லெசுலி குணவர்தன

லெசுலி சைமன் குணவர்தன (Leslie Simon Goonewardene, சிங்களம்: ලෙස්ලි සයිමන් ගුනවර්ධන; 31 அக்டோபர் 1909 – 11 ஏப்ரல் 1983) இலங்கையின் மூத்த இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியை 1935 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் பொதுச் செயலாலராக 1935 முதல் 1977 வரை பணியாற்றினார். குணவர்தன இந்திய விடுதலை இயக்கத்திலும், இலங்கை விடுதலை இயக்கத்திலும் முக்கிய பங்காற்றினார். இவர் விடுதலை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தியமைக்காக இலங்கையின் தேசிய வீரராக மதிக்கப்படுகிறார்.

லெஸ்லி குணவர்தன
Leslie Goonewardene
லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
18 திசம்பர் 1935 – 1977 இறுதி
ஆட்சியாளர்கள்ஆறாம் சியார்ச்
(26 சனவரி 1950 வரை)
பிரதமர்டி. எஸ். சேனநாயக்கா
டட்லி சேனாநாயக்க
ஜோன் கொத்தலாவலை
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
விஜயானந்த தகநாயக்கா
சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்னவர்கொல்வின் ஆர். டி சில்வா
போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
1970–1975
பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
முன்னையவர்ஈ. எல். பி. உருல்லே
பின்னவர்கே. பி. இரத்திநாயக்க
தகவற்துறை அமைச்சர்
பதவியில்
1970–1977
பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
முன்னையவர்மொண்டேகு ஜெயவிக்கிரம
பின்னவர்செல்ட்டன் ஜெயசிங்க
இலங்கை நாடாளுமன்றம்
பாணந்துறை
பதவியில்
1956–1977
முன்னையவர்டி. சி. டபிள்யூ. கன்னங்கரா
பின்னவர்நெவில் பெர்னாண்டோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-10-31)31 அக்டோபர் 1909
பாணந்துறை, இலங்கை
இறப்பு11 ஏப்ரல் 1983(1983-04-11) (அகவை 73)
கொழும்பு
அரசியல் கட்சிலங்கா சமசமாஜக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
போல்செவிக்–லெனினியக் கட்சி இந்தியா, இலங்கை, பர்மா
துணைவர்விவியன் குணவர்தன (தி. 30 சனவரி 1939)
பிள்ளைகள்
  • குமுந்து
  • அஜித் சுரேந்திரா
  • பிரேமிளா
வாழிடம்(s)பெத்ரிசு சாலை, கொழும்பு
வெசுட்லாண்ட் மாளிகை பாணந்துறை
முன்னாள் கல்லூரிபரி. யோவான் கல்லூரி, பாணந்துறை
புனித தோமையர் கல்லூரி, கல்கிசை
இலண்டன் பொருளியல் பள்ளி
வேலை
  • செயற்பாட்டாளர்
  • அரசியல்வாதி
  • புரவலர்
இனம்சிங்களவர்

இலங்கையில் மேல் மாகாணத்தில் பாணந்துறையில் செல்வாக்குமிக்க குடும்பம் ஒன்றில் பிறந்த குணவர்தன,[1][2] மெதடிசக் கிறித்தவராக வளர்க்கப்பட்டார்.[3] ஆங்கில-மூலப் பாடசாலைகளில் கல்வி பயின்ற இவர்,[4] ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பேச அவல்லவர். அக்காலத்தைய மார்க்சியப் பரப்புரைகளால் ஈர்க்கப்பட்டார். இலண்டன் பொருளியல் பள்ளியில் அரசறிவியல் பயின்றார். அங்கு அவர் அவரது பேராசிரியர் அரோல்டு லாசுக்கியின் தாக்கத்துக்குள்ளானார்.[5][6] இலண்டனில் இருந்து இலங்கை திரும்பி, 1935 திசம்பர் 18 இல் லங்கா சமசமாஜக் கட்சியைத் தொடங்கினார்.[7] இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் போர்-எதிர்ப்பு இயக்கத்தின் மூலமாகக் கட்சியை வழி நடத்தினார்.[8] இதன் காரணமாக கட்சி தடை செய்யப்பட்ட போது, இலங்கையில் இருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார்.[9]

இந்தியாவில், அவர் போல்செவிக்-லெனினியக் கட்சியை நிறுவினார்,[10] புரட்சிகர திரொத்சுக்கியவாதக் கட்சியாக, தெற்காசியாவில் விடுதலை மற்றும் சோசலிசத்திற்காக பரப்புரை செய்தது.[11][12] மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க நபராக இருந்தார்.[13] 1947 இல் பிரித்தானியாவில் இருந்து இந்தியா விடுதலை பெற்றது, தொடர்ந்து 1948 இல், இலங்கை விடுதலை பெற்றது. 1940 முதல் 1960 வரை லங்கா சமசமாஜக் கட்சி இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது.[14] இதன் மூலம், வங்கி, கல்வி, கைத்தொழில், ஊடகம், வணிகத் துறை நிறுவனங்களை தேசியமயமாக்குவதன் மூலம் முன்னாள் பிரித்தானியக் குடியேற்ற நாடாகிய இலங்கையை சோசலிசக் குடியரசாக மாற்ற குணவர்தன முயன்றார்.[15] 1960களில், சமசமாசக் கட்சி ஐக்கிய முன்னணிக் கூட்டணியை வழிநடத்தி, உலகின் முதலாவது பெண் பிரதமரை ஆட்சிக்கு கொண்டு வந்தது.[16] தொடக்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்ப மறுத்த லெசுலி குணவர்தன, 1970 தேர்தலில் கூட்டணி பெற்ற பெரும் வெற்றியை அடுத்து மூத்த அமைச்சுப் பதவியை ஏற்றார்.[17] இவர் தேசியவாத சிங்களம் மட்டும் சட்டத்தின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார்.

