வடகோவை
வடகோவை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோயம்புத்தூரிலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.
வடகோவை | |
---|---|
நகரப் பகுதி | |
வடகோவை, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°00′51″N 76°57′17″E / 11.0143°N 76.9547°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஏற்றம் | 452.44 m (1,484.38 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641002 |
புறநகர்ப் பகுதிகள் | கோயம்புத்தூர், காந்திபுரம், சிவானந்தா காலனி, ஆர். எஸ். புரம் |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் |
சட்டமன்றத் தொகுதி | கோயம்புத்தூர் தெற்கு |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 452.44 மீ. உயரத்தில், (11°00′51″N 76°57′17″E / 11.0143°N 76.9547°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகோவை அமையப் பெற்றுள்ளது.
போக்குவரத்து
தொகுபல ஊர்களுக்கும் போக்குவரத்தை எளிதாக்கும் வடகோவையின் சிந்தாமணி சாலைச் சந்திப்பில் உலக உருண்டையைத் தாங்கும் மனித சிலை ஒன்று மரத்தால் நிறுவப்பட்டு, மக்களைக் கவரும் வகையில் உள்ளது.[1]
தொடருந்து நிலையம்
தொகுஇரண்டு நடைமேடைகளைக் கொண்ட கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையம் வடகோவையில் அமைந்துள்ளது.[2][3] வடகோவை தொடருந்து நிலையத்தில், இவ்வழித்தடத்தில் பயணிக்கும் தொடருந்துகளில் பெரும்பாலானவை நின்று செல்கின்றன. மேலும், இந்த தொடருந்து நிலையத்திலிருந்தும் சில இரயில்கள் கிளம்புகின்றன.[4]
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுவடகோவையில் ஐயப்ப சுவாமி கோயில் ஒன்று உள்ளது.[5] மேலும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற சித்தி விநாயகர் கோயில் என்ற பிள்ளையார் கோயில் ஒன்றும் வடகோவையில் அமைந்துள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ தினமலர். "உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-05.
- ↑ "Coimbatore North Railway Station Timeline - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-05.
- ↑ "வடகோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய நடைமேம்பாலம்: மேட்டுப்பாளையம் சாலை வரை நீட்டிக்கப்படுமா?". Hindu Tamil Thisai. 2021-04-09. பார்க்கப்பட்ட நாள் 2025-01-05.
- ↑ WebDesk. "வடகோவை - கும்பகோணம் இடையே 'பாரத் கௌரவ்' ரயில்: தெற்கு ரயில்வேக்கு ரூ.7.26 கோடி வருவாய்". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-05.
- ↑ "வடகோவை ஐயப்ப சுவாமி கோவில் பிரதிஷ்டை தினவிழா". temple.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-05.
- ↑ "Arulmigu Sidhivinayagar Temple, Vadakovai, Coimbatore North - 641043, Coimbatore District [TM009873].,SIDHI VINAYAGAR". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-05.