வங்சா மாஜு மக்களவைத் தொகுதி

வங்சா மாஜு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Wangsa Maju; ஆங்கிலம்: Wangsa Maju Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P116) ஆகும். இந்தத் தொகுதியில், ஒரு சதுர கி.மீ.-க்கு 13,000 பேருக்கு மேல் வசிக்கின்றனர். மலேசியாவில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இந்தத் தொகுதி மட்டுமே அதிகமான மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.[4]

வங்சா மாஜு (P116)
மலேசிய மக்களவைத் தொகுதி
கோலாலம்பூர்
Wangsa Maju (P116)
Federal Constituency in Kuala Lumpur
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளில்
வங்சா மாஜு மக்களவைத் தொகுதி

மாவட்டம்மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கோலாலம்பூர்
வாக்காளர் தொகுதிவங்சா மாஜு தொகுதி
முக்கிய நகரங்கள்கோலாலம்பூர்; செதாபாக், கோம்பாக், தாமான் மெலாத்தி,
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்ஜாகிர் அசான்
(Zahir Hassan)
வாக்காளர்கள் எண்ணிக்கை120,323 (2022)[1]
தொகுதி பரப்பளவு16 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் வங்சா மாஜு மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (61.8%)
  சீனர் (28.5%)
  இதர இனத்தவர் (1.2%)

வங்சா மாஜு மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து வங்சா மாஜு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

வங்சா மாஜு

தொகு

வங்சா மாஜு புறநகர்ப் பகுதி, கோலாலம்பூரில் உள்ள மிகப் பெரிய நகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். அத்துடன் இந்தப் புறநகர்ப் பகுதி சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மாவட்டம்; மற்றும் செதாபாக், தாமான் மெலாத்தி நகர்ப் புறங்களால் சூழப்பட்டு உள்ளது. வங்சா மாஜு புறநகர்ப் பகுதியின் பொருளாதாரம் பெரும்பாலும் வணிகம் சார்ந்ததாகும். இங்கு பற்பல வணிகப் பேரங்காடிகள், வணிக மாளிகைகள் மற்றும் இரவு சந்தை தளங்கள் உள்ளன.

வாங்சா மாஜுவின் அசல் பெயர் அவ்தோர்ன்டன். வங்சா மாஜு தற்போது அமைந்துள்ள இடம், 1900-ஆம் ஆண்டு-களில் இருந்து 1980-ஆம் ஆண்டுகள் வரை அவ்தோர்ன்டன் (Hawthornden) எனும் பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு அந்தக் காலக்கட்டத்தில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன.

பொதுவாக அந்தத் தோட்டங்களை, செதாபாக் ரப்பர் தோட்டங்கள் என்று அழைத்தார்கள்.[5] முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது ஆட்சியின் போது, அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டத்தை ஒரு புதிய நகரமாக உருவாக்க அந்தத் தோட்டம் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில், அந்தத் தோட்டத்தில் பண்டார் பாரு வங்சா மாஜு (Bandar Baru Wangsa Maju) நகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது.

வங்சா மாஜு மக்களவைத் தொகுதி

தொகு
வங்சா மாஜு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2023)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1994-ஆம் ஆண்டில் பத்து மக்களவைத் தொகுதியில் இருந்து கெப்போங் தொகுதி உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P105 1995–1999 கமால் மாட் சாலே
(Kamal Mat Salih)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
10-ஆவது மக்களவை 1999–2004 சுல்லசுனான் ரபீக்
(Zulhasnan Rafique)
11-ஆவது மக்களவை P116 2004–2008 இயூ தியோங் லோக்
(Yew Teong Lock)
பாரிசான் நேசனல்
(மசீச)
12-ஆவது மக்களவை 2008–2010 வீ சூ கியோங்
(Wee Choo Keong)
பாக்காத்தான் ராக்யாட்
(பி.கே.ஆர்)
2010–2013 சுயேச்சை
13-ஆவது மக்களவை 2013–2018 தான் கீ குவோங்
(Tan Kee Kwong )
பாக்காத்தான் ராக்யாட்
(பி.கே.ஆர்)
14-ஆவது மக்களவை 2018–2022 தான் இ கிவ்
(Tan Yee Kew)
பாக்காத்தான் அரப்பான்
பி.கே.ஆர்
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சகீர் அசான்
(Zahir Hassan)

வங்சா மாஜு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
120,323
வாக்களித்தவர்கள்
(Turnout)
93,493 77.08% -7.13
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
92,740 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
255
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
498
பெரும்பான்மை
(Majority)
20,696 22.31% -10.62
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6][7]

வங்சா மாஜு மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
சகீர் அசான்
(Zahir Hassan)
பாக்காத்தான் 92,740 46,031 49.63% -7.67
நூரிடா முகமட் சாலே
(Nuridah Mohd Salleh)
பெரிக்காத்தான் 25,335 27.32% +27.32  
முகமட் சாபி அப்துல்லா
(Mohd Shafei Abdullah)
பாரிசான் 19,595 21.13 -3.24
நோர்சயிலா அரிபின்
(Norzaila Arifin)
உள்நாட்டு போராளிகள் கட்சி 987 1.06% +1.06  
வீ சூ கியோங்
(Wee Choo Keong)
வாரிசான் 576 0.62% +0.62  
ரவீந்திரன் சுந்தரலிங்கம்
(Raveentheran Suntheralingam)
சுயேச்சை 216 0.23% +0.23  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "P.116 WANGSA MAJU" இம் மூலத்தில் இருந்து 19 ஜனவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230119103806/https://cloud.stats.gov.my/index.php/s/VDynFsMkxI4dxAE?path=/14%20W.P.%20KUALA%20LUMPUR#pdfviewer. 
  5. Kaur, Sharen (9 August 2018). "Making an oasis in Wangsa Maju". New Straits Times. https://www.nst.com.my/property/2018/08/399681/making-oasis-wangsa-maju. 
  6. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
  7. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.

மேலும் காண்க

தொகு