விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு59

பதிப்புரிமையற்ற இணையதளம் தொகு

சமீபத்தில் நான் பதிப்புரிமை கழையப்பட்ட இணைய தளத்தை கண்டேன். அதில் இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம் என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. அவ் இணையத்திற்கு செல்ல இங்கு[1] சுட்டவும்.:வின்சு 07:55, 25 சூன் 2011 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி, வின்சு. இது போன்ற இணையத்தளங்களை விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா உரிமத்துக்கு உகந்த தமிழ் இணையத்தளங்கள் என்ற பக்கத்தில் தொகுக்கலாம். இணையத்தளங்களின் உரிமங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக மாற்றும் மலையாள விக்கிமீடியர்களின் முயற்சிகளை இங்கு காணலாம். அது போல் நாமும், பெரிய இணையத்தளங்களை அணுகி உரிமம் மாற்றக் கோருவது உதவும். நன்றி--இரவி 09:22, 25 சூன் 2011 (UTC)[பதிலளி]

மேலும் ஒரு இணையதளம் தமிழ் நாற்று. இதில் Tamilnattu/ தமிழ் நாற்று is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [2] இதைப்பயன்படுத்தலாமா? :வின்சு 13:38, 26 சூன் 2011 (UTC)[பதிலளி]

பயன்படுத்தலாம். பொருத்தமானதே--சோடாபாட்டில்உரையாடுக 13:43, 26 சூன் 2011 (UTC)[பதிலளி]


சட்டக் கட்டுரைகள் தொகு

சில மாதங்கள் முன்பு தமிழ்நாட்டு அம்பெத்கார் சட்ட பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர்கள் கட்டுரைகளை எழுதி வருகிறார்கள்; வீட்டுப்பாடத் திட்டம் போன்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன் (காண்க: விக்கிப்பீடியாவில் மாணவர்கள்?). இன்று அம்மாணவிகளுள் ஒருவர் இதை உறுதி படுத்தி தனது பேச்சுப் பக்கத்தில் பின்வருமாறு இட்டுள்ளார்.

நான் சட்டம் பயின்று வருகிறேன்.எங்களது பாடத்தில் Legal Aid clinic paper ஒன்று உள்ளது. எனது பேராசிரியர் எல்லா மாணவர்களும் சட்டத்தைப் பற்றி தங்களது தாய்மொழியில் ஒரு பங்களிப்பு செய்யச் சொன்னார்.

ஆங்கில விக்கியில் இது போன்ற திட்டங்கள் பரவலாக உள்ளன. தமிழிலும் இது போன்ற முயற்சி நடந்திருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:05, 30 சூன் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நல்ல செய்தி சோடாபாட்டில். தமிழில் சட்டக் கட்டுரைகள் மிகக் குறைவாகவே காணப்படுவதாக உணர்கிறேன். இலங்கையிலிருந்தும் சட்டக் கல்லூரி மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களில் சட்டம் பயிலும் மாணவர்களை இங்கு பங்களிக்கச் செய்தால் மேலும் பல கட்டுரைகள் கிடைக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.--பாஹிம் 15:50, 30 சூன் 2011 (UTC)[பதிலளி]

  • சென்னையில் நடைபெற்ற விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழாவில் சென்னை சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் சக்திவேல் என்பவர் கலந்து கொண்டார். அவர் இந்த விசயத்தில் உதவமுடியும் என நினைக்கிறேன். சக்திவேல் என்பவரின் மொபைல் எண் சோடாபாட்டில் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:02, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சுப்பிரமணி. --சோடாபாட்டில்உரையாடுக 04:09, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]

Malayalam made first language in schools ‎ தொகு

--Natkeeran 04:33, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா இறுவட்டுப் பணிகள் தொகு

இங்கு நகர்த்தப்பட்டது ஸ்ரீகாந்த் 09:25, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா விடுப்பு! தொகு

சில தனிப்பட்ட வேலைகள் காரணமாகவும், இந்தியா செல்லவுள்ளமையினாலும் இனி வரும் இரண்டு வாரங்களுக்கு விக்கிப்பீடியா பக்கம் வரமுடியாதிருக்கும். மீண்டும் சந்திப்போம் --P.M.Puniyameen 17:32, 2 சூலை 2011 (UTC)[பதிலளி]

உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:23, 2 சூலை 2011 (UTC)[பதிலளி]
உங்களைக் காண ஆவலாக உள்ளேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:26, 3 சூலை 2011 (UTC)[பதிலளி]
தங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:39, 3 சூலை 2011 (UTC)[பதிலளி]

Call for image filter referendum தொகு

The Wikimedia Foundation, at the direction of the Board of Trustees, will be holding a vote to determine whether members of the community support the creation and usage of an opt-in personal image filter, which would allow readers to voluntarily screen particular types of images strictly for their own account.