லெஸ்லி குணவர்தன அணிசேரா இயக்கம், நான்காம் அனைத்துலகம் ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்காற்றினார். 1977 தேர்தலில் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, குணவர்தன அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

தேர்தல் வரலாறு

தொகு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1952 நாடாளுமன்றம் கொழும்பு வடக்கு லங்கா சமசமாஜக் கட்சி 7,136 தோல்வி [18]
1956 நாடாளுமன்றம் பாணந்துறை லங்கா சமசமாஜக் கட்சி 29,362 தெரிவு [19]
மார்ச் 1960 நாடாளுமன்றம் பாணந்துறை லங்கா சமசமாஜக் கட்சி 9,266 தெரிவு [20]
சூலை 1960 நாடாளுமன்றம் பாணந்துறை லங்கா சமசமாஜக் கட்சி 15,387 தெரிவு [21]
1965 நாடாளுமன்றம் பாணந்துறை லங்கா சமசமாஜக் கட்சி 20,033 தெரிவு [22]
1970 நாடாளுமன்றம் பாணந்துறை லங்கா சமசமாஜக் கட்சி 25,218 தெரிவு [23]
1977 நாடாளுமன்றம் பாணந்துறை லங்கா சமசமாஜக் கட்சி 17,546 தோல்வி [24]

மேற்கோள்கள்

தொகு
  1. "Goonawardene, Leslie Simon". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Go". Glossary of People. Marxists Internet Archive.
  3. The Methodist Recorder, December 1943
  4. Wilson, A. Jeyaratnam (1994). S.J.V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947-1977: A Political Biography (in ஆங்கிலம்). Hurst. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85065-130-7.; Pinto, Leonard (14 July 2015). Being a Christian in Sri Lanka: Historical, Political, Social, and Religious Considerations (in ஆங்கிலம்). Balboa Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4525-2862-5.; Sivakumar, Pranavesh. "The prestigious Shield – Royal confident, S. Thomas' determined". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
  5. Cahiers Léon Trotsky (in பிரெஞ்சு). Institut Léon Trotsky. 1985.
  6. Gunawardena, Charles A. (2005). Encyclopedia of Sri Lanka (Revised ed.). New Delhi: New Dawn Press Group. pp. 166–167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1932705481.
  7. Abeynayake, Stanley E. (14 August 2012). "Dr N M Perera's 33rd death anniversary : Doughty fighter and man of principles". Daily News. http://archives.dailynews.lk/2012/08/14/fea04.asp. ; Perera, T. (2006). Revolutionary trails, Edmund Samarakkody: a political profile (in ஆங்கிலம்). Social Scientists' Association. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-9102-80-9.; Peebles, Patrick (22 October 2015). Historical Dictionary of Sri Lanka (in ஆங்கிலம்). Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-5585-2.
  8. Lewis, David S.; Sagar, Darren J. (1992). Political Parties of Asia and the Pacific: A Reference Guide (in ஆங்கிலம்). Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-582-09811-4.
  9. Fernando, Amaradasa (5 January 2002). "Edmund Samarakkody kept faith to the last". The Island. http://www.island.lk/2002/01/05/featur02.html. 
  10. Towards a History of the Fourth International: Education for Socialists Bulletins Towards a History of the Fourth International (in ஆங்கிலம்). National Education Department, Socialist Workers Party. 1975.
  11. The Revolution in India (in ஆங்கிலம்). T. Tait Memorial Committee. 1942.
  12. South Asia Bulletin (in ஆங்கிலம்). University of California, Los Angeles. 1987.; Grant, E.; Scott, A. (1941). The Road to India's Freedom: The Permanent Revolution in India and the Task of the British Working-class (in ஆங்கிலம்). Workers' International League, Fourth International.
  13. "1942 Quit India Movement – Making Britain". www.open.ac.uk. Archived from the original on 23 June 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  14. Barker, Rodney S. (1971). Studies in Opposition (in ஆங்கிலம்). Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780333124826.
  15. Bose, Sumantra; Bose, Professor of International and Comparative Politics Sumantra (6 September 1994). States, Nations, Sovereignty: Sri Lanka, India and the Tamil Eelam Movement (in ஆங்கிலம்). SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8039-9170-5.
  16. The Historical & International Foundations of the Socialist Equality Party (in ஆங்கிலம்). Mehring Books. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-893638-07-5.
  17. Roberts, Michael (1994). Exploring Confrontation: Sri Lanka--politics, Culture and History (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7186-5692-9.
  18. "Sri Lanka Government" (PDF).
  19. "Sri Lanka Government" (PDF).
  20. "Sri Lanka Government - 1960 March Results" (PDF).
  21. "Sri Lanka Government - July 1960 Results" (PDF).
  22. "Sri Lanka Government 1965 Results" (PDF).
  23. "Sri Lanka Government - 1970 Results" (PDF).
  24. "Sri Lanka Government - 1977 Results" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெசுலி_குணவர்தன&oldid=3624686" இலிருந்து மீள்விக்கப்பட்டது