விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு53

தர வரிசை தொகு

அண்மையில் பல பயனர்கள் சுறுசுறுப்பாக இயங்கியதாலும், குறிப்பாக, புன்னியாமீனின் கட்டுரையாக்கத்தாலும் நம் கட்டுரை எண்ணிக்கை விரைவாக வளர்ந்து வருகிறது. இன்னும் இரண்டே கட்டுரைகள் சேர்ந்தவுடன் நமக்கு முன்னால் உள்ள போசுனிய விக்கியைப் பிடித்து விடலாம். மேலும் ஒரு நூறு கட்டுரைகளைச் சேர்த்தால் அதற்கு முன்னால் உள்ள ஐசுலாந்து விக்கியையும் பிடித்து விடலாம். இருந்தாலும் கட்டுரைகளின் தகவல் நிறைவையும் கருத்தில் கொள்ள வேண்டும். சராசரி நீளம் குறைந்திருக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை வளர்த்தெடுக்கவும் வேண்டும், புதிதாய் எழுதும் கட்டுரைகளை பல நோக்குகளில் இருந்தும் போதிய தகவல்களுடன் எழுதவும் வேண்டும். நடையையும் மேம்படுத்தி முதல் பக்கக் கட்டுரைகளாவது நிறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர, பரவலான பங்களிப்பைக் கவர புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். வலைப்பதிவர்களிடையே ஒரு போட்டியையோ இயக்கத்தையோ முன்வைக்கலாமா? அதாவது ஒரு பதினைந்து நாட்களில் ஒவ்வொருவரும் எத்தனை கட்டுரைகளில் சிறிய தட்டுப்பிழை, எழுத்துப்பிழைகளைத் திருத்துகிறார்கள் என்று பார்க்கலாம். இதனால் பல புதியவர்கள் வந்து நம் கட்டுரைகளைப் படிக்கவும், தாமும் எளிதாகத் தொகுக்க முடியும் என உணரவும் வாய்ப்பாக அமையுமல்லவா? அத்துடன் நமது கட்டுரைகளின் தரம் வெகுவாக மேம்படும். சரியா? -- சுந்தர் \பேச்சு 04:34, 30 ஏப்ரல் 2011 (UTC)

சுந்தர், போசுனிய விக்கியைப் பிடித்து விட்டோம். நாளை அல்லது நாளை மறுதினம் ஐசுலாந்து விக்கியையும் பிடித்து விடுவோம். அடுத்த இலக்கு..?--P.M.Puniyameen 05:09, 30 ஏப்ரல் 2011 (UTC)
இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் அறுபது விக்கிகளுக்குள் வர முயலலாம். ஆனால் மேலே சொன்னது போல வெறும் எண்ணிக்கையை வளர்ப்பது குறிக்கோளாக இருக்கக்கூடாது. -- சுந்தர் \பேச்சு 06:07, 30 ஏப்ரல் 2011 (UTC)
”வலைப்பதிவர்களிடையே” - அவர்களை அழைத்தால் சண்டையும் டிராமாவும் விளைந்து குழப்பமே மிஞ்சும் என்பது என் கருத்து :-). விக்கிக்கும் வலைப்பதிவுக்கும் அடிப்படை கொள்கையளவிலேயே மாறுபாடு உள்ளது. நமது பண்பாடு ஆரவாரமின்றி வேலையைப் பார்ப்பது, பதிவுலகத்தின் அடிப்படைக் கொள்கையே முடிந்த அளவு ஆரவாரமிட்டு கவனத்தை ஈர்ப்பது. இதுவரை பயனர்களுக்குள் சண்டை என்பதால் விக்கியை விட்டுப் போனவர்கள் (ஆங்கில விக்கி போலல்லாமல்) இங்கு மிகக் குறைவே. வலைப்பதிவர்கள் வரத் தொடங்கினால், கண்டிப்பாக இந்நிலை மாறும். அவர்களது கவனம் இப்பக்கம் திரும்பாமல் இருக்கும் வரை நமக்கு நிம்மதி.--சோடாபாட்டில்உரையாடுக 05:16, 30 ஏப்ரல் 2011 (UTC)
நீங்கள் சொல்வது புரிகிறது. வலைப்பதிவர்களைக் குறிப்பிட்டது, அவர்கள் ஏற்கனவே இணையத்தில் இருப்பதால். அப்படி ஒரு குறிப்பிட்ட தொகுதியென்று இல்லாமல் புதிய தமிழகம் போன்ற இதழ்களிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் அறைகூவல் விடுத்தால் பரவலான பங்களிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது ஒரே நேரத்தில் ஏகப்பட்ட புதியவர்கள் வந்தால் இங்கு நாம் ஏற்கனவே உரையாடி உருவான பண்பாடு ஆட்டம் கண்டுவிடுமா? நானும் எண்ணிப் பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:07, 30 ஏப்ரல் 2011 (UTC)
நானும் சோடாபாட்டில் கருத்தோடு ஒத்துப்போகிறேன். வலைப்பதிவுகள் அவர்களுடைய சொந்தக் கருத்துக்கள் என்பதால் எதிர் கூற்றுக்களுக்கு செவி மடுப்பவர் மிக்குறைவே. பல்வேறு குழுக்களாக இயங்கும் அவர்களிடையே விக்கி நோக்கங்களும் கொள்கைகளும் மிதிபடும். பதிவுலகின் அரசியலும் பந்தாவும் அமைதியான முறையில் ஒருங்கிணைந்து செயலாற்றும் நம் ஒற்றுமையைக் குலைக்கவும் செய்யலாம். எனவே கலைக்களஞ்சிய ஆக்கத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஒன்றிரண்டாக வந்தடைந்தாலும் நமது முன்னேற்றம் சீராக இருக்கும். வேகம் விவேகமல்ல ;) --மணியன் 06:38, 30 ஏப்ரல் 2011 (UTC)
சரியான கூற்று, மணியன். நீங்கள் இருவரும் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது சட்டெனப் பல பங்களிப்பாளர்கள் (அதுவும் முற்றிலும் மாறுபட்ட களத்தில் இருந்து) வருவதைக் காட்டிலும், ஓரிருவராக வந்து இங்குள்ள முறைகளையும் அடிப்படை நோக்கங்களையும் தெரிந்து கொண்டு பங்காற்றினால் தான் நல்லது. -- சுந்தர் \பேச்சு 06:43, 30 ஏப்ரல் 2011 (UTC)
  • வலைப்பதிவர்கள் பொதுவாக தங்களது கருத்துக்களையும் அனுபவங்களையுமே பெரும்பான்மையாக வெளியிடுகின்றனர். மேலும் அவர்களுடைய நாட்குறிப்பேடுகளைப் போல்தான் வலைப்பதிவைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய வரவு விக்கிப்பீடியாவிற்குள் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். நல்ல கருத்துடைய தகவல்களைப் பதிவு செய்யும் சில வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாங்களாகவே விக்கிப்பீடியா குறித்து அறிந்து வரட்டும். அதுவரை காத்திருக்கலாம். இல்லையெனில் சோடாபாட்டில், மணியன் ஆகியோர் தெரிவித்தபடி குழப்பங்கள் மட்டுமில்லை... சில நல்ல பயனர்கள் வெளியேறு நிலையும் வரலாம். எனவே காத்திருப்போம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:59, 30 ஏப்ரல் 2011 (UTC)
மற்றுமொரு சிந்தனை. சுந்தர் கூறுவதுபோல தட்டுப்பிழை, எழுத்துப்பிழை போன்றவற்றைக் களைய ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிலும் "இந்தப் பக்கத்தில் ஏதேனும் பிழைகளைக் காண்கிறீர்களா ? அவற்றைத் நீங்களேத் திருத்தலாம் என அறிவீர்களா ? எவரும் தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியம் இது."போன்றதொரு sitenotice இடலாம். இது படிக்க வந்த பயனரிடையே விழிப்புணர்வை கூட்டும் என்று நம்புகிறேன். --மணியன் 11:32, 30 ஏப்ரல் 2011 (UTC)
  • நான் மணியன் கருத்துடன் ஒத்துப் போகிறேன். அதாவது sitenotice. இது அருமையானதொரு எண்ணமாகத் தோன்றுகிறது. இது உறுதியாக பல பயனர்களை இழுக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