Further details and educational materials will be available shortly. The referendum is scheduled for 12-27 August, 2011, and will be conducted on servers hosted by a neutral third party. Referendum details, officials, voting requirements, and supporting materials will be posted at Meta:Image filter referendum shortly.

Sorry for delivering you a message in English. Please help translate the pages on the referendum on Meta and join the translators mailing list.

For the coordinating committee,
Philippe (WMF)
Cbrown1023
Risker
Mardetanha
PeterSymonds
Robert Harris

புதிய தள அறிவிப்புகள் தொகு

இங்கு நகர்த்தப்பட்டது. ஸ்ரீகாந்த் 07:56, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஐ.ஆர்.சி சந்திப்பு -- சனிக்கிழமை 9 சூலை இந்திய நேரம் மாலை 6 மணி தொகு

இறுவட்டு திட்டம், புது பயனர்களை ஈர்க்கும் நோக்கத்தோடு துவங்கிய தள அறிவிப்பு திட்டம், பரப்புரை முயற்சிகள் மற்றும் த.விக்கியின் பொதுவான வளர்ச்சி பாதை குறித்து இணைய தொடர் அரட்டை(ஐ.ஆர்.சி) யில் irc.freenode.net #wikipedia-ta எனும் அரங்கில் வரும் சனிக்கிழமை (9 சூலை 2011) இந்திய நேரம் மாலை 6 மணி முதல் சந்திப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். மேலும் மாதம் இம்மாதிரி ஒர் சந்திப்பு நடந்தால் நன்றாக இருக்கும். ஐ.ஆர்.சி மூலம் புதுபயனர்களுக்கு live chat மூலம் புதுபயனர்களுக்கு உதவலாம் என ஓர் யோசனை இருக்கு. இதனையும் கூட இந்த சந்திப்பில் முயற்ச்சிக்கலாம். பி.கு:- ஐ.ஆர்.சி பற்றி உதவி பக்கங்களை ஓரிரு நாளில் எழுதுகிறேன். ஸ்ரீகாந்த் 15:48, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்த ஓடையைத் தொடங்கியதற்கு நன்றி, சிறீக்காந்த். இறுவட்டுத் திட்டம் போன்ற தகுந்த திட்டங்கள் நடக்கும் போது வாரக்கூட்டங்கள் கூட ஏற்பாடு செய்யலாம். மற்றபடி மாதம் ஒரு முறை கூட்டலாம். இயன்ற நேரத்தில் எல்லாம் எல்லாரும் இங்கு வந்து போனால், தொழில்நுட்ப உதவிகள் கேட்டுப் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

IRC அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஒரு சிறு உதவிக் குறிப்பு. பயர்பாக்சு உலாவியில் chatzilla நிறுவி ஒரு பயனர் கணக்கு உருவாக்கி, freenodeஐத் தெரிவு செய்த பின் IRC - > Join channel சென்று #wikipedia-ta என்று தந்தால் அரட்டையில் சேரலாம். இன்னும் பல்வேறு மென்பொருள்களும் வழிகளும் கூட உள்ளன. இது நான் பயன்படுத்தும் வழி--இரவி 16:31, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]

இதை விட, நேரடியாக இசுகைப்பில் பேசுது நன்றே. --Natkeeran 17:20, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]

நற்கீரன், இசுக்கைப் / கூகுள் + hangout கூட சிறப்பாக இருக்குமே. எனினும், பொதுவாக விக்கிமீடியா / திறவூற்று உலகில் IRC ஓடைகளே பயன்படுத்தப்படுகின்றன. பலரும் இலகுவாகப் பங்கு கொள்ளவும் (வேகமான இணைப்பு, ஒலி / ஒளி கருவிகள் தேவை இல்லை) முடியும். தவிர, முழுக்க திறவூற்று மென்பொருள்களே பயன்படுத்துவது என்ற விக்கிமீடியா கொள்கைக்கும் உடன்பாடாக இருக்கும். அரட்டையை அப்படியே உரை வடிவாகச் சேமித்து வெளியிட முடியும் என்பதால் வெளிப்படைத் தன்மைக்கும் உதவும். இந்திய விக்கிமீடியா சமூகத்தில் இது போன்ற உரையாடல்கள் ஒவ்வொரு மாதமும் இடம் பெறுகின்றன--இரவி 18:06, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]

