லாரன்ஸ் பள்ளி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி

லாரன்ஸ் பள்ளி (Lawrence School, Lovedale) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தின், லவ்டேல்லில் உள்ள ஒரு இருபாலர் (மாணவர் விடுதியுடன் கூடிய) பள்ளி ஆகும். இந்தப்பள்ளிக்கு இது உருவாக காரணமாக இருந்த சர் ஹென்றி லாரன்ஸ் பெயர் இடப்பட்டுள்ளது.[1] பிரித்தானிய இந்தியப் படையில் பணியாற்றிய படைவீரர்கள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், ஆகியோரின் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி பயிலுவதற்காக, உயரிய தொடர் பள்ளிகளை நிறுவ வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக வெளியிட்டவர் இவரே ஆவார்.

லாரன்ஸ் பள்ளி
அமைவிடம்
லவ்டேல், தமிழ்நாடு, 643003
இந்தியா
அமைவிடம்11°22′45″N 76°41′57″E / 11.379191°N 76.699258°E / 11.379191; 76.699258
தகவல்
பழைய பெயர்கள்ஓட்டகாமண்ட் லாரன்ஸ் அசைலம், லாரன்ஸ் மெமோரியல் ராயல் மிலிட்டரி ஸ்கூல் (எல்.எம்.ஆர்.எம்.எஸ்.)
வகைபொதுத்துறை பள்ளி இருபாலர்-மாணவர் விடுதி பள்ளி
குறிக்கோள்"Never Give In"
தொடக்கம்6 செப்டம்பர் 1858
நிறுவனர்சர் ஹென்றி லாரன்ஸ்
பள்ளி அவைமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)
பள்ளி மாவட்டம்நீலகிரி
Chairmanகேசவ் என். தேசிராஜு
தலைமை ஆசிரியர்கே. பிரபாகரன் நாயர்
மாணவர்கள்700 (தோராயமாக.)
கற்பித்தல் மொழிஆங்கிலம்
இணையம்

லாரன்ஸ் 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தின் போது லக்னோ தி ரெசிடென்சியில் கொல்லப்பட்டார். அவரது கனவு வடிவம் பெற்று, லாரன்ஸ் அசைலம் என அழைக்கப்படும் இதுபோன்ற நான்கு பள்ளிகள் நிறுவப்பட்டன: 1847 இல் சனாவரிலும், 1856 இல் அபு மலையிலும் அவரது வாழ்நாளிலேயேயும், 1858 ஆம் ஆண்டில் உதகமண்டலத்திலும், 1860 இல் இன்றைய பாகிஸ்தானின் கோரா காலி ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன.

பெயர், சின்னம் மற்றும் குறிக்கோளுரை தொகு

1913 ஆம் ஆண்டில் பள்ளியின் பெயர் தி ஓட்டகமண்ட் லாரன்ஸ் அசைலம் என்பதிலிருந்து லாரன்ஸ் மெமோரியல் பள்ளி என மாற்றப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் பள்ளியின் பெயர் லாரன்ஸ் மெமோரியல் ராயல் மிலிட்டரி ஸ்கூல் என பெயர் மாற்றப்பட்டது. 1949 ஆம் ஆண்டில், இந்திய விடுதலைக்குப் பிறகு, பள்ளி இந்திய அரசின் குடிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், பள்ளியின் பெயர் தி லாரன்ஸ் பள்ளி என பெயர் மாற்றப்பட்டது. இது இன்றுவரை இவ்வேறே அழைக்கபடுகிறது. மேலும் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய நாட்டுச் செல்வர்களின் பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளியாக இது உள்ளது. இப்பள்ளி உதகமண்டலத்தின் லவ்டேலில் அமைந்திருப்பதால், பள்ளியானது வெறுமனே "லவ்டேல்" என்றும் குறிப்பிடப்படுகிறது.

பள்ளியின் குறிக்கோளுரை "நெவர் கிவ் இன்" என்பதகும். இது இதன் சகோதரி பள்ளிகளுக்குமான குறிக்கோருரையாக உள்ளது.

இந்தப் பள்ளிக்கு முன்னாள் பிரதமர்கள் , இந்தியாவின் குடியரசுதலைவர்கள் உட்பட பல குறிப்பிடத்தக்க நபர்களான - ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ஜெயில் சிங், பிரணாப் முகர்ஜி, ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், சாம் மானேக்சா, கிரண் பேடி ஆகியோர் பள்ளியின் நிறுவனர் நாள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளுக்காக லவ்டேலுக்கு வருகை தந்துள்ளனர். [2]

மே 31, 1988 அன்று, இந்திய அஞ்சல் துறை இதன் 130 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது. [3]

வளாகம் தொகு

லாரஸ்ஸ் பள்ளி வளாகமானது 750 ஏக்கர்கள் (750 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது உதகமண்டலத்திலிருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்கள்) தொலைவில் உள்ளது. இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது நீலகிரி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா சிகரத்தை விட (உயரம்: 8650 அடி) சற்று குறைவான உயரத்தில் உள்ளது. பள்ளி வளாகமானது ஆயத்தப் பள்ளி (4-6 வகுப்புகள்), இளையோர் பள்ளி (7-8 வகுப்புகள்) மற்றும் மூத்தோர் பள்ளி (9-12 வகுப்புகள்) என பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் தங்குமிடங்கள் அந்தந்த கட்டிடங்களில் தனித்தனியாக உள்ளன. மாணவிகள் பெண்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வகுப்புகளுக்கு செல்கின்றனர். பள்ளியில் விளையாட்டு, படிப்பு போன்றவற்றிர்க்கு நடவடிக்கைகளுக்கு போதுமான வசதிகள் உள்ளன.

