வார்ப்புரு பேச்சு:இந்து சமயத் தலைப்புகள்

தேவாரங்கள் இல்லையா ?? சைவ சிந்தாந்தங்கள் --Natkeeran 03:50, 17 டிசம்பர் 2006 (UTC)

மிகவும் ஒருதலையாக இவ் வார்ப்புருவில் கருத்துக்கள் உள்ளன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் இல்லையேல் இன்று இந்து சமயம் என்று ஒன்று மிக மிக அருகிய ஒன்றாகவே இருந்திருக்கும். பக்தி மறுமலர்ச்சி தென்னகத்தில் இருந்தே இந்தியா முழுவதும் பரவியது. இந்தியாவைத் தாண்டி கீழை நாடுகளில் கிடைத்துள்ள சிலை காரைக்கால் அம்மையாரின் சிலை, ஆதி சங்கரருடைய சிலை அல்ல. இதனால் ஆதி சங்கரரை குறைத்துக் கூறவில்லை. அவருக்கும் முன்பாக இன்று இந்து மதம் என்று அழைக்கபடுவதை அடிநிலைகளில் இருந்து வளர்த்தெடுத்தவர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும். சமசுகிருதத்தில் எழுதிய ஆதிசங்கரர், மத்வாச்சாரியார், இராமானு'சர் ஆகிய மூவரும் தென்னாட்டவர். சமசுகிருதத்தில் உள்ள பெரும்பாலான இலக்கியங்கள் தென்னாட்டில் உருவானது. தேவாரத்தையும், திருவாசகத்தையும், ஆழ்வார்பாசுரங்களையும் விலக்கிப் பட்டியலிடுவது மிகவும் தவறான போக்கு. இப்பட்டியல் ஆங்கில விக்கியில் இருந்து பெற்றிருக்கலாம் ஆகவே வார்ப்புரு செய்தவரைக் குறை கூறவில்லை - இருப்பைக் கூறுகிறேன். தமிழ்நாட்டில் எல்லா சிவன் கோவில்களிலும் நாயன்மார்கள் சிலை உண்டு, அதேபோல ஆழ்வார்களின் சிலையும் உண்டு.--செல்வா 12:42, 15 மார்ச் 2007 (UTC)

"இந்து சமயம் வார்ப்புரு" சரியாகத் தொக்குக்கப்படவில்லை என்பது எமது கருத்து. எடுத்துக்காட்டாக, "ஸ்மிருதியில்" தந்திரம், யோகமும், சடங்குகளில், "சோதிடம், ஆயுள்வேதம்" ஆகியவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புக்களும் சரியானதாகத் தெரியவில்லை. சற்றே சிந்திக்கலாமா?சிந்தித்துத் தலைப்புகளை மற்றியபின் அவைகளில் எவைஎவை அடங்குமோ அவைகளில் பட்டியல் இடுவது நல்லது..--ஞானவெட்டியான் 13:39, 15 மார்ச் 2007 (UTC)

நாம் வேண்டியவாறு தொகுக்கலாம். இப்பொழுதுள்ளது, ஆங்கில விக்கியில் இருந்து எடுத்ததாக இருக்கும் என நினைக்கிறேன். மயூரநாதன் நன்றாக இவை பற்றியெல்லாம் அறிந்தவராக இருப்பார். எனவே அவருடைய துணையுடன், நீங்களும் சேர்ந்து தகுந்தவாறு திருத்திக் கொள்ளலாம்.--செல்வா 13:45, 15 மார்ச் 2007 (UTC)

மாயூரநாதன் தொடர்புகொள்ளுங்களேன்.--ஞானவெட்டியான் 13:47, 15 மார்ச் 2007 (UTC)

செல்வா குறிப்பிட்டது போல, இது அக்காலத்தில் ஆங்கில விக்கியில் இருந்த வார்ப்புருவின் தமிழாக்கம்தான். தமிழ் விக்கிபீடியாவுக்கு ஏற்றவகையில் மாற்றம் செய்வதற்கு நிறைய இடம் உண்டு. ஆனாலும் இது மிகவும் பெரிதாகிவிட்டால் பயன்பாட்டுக்கு வசதியாக இருக்காது. சிறிய வார்ப்புருக்களாகப் பிரித்து விடுவது நல்லது என எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். அதற்குமுன், புதிதாகச் சேர்க்கவேண்டியவை, வேறுதலைப்புக்களுக்கு மாற்றப்பட வேண்டியவை, முற்றாகவே அகற்றப்பட வேண்டியவை பற்றி இப்பக்கத்தில் உரையாடலாம்.Mayooranathan 18:05, 15 மார்ச் 2007 (UTC)

சற்றே சிந்தித்துப் பின் கூறுகிறேன்.--ஞானவெட்டியான் 15:28, 16 மார்ச் 2007 (UTC)

இவ்வார்ப்புரு எந்த ஆங்கில வார்ப்புருவினை பார்த்து கட்டமைக்கப்பட்டது என்று தெரிவித்தால் மேம்படுத்த இயலும். நன்றி ---சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:10, 7 மே 2013 (UTC)Reply

வார்ப்புரு திருத்தம்

தொகு

மயூரநாதன் அவர்களின் அனுமதியுடன் இந்த வார்ப்புருவை சற்று கடுமையுடன் தொகுத்துள்ளேன். இந்த வார்ப்புருவில் குறிப்பிடப்பட்டிருந்த பல தலைப்புகள் மற்றொரு வார்ப்புருவான வார்ப்புரு:இந்து தர்மம் என்பதில் அடங்கியுள்ளது. எனவே அவற்றை தவிர்த்து மற்றவற்றை தொகுத்துள்ளேன். விடுபட்ட அனேக இந்து சமய தலைப்புகளை தொகுக்க சற்று காலமாகும். அதற்குள் விருப்பம் உள்ளவர்கள் தொகுத்தலும் மகிழ்ச்சியே. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:55, 26 சூலை 2013 (UTC)Reply

பழைய வார்ப்புரு:

Return to "இந்து சமயத் தலைப்புகள்" page.