உபுண்டு தமிழ் குழுமத்தினர் ஐ.ஆர்.சியில் சந்திப்பர். வழிமுறைகள் தெரியாததால்..விழித்திருந்தேன். முதல் சந்திப்பை உருவாக்கிய ஸ்ரீகாந்த்-க்கு எனது நன்றிகளைக் கூறவிரும்புகிறேன். சந்திப்பில் சேர வழிகாட்டியமைக்கு, நன்றி இரவி! இதற்கு எவ்வளவு இணைய வேகம் இருக்க வேண்டும்?17:58, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

இது சாதாரண எழுத்து வழி அரட்டை தான். கூகுள் மடலில் உள்ள அரட்டைக்கு எவ்வளவு வேகம் வேண்டுமோ அவ்வளவே போதும். சிறப்புத் தேவைகள் ஏதும் இல்லை. --இரவி 18:06, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]

சரி.தகவலுக்கு நன்றி.இரவி!02:02, 7 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

நல்ல தொடக்கம் ஸ்ரீகாந்த், நானும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். -- மாகிர் 05:11, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]
நல்ல தொடக்கம், சிரீகாந்து. வேறு தவிர்க்க இயலாத அலுவல் ஒன்று அதே வேளையில் இருப்பதால் இம்முறை என்னால் கலந்து கொள்ள இயலாது. அடுத்த முறை கட்டாயம் முயல்வேன். -- சுந்தர் \பேச்சு 09:58, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

நினைவூட்டல்: சந்திப்பு இப்போது தொடங்க உள்ளது. அனைவரும் வாரீர். எவ்வளவு நேரம் தான் தனியா tea ஆத்துவது :) --இரவி 12:32, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

சேர்வதற்க்கான வழிமுறை தொகு

http://webchat.freenode.net/ என்ற தளத்தை உலாவியில் திறந்து, Nickname எனுமிடத்தில் உங்கள் பெயர் / பயனர் பெயரை கொடுத்து, Channels எனுமிடத்தில் #wikipedia-ta கொடுத்து CAPTCHA படத்திலுள்ள செல்லை நிரப்பி Connect எனும் பொத்தானை சொடுக்குக. சிறிது மணித்துளிகளில் அரங்கிற்குள் வந்துவிடுவீர்கள். இதற்கு எந்த தனிப்பட்ட மென்பொருளோ, பயனர் கணக்கோ தேவையில்லை. ஸ்ரீகாந்த் 11:19, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

The British and the Americans don’t like Marathi “chauvinism” தொகு

தலாய்லாமா தான் சொன்னரே. அதே தான். எல்லா நியாமும், உரிமைக்குரலும் மேற்கத்தியர் கொடுப்பர். ஆனால், அவை எல்லாம், அவர்கள் எல்லைகளோடு சரி. அடுத்தவங்களுக்கு ம்..ம்.. ஒன்னும் செய்யமாட்டாங்க. மருந்து விற்பனை, இராணுவ கருவிகள் விற்பனை, பெட்ரோலிய விற்பனை இவற்றின் மூலம் வளர்முக நாடுகளை கொள்ளையடிப்பதற்கு பெயர் உலகமயமாக்கல். உலகத்தை மயக்கமாக்கல்!அதற்கு முதலில் மொழி மயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.06:13, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..
இது அனைத்து மொழிக்காரர்களும் செய்யும் ஒரு விசயம் தான். தனக்கு இடைஞ்சலாக இருப்பின் பிறரை “மொழி வெறியன்” என முத்திரை குத்துவது மொழி குறித்த விவாதங்களில் தாத்தா காலத்து டெக்னிக்கு. தான் செய்தால் பற்று பிறர் செய்தால் வெறியென்பதில் மேற்கு/கிழக்கு/கம்யூனிச/உலகமயமாக்கல் பாகுபாடெல்லாம் கிடையாது--சோடாபாட்டில்உரையாடுக 06:30, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

இதே மனநிலைதானே இலங்கையில் நடந்த முப்பதாண்டுப் போருக்குக் காரணம்!--பாஹிம் 07:01, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