--விக்கிக்களஞ்சியக் காரன்.

வலைப்பதிவர்கள் பற்றி அப்படி ஒட்டுமொத்தமாக கருத்துக்கூற முடியாது. வலைப்பதிவில் தமது அனுபவங்களைப் பகிர்வது முதன்மையாக உள்ளது, அதுவும் மிக வரவேற்கத்தக்க பங்களிப்பே. அதே வேளை அவர்களே நல்ல பொதுக் கட்டுரைகளையும் தரக் கூடியவர்களாக இருக்கக்கூடும். அவர்களுக்கு எழுத்துப் பயிற்சி, தட்டச்சு ஆகியவை பரிச்சியமானதால் அவர்களை இலகுவாக இங்கு பங்களிக்க முடியும். முன்னர் நாம் நல்ல வலைப்பதிவாளர்கள் பக்கங்கள் சென்று அழைப்பு விடுப்போம். தமிழ் விக்கிப்பீடியா இணைப்பும் பல வலைப்பதிவுகளில் இருக்கும். தற்போது அந்த வீச்சு இல்லை. முடிந்தால் மலேசியாவை குறிவைத்து ஒரு campaign செய்யமுடிந்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran 13:31, 30 ஏப்ரல் 2011 (UTC)
தரம் பற்றிய சுந்தரின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். ஆனால் தரம் உயர்த்துவதை அனுபவமுள்ள விக்கியர்கள் செய்வதே சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். வலைப்பதிவர்களை (விக்கியுலகத்திற்கு வெளியே இருப்போர் யாவரையும்) ஈர்க்கும் முயற்சி இதனோடு கலக்கவேண்டாம். sitenotice நல்ல யோசனை. வெரும் வாக்கியமில்லாமல்,விக்கி நன்கொடை poster மாதிரி இருந்தால் தாக்கம் கூடுதலாக இருக்கும். உதரணமாக "செங்கைபொதுவன் ஐயா படத்துடன்,அவர் கூறுவது போல் ஒரு செய்தி".(பல பக்கஒட்டிகள் தேவை) அந்த பக்கஒட்டி இன் landing page இல், ஒரு புது பயனர் செய்யக்கூடிய பணிகளை பட்டியலிடலாம். "நீங்களும் திருத்தலாம், எழுத்துப் பிழையை திருத்தலாம்" என்று பொதுப்படையாக சொல்லாமல், குறிப்பிட்ட எளிய பணிகளை, உதவி பக்கங்களுடன் இருந்தால், நிறைய புதுபயனர்களை ஈர்க்கலாம்.நான் ஆங்கில விக்கியில் 2 ஆண்டுகளாக என்ன செய்வதென்று தெரியாமல் சில பக்கங்களை மட்டும் தொகுத்துக் கொண்டிருந்தேன். அப்பொது en:WP:INR,en:WP:IND/UBLP போன்ற பக்கங்கள் "இவ்வாரும் எளிதாக பங்களிக்கலாம்" என்று காட்டியது. ஸ்ரீகாந்த் 15:23, 30 ஏப்ரல் 2011 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா 68 ஆவது நிலையிலேயே நீண்டகாலம் இருந்தது. அத்துடன் 68 ஆவது நிலைக்கும் 67 ஆவது நிலைக்கும் இடையே கட்டுரை எண்ணிக்கையில் 2500க்கு மேல் வித்தியாசம் காணப்பட்டது. இப்போது இந்த இடைவெளியை நிரப்பிவிட்டோம். வேகமாகக் கட்டுரைகளை உருவாக்கி இச் சாதனையை நிகழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இனி 64 ஆவது இடம்வரை இலகுவாக முன்னேறலாம். தற்போதுள்ள இடைவெளி ஏறத்தாழ 800 கட்டுரைகளே. ஆனாலும், சுந்தர் குறிப்பிட்டதுபோல எண்ணிக்கையைக் கூட்டும்போது தரமும் அதிகம் குறையாமல் இருக்கப் பார்த்துக்கொள்வது அவசியம். ஏற்கெனவே எழுதிய கட்டுரைகளில் இருக்கக்கூடிய எழுத்துப்பிழை, இலக்கணப் பிழைகள் முதலியவற்றைத் (இருந்தால்) திருத்துதல், கூடுதல் தகவல்களைச் சேர்த்தல், படங்களைச் சேர்த்தல் போன்றவற்றில் எல்லாம் பங்களிப்பாளர்களும் இடையிடையே ஈடுபடுவது நல்லது. வலைப்பதிவர்களை தமிழ் விக்கி பக்கம் ஈர்ப்பது தொடர்பில் சோடாபாட்டிலின் கருத்துக்களைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடும். வலைப்பதிவாளர்கள் இடையேயும் முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட பல குழுக்கள் இயங்குகின்றன. பெருமளவில் வலைப்பதிவர்களைக் குறிவைக்கும்போது இவ்வாறான குழுப் போட்டிகளுக்கு தமிழ் விக்கி களமாகக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு. தனியாக வலைப்பதிவர்கள் என்றில்லாமல் பொதுவாகப் பல்வேறு துறைகளையும் சார்ந்த தனிப்பட்டவர்களையும் கவர்வதற்கு முயற்சிக்கவேண்டும். பயிற்சிப் பட்டறைகள் போன்ற இணையத்துக்கு வெளியிலான நிகழ்வுகள் குறைவடைந்து விட்டதாகத் தெரிகிறது. இது பற்றியும் கவனம் செலுத்துவது பயன்தரும் என்பது எனது கருத்து. -- மயூரநாதன் 18:18, 30 ஏப்ரல் 2011 (UTC)