கட்டிடக்கலை தொகு

 
தி லாரன்ஸ் பள்ளியின் பிரதான கட்டிடம்.

மூத்தோர் பள்ளி (பெரும்பாலும் பாய்ஸ் ஸ்கூல் என்று அழைக்கப்படுகிறது) ஒரு அற்புதமான இரண்டு மாடி கட்டிடத்தில் 130 அடி உயரமுள்ள ஒரு மணிக்கூண்டு அமைந்துள்ளது. இது இத்தாலிய கோதிக் பாணியில் கட்டப்பட்டது. இது கட்டிடக் கலைஞர் ராபர்ட் சிசோமால் வடிவமைக்கபட்டது.

மாணவர் தொகு

இங்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்து பயில்கின்றனர். குறிப்பாக பள்ளியில் 40 விழுக்காடு இடங்களானது இந்திய படைத்துறை பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் அவர்களின் பிள்ளைகளுக்கான கட்டணத்தில் 20 விழுக்காடு கட்டணச் சலுகை உள்ளது.

மேலாண்மை தொகு

இப்பள்ளி ஒரு தன்னாட்சி அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்ட செயற் குழு, தலைமை நிர்வாகி அல்லது தலைமை ஆசிரியரைக்கொண்டு செயல்படுகிறது. செயற்குழுவில் இந்திய இராணுவத்தின் தென்னிந்திய பிரிவின் முன்னார் அதிகாரி, வாரியத்தில் அதிகாரப்பூர்வ முன்னாள் அமைப்பின் உறுப்பினர், பழைய லாரன்சியன்ஸ் சங்கம், தற்போது பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரின் பிரதிநிதியாக ஒரு உறுப்பினர், இந்திய அரசின் கல்வி அமைச்சின் பேராளர் ஆகியோருக்கு இதில் பிரதிநிதித்துவம் உள்ளது.

முன்னாள் மாணவர்கள் சங்கம் தொகு

பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கமான ஓல்ட் லாரன்சியன்ஸ் அசோசியேஷன் (OLA), இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மற்றும் சர்வதேச நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. பழைய மாணவர்கள் பொதுவாக 'OL கள்' அல்லது 'பழைய லாரன்சியர்கள்' என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்த அமைப்பு தமிழ்நாடு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட பழைய மாணவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவால் நடத்தப்படுகிறது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

குடிமை மற்றும் அரசு விருது பெற்றவர்கள்

 • பழனிவேல் தியாகராஜன், ச.ம.உ தமிழ்நாடு
 • நிகில் டே, இந்தியாவின் சமூக ஆர்வலர், மஜ்தூர் கிசான் சக்தி சங்கதன், மக்கள் தகவல் அறியும் தேசிய பிரச்சாரம் (ஆர்டிஐ)
 • பால் சபாபதி சி.வி.ஓ சிபிஇ - ஐக்கிய இராச்சியம்

சட்டம் & நீதி

தொழில் வல்லுநர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்

நிகழ்த்துக்கலை மற்றும் காட்சிக் கலை ஆளுமைகள்

விளையாட்டு

அழகிப் போட்டி வெற்றியாளர்கள்

 • குல் பனாக் - மிஸ் இந்தியா 1999, நடிகர்

இணைப்புகள் தொகு

 • இந்த பள்ளி புதுடெல்லியின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
 • ஐ.பி.எஸ்.சி உறுப்பினர் - இந்திய பொதுப் பள்ளிகள் பேராயம்
 • மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஏஜிஸ்
 • வட்ட சதுக்க சர்வதேச உறுப்பினர்

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

[1]

[2]

வெளி இணைப்புகள் தொகு

 • தி லாரன்ஸ் பள்ளியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், லவ்டேல் [1]
 • பதிவுசெய்யப்பட்ட முன்னாள் மாணவர் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் - பழைய லாரன்சியன்ஸ் சங்கம் [2] பரணிடப்பட்டது 2020-11-24 at the வந்தவழி இயந்திரம்
 1. https://www.bbc.com/news/uk-england-birmingham-34228047
 2. https://www.shropshirestar.com/news/2013/06/16/seven-people-from-shropshire-are-honoured-by-the-queen/
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரன்ஸ்_பள்ளி&oldid=3591573" இருந்து மீள்விக்கப்பட்டது