சோடா, எல்லா மொழிகளும் சம அதிகாரத்தோடு இருந்தால், உங்கள் கருத்து சரியாக இருக்கும். ஆனால் முதற்குடி மக்களுடைய மொழிகளும், ஆங்கிலம், பிரெஞ்சு, யேர்மன், எசுபானியம், அரேபிக், இந்தி, சீனம் போன்ற மொழிகளும் ஒரே விசயம்தான் என்பது நிலைமையை யதார்தமாகப் புரிந்துகொள்ளாமை ஆகும். நீங்கள் கூறுவது சாதிப் பாகுபாட்டால் தலித்துக்களும் பிராமணர்களும் ஒரே மாதிரித்தான் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறுவது போல உள்ளது. ஆங்கிலம் இயல்பாக உலக மொழியாக ஆகியதா, அதிகாரத்தால் ஆக்கப்பட்டதா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். உலக மொழி ஒன்று இருப்பது நன்மையாக இருக்கலாம், ஆனால் அது வேறு. --Natkeeran 19:22, 9 சூலை 2011 (UTC)--Natkeeran 19:22, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]
நட்கீரன், ”அதிகார அளவில்” வேறுபாடு உண்டே தவிர பழகு விதத்தில் ஒரு வேறுபாடும் கிடையாதென்பதே என் கருத்து. பிறர் மீது நம் பண்பாட்டையும் மொழியினையும் திணிக்கும் அளவுக்கு அதிகாரமுடைய எந்த சமூகமும், அந்த அதிகாரத்தை தவறாகவே பயன்படுத்தி வந்துள்ளன. இது மொழி என்றில்லை பண்பாட்டின் எக்கூறுக்கும் பொருந்துகிறது (தலித்துகளுள் ஒரு சாரர் இன்னொரு சாரரை தீண்டத் தகாதவர்களாக நடத்துவது போல). மும்பையில் ஆங்கிலேயர்கள் மராத்திப் பற்றாளர்களை “வெறி”யர்கள் எனச் சாடுவது பெரும்பாலும் அனைத்து மொழியினரும் செய்த/செய்து வரும் ஒன்றே. linguistic imperialism isnt confined to English speakers just like imperialism isnt confined of white men. அவர்களுக்கும் பிற சமூகத்துக்கும் உள்ள வேறுபாடு செய்கையின் அளவில் உள்ளது. ”பாதிக்கப்பட்ட” மொழிக்காரர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்லவே. அவர்களும் தங்கள் பங்குக்கு பிற மொழியினரை இது போலத் தான் நடத்தி வந்திருக்கிறார்கள் (ஆங்கிலம் அளவுக்கு வலிமை இல்லை, அவ்வளவு தான் வித்தியாசம்). இங்கு இந்திய அளவில் நடக்கும் இந்தி மொழி திணிப்பிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் தமிழ் மொழி ஆதிக்கம் வரை அனைத்தும் மொழியாதிக்கத்தின் சிறிய பெரிய வெளிப்பாடுகளே. ஆங்கிலம் அரசியல்/பொருளியல்/வரலாற்றுக் காரணங்களால் அசுர பலம் பெற்று உலகெங்கும் செய்கிறது. பிற மொழிகள் தங்கள் வலிமைக்கேற்ப குறைவான இடங்களில் செய்கின்றன. இச்செய்கை தவறென்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]
விளக்கத்துக்கு நன்றி. உங்கள் கருத்துடன், குறிப்பாக கடைசிக் கருத்துடன் ஒத்துப் போகிறேன். --Natkeeran 04:10, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]

தட்டச்சு கருவி -- நரயம் நீட்சியை பயன்படுத்துவதற்கு விக்கி சமூகத்தின் ஒப்புதல் தொகு

நாம் இப்பொழுது மலையாள விக்கியர்கள் செய்த விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சுக்_கருவி யை பயன்படுத்தி வருகிறோம். இது யாவாசிகிரிப்டு மூலம் செயல் படுகிறது. ஆனால் விக்கிப்பீடியா:முதல்_கட்டுரை பக்கத்தில் உள்ள பெட்டியில் தட்டச்சு கருவி இணைக்கப்படவில்லை. இதற்காக பதிந்த வழுவில், மலையாள விக்கியர் சுனாயது நம்மை புதிதாக உள்ள நரயம் நீட்சியை பயன்படுத்துமாறு கூறியுள்ளார். இதற்கான வழு பதிய விக்கி சமூகத்தின் ஒப்புதல் தேவை. உங்கள் ஒப்புதலை இங்கே தெரிவிக்கவும்.நானும் சோடாபட்டிலும்) இந்த மாற்றத்தை இப்பொழுது இருக்கும் தனிப்பட்ட மாற்றங்களை இழக்காமல் சீராக செய்ய முயல்வோம். இந்த வழுவை சுட்டிய சூர்யாவிற்கு நன்றி. ஸ்ரீகாந்த் 08:55, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