சுந்தர், நல்லதோர் உரையாடலைத் தொடங்கி உள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் மிகப் பொறுமையாகவும் திட்டமிட்டும் அடித்தளமிட்டுள்ளோம். 2013ஆம் ஆண்டு பத்தாண்டு நிறைவை எட்டுவதற்கு முன் பல விசயங்களிலும் ஒரு புலிப்பாய்ச்சலைப் பார்க்க ஆசை :) தரத்தை விட்டுக் கொடுக்காமல், 45,000 கட்டுரைகள் எண்ணிக்கையை அடைய இலக்கு வைத்து உழைக்கலாம். கட்டுரைகள் எண்ணிக்கை 45,000ல் இருந்து 50,000 நெருங்கும் முன்னர் இருக்கும் எல்லா கட்டுரைகளையும் எல்லாரும் கூடி ஒரு முறையாவது செப்பனிட்டு, தகவல் இற்றைப்படுத்தி ஒரு நிறைவான கலைக்களஞ்சியமாக்க முனைய வேண்டும். இதன் மூலம், 50,000 இலக்கை எட்டும் போது எல்லா வகையிலும் பெருமை கொள்ளலாம்.

வலைப்பதியும் விக்கிப்பீடியர்கள் பட்டியலைக் கண்டால் பல முக்கிய விக்கிப்பீடியர்கள் தமிழ் வலைப்பதிவு உலகத்தில் இருந்து வந்துள்ளதைக் காணலாம். சிலர் விக்கி பற்றி தெரிந்த உடனே வருவார்கள். சிலர் பங்களிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்து பல மாதங்கள் கழித்துப் பங்கு கொள்ளும் போக்கைக் கண்டிருக்கிறேன். வலைப்பதிவர்கள், இலக்கியவாதிகள் என்று பல களங்களில் இருந்தும் விக்கியை அணுகுபவர்களும் நம் மேல் நன்மதிப்பு வைத்துள்ளவர்களும் உள்ளனர். நேரடியாகப் பங்களிக்காவிட்டாலும் இந்த நன்மதிப்பு பல வகையிலும் உதவும். எனவே, பொத்தாம் பொதுவாக எவரையும் விமர்சித்து, நம்மை "விக்கிப்பீடியாக்காரர்கள்" என்று முத்திரை குத்த இடம் தர வேண்டாம்.

எப்படி மாணவர் கட்டுரைப் போட்டி பெரிய அளவில் மாணவர்களைக் கொண்டு வராமல் போனதோ, அதே போல் குறிப்பிட்டவர்களை இலக்கு வைத்து நடத்தும் போட்டி போன்றவை தொடர் பங்களிப்பாளர்களைத் தராமல் போகலாம். எனவே, வேறு வழிகளைச் சிந்திக்க வேண்டி உள்ளது. சில வழிகள்:

  • ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள தமிழர்களைத் தமிழ் விக்கிக்குப் பங்களிக்க கோரி சோடா பாட்டில் பேச்சுப் பக்கத் தகவல்களை இட்டு வந்தார். அதை இன்னும் முடுக்கலாம். அதில் கிடைத்த அனுபவங்களைச் சோடா பாட்டில் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். இதன் மூலம் ஒரு சில புதிய பங்களிப்பாளர்களைப் பெற்றுள்ளோம் என்றே நினைக்கிறேன்.
  • ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து ஓய்ந்து போயுள்ளவர்களை மின்மடல் மூலமாகவும் பேச்சுப் பக்கம் மூலமாகவும் தொடர்பு கொண்டு மீண்டும் பங்களிக்குமாறும், அவர்களது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துமாறும் வேண்டலாம்.
  • விக்கிக்குப் பொருத்தமாக எழுதக்கூடியவர்களாகத் தோன்றும் சில வலைப்பதிவர்கள், இணையத்தவர்களை மட்டும் இலக்கு வைத்து விக்கிப்பீடியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாம்.
  • மலையாள விக்கிப்பீடியாவின் படிம வேட்டை போல் நாமும் முயலலாம். தமிழ் இணையத்தில் கணிசமான அளவு ஒளிப்படக் கலை ஆர்வலர்கள் உள்ளனர். கட்டுரைகளைப் பெறுவதை விட இது போன்ற பங்களிப்புகைப் பெறுவது இலகு.
  • மணியன் முன்மொழிந்தபடி, "இக்கட்டுரையில் பிழை உள்ளதா? பக்கத்தின் மேல் உள்ள தொகு பொத்தானை அழுத்தி, பிழையைத் திருத்த உதவுங்கள்" என்பது போல் ஒரு செய்தி விட்டுப் பார்க்கலாம். அதன் வரவேற்பைப் பொறுத்து, தொடர்ந்து அது போன்ற தகவல்களை வெளியிடலாம். --இரவி 18:35, 30 ஏப்ரல் 2011 (UTC)

