப்டம்பர் 1960 | 22 செப்டம்பர் 1970 | துங்கு அப்துல் ரகுமான் (II · III · IV) | |||
அப்துல் ரசாக் உசேன் (Abdul Razak Hussein) (1922–1976) |
23 செப்டம்பர் 1970 | 12 ஆகஸ்டு 1975 | அப்துல் ரசாக் உசேன் (I · II) | |||||
பாரிசான் (அம்னோ) | ||||||||
துங்கு அகமட் ரிதாவுடின் (Tengku Ahmad Rithauddeen) (1928–2022) |
13 ஆகஸ்டு 1975 | 16 சூலை 1981 | அப்துல் ரசாக் உசேன் (II) உசேன் ஓன் (I · II) | |||||
கசாலி சாபி (Ghazali Shafie) (1922–2010) |
17 சூலை 1981 | 16 சூலை 1984 | மகாதீர் பின் முகமது (I · II) | |||||
துங்கு அகமட் ரிதாவுடின் (Tengku Ahmad Rithauddeen) (1928–2022) |
17 சூலை 1984 | 10 ஆகஸ்டு 1986 | மகாதீர் பின் முகமது (II) | |||||
ராயிஸ் யாத்திம் (Rais Yatim) (பிறப்பு. 1942) |
11 ஆகஸ்டு 1986 | 7 மே 1987 | மகாதீர் பின் முகமது (III) | |||||
அபு அசான் ஒமார் (Abu Hassan Omar) (1940–2018) |
20 மே 1987 | 14 மார்ச் 1991 | மகாதீர் பின் முகமது (III · IV) | |||||
அப்துல்லா அகமது படாவி (Abdullah Ahmad Badawi) (பிறப்பு. 1939) |
15 மார்ச் 1991 | 8 சனவரி 1999 | மகாதீர் பின் முகமது (IV · V) | |||||
சையது அமீட் அல்பார் (Syed Hamid Albar) (பிறப்பு. 1944) |
9 சனவரி 1999 | 18 மார்ச் 2008 | மகாதீர் பின் முகமது (VI) அப்துல்லா அகமது படாவி (I · II) | |||||
ராயிஸ் யாத்திம் (Rais Yatim) (பிறப்பு. 1942) |
19 மார்ச் 2008 | 8 ஏப்ரல் 2009 | அப்துல்லா அகமது படாவி (III) | |||||
அனிபா அமான் (Anifah Aman) (பிறப்பு. 1953) |
10 ஏப்ரல் 2009 | 9 மே 2018 | நஜீப் ரசாக் (I · II) | |||||
சைபுடின் அப்துல்லா (Saifuddin Abdullah) (பிறப்பு. 1961) |
பாக்காத்தான் (பிகேஆர்) |
2 சூலை 2018 | 24 பிப்ரவரி 2020 | மகாதீர் பின் முகமது (VII) | ||||
இசாமுடின் உசேன் (Hishammuddin Hussein) (பிறப்பு. 1961) |
பாரிசான் (அம்னோ) |
10 மார்ச் 2020 | 7 சூலை 2021 | முகிதீன் யாசின் (I) | ||||
வெளியுறவுத்துறை மூத்த அமைச்சர் | 7 சூலை 2021 | 16 ஆகஸ்டு 2021 | ||||||
சைபுடின் அப்துல்லா (Saifuddin Abdullah) (பிறப்பு. 1961) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
வெளியுறவு அமைச்சர் | 30 ஆகஸ்டு 2021 | 24 நவம்பர் 2022 | இசுமாயில் சப்ரி யாகோப் (I) | |||
சாம்ரி அப்துல் காதர் Zambry Abdul Kadir (பிறப்பு. 1962) செனட்டர் |
பாரிசான் (அம்னோ) |
3 டிசம்பர் 2022 | 12 டிசம்பர் 2023 | அன்வார் இப்ராகிம் (I) | ||||
முகமது அசன் (Mohamad Hasan) (பிறப்பு. 1956) |
12 டிசம்பர் 2023 | பதவியில் உள்ளார் |
வெளியுறவுத் துறை
தொகுவெளியுறவுத் துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான்[2]
தோற்றம் | பெயர் (பிறப்பு - இறப்பு) |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | # | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) (1903–1990) |
கூட்டணி (அம்னோ) |
வெளியுறவுத் துறை | 31 ஆகஸ்டு 1957 | 2 பிப்ரவரி 1959 | துங்கு அப்துல் ரகுமான் (I) | |||
இசுமாயில் அப்துல் ரகுமான் (Ismail Abdul Rahman) (1915–1973) |
3 பிப்ரவரி 1959 | 31 ஆகஸ்டு 1960 | துங்கு அப்துல் ரகுமான் (II) | |||||
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Functions". Ministry of Foreign Affairs, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 September 2008.
- ↑ "Former Ministers". Ministry of Foreign Affairs, Malaysia. Archived from the original on 7 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)