  • புகுபதிகை செய்யவும், தட்டச்சு வசதி இருந்தால் நன்றாக இருக்கும். மேலும், தட்டச்சுவதை, விசைப்பலகை மூலம் நிறுத்தவும் வழியிருந்தால் இன்னும் சிறப்பாகும்.11:03, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..
நான் இந்த தட்டச்சுக் கருவியை (தமிழ்99) மிகவும் பயன்படுத்தி வருகிறேன். கோலன் (:) map செய்யப்படாது இருந்தது. விக்கியாக்கத்தில் முக்கியமான இந்த எழுத்துருவுக்காக நான் மிகவும் சிரம்ப்பட்டு பின்னர் தனிப்பட்ட மாற்றங்களை செய்துள்ளேன். இதனை நீட்சிக்கு மாறும்போது கவனத்தில் கொள்க.--மணியன் 13:28, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]
இந்த நீட்சி பக்கத்தின் அனைத்து பெட்டிகளுக்கும் பொருந்தும்(புகுபதிகை உட்பட), மேலும் நாம் செய்த தனிப்பட்ட மாற்றங்களுடனே இது நிறுவப்படும். வழு இங்கே ஸ்ரீகாந்த் 19:08, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]

Stop, Revive, Survive:Lessons from the Hebrew Revival Applicable to the Reclamation,Maintenance and Empowerment of Aboriginal Languages and Cultures தொகு

கட்டை விரல் ? நகம்? எது சரி? தொகு

படிமங்கள் பதிவேற்றம் செய்யப்படும் போது அந்தப் படிமத்துக்கான கோப்பு வரலாறு பகுதியிலுள்ள அட்டவணையில் படத்தின் சிறிய அளவு “நகம் அளவு சிறுபடம்” என்று குறிப்ப்டப்படுகிறது. இங்கு கட்டை விரல் அளவு படம் என்பதுதானே சரி. கட்டை விரல் அளவு அல்லது நகம் அளவு என்பதில் மிகச் சரியானது எது? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:48, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]

வெறும் சிறுபடம் என்றாலே போதும். ஆங்கிலத்தில் thumbnail என்பது ஒரு சிறு நகம் அளவான படம் என்னும் பொதுக் கருத்து உடையது அதனை அப்படியே மொழி பெயர்க்க வேண்டியதில்லை. ஆனால் அப்படியே செய்தாலும், கட்டைவிரல் நகம் (அளவுப் படம்) என்று கூற வேண்டியிருக்கும். கட்டை விரல் என்று மட்டும் கூறுதல் சரியாக இராது என்று நினைக்கின்றேன். --செல்வா 10:42, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]

தட்டச்சு முறையில் பிழை தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்துப் பெயர்ப்பு முறையில் தட்டச்சிட முடியாமல் உள்ளது. ஒவ்வொரு விசையையும் தட்டும்போது எழுத்துப்பெயர்ப்பு முறையிலான எழுத்து ஒன்றும், தமிழ் 99 முறையிலான எழுத்து ஒன்றுமாக இரண்டு எழுத்துக்கள் அடுத்தடுத்து வருகின்றன. இதைச் சரிசெய்யக்கூடியவர்கள் தயவுசெய்து கவனிக்கவும். -- மயூரநாதன் 11:11, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]

எனக்க்ு ஒர்ு ப்ி்ிழைய்ும்் வரவ்ில்லை. ம்ெஎல்ும் வ்ி்ிிவரங்கள் எள்ி்ிதாக்க்ும். ஃபயர்்ஃபாஸ், க்ுர்ொஒம் ர்ெண்ட்ில்ும் வ்ெெஎலை ச்ெய்க்ி்ிறத்ு. ஸ்ரீகாந்த் 12:28, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]
எழுத்துப் பெயர்ப்பைப பயன்படுத்தி இதை எழுதுகிறேன். நன்றாக வருகிறதே. எந்த உலாவி/இயங்குதளம் என்று சொல்லுங்களேன்?. பயர் பாக்சு 3.*, 4.* மற்றும் இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 இரண்டிலும் சோதித்துப் பார்த்து விட்டேன். ஒழுங்காக வேலை செய்கிறது. உங்கள் உலாவியின் கேச்சைக் காலி செய்து விட்டு இன்னொரு முறை சோதித்துப் பாருங்கள். நேற்று தட்டச்சுக் கருவி மீடியாவிக்கி நீட்சியாக மாற்றப்பட்டது. பழைய ஜாவாஸ்கிரிப்ட் கருவி இன்னும் உங்கள் கேச்சில் இருக்க வாய்ப்புண்டு அதனால் இது நிகழலாம். எனவே ஒரு முறை கேச்சை காலி செய்து சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:33, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]
I posted my previous reply in chrome thinking it will convert Uyirmei glyphs properly. Another bug. We would ask to uninstall the extension, go back with scripts. Next time would test across browsers / OS before rolling out here. Apologies. ஸ்ரீகாந்த் 12:39, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]
நீட்சியை நீக்கச் சொல்லி வழு பதிந்துள்ளேன். நீக்கப்பட்டவுடன், பழைய ஜாவாஸ்கிரிப்ட் தட்டச்சுக் கருவியை நிறுவி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:41, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]
சிறீகாந்து வேண்டுகோளுக்கு இணங்க மீள்வித்திருக்கிறேன். சோடா, தொடுப்பு ப்ளீஸ் -- மாகிர் 18:13, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]

நான் IE-8 பயன்படுத்துகிறேன்."எழுத்துப் பெயர்ப்புச் சரியாக வரவில்லை" என்று நான் தட்டச்சிடப் பின்வருமாறு வருகிறது.