வலைப்பதிவர் குறித்த சோடாபாட்டிலின் கருத்து, இரவியின் படிமவேட்டை மற்றும் மணியனின் sitenotice கருத்துடன் உடன்படுகிறேன். கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் நல்ல வலைப்பூக்கள் தென்படும் போதெல்லாம் அவற்றின் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் என்ற தலைப்பில் விக்கிப்பீடியா:பயனர் அழைப்பு கடிதங்கள் பக்கத்தில் உள்ளது போன்று விக்கிப்பீடியாவில் பங்களிக்க வருமாறும் அவர்களின் வலைப்பூவில் உள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பயன்படுத்த அனுமதி கோரியும் மின்மடல் அனுப்பி வந்தேன். ஒருசிலர் ஓரிரு நாட்களுக்குள் மறுமொழி அனுப்பினர். ஒருவர் (கீற்று இதழில் அறிவியல் கட்டுரைகளை எழுதும் பேராசிரியர் மணி) பங்களிக்க முயல்வதாய் மின்மடல் அனுப்பியுள்ளார். பலரும் உடனே புகைப்படங்களைப் பயன்படுத்த அனுமதிக் கடிதம் அனுப்பினர். இவ்வாறு உருவானதே பூவுலகின் நண்பர்கள் இயக்கம், ஏழூர் அய்யாசாமி, மச்சலி (புலி) உள்ளிட்ட கட்டுரைகள். தமிழ்விக்கியின் சிறப்பே அந்தந்த துறைகளில் கைதேர்ந்த பயனர்கள் பலர் பங்களித்து வருவதே. இதே போல அனைத்து வ‌கை யோகாசானங்கள், பரத நாட்டிய முத்திரைகள், காந்தீய சிந்தனைத் தலைப்புகள் உள்ளிட்ட அந்தந்த சிறப்புத் துறைகளில் திறம் பெற்ற பயனர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். இவர்களை நம்பக்கம் ஈர்த்தால் அது தமிழ்விக்கியின் பல்துறைப் பன்முக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். விக்கிப்பீடியா:பயனர் அழைப்பு கடிதங்கள் பக்கத்தில். இவ்வாறு அனுப்புவதற்கு யாரேனும் கருத்தைக் கவரும் விதத்திலான png அல்லது svg கோப்பு ஒன்றை உருவாக்கித் தந்தால் நன்றாக இருக்கும். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:56, 30 ஏப்ரல் 2011 (UTC)

இரவியின் கருத்துடன் பெரிதும் உடன்படுகிறேன். பண்பாட்டு வேறுபாடு என்று நான் ஒப்புக் கொண்ட போது ஏதோ விக்கிப் பண்பாடும் நோக்கமும் மட்டும் தான் சரி என்று நான் நினைக்கவில்லை. தமிழருக்கு கலைக்களஞ்சியமும் தேவை, நல்ல நூல்களும் தேவை, வலைப்பதிவுகளும் தேவை, தரமான செய்தி ஊடகங்களும், திரைப்படங்கள் போன்றவைகளும் தேவை தாம். ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளை நிரப்புகின்றன. மற்றபடி மணியனும் மற்றவர்களும் சுட்டியது போல அவர்களின் களமும் சூழலும் வேறு. வலைப்பதிவில் எழுதுவது நம் சொந்தக் கருத்து என்பதால் எவருக்காகவும் மாற்ற வேண்டிய தேவை இராது, அதுவே கருத்து விடுதலையின் அடிப்படையும் கூட. இருந்தாலும் புதிதாய் வருபவர்கள் நம் தளத்தைப் புரிந்து கொண்டு பணியாற்றச் சில நாள் பிடிக்குமென்பதால் ஒரே நேரத்தில் பல புதியவர்கள் வரும்போது குழப்பம் நேரலாம். மற்றபடி, அவர்கள் நேரடியாகப் பணியாற்றாவிட்டாலும் நம் மீது நன்மதிப்பைக் கொண்டிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். இரவி கலந்து கொண்ட புதுவை கூட்டம் வரை பல வகைகளில் நமக்கு உதவியிருக்கிறார்கள். மரு.கார்த்தி அருமையான காட்டைத் தந்திருக்கிறார். தவிர, நம்மில் பலரும் கூட வலைப்பதிவர்களாக இருந்த, தொடர்ந்து இருக்கவும் செய்பவர்கள் தாம். நிற்க.
இப்போதைக்கு, விக்கிப்பீடியா வாசகர்களைத் திருத்தங்கள் செய்யுமாறு தூண்டுவதற்கு மணியனும் சிறீகாந்தும் சொன்னது போல ஒரு அறிவிப்பைச் சேர்க்கலாம். மற்றபடி, இரவி குறிப்பிட்டது போன்ற ஓர் இலக்கைத் தேர்ந்து கொள்வோம். -- சுந்தர் \பேச்சு 07:58, 1 மே 2011 (UTC)[பதிலளி]

தள அறிவிப்பில் பிழை திருத்துமாறு வேண்டுகோள் இட்டுள்ளேன். புதியவர்களைக் குழப்பக்கூடாது என்பதற்காக, பிழை திருத்த வழிகாட்டியை இயன்ற அளவு எளிமையாகவே எழுதி உள்ளேன். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம், [1] பக்கத்தில் காணப்படும் ஓய்வில் உள்ள விக்கிப்பீடியர்கள் 25+ பேருக்கு மீண்டும் விக்கிப்பணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன். பார்ப்போம் :) --இரவி 13:30, 2 மே 2011 (UTC)[பதிலளி]

ரவி, இதனை பெட்டியில், பார்டருடன், வேறு வண்ணத்தில் இருந்தால் நன்றாயிருக்கும். சிறப்பு பக்கங்களிலும் வருவதால் குழப்பக்கூடும். -- மாகிர் 13:41, 2 மே 2011 (UTC)[பதிலளி]
நானும் மாகிர் எழுதியதையே கூற நினைத்தேன்.--செந்தி//உரையாடுக// 13:46, 2 மே 2011 (UTC)[பதிலளி]

மாகிர், பெட்டியையும் நிறத்தையும் சேர்த்து உள்ளேன். சிறப்புப் பக்கங்களில் காட்டாமல் இருக்க வழி இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்--இரவி 16:26, 2 மே 2011 (UTC)[பதிலளி]

மரு. கார்த்தி, நீங்கள் சொன்ன (முன்னர் நற்கீரன் தொடங்கிய) அழைப்புக் கடிதம் விடுக்கும் கருத்து பயனுடையது. பழைய பயனர்கள் கட்டாயம் வந்து பங்களிப்பார்கள். நம்மில் ஒருவருக்குப் பலராக எழுதியும் ஊக்கம் தரலாம். பல்வேறு காரணங்களால் முன்போல் பங்களிக்க முடியாதவர்களும் இருப்பார்கள் (ஆர்வமும் ஆவலும் இருந்தாலும்), ஆகவே இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். --செல்வா 04:43, 3 மே 2011 (UTC)[பதிலளி]


கூகுள் தேடலில் தமிழ் விக்கிப்பீடியா முடிவுகள் தொகு

கூகுளில் ஆங்கிலத்தில் தேடும் போது ஆங்கில விக்கிப்பீடியா முடிவுகள் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அக்கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவிலும் இருந்தால், அவற்றுக்கான தொடுப்பையும் காட்ட, கூகுள் குரோம், பயர் பாக்சில் நீட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. --இரவி 19:06, 30 ஏப்ரல் 2011 (UTC)

மிகவும் பயனுள்ள நீட்சிகள், இரவி. அதிலும் விக்கிக்கென புதியதொரு கருவி ஒன்று தமிழில் (என் விக்கிப்பீடியா) பெயரிடப்பட்டு, முதல் தெரிவாகத் தமிழில் வழங்கியதைப் பார்க்கையில் மிக மகிழ்ச்சியாக இருந்தது. இதை முதற்கண் உருவாக்கிய யுவி பாண்டாவுக்கும் (யுவராசு பாண்டியன்) ஃபயர்ஃபாக்சுக்குச் செய்த அருண்மொழிக்கும் மிக்க நன்றி. யுவியை விக்கிப்பக்கம் கவர்ந்த சிறீகாந்துக்கும் நன்றி. இதனைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினால் பொதுவாக ஆங்கிலத்தில் தேடுபவர்களும் நம் கட்டுரைகளைக் கண்டறிந்து வர ஏதுவாகும்.
மாகிர், சிறீகாந்து, சோடாபாட்டில் இவர்களோடு நற்கீரன், நான் (இன்னும் பலர் இருக்கலாம்) என கணினி நுட்பத்தில் பயிற்சி பெற்ற தமிழ் விக்கியர்கள் உள்ள இந்நேரத்தில் பெரும் ஆற்றலும், ஊக்கமும் கொண்ட இளையோர் பலரைத் தமிழ் விக்கிக்கான நுட்பங்களை வளர்ப்பதற்கு உந்தலாம். யுவி போன்றோர் திறநிலை மென்பொருட்களைப் பயன்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் வல்லவர்கள். அவர்களுக்கு நம் தேவைகளைச் சொல்லி பல கருவிகளை உருவாக்க முடியும். (காட்டாக, வலைப்பதிவுகளில் உரைகளுக்கேற்றாற்போல பொருத்தமான தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி பக்கங்களுக்குத் தானாக இணைப்புக் கொடுக்கும் கருவி போன்றவற்றை உருவாக்கலாம்.) அவர்களுக்கு வசதியாக, மடற்குழு ஒன்றில் இணைத்து உரையாடலாமா?
விக்கிமீடியாவின் ஆய்வு ஒன்றுக்காக சில நாட்கள் முன்பு ஒரு நேர்காணலில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் கேள்விகளைக் கேட்கையில் நம் தளத்தைப் பற்றியும் வளர்ச்சியைப் பற்றியும் மேலும் எண்ணத்தூண்டியது. நேர்காணலின் போது தற்செயலாக என் வீட்டுக்கு வந்த என் நண்பர், நம் முன்னாள் பயனர், அரிகிசோரும் பல செய்திகளைச் சொன்னார். அந்நாளில் (2004-ல்) ஒரு பத்து பேர் கூடத் தொடர்ந்து பங்களிக்காத சூழலில் எப்படி ஆர்வமூட்டும் தலைப்புகளில் சிவப்பு இணைப்புகளைச் சேர்த்தும், குறுங்கட்டுரைகளை எழுதியும் அவரையும் மற்றவர்களையும் தூண்டினோம் என்று நினைவுகூர்ந்தார். பழைய பயனர்கள் தொடங்கிய நல்ல கட்டுரைகளைக் மேம்படுத்தும் சிறப்புத் திட்டத்தைத் தொடங்கினால் அவர்கள் மீண்டும் வர வாய்ப்பாகுமோ எனத் தோன்றியது. காட்டாக, சார்லி சாப்ளின் கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக்க மேம்படுத்த வாருங்கள் என்றால் ஒருவேளை சந்தோசு குரு மீண்டும் வரலாம்.
இன்று மேலே சொன்ன ஆய்வுக்காக நமது வாசகரான என் தம்பியை நேரில் சந்தித்துச்சில கருத்துக்களைக் கேட்டனர். அப்போது, பல பயனுள்ள வாய்ப்புகள் தெரிய வந்தன. வலைப்பதிவருக்கான கருவிகூட அப்போது அவர் சொன்னதையடுத்தே தெரிய வந்தது. இந்த ஆய்வின் முடிவில் பல உருப்படியான தகவல்கள் கிடைக்குமென நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:04, 7 மே 2011 (UTC)[பதிலளி]

தமிழ்நாடு அரசு உதவி கிடைக்குமா? தொகு

  • தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை அதிகரிக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், தமிழ்நாடு அரசு அமைப்புகள் போன்றவற்றைக் கொண்ட கட்டுரைகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசை அணுகலாம். தமிழ்நாடு அரசு திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை சிற்றறிக்கைகளாகவும், தகவல் கையேடுகளாகவும் அச்சிட்டு பொது மக்களுக்கு விநியோகித்து வருகின்றன. இந்தத் தகவல்கள் தமிழில் அச்சிடப்பட்டுக் கொடுக்கப்பட்டாலும் அலுவலகத்தில் தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட குறுந்தகடுகள் அல்லது கணினிச் சேமிப்புக் கோப்புகள் இருக்கும். இந்தக் கோப்புகளைப் பெற்று நாம் தேவையானவற்றை மட்டும் கட்டுரைகளாக்கி உள்ளீடு செய்ய முடியும். இந்தக் கோப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதிகளைப் பெற தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்கள் தமிழ்நாடு அரசுடன் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து விட்டால் மாவட்ட அலுவலகங்களில் இத்தகவல்களைப் பெற்றுக் கொள்ள, மாவட்டவாரியாக தமிழ் விக்கிப்பீடியா பயனர்களைத் தேர்வு செய்து, அரசு அலுவலகங்களில் பெற்ற கோப்புகளைக் கொண்டு கட்டுரைகளை அந்தப் பயனரே எளிதில் உள்ளீடு செய்யலாம். தமிழ்நாடு அரசுடன் தொடர்புடையவர்கள் யாராவது முயற்சித்துப் பார்க்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:30, 1 மே 2011 (UTC)[பதிலளி]
மே 13க்குப் பிறகு, பல்வேறு வகையிலும் தமிழ் விக்கிமீடியாவுக்கு அரசிடம் இருந்து பெறக்கூடிய ஆதரவு குறித்த முயற்சிகளை முடுக்கத் திட்டமிடலாம் --இரவி 15:56, 1 மே 2011 (UTC)[பதிலளி]

பட்டப்படிப்புகள் கட்டுரை தொகு

தமிழ்நாட்டில் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்த மாணவர்களுக்கு உதவும் விதமாக மேல்நிலை வகுப்புக்குப் பிறகு படிக்கக் கூடிய பட்டப்படிப்புகள், அதற்கான கல்வித் தகுதிகள், பட்டப்படிப்பு வழங்கும் பல்கலைக்கழகம்/கல்லூரிகள், வெளிநாட்டுப் படிப்புகள் போன்ற விவரங்களை அளிக்கும் சிறப்பான பொதுக் கட்டுரை ஒன்றை உருவாக்கலாமே?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:24, 1 மே 2011 (UTC)[பதிலளி]