"'எஊழ்ஔஉறட்ஏஹ்கட்ஏஹ்கௌறப்ணப்ணஎஊய்ளாஅர்ஐப்ணப்ணௌறச்இ ச்இஅஅர்ஐஇனய்ளாஆஅக்மாஅ வ்வாஅர்ஐஅஅவ்வைனல்தல்தாஐன"'

இதில், "எ" க்குப் பதிலாக "எஊ", "ழு" க்குப் பதிலாக "ழ்ஔஉற" என எழுத்துப்பெயர்ப்பு விசைக்குரிய எழுத்துக்களும், தமிழ் 99 க்குரிய எழுத்துக்களும் சேர்ந்து வருகின்றன. -- மயூரநாதன் 14:53, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]

  • இந்த தட்டச்சுப் பிழை குறித்த தகவலை பாளை.சுசி என்னிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொன்னார். அவர் ஏதாவது தவறு செய்திருக்கக் கூடும் என்று நினைத்தேன். இதனால் அவருடைய வேண்டுகோளின்படி அவரது பயனர் பக்கத்தை மாற்றியமைத்தேன்.பார்க்க. ஆனால் எனக்கு எழுத்துப் பெயர்ப்பு முறை பயன்படுத்தும் போது எந்தக் குறைபாடும் தெரியவில்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. நான் கூகுள் குரோம் உலாவி பயன்படுத்துகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:02, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]

உலாவியின் கேச்சைக் காலி செய்ய இப்போது சரியாக வருகிறது. நன்றி. -- மயூரநாதன் 15:08, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றி மாகிர். வழு தொடுப்பு இதோ. (ஸ்ரீகாந்த் அடுத்த முறை வழுவில் மாகிரையும் சூர்யாவையும் சிசியில் சேர்த்து விடுங்கள்.)--சோடாபாட்டில்உரையாடுக 04:30, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]

தொடுவானத்தில் விக்கிப்பீடியா தொகு

16-07-2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மதுரை மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சி மன்ற எழுத்தர்கள், தன்னார்வலர்கள் போன்றவர்களுக்கு இணைய வழியில் மாவட்ட ஆட்சித்தலைவருக்குப் புகார் மனு அளிக்கும் தொடுவானம் திட்டம் தொடங்குவதற்கான பயிலரங்கம் ஒன்று நடைபெற்றது. மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை அமைப்புடன் சேர்ந்து நடத்திய இப்பயிலரங்கில் தமிழ் விக்கிப்பீடியா எனும் தலைப்பில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்பயிலரங்கில் கலந்து கொண்டுள்ளவர்கள் அவரவர் கிராமங்கள் குறித்த தகவல்களை விக்கிப்பீடியாவில் சேர்க்க முடியும் என்று தெரிவிக்க முடிந்தது. இப்பயிலரங்கில் என்னுடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனருமான மகிழ்நனும் கலந்து கொண்டார்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:16, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]

நல்ல முயற்சி. நன்றிகள். --Natkeeran 01:58, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]
மிக்க மகிழச்சி.00:13, 18 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


தொடுவானம் நிகழ்வின் நிகழ்படக்காட்சி தொகு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற தொடுவானம் பயிலரங்கில் தேனி எம். சுப்பிரமணி தமிழ் விக்கிப்பீடியா குறித்து பேசியதன் நிகழ்படத் தொகுப்பு சங்கமம் தளத்தில் “தொடுவானம் – மதுரை நிகழ்ச்சித் தொகுப்பு – பகுதி-2” எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:54, 1 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தேடு சாளர விளைவுகளில் தோன்றும் கேள்விக்குறிகள்? தொகு

 

படத்தில் அடிக்கோடிட்டது போல, தமிழ் எழுத்துக்கள் கேள்விக்குறிகளாகத் தெரிவது ஏன்?. இதைப் போன்ற வழுதான் இங்கும் தோன்றுகிறது.00:11, 18 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


டூல்செர்வரில் வருவது, அக்கருவியினால் ஒருங்குறி எழுத்துகளை செயல்படுத்த இயலாமை. ஆனால் விக்கியில் இதுவரை நான் இது போன்றதைக் கண்டதில்லை. இப்போது தேடினாலும் சரியாக வருகிறது. மேலும் சோதித்துப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:06, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]

தலைப்பை எழுதும் முறை தொகு

ச. அகத்தியலிங்கம் இப்பெயரின் முன்னெழுத்தான,-க்கு பிறகுபுள்ளி வருகிறது. அதற்கு அடுத்தே அகத்தியலிங்கம் என்று இடைவெளியில்லாமல், எழுதுவது தானே முறை. இப்படி இடைவெளியிட்டு எழுதுவது சரியா? அப்படித்தான் கட்டுரைகள் எழுதவேண்டுமா?ச.அகத்தியலிங்கம் என்ற கட்டுரை இல்லாததது போல காட்டுகிறது.ஆனால், ச. அகத்தியலிங்கம் கட்டுரை உள்ளது.இப்படி பல கட்டுரைகள் இல்லாததது போல,அமைகின்றன.05:51, 18 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


ஆம் இடைவெளி தேவை. இடைவெளி இல்லையெனில் ”ச.அகத்தியலிங்கம்” ஒரே சொல்லாகக் கருதப்படும். அகரவரிசைப் படுத்த, இந்த இடைவெளி தேவை. இடைவெளி இல்லையென்றால் இது “ச” வில் தொடங்கும் பெயராகி விடும். முன்னொட்டு பெயரிடல் மரபுக்கும் இரு சொல் பெயரிடல் மரபுக்கும் ஒரு பொதுமை வேண்டுமென்பதற்காக இந்த இடைவெளி பின்பற்றப்படுகிறது. (விக்கியில் என்றல்ல இப்போது இந்திய/தமிழ் நாடு அரசு ஆவணங்களிலும் இந்த இடைவெளி விடும் முறையைப் பின்பற்றுகிறார்கள். ஆவணங்கள் மின்னாக்கம் செய்யப்பட்டதிலிருந்து இம்முறை பின்பற்றப்படுகிறது - பல இடங்களில் முன்னொட்டைப் பின்னால் போடும் வழக்கத்தையும் அரசு பின்பற்றுகிறது - விரிவாக்கி குடும்பப் பெயராக பயன்படுத்திக் கொள்ள வசதியாக). தமிழ் விக்கியில், default sorting, listas, போன்ற வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை, செய்யும் போது இது தேவையாகும் - முன்னொட்டுகள் பெயரின் ஒரு சொல்லாகக் கருதப்படுகின்றன. இடைவெளி இல்லாத தலைப்புகள் தேவையெனக் கருதினால், வழிமாற்றுகளாக உருவாக்கிவிடுங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 06:04, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]
சோடாபாட்டில், ஆ.விக்கியில் தனிநபர்கள் பற்றிய விவரங்களை பெர்சன் டேட்டா (Wikipedia:Persondata,Template:Persondata) என்னும் வார்ப்புருவை பயன்படுத்துகிறார்கள். இதனை நாமும் இங்கு பின்பற்றலாம். -- மாகிர் 11:15, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]
நுட்பமானவைகளை, விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. இடைவெளியிட்டே எழுதுகிறேன். நான் எழுதும் கட்டுரைகளில் இடைவெளியைக் கவனித்து, உள்ளிணைப்புகளை ஏற்படுத்துகிறேன். எனக்கு, பின்னால் முன்னொட்டை எழுதும் முறையே சரியாகப் படுகிறது.06:18, 18 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


Singapore to host World Tamil Writers Meet தொகு

--Natkeeran 17:13, 26 சூலை 2011 (UTC)[பதிலளி]

எத்தனால் /எத்தனோல் எது சரி? தொகு

தமிழக/ஈழ சொல் வழக்கு வித்தியாசம் என்று நினைத்தாலும், வேதியியல் முறைப்படி,

எத்தனோல் - Ethanol
எத்தனால் - Ethanal - Acetaldehyde

என்று பயன்படுத்தலாம் அல்லவா? உங்கள் கருத்து என்ன? --Nan 09:46, 27 சூலை 2011 (UTC)[பதிலளி]

உடன்படுகிறேன். மேற்குறிப்பிட்டுள்ளது பொருத்தமாகவே எனக்குப் படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 10:05, 27 சூலை 2011 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டுப் பாடநூல்களில் எத்தனால் என்ற வழக்கு பின்பற்றப்படுவதால் அதனையும் வழிமாற்றாகவும், கட்டுரையின் தலைப்புப் பகுதியில் பயன்படுத்தியும் இருக்க வேண்டும்.