அத்தகையக் கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரையாகாது. தமிழ்நாட்டில் உயர்கல்வி என்று வேண்டுமானால் எழுதலாம் - தகுதிகள், விவரங்கள், எப்படி, எவ்வாறு போன்றவை “how to" ஆலோசனைக் கட்டுரையாகிவிடும்.(en:WP:NOT--சோடாபாட்டில்உரையாடுக 09:29, 1 மே 2011 (UTC)[பதிலளி]
இது போன்ற கையேட்டை விக்கி நூல்களில் எழுதலாம்--இரவி 15:56, 1 மே 2011 (UTC)[பதிலளி]

கலைச்சொல்_ஒத்தாசைப் பக்கத்தை அகரவரிசையில் அல்லது துறைவரிசையில் பிரிப்பது தொகு

  • விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை என்று ஒரு பக்கம் இருக்கின்றது, அங்கு அனைவரும் பங்கு கொள்ளல் தேவையானது. இங்கு உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள் தமிழ் விக்சனரியில் உடனடியாக இணைக்கலாம். நான் கோருவது என்னவெனில் விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசைப் பக்கத்தை அகரவரிசையில் அல்லது துறைவரிசையில் பிரிப்பது தேவையானது என்று தோன்றுகின்றது, பிற்காலத்தில் இலகுவாகச் சொற்களைப் பார்க்கலாம் அல்லது ஏற்கனவே அணுகப்பட்ட ஒரு சொல் மீண்டும் அணுகப்படுதலைத் தவிர்க்கலாம்.

இதன் பிரகாரம், விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை/a , விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை/உயிரியல் போன்றவாறு துணைப்பக்கங்கள் அமையும். உங்களுக்குத் தோன்றும் கருத்துக்கள் உரையாடுங்கள்....

  • பாக்டீரியாவா நுண்ணுழையாளா ஏற்கனவே இதைப்பற்றி உரையாடி நுண்ணுழையாள் பொருத்தமான சொல் அல்ல என்பது தெளிவுபடுத்தியும், புதிய கட்டுரைகளில் "நுண்ணுழையாள் " பயன்படுத்தப்படுகின்றது, ஒரு பொதுவான சொல்லே கலைக்களஞ்சியத்துக்குத் தேவையானது என்னும் தொடர்பில் அதுவும் தவறான சொற்பிரயோகமான நுண்ணுழையாள் என்பதை அனைத்துக்கட்டுரைகளிலும் இருந்து நீக்குவது பற்றிய உங்கள் கருத்துக்கள் அவசியமாகின்றது. முதற்பக்கக் கட்டுரையில் நுண்ணுழையாள் என்று உள்ளது, காலப்போக்கில் ஒரு பிழையான வார்த்தை பரவலாகிவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவருட கால விக்கிப்பீடியா அனுபவத்தில் கண்டறிந்த பிழையான கலைச்சொற்கள் ஆயிரமாயிரம், இவை தமிழ் விக்சனரியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மூலம் கொடுக்கப்பட்டவை. பல சொற்கள் அங்கு திருத்தி உள்ளேன்.

--செந்தி//உரையாடுக// 11:58, 1 மே 2011 (UTC)[பதிலளி]

அனைத்து கட்டுரைகளில் இருந்தும் “நுண்ணுழையாள்” என்பதை மாற்றியுள்ளேன். ஒருமித்த கருத்து ஏற்படாத / சர்ச்சையிலுள்ள கலைச்சொற்களைக் கண்டால் மாற்றிவிடலாம். மற்றபடி, கலைச்சொல் ஒத்தாசைப் பக்கத்தை துறைவாரியாகப் பிரிப்பது குறித்து ஆராயலாம். --சோடாபாட்டில்உரையாடுக 12:12, 1 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில், --செந்தி//உரையாடுக// 13:44, 2 மே 2011 (UTC)[பதிலளி]

//விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசைப் பக்கத்தை அகரவரிசையில் அல்லது துறைவரிசையில் பிரிப்பது தேவையானது என்று தோன்றுகின்றது, பிற்காலத்தில் இலகுவாகச் சொற்களைப் பார்க்கலாம் அல்லது ஏற்கனவே அணுகப்பட்ட ஒரு சொல் மீண்டும் அணுகப்படுதலைத் தவிர்க்கலாம்.//ஆம். இது அவசியமென்றே தோன்றுகின்றது. இலகுவாக சொற்களைப் பார்ப்பதற்கு உதவும். --கலை 14:22, 2 மே 2011 (UTC)[பதிலளி]

இதற்கு மறுப்பு ஏதேனும் இல்லாத பட்சத்தில் இத்திட்டத்தைத் தொடங்கலாம் எனக் கருதுகின்றேன்.--செந்தி//உரையாடுக// 22:54, 2 மே 2011 (UTC)[பதிலளி]
நீங்கள் ஆரம்பியுங்கள். நானும் உதவ முடியுமா எனப் பார்க்கின்றேன்.--கலை 23:34, 2 மே 2011 (UTC)[பதிலளி]

கலைச்சொற்களை துறைவாரியாகப் பிரிப்பது நல்லதே. கலைச்சொற்களைப் படைக்கும் பொழுது சூழலில் அதன் பயன்பாட்டை ஒட்டிப் படைத்தால்தான் சரியானதக அமைய வாய்ப்புகள் கூட. மேலும் தொடர்பான சொற்களையும் ஒருசேர ஒப்பிட்டுப் பார்த்து எப்படி வேறுபடுத்திக் காட்டத் தேவை இருக்கும் என்று காணுதல் வேண்டும். துல்லியமான பொருள் இயல்பாய் சுட்டக்கூடிய எடுத்துக் காட்டுச் சொற்றொடர்களில் பயன்படுத்தித் தேர்ந்தால்தான் சொற்கள் சரியாக அமையும். தனிச்சொற்களாகவோ, சொற்பட்டியல்களாகவோ செய்தால் சிறக்காது என்பது என் கருத்து. பொதுவாக வரையறை செய்வது போல ஒரு சொல்லைப் பயன்படுத்துவது நல்ல வழிமுறை. --செல்வா 03:08, 3 மே 2011 (UTC)[பதிலளி]

உங்கள் எண்ணத்தில் உள்ளது புரிகிறது செல்வா, எனது எண்ணப்பாடும் அவ்வாறேதான். உங்கள் வழிகாட்டலின் பின்னர் சொற்களை சிறப்பாக உருவாக்கலாம் என்று நம்புகின்றேன். இலத்தீனில் இருந்தும் கிரேக்கத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் சொற்கள் கடன் வாங்கப்பட்டுள்ளன, ஆனால் நாம் அவ்வாறு செய்வதில்லை; செய்யத்தேவையுமில்லை, ஏராளமான தமிழ்ச்சொற்கள் தேவாரங்களிலும், சங்க இலக்கியங்களிலும் மட்டும் இருக்கின்றன, அவற்றில் பொருத்தமாக இருப்பதை அறிவியலில் புகுத்தலாம் என்பதே எனது ஆவல். ஆங்கிலத்தில் prefix, suffix உள்ளது போல மருத்துவ,உயிரியல் கலைச்சொற்களுக்கும் அவை தேவைப்படுகின்றது, எ.கா. குருதியைக்குறிக்க -aemia எனும் விகுதி உள்ளது, தற்பொழுது thrombo- எனும் prefix இல் வரும் சொற்களைச் சேகரிக்கின்றேன், இவற்றை கலைச்சொல்_ஒத்தாசைப பக்கத்தில் தொடருவோம்.--செந்தி//உரையாடுக// 17:37, 4 மே 2011 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கம் துறைவாரியாகப் (எ.கா: விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்) பிரிக்கப்பட்டுள்ளது, சொற்களின் ஆய்வுக்கு செல்வா போன்றோரின் உதவி தேவைப்படுகின்றது.--செந்தி//உரையாடுக// 12:42, 6 மே 2011 (UTC)[பதிலளி]

கலைச்சொல் உருவாக்கம் பற்றி ஒரு கருத்து தொகு

மேலே கலைச்சொல் உருவாக்கம் பற்றி நிகழ்கின்ற உரையாடலைப் பார்த்தேன். துறைவாரியாகச் சொற்களைப் பிரிப்பது மிக்க நன்று. துறைகளை எப்படிப் பிரிப்பது என்றொரு கேள்வி எழலாம். பொதுவாக விக்கியில் இருக்கின்ற பகுப்புகளைப் பெருந்துறைகளாகக் கொண்டு அவற்றின் கீழ் துணைத்துறைகளை உருவாக்கலாம். தமிழ் விக்கியில் முதல்பக்கத்தில் தோன்றுகின்ற தாய்ப்பகுப்புகள் இவை:

  • தமிழ்
  • பண்பாடு
  • வரலாறு
  • அறிவியல்
  • கணிதம்
  • தொழில்நுட்பம்
  • புவியியல்
  • சமூகம்
  • நபர்கள்

இத்தாய்ப்பகுப்புகளின் உள் எண்ணிறந்த உட்பகுப்புகளும் கிளைப்பகுப்புகளும் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் "கலைச்சொல் ஒத்தாசை" பக்கத்தில் தருவது இயலாத காரியம் என்று நினைக்கிறேன். இதுவரை நடந்த உரையாடலிலிருந்து மருத்துவம், உயிரியல், கணிதம் போன்ற துறைகளுக்குத் தேவையான கலைச்சொற்கள் தேடப்படுகின்றன. எனவே, அத்துறைகளை முதன்மைப்படுத்த வேண்டும்.

கிறித்தவ இறையியல் என்றொரு தலைப்பும் வேண்டும். அத்துறை சார்ந்த கட்டுரைகளை நானும் பிறரும் எழுதிவருகின்றோம்.

வேறு தலைப்புகள் தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளப் படலாம் என்பது என் கருத்து.

மேலும், பல முறையும் கலைச்சொல் என்பதற்குப் பதிலாக "இணையான தமிழ்ச்சொல்" என்பதே பொருத்தமாக இருக்கும். மூலச் சொல்லின் பொருளின் அடிப்படையில் தமிழ்ச் சொல் உருவாக்கம் பெரிதும் நடைபெறுவதால் வெறுமனே இரு நிரல்கள் கொடுப்பதற்குப் பதிலாக மூன்று நிரல்கள் கொடுக்க வேண்டும். முதல் நிரலில் ஆங்கில (இலத்தீன், கிரேக்க...) சொல், இரண்டாம் நிரலில் "தமிழ்ச் சொல்", மூன்றாம் நிரலில் "சொல் விளக்கம்" என்றிருந்தால் நல்லது. அப்போது, கலைச்சொல்லைத் தமிழில் தேடுவோர் அதற்கான விளக்கத்தையும் அறியலாம். அந்த விளக்கம் போதுமானதாக இல்லாத போது வேறு சொல்லாக்கம் பரிந்துரைக்கப்படலாம். சில வேளைகளில் சிலர் கலைச்சொல் வேண்டுமென்று கேட்கலாம். அப்போது கேட்கப்பட்ட கலைச்சொல்லை எழுதிவிட்டு, தமிழ்ப் பகுதியில் ஒரு கேள்விக் குறியை இட்டுச் செல்லலாம். பிறர் அதற்கான இணைச்சொல்லைப் பரிந்துரைக்கலாம். பல பரிந்துரைகள் வந்தால், அவற்றுள் முதன்மைத் தேர்வாக ஒரு சொல் இருக்கும் போது அதையும் குறிப்பிட்டுக் காட்டலாம்.

இறுதியாக, ஒரு கலைச்சொல் பொருத்தமானது என்று ஏற்கப்பட்ட பின், அதையே தொடர்புடைய வேறு கட்டுரைகளிலும் பயன்படுத்தி, ஒரு சீர்நிலை உருவாக்கல் நன்று.