Truimph of Hinglish தொகு

விக்கிமேனியா 2011 தொகு

விக்கிமேனியா 2011ல் சோடாபாட்டிலும் நானும் கலந்து கொள்கிறோம். இம்முறை தமிழ் விக்கி சார்பில் கட்டுரைகள் ஏதும் வாசிக்க இயலவில்லை. எனினும், வளரும் விக்கிகள் குறித்த உரையாடல்களில் நல்ல பங்களிப்புகளைத் தர முடியும் என்று நம்புகிறோம். தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடு குறித்து விக்கிமேனியாவில் என்னென்ன விசயங்களைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டலாம் என்று அனைவரின் கருத்தையும் எதிர்ப்பார்க்கிறோம். நன்றி--இரவி 06:15, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா 2011ல் கலந்து கொள்ளச் செல்லும் இரவிக்கும், சோடாபாட்டிலுக்கும் ... தங்கள் பயணம் சிறப்பாக அமையவும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் தமிழின் பெருமையையும், தமிழ் விக்கியின் பெருமையையும் முன்வையுங்கள். --P.M.Puniyameen 06:31, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]
விக்கிமேனியா-2011ல் கலந்து கொள்ளும் தமிழ் விக்கியர்கள் இரவி, சோடாபாட்டில் ஆகிய இருவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள். சோடாபாட்டிலிடம் நான் தொலைபேசியில் பேசிய போது ஏற்கனவே தெரிவித்தபடி தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு அடையாள அட்டை அவசியமான ஒன்றாக இருக்கிறது. (நான் எனக்குப் பழக்கமான அரசு அதிகாரிகள் வழியாக சில மேலதிகாரிகளைச் சந்திக்க முடிந்தாலும், பிறருக்கு இது முடியாத நிலையும் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.) எனவே தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்கள் சிலருக்கு அடையாள அட்டை அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அடையாள அட்டை மற்றும் பத்திரிகையாளருக்கான அங்கீகாரம் போன்றவற்றைப் பெறுவதற்கு கடிதம் அளிப்பதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர்-அதிகாரி அளவில் இருப்பவர்கள் யாராவது ஒருவருக்கு அனுமதி பெற வேண்டும். இது குறித்து ஏதாவது உரையாடி தகுந்த வழிகாட்டுதலைப் பெற்றால் விக்கிப்பீடியா குறித்த தகவல்களை அரசு அதிகாரிகளிடம் கொண்டு செல்ல முடிவதுடன், அரசு திட்டங்கள் குறித்த தகவலை உடனுக்குடன் விக்கிப்பீடியாவிற்குப் பெறவும் முடியும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:25, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]
நல்லது ரவி. சில வளங்களை அவர்கள் ஒதுக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அவர்கள் ஒதுக்கும் வளங்களுக்கு ஏற்றவாறு நாமும் சேர்த்து சில நிலையான பணிகளைச் செய்ய முடியும். --Natkeeran 12:38, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]
இரவி, சோடாபாட்டில் இருவருக்கும் வாழ்த்துக்கள். கட்டுரை வாசிக்காததும் ஓரளவுக்கு நல்லதுதான். சென்றமுறை கட்டுரை வாசிப்பதற்குத் ஆயத்தம் செய்வதிலேயே திட்டமிட்டிருந்த பல விடயங்களைச் செய்ய முடியவில்லை. கூடுமான வரை முக்கியமானவர்களைச் சந்தியுங்கள். சிறிய விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவும் விக்சனரியும் பிற சகோதரத் திட்டங்களும் பெரிய அளவுக்கு வளரும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளவை என்பதைப் பிற விக்கிப்பீடியர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் செயல்படுங்கள். வாழ்த்துக்கள். --- மயூரநாதன் 18:32, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]
உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:37, 1 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் இரவி, சோடாபாட்டில்.--சஞ்சீவி சிவகுமார் 05:32, 5 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி. நானும் சோடாபாட்டிலும் மாநாட்டில் உள்ளோம். பல்வேறு மொழி விக்கிப்பீடியர்களைக் கண்டு உரையாடி தகுந்த இடங்களில் நம்மைப் பற்றி எடுத்துரைத்தும் மற்றவர்களின் நடைமுறைகளை அறிந்து கொண்டும் வருகிறோம். பின்னர் விரிவாக எழுதுகிறோம். நன்றி--இரவி 18:45, 5 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

  • ஆவலுடன் வரவேற்க காத்திருக்கிறோம். ஓங்குக தமிழ் வளம். 18:57, 5 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..