தமிழ்க் கலைச்சொல்லாக்கம் (இணைச்சொல்லாக்கம்) தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கும் தர உயர்வுக்கும் இன்றியமையாதது. பணி தொடர்க!--பவுல்-Paul 00:49, 3 மே 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது எனக்கும் ஏற்புடையதே, ஆனால் மிகப்பெரும்பாலான நேரங்களில் இடாய்ச்சுமொழி அல்லது வேறு ஒரு மொழியில் இருந்து தமிழுக்கு ஆக்குவது எளிது. சொற்பிறப்பியல் (கிரேக்கம் இலத்தீன்) பார்ப்பதும் மிக முகனையானது (முக்கியமானது), ஆனால் அதனோடு இடாய்ச்சுமொழி, உருசிய மொழி வழியாகவும் பெறலாம். எடுத்துக்காட்டாக femur என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் தமிழில் தொடையெலும்பு என்பது இடாய்ச்சு மொழியில் Oberschenkelknochen என்பதோடு நெருக்கம் கொண்டது (Oberschenkel = தொடை (schenkel = கால்), knochen = எலும்பு; ஆகவே Oberschenkelknochen = தொடை எலும்பு). இணைச்சொல்லாக்கம் என்பதிலும் எனக்கு முழு ஈடுபாடு இல்லை. நாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்து அதற்கு ஈடான சொல்லை அறிய முற்பட்டாலும், நமக்குத் தேவையான கருத்தைப் பயன்படுத்தும் ஒரு கலைச்சொல்லைத்தான் தேடுகிறோம், ஆகவே கலைச்சொல் என்பதே சரியான வழக்கு. இணைச்சொல் என்பது equivalent நிகரி என்பது. உண்மையில் நாம் அடைய வேண்டிய சொல், ஒரு கருத்தை நம் மொழியில் சரிவரக் குறிக்கும் ஒரு சிறப்புச்சொல். --செல்வா 03:22, 3 மே 2011 (UTC)[பதிலளி]
  • செல்வா, சொல்லின் தன்மையைப் பொறுத்து இணைச்சொல்லோ கலைச்சொல்லோ அமையலாம் என்பதில் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இருப்பினும் தமிழ்ச் சொல்லாக்கம் வேண்டிநிற்கும் சொல்லின் பொருளை அதன் மூலத்திற்கு ஏற்ப அறிந்துணர்வது பெரும் பயன் தரும் என்பது என் கருத்து. மூலம் பண்டைய மொழிகளிலிருந்தோ, ஆங்கிலம், பிரான்சியம், எசுப்பானியம், இடாய்ச்சு போன்ற அண்மைய மொழிகளிலிருந்தோ பொருள் காணப்படலாம். அப்பொருள் நேர்வழியாகவோ விரிவழியாகவோ அமையலாம். இங்கு ஒருவழிதான் சரி எனலும் இயலாது. எனவே பன்முனை அணுக்கம் பலன் நல்கும். அவ்வாறே நீங்களும் கலைச்சொல் ஆக்கிவருவதற்குப் பாராட்டு!--பவுல்-Paul 04:00, 3 மே 2011 (UTC)[பதிலளி]
பவுல் கூறியது போல முதலில் தேவைப்படும் பிரிவுகளை உருவாக்கலாம் என கருதுகிறேன். செல்வா, நான் ஒரு சில சொற்களை உருசியமொழி வழியாக தமிழுக்கு ஆக்க யோசித்து இருக்கின்றேன், எனினும் உருசியமொழியில் பெரும்பாலான மருத்துவச் சொற்கள் "ஒலிபெயர்ப்பு" செய்யப்பட்டுள்ளன.--செந்தி//உரையாடுக// 17:57, 4 மே 2011 (UTC)[பதிலளி]

Multilingual Challenge தொகு

Please help: replace this red text with a translation of the English message below. Thank you!
Announcing the Derby Multilingual Challenge

This is the first multilingual Wikipedia collaboration. All Wikipedians can take part, in any Wikipedia language. The challenge runs from 1 May until 3 September 2011.
Sign up now!
" Wikipedia is particularly pleased to see that Derby Museums are encouraging the creation of articles in languages other than English." (Jimmy Wales, 14 January 2011)

Andrew Dalby 14:05, 2 மே 2011 (UTC)[பதிலளி]

இலங்கை கிழக்குப்பல்கலைக் கழகத்தில் மற்றொரு தமிழ் விக்கி அறிமுகப் பட்டறை தொகு

இலங்கை கிழக்குப்பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையம் கடந்த விக்கி அறிமுகப் பட்டறையில் கலந்து கொள்ளத் தவறியவர்களின் வேண்டுகோளுக்காக மீண்டும் அறிமுகப்பட்டறை ஒன்றை நடத்தும்படி கடந்த வாரம் கேட்டிருந்தது . நான் சம்மதம் தெரிவித்திருந்தேன். கணினி ஆய்வுகூட ஒழுங்குகள் வாய்ப்பாயிருப்பதால் எதிவரும் 06.05.2011 இப்பட்டறையை நடத்தித் தரும்படி இன்று கேட்டுள்ளார்கள். நான் சம்மதித்து விட்டேன். இதற்கான திட்டப்பக்கம் ஒன்றை ஆக்கித்தரவும். மேலும் பயனர்கள் யாரும் பங்களிக்க முடியுமாயின் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:34, 2 மே 2011 (UTC)[பதிலளி]


ஏப்ரல் 6, 2011 திகதியா? --Natkeeran 17:07, 2 மே 2011 (UTC)[பதிலளி]

இல்லை. மே 6,2011 நடாத்தப் படவுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 17:27, 2 மே 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:மே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

உமாபதி, கருணாநிதி, சிவக்குமார், புன்னியாமீன், மயூரன் ஆகியோருக்கும் கலந்து கொள்ள முடியுமா என்று அறிய வேண்டும். --Natkeeran 18:27, 2 மே 2011 (UTC)[பதிலளி]

நானும் இலங்கை வரும் எண்ணம் உள்ளது. ஆனால் மே மாதத்தில் அல்ல. அப்படி வந்திருந்தால் விக்கிப் பட்டறையிலும் கலந்து கொண்டு, பழைய இடங்களையும் பார்த்து வந்திருக்க முடியும். பட்டறை இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.--கலை 23:32, 2 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி நக்கீரன் மற்றும் கலை. பங்குகொள்வது பற்றி உமாபதி, கலாநிதி, புன்னியாமீன், மயூரன் ஆகியோரின் விருப்பறிய விளைகிறேன். மேலும் இப்பட்டறை பற்றி பக்கமுகப்பில் தோன்றக்கூடியதாக அறிவித்தல் ஒன்றை இட்டால் பயனுள்ளதாயிருக்கும?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 03:59, 3 மே 2011 (UTC)[பதிலளி]

    • கடந்த வாரம் சிவகுமார் என்னுடன் கதைத்த நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் விக்கிப்பீடியா பட்டறையில் கலந்து கொள்ள ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருந்தேன். ஆனால் மே 2ம், திகதி தான் நாள் உறுதிப்படுத்தப்பட்டது. அதே நேரம் மே 6ம், திகதி மாலை எனக்கு மிகக்கிட்டிய உறவினர் ஒருவரின் திருமணம் நடைபெறவுள்ளது. இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியநிலை எனக்கு. அதில் கலந்து கொள்ளாவிடின் குடும்பப்பிரச்சினையாக மாறிவிடுமல்லவா?. எனவே மே 6ம் திகதி கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் விக்கிப்பீடியா பட்டறையில் என்னால் கலந்து கொள்ள முடியாதென்பதை மனவேதனையுடன் அறியத்தருகின்றேன். பட்டறை வெற்றிகரமாக நடைபெற மனதாரப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் சிவகுமார். --P.M.Puniyameen 11:34, 3 மே 2011 (UTC)[பதிலளி]